போதுண்டா சாமீ ......வாழ விடுங்கடா ...



நம்பளால
ஒரு உயிரையும் காப்பாத்த முடியல என்ற வருத்தத்தில் நீயெல்லாம் மனுசனா இருந்து என்ன பிரயோஜனம் ..... இதுல ப்லோக் வேற ஒரு கேடா
ன்னு நானே என்னை கேட்டுக்கொண்டு ஒரு ஆறு மாதத்திற்கு எழுத வேண்டாமென முடிவு செய்து விட்டேன். மற்றபடி பிடித்த நண்பர்களின் வலைப்பூவில் மட்டும் பின்னூட்டங்கள் உண்டு.


தமிழன் ஒரு நாள் சிரிப்பான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் உங்களிடம் இருந்து தற்காலிக விடை பெறுவது - ஜெய்.

Read more...

புலம்ப விடும் பன்றி காய்ச்சல் !

பன்றி


காய்ச்சல் இந்தியாவில் வந்தாலும் வந்தது எல்லா தரப்பு மக்களையும் ஒரு ஆட்டு ஆட்டிக்கிட்டுதான் இருக்கு.

அதிலும் பூனாவில் ரொம்பதான் ஓவர். ரெண்டு வாரத்துக்கு முந்தி முகமூடி போட்டவனை எல்லாம் நமுட்டு சிரிப்போட பார்த்த மக்கள் இப்போ முகமூடி போடாதவனை அப்படி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க..


நைட்டு ஒம்போது மணிக்கு பிறகு ஊரே வெறிச்சோடி இருக்கு. அதிலும் MG ரோடுல பிகர்கூட சுத்தற பணக்கார பயலுக முதற்கொண்டு ஒரு பக்கியையும் காணோம்.

பெரிய பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இல இருந்து சாதாரண பாணி பூரி விக்கிறவன் வரை அனைவரின் பிசினஸ் ஐயும் பன்றி காய்ச்சல் பாதித்திருப்பது வயித்தெரிச்சலா
இருக்கு.


நேத்து மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட அறிவுரை மெயில்கள்...வெளிய போகாதே..ஹோட்டல்ல சாப்பிடாதே...நாலு அடி தள்ளி நின்னே பேசு ....முகமூடில நில்கிரி ஆயில் போடு... பப்ளிக் டாய்லெட் உபயோகிக்காதே ...பன்றி காய்ச்சல் முத்திரிச்சின்னா மருந்தே இல்ல.... தடுப்பு மருந்து இருக்கு ...ஆனா இல்ல ...நிறைய லெமன் சாப்பிடு ...எட்டு மணி நேரம் தூங்கு ....ஆயுர்வேதத்தில் புதுசா மருந்து கண்டு பிடிச்சிருக்காங்க ...சைனீஸ் மருந்து ஒண்ணு இருக்கு .....யார்ட்டயும் கை குலுக்காதே ...
இப்படி ஏகத்துக்கு போட்டு தாக்குறாங்க ...



பூனாவில இருந்து UP போன ஒரு நண்பரை ரயில் விட்டு இறங்கியதும் அப்படியே அலேக்கா தூக்கிகிட்டு மருத்துவமனையில் ரெண்டு நாள் செக் பண்ணிட்டுதான் விட்டாங்க.. (வாழ்க UP சுகாதார துறை )


பூனா நோக்கி வரும் பேருந்துகளில் நடத்துனர் ஓட்டுனர் தவிர ரெண்டொரு பேர்தான் இருக்கிறார்கள்.:(


எங்க அலுவலகத்தில் முகமூடி கட்டாயமாக்க பட்டுள்ளது. மாஸ்க் போட்டுட்டே இருப்பதினால் ஆக்ஸிஜன் பற்றா குறையினால் எல்லாத்துக்கும் மயக்கம் வர மாதிரியே இருக்கு.

இதனாலேயே என்னவோ உடம்பு டயர்ட் ஆகி விடுகிறது ...எதாவது ஒரு சின்ன கஷ்டம் உடம்புக்கு வந்தாலும் ஆகா..பண்ணி காய்ச்சல்தான் வந்துருச்சோன்னு மனசு பீதியை கிளப்புது.


நாமதான் இப்படி இருக்கிரோமான்னு பார்த்தா அதான் இல்ல... எல்லாரும் எனக்கு மேல கிலியடித்து இருக்கிறாங்க.. :) (எங்க அலுவலகத்திலேயே நான்தான் தைரியசாலி !! but -பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு வீக்கு )


இன்று என்கூட வேலை செய்யிறவன் சொன்னான் ..பன்றி காய்ச்சலுக்கு இன்னொரு மருந்து இருக்கு (Mfg: Cipla) அது இந்தியா முழுதும் கிடைக்கும். கிடைக்கக்கூடிய இடங்கள் கீழே இருக்கும் அட்டவணைய பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று.


நீங்களும்தான் பாருங்களேன்

ஹலோ ..மிஸ்டர் ??..ஒன் மினிட் பார்த்துட்டு மத்தவங்களோடையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..



இப்போதைக்கு விடை பெறுகிறேன் பன்றி காய்ச்சல் வரலன்னா நெக்ஸ்ட் இடுகையில் மீட் பண்றேன். பாய் !

Read more...

பன்றி காய்ச்சலால் காய்ச்சி எடுக்கும் பூனா-வாழ் மக்களுக்கு ஒரு அறிவிப்பு !

பூனா
நகரில் யாரை பார்த்தாலும் முகமூடி போட்டுக்கொண்டே திரிகிறார்கள்.. முகமூடிக்கு ஏகப்பட்ட டிமாண்டு.. கிடைக்காதவர்கள் கர்சீப் வைத்து முகத்தை மூடிக்கொண்டு திரிகிறார்கள்.

நாங்கல்லாம் "பன்றிய" விட மோசமானவங்க..எங்களுக்கே பண்ணி காய்ச்சலா ?? என்று அதகளம் பண்ணி திரிபவர்கள் கொஞ்சம் பூனா பக்கம் டூர் வந்திங்கன்னா மனதிற்குள் பன்றி காய்ச்சலா.. கொக்கா??... அப்படின்ற பயம் மனதில் கொஞ்சமாவது எட்டி உதைக்கும் ..


பூனாவில் மட்டும் கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து பேர் அதிகாரபூர்வமாக பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மூணு பேர் ஏற்கனவே பலி ஆகியுள்ளனர்.

ஐம்பது ரூபாய் மதிப்புள்ள ஒரு மூக்குஉறை (முகமூடிக்கு இப்படி ஏதாவது நாமளே பேர் வச்சாதான் உண்டு ) விலை இப்போதைக்கு குறைந்த பட்ச விலையாக இருநூற்று ஐம்பது ரூபாய் வரை விற்கிறார்கள்....

பத்து ரூபாய் மதிப்புள்ள கைக்குட்டை இப்போது இருபத்தைந்து ரூபாய்.
பூனாவில் இதுவரை இரண்டே மருத்துவமனைகளில் மட்டும் பன்றி காய்ச்சலுக்கான சோதனை நடத்தப்பட்டு வந்தது..
பன்றி காய்ச்சல் சோதனைக்காக வந்த மக்கள் வெள்ளத்தில் வேற அடி தடி ..முட்டி மோதி சினிமாவிற்கு டிக்கெட் வாங்குற மாதிரி போட்டா போட்டி ... அதான் எல்லாத்தையும் டிவில காண்பித்தார்களே ?

