பழிக்குப்பழி !!

அதாங்க .... தமிழ்நாட்டு அதி மேதாவி , இளிச்ச வாய் தளபதி , உண்ணா விரத மேடையில் பிரியாணி பொட்டலம் வீசிய கர்ணன் , சந்துல காங்கிரஸ் உடன் சிந்து பாட துடித்த கூட்டு களவாணி, அரசியலில் வருவதற்காகவே பஞ்சு டயலாக் பேசி நடிக்கும் தமிழ்நாட்டு சேம்ஸ் பாண்டு.. சமீபத்தில் நடித்து தொலைத்த "சுறா" படத்தை பற்றிய விமர்சனத்தை படித்ததும் காண்டாகி போய்டேன்.


விஜய் படத்துல நடிச்சு தமிழ் மக்களை பழி வாங்குன மாதிரி, நாமும் ஒரு படத்த எடுத்து விஜயை பழி வாங்கிற வேண்டியதுதான் என விஜயை வச்சே எடுத்த படம். (Plz turn on the speakers!)

Read more...

உதித் நாராயணனும் தமிழ் பாட்டும்

முன்னாடி எல்லாம் வீக் எண்டு ஹாலிடேய்ஸ் என்றாலே ஒரே கொண்டாட்டம் தான் ஆனா இப்போ நிலைமையே தலை கீழ்!

நமக்குதான் விடுமுறை என்றால் கட்டி போட்டாலும் வீட்டிலே இருக்க முடிவதில்லை அங்க இங்கன்னு வெளிய பொய் இந்த 40 Celcius வெயில்ல ஊர் மேய்வதை விட ஒழுங்கா ஆபீஸ்ல உட்கார்ந்து 18 Celcius குளிர்ல ப்லோக்குகளை மேயலாம்..


போன வார "Sun"day வெயிலுக்கு பயந்து வெளியே வீட்டிலேயே முடங்கி டிவி, தினசரி நாளிதழ்கள் மற்றும் இன்டர்நெட் சகிதம் ஐக்கியம் ஆனேன்.

அப்போது ஒரு மராட்டி டிவி சேனலில் உதித் நாராயன் என்ற பாடகர் தமிழில் பாடி கொண்டிருந்தார். மராட்டி சேனலில் தமிழா?? என்று ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்தேன். அது ஒரு பேட்டி மற்றும் பாடல் நிகழ்ச்சி . ஆடியன்ஸ் அனைவரும் மராட்டிகாரங்க.

மேட்டர் என்னான்னா.. உதித் நாராயன் அவருடைய பாடல் அனுபவங்களை மராட்டிகாரர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தமிழ்காரர்களை பற்றி மிகவும் சிலாகித்து பேசினார் .. அதாவது தமிழர்கள் நிரம்ப திறமைக்காரர்கள் என்று... !

இதை கேட்டதும் என்னுடன் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த மராட்டிகாரன் இவ்வளவு திறமைசாலிகளா உங்க ஆளுங்க ??.. என்று வினவினான்

அப்போது என் முகத்தை பார்க்கணுமே ??? சிரிப்பில் (பெருமையில் ) வாய் விரிந்து காது வரை வந்தது.

பெருமை படுவதிலும் நம்மாளுகளை அடிச்சிக்க முடியாது... அதே மாதிரி உள்ளுக்குள்ள அடிச்சிக்குவதிலும் நம்மாளுகதான் மொதோ.

சரி அத விடுங்க ..மறுபடியும் உதித் நாராயன் மேட்டர்க்கு வருவோம்

"இவ்வளவு கஷ்டமான பாசையில் எப்படி இவ்வளவு அருமையா பாடராருன்னுதான் ஆச்சரியமா இருக்கு !!" என்றான்

உண்மையிலேயே தமிழ் ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்லை மச்சி !!
ரெண்டே நிமிடத்தில் ஒருத்தனுக்கு ட்ரைனிங் கொடுத்தால் போதும்.. தாராளமாய் பாடலாம் என்றேன்.

சத்தியமாய் ரெண்டே நிமிடத்திற்கும் குறைவாகத்தான் ட்ரைனிங் கொடுத்தேன் இங்கேயும் ஒருத்தன் அர்த்தம் தெரியாமல் தமிழ் பாட்டு பாடறான் ...பாருங்க ...

இந்த பதிவ எழுதிட்டு நான் படிச்சி பார்க்கிறேன் ..... எனக்கே ஓவர் மொக்கையா இருக்கு ...
இருந்தாலும் சொல்லவேண்டியதை எழுதியே ஆக வேண்டும்என்ற தார்மீக கடமை ஒரு தமிழ் பிளாக்கர் (?) என்ற முறையில் இருப்பதால் இப்பதிவை வெளியிடுகிறேன்..