இப்போ மேட்டர் என்னன்னா..அரசாங்கத்தால் அங்ககரிக்கப்பட்ட மேலும் பதினேழு மருத்தவமனைகள் பூனாவில் பன்றி காய்ச்சலுக்கான சோதனையை நடத்தும் என்பதுதான் அது.
இந்த கெட்ட வேளையில் வந்த நல்ல செய்தி இது !

அதன் விபரங்கள் இங்கே.


Erandwane Hospital – Opposite to Padale Palace, Next to “Pingala – Aryabhata” Office, Karve Road
9764000939 Dr. Sarita Ganala

Jayabai Sutar Hospital, Kothrud 9823217047 Dr. Sham Satpute

Aanandibai Gadgil Hospital, Dattawadi 9422987953 Dr. Jotsna Khole

Balaji Gaikwad Hospital, Ganjpeth Not available Dr. Sadhya Bahule

Kalawatibai Mawle Hospital, Narayanpeth 9881385015 Dr. Neela Limaye

Mamasaheb Bhadade Hospital, Narayanpeth Dr. Swati Joshi

Babu Genu Hospital, Ravivarpeth 9421018878 Dr. Dinesh Bende

Siddharth Hospital, Vishrantwadi 9423004811 Dr. Bhagavant Gagare

Shivshankar Pote Hospital, Sahakarnagar 9422520930 Dr. Divya Rajawade

Junglerao Aamrale Hospital, Shivajinagar 9823214103 Dr. Aparna Gokhale

Genba Shevale Hospital, Chikhalwadi 9823224789 Dr. Madhuri Gare

Rohidas Kirad Hospital, Ganeshpeth Not available Dr. Chandrashekhar Gujar

Damodarraoji Galandepatil Hospital, Kalyani Nagar 9730571404 Dr. Ujwala Khristi

Bapusaheb Kawadepatil Hospital, Koregaon Park 9922504428 Dr. Jaya Bhondve

Dr. Kotnis Hospital, Mandai 9850992960 Dr. Asmita Bhoi

Naidu Hospital, Opp Le Meridian 26126242

Aundh Civil Hospital, Aundh 27280603/02

Helpline Contacts

020-64006095,
020-32538626,
020-20250050



நீங்க செய்யவேண்டியது எல்லாம் ஒண்னே ஒண்ணுதான் ... உங்களுக்கு தெரிந்தவர்கள்..உற்றார் உறவினர்கள்..நண்பர்கள்..யாரா இருந்தாலும் சரி அவங்க பூனாவில் இருந்தால் இந்த மேட்டரையும் அவங்க காதுல கொஞ்சம் போட்டு வையுங்க.


வாழ்க மக்கள்..ஒழிக பன்றி காய்ச்சல்.

Read more...

அடிக்கடி வசிப்பிடத்தை மாற்றுபவர்கள் கவனத்திற்கு..



ஊரு



விட்டு ஊரு போய் வேலை செய்பவர்களும் அடிக்கடி வீட்டை ( குடி இருக்கிற வீட்டை சொன்னேன் !) மாற்றுபவர்களுக்கும் பொதுவாக இருக்கும் ஒரு தலையாய பிரச்சினை என்னவெனில் வசிப்பு சான்றிதழ் வாங்குவதுதான்.

வாடகை வீட்டில் இருந்தாலும் நிறைய பேர் "Rent Agreement" வாங்குவதில்லை.

காஸ் இணைப்பில் இருந்து இன்டர்நெட் இணைப்பு வரை எல்லாத்துக்கும் வசிப்பு சான்றிதழ் இருந்தாதான் கொடுப்பாங்க.

ஒரே இடத்தில இருப்பவர்கள் நிலைமை பரவாயில்லை ஆனா வருசத்துக்கு ஒரு வீட்டை மாத்தறவங்க பாடுதான் கஷ்டம்.

டிரைவிங் லைசென்சு, வோட்டர் ஐ டி இதெல்லாம் பெர்மனென்ட் ஆ குடி இருப்பவர்களுக்கு மட்டும்தான் செல்லுபடி ஆகும் மற்றபடி பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணுவதில் இருந்து இன்னபிற சில அத்தியாவசிய தேவைகளுக்கு தற்போது குடி இருக்கும் வீட்டு முகவரி உடைய வசிபபு சான்றிதழ் இருந்தே ஆக கட்டாயம் நம்மில் பல பேருக்கு ஏற்பட்டிருக்கும்.

ஒவ்வொரு முறையும் வீட்டை மாற்றும்போழுதும் வசிப்பிட சான்றிதழ் மாற்றவேண்டிய பெரும் கொடுமையில் இருந்து நம்மளை எல்லாம் விடுவிக்க இந்தியன் போஸ்டல் டிபார்ட்மென்ட் புதுசா ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார்கள்

அதுக்கு பேருதான் இந்தியன் போஸ்டல் ஐ டி ப்ரூப் (Indian Postal ID Proof).

இதன் மூலம் நாம் ஏராளமான பயன்களை அடையலாம்.

கிட்டத்தட்ட இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று வருட காலத்தில் செல்லுபடியாகும் உங்கள் முகவரி சான்று!
எதிர்காலத்தில் பல்வேறு நிறுவனங்களும் இதனை முறைபடுத்தப்பட்ட குறுகிய கால அடையாள அட்டையாக அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.(இந்தியா முழுதும் )

உங்கள் அருகாமையில் இருக்கும் தபால் நிலையத்திற்கு சென்று விசாரிப்பீர்களானால் மேலதிக தகவல்களை பெறலாம்.




எனக்கு தெரிந்த வரை இந்த தாபால் துறை அடையாள அட்டை ஆனது மூன்று வருடம் வரை செல்லுபடியாகும்.
அதற்குண்டான செலவு வெறும் இருநூற்று ஐம்பது ரூபாய்கள்.


மேலும் தெரிந்து கொள்ள

இங்கே க்ளிக்கவும்.


நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் பேசி அனைவருக்கும் இதைப்பற்றி அறிய தாருங்கள்


நன்றி வணக்கம்.

Read more...

ஒரு லட்சம் ரூபாயை ஒரே இரவில் செலவு பண்ணுவது எப்படி?

ஒரே


நைட்டுல ஒரு லட்சம் ரூபாய செலவு பண்ண முடியுமா ? என்ற விவாதம் எனக்கும் என் நண்பர்களுக்கும் ஏற்பட்டது.

விவாதம் சவாலாக உருவெடுத்ததும் அந்த சவாலை ஏற்றுகொண்டேன்.

"ஒரே நைட்டுல ஒரு லட்சம் ரூபாய செலவு பண்ணி காண்பிக்க வேண்டும்."

இதானே சவால்? என்றதும்

அனைவரும் "ஆமாம்" என்றனர்.

சொன்ன மாதிரியே நானும் ஒரு லட்சம் ரூபாய ஓவர் நைட்டுல செலவு பண்ணிட்டேன் !

(நம்புங்க மக்களே ..) Check the screenshots - பெயர் மற்றும் அக்கௌன்ட் நம்பர் அழித்துள்ளேன்).




நேத்து நைட்டு பேங்க் பேலன்சு:




இன்று காலை பேங்க் பேலன்சு:






எப்படி என்கிறீர்களா?

ரொம்ப சிம்பிள்..


























எங்கேங்கல்லாம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ அங்கங்கல்லாம் திருப்பி கொடுத்து விட வேண்டும்.

அவ்வளவுதான்!


மேட்டர் ப்ப்பினிஷ் !! !!

( கஷ்டமாத்தான் இருக்கும் வேற வழி இல்லை!)





இதை கேட்டதும் என் நண்பன் சரவணன் இன்னொரு கோஸ்டி உடன் " ஒரே நைட்டுல அஞ்சு லட்சம் செலவு பண்ணி காண்பிக்கிறேன் ..உங்களால முடியுமா? " ன்னு
சவால் விட்டு கொண்டிருந்தார்........




சரவணா....சரிதானே?




Moral Of this Incident : பணம் நிலையற்றது ; ஒரே நைட்டுல லட்சாதிபதி கூட பிட்சாதிபதி ஆகலாம். பார்த்துக்குங்க மக்களே !

Read more...

கலி முத்திவிட்டது!



இடுகை அகற்றப்பட்டு விட்டது. மன்னிக்கவும் !!

Read more...

மலேசிய தமிழர்களின் கவனத்திற்கு..

மாத
வருமானம் 1500 RM க்கு குறைவாக வருமானம் பெறும் நகர்ப்புறம் வசிக்கும் குடும்பங்களுக்கு அல்லது 1000 RM க்கு குறைவாக வருமானம் பெறும் கிராமப்புறத்தில் வசிக்கும் மலேசிய குடும்பங்களுக்கும் உதவி செய்யும் நோக்கத்தில் மலேசிய அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.


திட்டத்தின் பெயர் : e-kasih


பயன்கள் : நேர்காணல் முறையில் தகுதியுள்ள குடும்பங்கள் தேர்ந்தெடுககப்பட்டு பண உதவி மற்றும் தேவைப்படும் பிற உதவிகளும் கிடைக்கப்பெறும்.

அணுகும் முறை : ஆன் லைன் மூலம் பதிவு செய்யலாம் அல்லது அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தை நாடலாம்.

https://www.ekasih.gov.my/Pages/default.aspx

மிக குறைந்த இந்திய குடும்பங்களே இதுவரை இவ்வகை திட்டத்தில் உள்ளன என்பதால் இதைப்பற்றிய விழிப்புணர்ச்சியை தேவையான மலேசிய தமிழ் குடும்பங்களுக்கு தெரிவிப்பது ஒவ்வொரு மலேசிய தமிழர்களின் கடமையாகும்.

நன்றி. வணக்கம்.


குறிப்பு :
இதைப்பற்றி அறியத்தந்த நண்பர் திரு.ஆராசாமி அவர்களுக்கு அன்பு கலந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

RM என்பது மலேசிய கரன்சியை குறிக்கும்




தெரிந்ததை அனைவரிடமும்
பகிர்வது இன்பம்!

Read more...

நோயாளிகளுக்கு இரத்தம் தேவைப்படும் போது ...(அனைவரிடமும் பகிரவேண்டிய விடயம்!)

நண்பர்களே
இன்று நான் அறிந்து கொண்ட ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நம் நாட்டில் எத்தனையோ ரத்த வங்கிகள் இருப்பினும் தேவைபடுவோர் அனைவருக்கும் சரியான நேரங்களில் இரத்தம் கிடைப்பதில்லை. இதை நாமும் பல்வேறு சமயங்களில் ஏதாவது ஒரு வகையில் கேள்வி பட்டிருப்போம்.

நோயாளிகளுக்கு இரத்தம் தேவை படும்பொழுது அருகாமையிலுள்ள இரத்த வங்கியை தொடர்பு கொள்வோம். இரத்த இருப்பு அங்கு இல்லை எனில் நமக்கு தெரிந்தவர்களிடமும் உறவினர்களிடமும் விசாரிப்போம்.


அந்த மாதிர்யான சமயங்களில் கீழே உள்ள விடயத்தையும் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.

1. 9600097000 என்ற எண்ணுக்கு "BLOOD <தேவைப்படும் இரத்த வகை> " SMS செய்யுங்கள்.

2. இரத்த வழங்கி ஒருவர் உங்களை தொடர்பு கொள்வார்.
( இதுவும் இரத்த வங்கியிடம் இருந்து பெறப்படும் தகவல்தான்)

இது எங்கள் அலுவலகத்தில் மனித வள துறையில் இருந்த வந்த மின் மடல். (Forward mail)



மேலும் இதை பற்றிய நம்பகத்தன்மைக்கு கூகிள்-ல் SMS 9600097000 என்று தேடிய பொது இவ்விடயம் பல்வேறு இடங்களிலும் அதிகாரபூர்வமாக பகிரப்பட்டுள்ளது தெரிய வந்தது.

ஆகவே .. நண்பர்களே இன்று யாரோ ஒருவருக்கு தேவைப்படும் இந்த விடயம் நாளை உங்களுக்கே கூட உதவலாம் ..அதனால் தயை கூர்ந்து இந்த விடயத்தை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்



Please Share this information
as many as Possible!



நன்றி வணக்கம் .

Read more...

உதார் விடும் - ரீடிப் - ஷாப்பிங் ! ..உஷார் மேட்டர்!!

நண்பர்களே
சமீபத்தில் "ரீடிப் - ஷாப்பிங்" இன் மூலமாக நான் பட்ட அவஸ்தையை உங்களுடன் பகிர்ந்தது கொள்கிறேன். ஏன்னா நீங்களும் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்தா உங்களுக்கு நல்லது... அதான்!

ரீடிப் - ஷாப்பிங்-ல் வித விதமான ஐட்டங்களை ( அது இல்லீங்க !) ஜிகு ஜிகுன்னு விளம்பர படுத்தி ப்ரீயா டெலிவரி பண்றோம்னு ரெடிப் காரனுங்க ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சிக்கிட்டு திரியிறானுங்க.

சரி ரொம்பதான் இணையத்தில் கூவராங்களேன்னு பொய் பார்த்தா .... ரொம்ப நல்லாத்தான் விளம்பரப்படுத்தி இருக்காங்க.

வடிவேல் பாணியில் "டெஸ்ட் வையுடா அவனுக்கு" அப்படின்னு உள்குரல் எழும்ப நாமளும் ரீடிப் - ஷாப்பிங்-ல் நமக்கு தேவையானது இருக்கான்னு புத்தக பிரிவில் தேடி பார்த்தேன்.

http://books.rediff.com/


எனக்கு தேவையான புக் ஒண்ணு என் கண்ணில் மாட்ட உடனே இணையத்தின் மூலம் ஆர்டர் புக் பண்ணியாயிற்று.








"கஷ்டம்"மர் கேர் க்கு போன் பண்ணி பணத்த எப்படி கட்டுவதுன்னு கேட்க ..அவங்களும் போன் லைனை வேற எங்கிட்டோ கனக்ட் பண்ண ஆடோமடிக் வாய்ஸ் மூலம் கேட்கும் கடன் அட்டை கேள்விகளுக்கு பதில் குடுத்தால் ..பினிஷ் !!
தேவையான பண பரிமாற்றம் எளிதில் அமைந்து விடும்.


(இந்த முறை பண பரிமாற்றத்திற்கு பெயர் என்னவோ சொன்னாங்க சரியா நினைவில்லை.. )


இன்னும் 45 நாளில் உங்களுக்கு புத்தகம் வந்து விடும் அப்படின்னு ஒரு மெயில் வந்தது.
விளம்பரம் பண்றது முப்பது நாள் ஆர்டர் பண்ண பிறகு 45 நாளா ? சிவனேன்னு காத்து கிடக்க வேண்டியது தான் என்று இருந்தேன்.