என் இனத்து அணைத்து தமிழ் நண்பர்களுக்கு இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஒன்றுபடுவோம்... வெற்றி நமதே...

Read more...

சோனியாவுக்கு ஒரு நியாயம் சானியாவுக்கு ஒரு நியாயமா ?

டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கே பெருமை தேடி கொடுத்தவங்க நம்ம(?) சானியா மிர்சா.
இனிமே பாகிஸ்தானுக்கு பெருமைய தேடி தர போறாங்களாம்.அதாங்க ... சானியா எவனோ ஒரு பாகிஸ்தான்காரன் கிட்ட மனதினை (?) பறி கொடுத்துட்டாங்களாம்..
கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு ஊரு உலகம் முழுதும் டமாரம் அடிச்சிட்டு இருக்கா..
அது சரி லவ்-ன்னு வந்தாலே கல்யாணம் பண்ணிக்கவேண்டியதுதான்.

அத தடுக்க நாம யாரு ?நம்மகிட்ட யாரும் வந்து கருத்து கேட்கவில்லை என்றாலும் நாமளாவே வாலண்டியரா கருத்த(!) சொல்றதுதான் பிளாக்கர்க்கு மரியாதை. (சொல்லலைனா தமிழ் பிளாக்கர்ன்னு சொல்லிக்கிறதே வேஸ்ட்)


வேற ஒன்னும் இல்லீங்க.. இந்தபக்கம் அந்தபக்கம் ..ஆயிரம் பேரு ஆயிரம் கருத்து சொன்னாலும் பாகிஸ்தான் கவர்மெண்டுகாரன் சொன்னான் பாருங்க அதுதாங்க கருத்து சும்மா நச்சுன்னு...

கல்யாணம் ஆன பிறகு சானியா மாலிக் ( கல்யாணம் ஆன பிறகு பேரு மாறிடும் இல்ல !!) (அந்தோனியோ மைனோ சோனியா காந்தி ஆகும்போது சானியா மிர்சா சானியா மாலிக் ஆகாதா என்ன ?)
பாகிஸ்தான்காக தான் டென்னிஸ் ஆடுவாங்களாம்.... இந்தியாவுக்காக ஆட முடியாதாம்.

சானிய மிர்சாவின் கோச் (Coach) நெனச்சு பார்த்திருப்பானா இதுவரை பட்ட கஷ்டம் எல்லாம் இனிமே பாகிஸ்தானுக்காக என்று ...

சானிய மிர்சாவின் ரசிகர்கள் நெனச்சு பார்த்திருப்பார்களா இனிமே சானியாவின் வெற்றிகள் நம் நாட்டுக்கு இல்லையென்று ?? (வட போச்சே !!?)
சானிய மிர்சாவின் இந்திய ஸ்பான்சர்கள் நெனச்சு பார்த்திருப்பார்களா சானியாவை வைத்து இனிமே போனி பண்ண முடியாது என்று

இந்த கருமத்தை எல்லாம் பற்றி எங்க ஆபீஸ்ல ஒருத்தன்கிட்ட பேசிட்டு இருக்கும்போது "இதெல்லாம் அநியாயம் ...சானிய மிர்சா இந்தியாக்குதான் விளையாடனும் ..... பாகிஸ்தான்க்கு விளையாட கூடாதுன்னு அப்படின்னான் :"

"அது சரி ..போன எலெக்சன்ல யாருக்கு ஒட்டு போட்டே?" ன்னு கேட்டேன்!
"சானியா மிர்சாவுக்கும் ..ஒட்டு போட்டதுக்கும் என்ன சம்மந்தம்" என்றான்

இருக்கு சொல்லு ..

காங்கிரஸ்க்கு ...

அவ்வளவுதான் ... கடுப்பில் அவன காய்ச்சி எடுத்துட்டேன் ..

ஏன்டா டேய் ... இத்தாலியில் இருக்கும் அன்டோனியோ மைனோ ராஜீவ் காந்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு சோனியா காந்தி என்று பெயர் மாற்றம் செய்து இன்று இந்தியாவை ஆளும் காங்கிரஸ் பார்ட்டி லீடராக இருக்கலாம்
(அதையெல்லாம் ஒத்துக்குவீங்க )
இந்தியாவில் இருக்கும் சானியா மிர்சா சோயிப் மாலிக்கை கல்யாணம் பண்ணிக்கிட்டு சானியா மாலிக் என்று பெயர் மாற்றம் செய்து பாகிஸ்தானுக்காக டென்னிஸ் ஆட கூடாதா ?
(இத ஒதுக்க மாட்டீங்களா ?)
என்னங்கடா டேய் ...சோனியாவுக்கு ஒரு நியாயம் சானியாவுக்கு ஒரு நியாயமா ?அதனால நான் என்ன சொல்றேன்னா :)

சோயிப