அப்பாடா ..ஒரு வழியா ரெடிப் காரனுக்கு டெஸ்ட் வச்சாச்சு இப்ப ரிசல்ட்டுக்குத்தான் வெயிட்டிங் அப்படின்னு ஹாய்யா இருந்தா புத்தகமும் வரல ஒன்னும் வரல ...

ஒரு மனுஷன் எத்தனை நாட்களுக்குத்தான் காத்துக்கிட்டு இருப்பதுன்னு ஆன்-லைன் ட்ரக்கிங் இல் பார்த்தா உங்க ஆர்டர் கான்செல் ஆகி ரொம்ப நாள் ஆயிடுச்சுன்னு பல்ல இளிக்குது.


வந்ததே ஒரு கோபம் .. காசையும் குடுத்துட்டு ஒரு மாசம் காலமும் ஆகி உங்க ஆர்டர் கான்செல் ன்னு தெரிஞ்சா எவ்வளவு கடுப்பு வரும்?



எனக்கும் அப்படி ஒரு கடுப்பு வந்து "கஷ்டம்"மர் கேர் க்கு போன் பண்ணி என்னடா இது உங்க கொடுமையான சிஸ்டம் ?

கேன்சல் பண்றதும் பண்றீங்க காசவாவது திருப்பி கொடுக்கலாம் இல்லையா என்று டெரரா கேட்டேன் ?


ரொம்ப கூலா "கஷ்டம்"மர் கேர் தம்பி சொன்னாரு ... அப்படியே நீங்க வெப்சைட் ல பார்த்தீங்கன்னு அதுக்குன்னே ஒரு போரம் இருக்கு ..அதை பில் அப் பண்ணி சுப்மிட் பண்ணிங்கன்னா .... அப்படின்னு சொல்லிட்டே போனாரு .


என்னடா உலகம் இது ??


காசு வாங்கரதுக்குன்னா பேயா அலையறானுங்க ...திருப்பி கொடுப்பதென்றால் நாயா ஓடறானுங்க !

காசும் வேணாம் கருமாந்திரமும் வேண்டாம்னு சொல்லி உங்க அராவடியை உலகத்துக்கே சொல்ல போறேன்னு சொன்னேன். (அதான் ப்லோக் இருக்கில்ல ?? )


"தவறுக்கு வருந்துகிறோம்னு சொல்லி நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்னு" கிளி அடிச்சா சாரி கிலி அடிச்சா மாதிரி சொன்னாரு.

போடாங்கன்னு.. போன வச்சுட்டேன் .

உடனே எனக்கு ஒரு மெயில் வந்தது... இன்னும் ரெண்டு நாளில் உங்கள் ரிக்வெஸ்ட் பிரசஸ் செய்யப்படும் அப்படின்னு.

அதையும் கீழே பாருங்க





இது ஒரு சாதரண ஆர்டர் மட்டுமே. இதுக்கே இப்படின்னா மிக முக்கியமான விலை அதிகமுள்ள பொருட்களை வாங்குபவர்கள் மிக கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது எனக்கு நேர்ந்த அனுபவம் மட்டுமே.. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

குறிப்பு : என்னை மாதிரி அப்பாவியாய் வேலை செய்யும் அந்த "கஷ்டம்"மர் கேர் தம்பியிடம் கடுமையாக பேசியதற்கு வருந்துகிறேன் ..அவர் என்ன செய்வார் ...அம்பை நொந்து என்ன பயன் ?





டைம் இருந்தா இதையும் படிச்சி பாருங்க :-

HDFC ல் லோன் வாங்க லோல் பட்டும் கிடைக்காம போனது எப்படி ?


32 GB Pen drive ஊத்திக்கிட்ட மேட்டர்

Read more...

உனக்கு எவ்வளவு அழுத்தம் இருந்தா ?

என்னடா
இவன் பதிவின் பேர "டெரரா" வச்சிருக்கானேன்னு படிக்க வந்திருக்கீங்களா ?
சும்மா பதிவின் தலைப்பு மட்டும்தான் அப்படி!


மேட்டரு என்னான்னா... சமீபத்துல நான் தெரிஞ்சிக்கிட்ட ஒரு விசயத்த நான் உங்களுடன் பகிந்து கொள்கிறேன்.அவ்வளவுதான் ..அதுவும் அழுத்தம் சம்மந்தப்பட்டது !

****************************************

நாம நமக்கு உடம்பு சரியில்லாத பொழுதெல்லாம் டாக்டருக்கிட்ட போயிருப்போம்.
நமக்கு சின்ன பிரச்சினை இருந்தாலும் பெரிய பிரச்சினை இருந்தாலும்
டாக்டர் பண்ற முதல வேலை நம்ம நாடி துடிப்பை தான் செக் பண்ணுவாரு.

ஏனென்றால் நம்ம நாடி துடிப்பை வைத்தே நம்முடைய பாடி கண்டிஷன் ஐ ஓரளவு தெரிஞ்சுக்கலாம்.

அந்த காலத்துல நாடியை பார்த்தே நோய்களை கண்டு பிடித்து விடுவார்களாம்.

எந்த விதமான நோயினையும் சரியான முறையில் எதிர் நோக்க பொதுவாகவே இதய துடிப்பின் ரிதம் மற்றும் அழுத்தம் ஆகியவை அறியப்படவேண்டிய முக்கிய காரணிகள் ஆகும்.
****************************************
****************************************
தொடர்ந்த மன அழுத்தத்தின் காரணமாக நான் எனக்கு தெரிந்த மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றேன்.
இதயம் தாறு மாறா துடிப்பதாகவும் இரத்த அழுத்தம் சிறிது அதிகமாக இருப்பதாகவும் சொல்லி தற்போதைக்கு மருந்து தருவதாகவும் மேலும் மன இறுக்கத்தை தவிர்ப்பதற்காக யோகா மற்றும் பல பொழுதுபோக்கு (?) அம்சங்களில் மனதினை செலுத்துமாறு அறிவுரை கூறினார்.
சில சமயங்களில் மனது பட படப்பு ஏற்படும் பொழுது இதயம் சீராக துடிக்கிறதா இரத்த அழுத்தம் சரியான அளவில்தான் உள்ளதா என்ற சந்தேகம் அடிக்கடி வரும்.
அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு நாமே நம் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு எண்ணிக்கை ஆகியவை தெரிந்து கொண்டால் நல்லாருக்குமேன்னு தேடிய போது கிடைத்ததுதான் கீழே படத்தில் நீங்க பார்ப்பது.
தேடி பிடித்து அதை வாங்கி உபயோகித்து பார்த்தேன் .ரொம்ப சிம்புள் அண்ட் சூப்பர்.படங்களை பார்த்து நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.


இதை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி எழுதினால் பல தொடர்களாக வந்து விடும் என்ற பயத்தினால் அதை வீடியோ வாக எடுத்து யுடியுப்- இல் ஏற்றி உள்ளேன்.பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.


****************************************

1. இதன் மூலமாக இதய துடிப்பு எண்ணிக்கை - நிமிடத்திற்கு
2. இரத்த அழுத்தம் ( Systolic & Diostolic )
3. இதயம் ரிதம் மாறி மாறி துடித்தால் அதற்கான எச்சரிக்கை
போன்றவற்றை எளிதில் அறியலாம்.

குறிப்பு : இதய சம்மந்தமான நோய் மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் தயவு செய்து மருத்துவரை நாடியே உங்கள் நாடியை தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர இது மாதிரியான "நமக்கு நாமே திட்டத்தை" உபயோகிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

****************************************
இக்கருவியை யாரெல்லாம் உபயோகிக்கலாம் ?

1. விஜய் காந்த் முதல்.. விஜய் படம் வரை... பின் விளைவுகள் அறியாமல் தவறாது பார்த்து விடுபவர்கள் இந்த மாதிரியான கருவிகளை கையோடு கொண்டு போனால் படத்தின் இடை இடையே தத்தம் நாடியை சரி பார்த்துக்கொள்ளலாம்.

2. என்னை மாதிரியான ஆர்வ முதிர்ச்சியால் எழுதப்படும் இந்த மாதிரியான் மொக்கை பதிவுகளை படிக்கும் போது எவ்வளவு கடுப்பு ஆகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தலாம்

3. இந்த மாதிரி எல்லாம் கருவிகள் வந்துருக்கா.. என்று என்னை மாதிரி எக்ஸ்பெரிமென்ட் பண்றவங்களும் ட்ரை பண்ணி பாக்கலாம்

நன்றி வணக்கம் !







Read more...

இலவச இதய அறுவை சிகிச்சை - குழந்தைகளுக்காக !

இது
பற்றிய விவரங்களை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிந்து கொள்ளவும்.
கீழுள்ள படத்தினை பெரிதாக்கி மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளவும்.




நீங்கள் உங்களுக்கு தெரியாமலேயே முகம் பேர் தெரியாத யாரோ ஒருவருக்கு உதவி செய்ததாக நினைத்துக்கொள்ளுங்கள்.


Sri Sathya Sai Institute of Higher Medical Sciences EPIP Area,



Whitefield,


Bangalore 560 066,


Karnataka , INDIA .


Call us :


Telephone: +91- 080- 28411500 Fax +91 - 080- 28411502


Employment related +91- 080- 28411500 Ext. 415




நன்றி . வணக்கம்

Read more...

HDFC- வசனத்த மாத்துங்கடா டோய் ...

நண்பர்களே ..
இந்த பதிவை படிக்கும் முன் கீழே உள்ள லோகோவை ஒரு முறை உத்து பார்த்துட்டு அப்புறமா படிக்க ஆரம்பிங்க !











எல்லாம் என் நேரம் .... போட்ட கணக்கெல்லாம் தப்பா போச்சு!
பணம் வரும் என்று எதிர்பார்த்த எல்லா வழிகளிலும் நயா பைசா பெயராததால் கையை பிசைந்து கொண்டிருந்தேன்.

இன்னும் பத்து நாட்களில் பணத்தை புரட்டியாகவேண்டிய நிலை
முதல முதலாய் முடியாதோ என்கிற பயம் மனதில் எட்டி பார்த்தது.

என்ன பண்றதுன்னே தெரியல ..இருந்தாலும் மனதில் ஒரு அசட்டு தைரியம் ...எப்பாடு பட்டாவது பணத்தை செட்டில் பண்ணி சொன்ன வாக்கை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம்.

"இந்த பேங்க் காரனுங்கதான் ஒரு நாளைக்கு மூணு முறை "பர்சனல் லோன் தரேன் ..பர்சனல் லோன் தரேன் ன்னு கூப்பாடு போட்டு போனில் தொந்தரவு பண்ரானுங்களே ..அவனுகள கேட்டு பார்த்தா என்ன ?"

மனம் நினைத்ததும் நினைவுகள் இனித்தது..

எவ்வளவு வட்டி இருந்தாலும் சரி இப்போதைய தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது தான் முக்கியம் ..மத்த அப்புறம் பார்த்துக்கலாம் என எனக்கு நானே அறிவுரை (?)சொல்லிக்கொண்டு "HDFC Customer care " க்கு போன் பண்ணினேன்.


"இந்த மாதிரி... எனக்கு அர்ஜெண்டா பணம் தேவை படுது ... அதான் என்னமோ "Cash on Call " அப்படின்னு ஒண்ணு இருக்காமே.. அதன் மூலமா எனக்கு இவ்வளவு பணம் ஏற்பாடு பண்ண முடியுமா" என்று கேட்டேன்.

"சிம்புள் மேட்டரு நீங்க வைச்சிருக்குற கிரெடிட் கார்டுக்கு நீங்க கேட்டதுக்கு மேலேயே கிடைக்கும்" பதில் வந்தது.

"பணம் கிடைக்கும் என்றதுமே இதயம் நெகிழ்ந்தது! நெஞ்சம் இனித்தது! "


" வட்டி விகிதம் 22%.. நாங்க உங்க ரிக்வெஸ்ட்-ஐ ப்ராசெஸ் பண்றேன். நாலு நாள் கழித்து நாங்களே போன் பண்றோம்" அப்படின்னு ஒரு கடைசி பிட்ட போட்டா.. HDFC கஸ்டமர் கால் சென்டர் காரி !

நாலு நாள் வரை காலும் வரல கையும் வரல ... எனக்கு இங்க கையும் ஓடல காலும் ஓடல ...


சும்மா இருக்குபோதேல்லாம் சும்மா சும்மா போன் பண்ணி வேணுமா... வேணுமானு கேப்பானுங்க ..
இப்ப வேணும்ன்ற போது வக்காளி... ஒருத்தனும் போன் பண்ணலையேன்னு என்று மனம் மறுபடியும் கவலை பட்டது ..

"நாயின்னாவே நாக்குலதான் நக்கித்தான் தண்ணி குடிக்கணும் ...

பணம்னாலே மானத்தை விட்டுத்தான் கேட்கனும்னு"


ரெண்டாவது முறையா போன் பண்ணா .."Your request is still on Process" இன்னிக்கி சாயந்தரத்துக்குள்ள சொல்லிடறேன் அப்படின்ன்றாங்க!

சாயந்தரமும் போச்சு அதுக்க அடுத்த நாள் சாயந்தரமும் போச்சி ...தப்பான களத்துல விளையாடுரமொன்னு லைட்டா ஒரு டவுட் வந்துச்சி.


இப்படியே மறுபடி மறுபடி காலையிலும் மாலையிலும் "கஸ்டமர் கால் சென்டர்"க்கு போன் பண்ணி பண்ணி இத்தன நாள் சேர்த்தி வச்சிருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போனதுதான் மிச்சம்.

கடைசி வரைக்கும் request is still on Process..request is still on Process" ன்னு சொல்லியே ஒரு வாரத்தை கழிச்சுட்டாங்க...

இனிமே என் பேச்ச நானே கேட்க மாட்டேன் ..

( அவ்வளவு கேவலமா இருக்கும் )

நான் தனி ஆளு இல்ல ...எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு!
( என்னை பின் தொடரும் 24 தமிழ் பதிவர்கள் !)

அப்படின்னு மனசுக்குள்ளேயே பன்ச் டயலாக் விட்டுகிட்டு கடைசி முறையா போன் பண்ணி ...

"இல்ல,, தெரியாமத்தான் கேட்கிறேன்.. "Cash on Call " ன்றது அர்ஜெண்டா பணம் தேவைபடுறவன் கேட்கற விஷயம் ..
இதுக்கே ஒரு வாரம் இழுத்தடிசிங்கன்னா அந்த ஸ்கீமுக்கே மீனிங் இல்லையே ?

தரேன்னா தரேன்னு சொல்லணும் இல்லன்னா தரமாட்டேன்னு சொல்லணும் ...
அத விட்டுட்டு ..தருவோம்ம்..ஆனா தரமாடோம்ம்னு ராங்கா பேசினா என்ன நியாயம் ?

என்னா என்கிட்டேயே விளையாட்டு காட்ரீங்களா? ..


அப்படின்னு ஒரு பிடி பிடிச்சதும் அந்த பொண்ணு "ஒரு நிமிடம் லைன்ல இருங்க சார் " சொல்லிட்டு வேற யார்கிட்டயோ டிஸ்கஸ் பண்ணி " சார் உங்களுக்கு லோன் இன்னும் அப்ப்ரூவ் ஆகல ஸ்டில் ஆன் த ப்ராசஸ் " அப்படின்னா பாருங்க ....

எனக்கு வந்ததே கோபம் ...கண்ணு மண்ணு தெரியாத கோபத்துல ...எனக்கு பணமும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம்னு தமிழ்ல அந்த ஹிந்தி கார பொண்ணுக்கிட்ட கத்தி திட்டிட்டு சட்டென கையிலிருந்த கிரெடிட் கார்டை உடைச்சி போட்டுட்டு பட்டுன்னு போனை கட் பண்ணிட்டேன்.


அந்த கடுப்புல கார்டில் இருந்த "HDFC LOGO" கண்ணுல பட்டதும் எனக்கு தோணிய விசயத்தை நீங்களே கீழே பாருங்க.

குறிப்பு : கடைசி வரை என் பீலிங் ஐ புரிசுக்கவே மாட்டேனென்ற "HDFC Bank" கிற்கு அரை பதிவும் ...



என் கஷ்டத்தை எல்லாம் புரிஞ்சிக்கிட்டு கடைசி வரை போராடியும் பணமே தராம அட்வைஸ் மட்டுமே குடுத்துட்டு அலேக்கா எஸ்கேப் ஆன என் நண்பர் சரவணனுக்கு மீதியுள்ள அரை பதிவும் சமர்ப்பணம்.





Read more...

மேகம் கருக்குது மழை வர மாட்டேங்குது!

மக்களும்
எத்தன நாட்களுக்குத்தான் பொறுமையா இருப்பாங்க .... எனக்கு தெரிச்சவங்க எல்லோருமே எதாவது ஒரு வகையிலாவது அவரவர் உணர்வுகளை வெளிப்படுத்தீட்டாங்க ..இந்த பாழா போன மழை இன்னும் வரலயேன்னு!





கல்யாணத்துக்கு தேதி குறிச்ச ( ஜூன் ஏழு ) மாதிரி போன மாசமே மழை வருமென்று எதிர்பார்த்தும் இன்னும் வராம இருப்பதனால் மக்கள் எல்லாம் கடுப்பில் இருக்கிறார்கள்.

நான் இருக்கும் ஊருல இன்னும் பதினைந்து நாட்களுக்குத்தான் தண்ணீர் இருக்குமாம். அதுக்கப்புறம் எல்லாத்துக்கும் சங்குதான் ....

எங்க கம்பெனிக்கு பக்கத்துல இருக்கிற ஒரு கம்பெனில பத்து நாளைக்கு லீவு விட்டுட்டாங்க (அது ஒரு மருந்து கம்பெனி)..
அவனவன் "ரிசசன்" காரணமா ஊத்தி மூடிக்கிட்டு இருக்கும் போது இந்த கம்பெனி என்னடான்னா தண்ணீர் காரணமா லீவு விட்டிருக்காங்க !)


கடந்த இரு வாரமாக மேகங்களெல்லாம திரண்டு வரும் ...வானம் இருண்டு போகும் ..குளிர்ந்த காற்று அடிக்கும் சிறு தூறல் போடும் ..மக்களெல்லாம் மகிழ்ச்சியில் அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருக்குபோதே எங்கதான் போகுமோ தெரியிலேங்க ... எல்லாமே காணாம போய் சூரியன் நம்மள பார்த்து ஈயின்னு இளிப்பான் !





"நாம்தான் மத்தவங்களுக்கு தண்ணி காட்டுவோம் இப்போ மழையே
நமக்கு தண்ணி காட்டுது" என்ன கொடுமை இது கடவுளே ?

உண்ணாவிரதம் இருந்தா மழை விட்டு தூவானம் மட்டும் இருக்குமாம்.
இப்ப தூவானம் மட்டும்தான் இருக்கு மழைய காணோம் இதுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சி சொல்லுங்க மக்களே .....

குறிப்பு : ஒவ்வொரு பகுதியிலும் மழை வரும் காலம் மாறுபடும். இந்த பதிவு மும்பை மற்றும் பூனே பகுதியை சார்ந்து எழுதப்பட்டது.

Read more...

பென் டிரைவ் உஷார் மேட்டர்!

ஹலோ

"ஹலோ ..." ன்னு தூரத்திலிருந்து சத்தம் கேட்டவுடன் .."நம்மள எவண்டா கூப்பிடரவன்னு" திரும்பி பார்த்தா " எக்ஸ்கியுஸ் மீ சார் ..ஒன் மினிட் ப்ளீஸ்! அப்படின்னு டிப் டாப்பா ஒரு ஆள் என்னை நோக்கி வந்துகொண்டு இருந்தான்.

"சார் நான் ஒரு சேல்ஸ் மேன். என்கிட்ட பென் டிரைவ் நிறைய இருக்கு எல்லாமே 32 ஜி பி..
வெல ஒன்னும் அதிகமில்லை ஜஸ்ட் ஐந்நூறு ரூபா தான்" அப்படின்னான்!






என்னாது 32 ஜி பி யா ?
என்கிட்ட இருக்கிற லாப்டாப்பே நாப்பது ஜி.பிதான் தமாந்தூண்டு மெமரி ஸ்டிக்கு முப்பத்திரண்டு ஜி பி யா ? எத்தன படம் ,,எத்தன பிச்சரு எத்தன டேட்டா சேவ் பண்ணலாம்னு அப்படின்னு வாய திறந்துக்கிட்டு யோசித்துக்கொண்டிருக்கும் போதே என் பிரண்டு ஒருத்தன் "இருநூத்தி ஐம்பது ரூபான்னா வாங்கறோம்" அப்படின்னு பாதியாக குறைத்தான்.

அதிக பேரம் பேசாமல் டீலுக்கு ஒத்துக்கிட்டான்....

என்கூட இருந்த ஜுனியர் ஒருத்தன் "சார் இது வொர்க் ஆகுமா ஆகாதான்னு செக் பண்ணனும்னு" சொன்னதுதான் தாமதம் ...
"எட்றா லேப்டாப்பை சொருகுடா பென் டிரைவை" ன்னு செக் பண்ணா வெரி நைஸ்! வொர்க் ஆகுது.. :)

டேட்டாவை உள்ளேயும் வெளியவும் இழுத்து போட்டுபார்த்தா சும்மா கலக்கல்..
இன்னியோட இந்த ஒரு ஜி பி ரெண்டு ஜி பி பென் டிரைவை எல்லாம் சீண்டக்கூட மாட்டேன்னு, ஆசை ஆசையா இந்த 32 ஜி பி பென் டிரைவ் ஐ யூஸ் பண்ணேன்.

எங்க ஆபிசுல இருக்கறவங்க எல்லாம் என்கிட்ட கோபப்பட்டாங்க ஏன் எனக்கு ஒன்னு வாங்கலன்னு !

நான் சொன்னேன் "அவன் யாரோ எவனோ தெரியாது ..நாங்கல்லாம் .ஆபீஸ் முடிஞ்சி எங்க ஏரியாவில் இருக்கிற ஓர கடையில தம்மு பத்த வச்சிக்கிட்டு இருக்கும்போது ஒருத்தன் வந்து வித்துக்கிட்டு இருந்தான் அவன் அட்ரஸ் எல்லாம் கேட்கல .. வெரி சாரி" அப்படின்னுட்டேன்..

மறுபடியும் அவன பார்த்தா ..உங்க எல்லாத்துக்கும் வாங்கி வைக்கிறேன் ..மனச தேத்திக்குங்க மக்களேன்னு கர்வத்துடன் சொன்னேன்..


ஒவ்வொரு நாள் காலையிலும் எங்க ஆபிசுல இருப்பவர்கள் "அவன் கிடைச்சானா ..அவன் கிடைச்சானா " ன்னு ஒரே தொல்லை ...நானும் அந்த ஏரியா பூரா தேடி பார்த்துட்டேன் ஆளே அகப்படலன்னு! ஒரு பிட்ட போட்டுட்டு ஒவ்வொரு முறையும் எஸ்கேப் ஆகிடுவேன்


இதெல்லாம் எத்தன நாளைக்கின்றீங்க ...

வெறும் ஏழு நாள்தான் .

இப்பல்லாம் பென் டிரைவ் உள்ள இருந்த அத்தனை மேட்டரும் கரப்ட் ஆகுது .
எப்ப கரப்ட் ஆகும்ம்னு கணிக்க முடியல..... பார்மெட் பண்ணி உபயோகிக்கனும்....பிறகு மறுபடியும் கரப்ட் ஆகும் திரும்பவும் பார்மெட் ...SH** too hectic :(

இதனாலேயே மிக முக்கியமான டேட்டாக்களை உள்ளே வைப்பதில்லை
இதுக்கு முன்ன இருந்த அந்த ஒன் ஜி பி பென் டிரைவை தேடி கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும்ம்னு ஆயிடிச்சி .

இப்பவும் எங்க ஆபிசுல இருப்பவர்கள் கேட்கிறாங்க பென் டிரைவை விக்கிறவன்
கிடைச்சானான்னு..

ஆனா இந்த முறை உண்மையை சொன்னேன் "நானும் அந்த ஏரியா பூரா தேடி பார்த்துட்டேன் ஆளே அகப்படலன்னு!"....




Read more...

வரப்போகுது மழைக்காலம் - பார்ட் ரெண்டு!


பெ
ரும்பாலான இடங்களில் ஏற்கனவே மழைக்காலம் ஆரம்பித்தாயிற்று.
ஒரு சில இடங்களில் இன்னும் சில நாட்களில் வந்து விடும்.




இப்ப நம்ப என்ன பண்ணனும்னு பதிவு போதையில் யோசிச்சபோது தோன்றிய முன் யோசனைகளை (?) உங்களுடன் பகிந்துக்குறேன்.

1. ரெயின் கோட் இல்லாதவங்க முதல்ல கடையில போய் வாங்கிடுங்க.
"வானம் பொத்துக்கிட்டு" ஊத்தும்போது இருக்கும் அநியாய விலையை விட "வானம் பொத்திக்கினு" இருக்கும்போது விலை கொஞ்சம் சுமாரா இருக்கும்
குடை கூட அப்படிதான் !


2. மழைக்காலங்களில் பொதுவாக நீர் சம்மந்தமான சுகாதார சீர் கேடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால இப்பவே நல்ல ஒரு "வாட்டர் பியுரிபியர்" வாங்கிடுங்க!


3. எமர்ஜென்சி லாம்ப் வாங்கி வைச்சுக்கங்க. அடிக்கடி பவர் கட் ஆகும்.
(இதெல்லாம் பழகினதுதானே!..புதுசா என்ன ?)


4. வாட்டர் ஹீட்டர் இல்லைன்னா வாங்கிக்குங்க ... இருந்தா.. நல்லா இருக்கான்னு இப்பவே செக் பண்ணி வச்சுக்குங்க !


5. செருப்பு ஓவரா தேஞ்சி போயருசின்னா ஒண்ணு (ஒண்ணுன்னா ஒரு ஜோடி)வாங்கிக்குங்க ..... வழுக்கி விழாம தப்பிச்சுக்குங்க! (Applicable for shoe also!)


6. பிரேக் பிடித்தா பத்தடி தள்ளி நிக்கும் டூவீலர் வைத்திருப்பவர்கள் இப்பவே சர்வீசுக்கு விட்டுடுங்க.... ரொம்ப முக்கியம் டயர் கண்டிஷன் நல்லா இருக்கணும். டயர் தேய்ந்து டியுப் மாதிரி இருக்கா ...மாத்திடுங்க

7. வாட்டர் ப்ரூப் மொபைல் கவர் வாங்கி மொபைலை பாதுக்காத்துக்கொள்ளுங்கள்.

8. மூட்டை பூச்சி தொந்தரவு இருந்தா இப்பவே என்னன்னு பாருங்க .

9. தடிமனான பெட் சீட் மற்றும் கம்பளி போன்றவைகளை இப்பவே துவைத்து விடுங்கள்.

10. உலர்ந்த வேப்பிலைகளை சேகரித்துக்கொள்ளுங்கள். அடிக்கடி இதில் வீட்டில் புகை போட்டால் கொசு போன்றவை அண்டாது




11. நீங்களே உங்க வீட்டிலுள்ள அணைத்து தண்ணி பைப் லைன்களை சரி பார்க்கவும்.
மழை பெய்யும் பொழுது தண்ணி எங்க லீக் ஆகுதுன்னு கண்டு பிடிப்பது கடினம்

12. வீட்டில் எலெக்ட்ரிகல் எர்த்திங் ரொம்ப முக்கியம். முறையான முறையில் சரியான வயரிங் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


13. இடி இடிக்கும்போது கேபிள் வயர் - ஐ பிடிங்கி விடுவாங்க. சில சமயம் அந்த வயர் இரும்பு போன்ற மின் கடத்திகளுடன் தொடும்பொழுது அபாயகரமான விளைவுகள் ஏற்படலாம். கவனம் தேவை. பிளாஸ்டிக் இல் மூடி போன்ற சாதனத்தை வாங்கி வைக்கவும்


14. டிரைனேஜ் வழிகளை இப்பவே தூர் வாரிடுங்க ..அடைமழையின்போது அடைத்துக்கொண்டால் கஷ்டம்

15. மழையில் நடந்து போகும்பொழுது ஒரு பெரிய கைதடியை எடுத்துக்கொண்டு முன்னாள் தட்டிக்கொண்டே செல்லுங்கள். நம்மூரு ரோடுல ஒரு அடி குழியும் இருக்கும் .. ஒரு ஆள் ஆழ குழியும் இருக்கும்







16. மிகவும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் ஒரு பெரிய வாளியை வாங்கி வச்சுக்குங்க...என்ன தண்ணி வீட்டுக்குள்ள வந்திருச்சுன்னா மொண்டு மொண்டு வெளியில் ஊத்த ரொம்ப வசதியா இருக்கும் !


17. இதுக்கு மேலயும் எதாவது உபயோகமான யோசனைகள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும் ...படிக்கறவங்களுக்கு உபயோகமாக இருக்கும்


18. இன்று எனக்கு வந்த ஒரு எஸ் எம் எஸ் :-

Next time when rain comes, try to count the drops…

How much you count, that much you like me ….
How much you miss, that much I like U………..


எப்பூடி ?





குறிப்பு : இவ்வளவு முன்னேச்சரிக்கைகளையும் பண்ணி வச்சுக்கிட்டு கவருமெண்டு குடுத்த இலவச டிவில அல்லக்கைகள் போடற குத்தாட்டத்தையும் அழுகியவாதிகளின் அநியாய பொய் அறிக்கைகளையும் பார்த்து கொண்டே வட போண்டாவையும் கோக்கையும் குடிச்சி மழை காலத்தை என்ஜாய் பண்ணுங்க இனிய தமிழ் மக்களே !


ஸ்ரீலங்கா தமிழனுங்க எப்படி போனா நமக்கென்ன ? வெயில்ல காஞ்சா என்ன .. மழையில குளிச்சா என்ன ?

Read more...

வரப்போகுது மழைக்காலம் .. ஜாக்கிரதை ! - பார்ட் ஒண்ணு!




வ்வொரு மழைக்காலமும் ஒவ்வொரு அனுபவத்தை நம்முள் விட்டு செல்கிறது.
பலருக்கு இது அருமையான கால மாற்றம் மட்டுமே, சிலருக்கு ஆழமான மன வாட்டத்தை விட்டு செல்கிறது :(

இந்த மொக்கைக்கு விளக்கமெல்லாம் கேட்கபடாது .....


கீழே உள்ள படங்கள பாருங்க உங்களுக்கே தெரியும் ....இந்த மாதிரி சூழ்நிலையில் நாம் இருந்தால் நமக்கு எப்படி இருக்கும் ...












































































































ரொம்ப பீலிங்கா இருக்கு இல்ல ?
இதுக்கே கலங்கிட்டா எப்படி....

இயற்கை மழையில்தான் இவ்வளவு சோகம் என்றான் செயற்கை மழையில் இத விட பெரும் சோகம்!!
நீங்களே பாருங்க என்னமா கஷ்டபடுறாங்க.....













நன்றி : கூகிள் மற்றும் போஸ்டன் பிக் பிக்சர்ஸ்

குறிப்பு :
இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடுபவர்களுக்கு "மழை வருது ..மழை வருது..குடை கொண்டு வா" மற்றும் "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்" பாடல்கள் ரிங் டோன் தனி மடலில் அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மாதிரி சிறப்பு சலுகையை அறிவித்தும் ஈ காக்கா குருவி கூட நம்ம பக்கம் காணமே.... தப்பு தப்பா பதிவு போடறமோ ??????

Read more...

எதிரி வென்றான் ; துரோகி வீழ்ந்தான்;

கி

ரிக்கெட் எனக்கு ஊறுகாய் மாதிரி .. டிவி பார்த்துக்கொண்டு இருக்கும்போது அப்பப்ப மட்டும் ஸ்கோர் என்ன என்பதை தெரிந்து கொள்வதோடு சரி!

இன்றைக்கு நியூஸ் பார்த்தா ஐ சி சி ட்வென்டி ட்வென்டி ல பாகிஸ்தான் சீக்கு லங்காவை வின் பண்ணிடுச்சாம்!

இந்த நியூஸ் கேள்வி பட்டதுமே எனக்கு சட்டென நினைவுக்கு வந்த வார்த்தைகள்

ங்கொய்யால ..எதிரி வென்றான் ; துரோகி வீழ்ந்தான்;



எதிரி வென்றான் !






துரோகி வீழ்ந்தான் !







இந்தியன் கிரிக்கெட் டீம் இத பத்தி என்ன சொல்றாங்கன்னா ...


அம்பது ஓவர் மேட்ச் ஆக இருந்தாலும் சரி இருபது ஓவர் மேட்ச் ஆக இருந்தாலும் சரி உலக கோப்பைனாவே நாங்க ஒருமுறைதான் ஜெயிப்போம்
நாங்க ஒருமுறை ஜெயிச்சா நூறு முறை ஜெயிச்ச மாதிரி ..அப்படி நினச்சிக்கிட்டு மனச தேத்திக்குங்க மக்களே !









Read more...

வீக் எண்டு பார்ட்டி....

வெ
ள்ளிகிழமை ஆனாலே எங்க ஆபிசுல உள்ளவங்க எல்லாம் "ஹாப்பி வீக் எண்டு !ஹாப்பி வீக் எண்டு !" ஒரே வாழ்த்துக்கள்.


ஒவ்வொர்தரும் இந்த வீக் எண்டுல இத பண்ண போறேன் அத பண்ண போறேன்னு பேசிட்டு இருப்பாங்க


இது எல்லா அலுவலகங்களிலும் நடப்பதுதான் ...

கீழே உள்ள போட்டோக்களை பாருங்க .... இப்படியுமா வீக் எண்டை கொண்டாடுவாங்க என்று சிரிப்பீங்க...

படங்களை பெரிதாக்க கிளிக்கவும்.














இவனுங்கல்லாம் யாரு எவன்னு தெரியாது ஆனா படங்கள் சிரிப்பை தூண்டியதால் பதிந்துள்ளேன்

குறிப்பு : இப்படி அநியாயத்துக்கு எல்லாத்தையும் குடிச்சா Week End முடியறதுக்குள்ள Body End ஆகிடும்.

Read more...

ஹாப்பி ரிங்கிங் ......!!




கே

ட்டவுடன் மனதை வருடற மாதிரியும் இல்லன்ன வயிற்றை கலக்கற மாதிரியும் இந்த காலத்தில் அவனவன் விதவிதமா ரிங் டோன் வச்சிக்கிட்டு கலக்குறாங்க.


நண்பர்களில் யாராவது நல்ல ரிங் டோன் வச்சிருந்தாங்கன்னா கேட்டவுடன் பிடித்துபோய் விட்டால் எனக்கும் குடுங்க.. என்று எத்தனை நாட்களுக்குத்தான் கேட்கிறது?

சில சமயம் ரிங் டோன் வச்ச ஒரு வாரத்திலேயே வேற ஒரு ரிங் டோனை மாத்தினா என்ன.. என்கிற நினைப்பு வரும்.

நல்ல பாடல்கள் கேட்கும்பொழுது பாடலில் சில பகுதிகள் மட்டும் நமக்கு ரிங் டோனா இருந்தா நல்லாருக்குமேன்னு தோணும் ..

அந்த மாதிரியாகப்பட்ட சமயத்தில் பாட்டின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க ஒரு நல்ல மென்பொருள் இருந்தா நல்லாருக்குமேன்னு கூகிள்-ல தேடினேன் .

ஒரே சர்ச்-ல கிடைத்தது ஒரு மென்பொருள் .அதன் பெயர் எம் பி த்ரீ - கட்டர்.

பேருக்கு ஏத்த மாதிரி எம் பி த்ரீ - File ஐ எந்த பகுதியையும் வெட்டிக்கலாம்.







வெட்டிய பகுதியை உங்கள் மொபைல் போன் -இல் ஏற்றுங்கள்.


அப்புறம் என்ன ... உங்க ரிங் டோனால் மத்தவுங்க முன்னாடி கலக்குங்க ...

தரவிறக்கம் செய்ய
லிங்க் இங்க கிளிக் பண்ணுங்க ......டவுன்லோட் பண்ணி வெட்டி என்ஜாய் பண்ணுங்க .


ஹாப்பி ரிங்கிங் ......!!





Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP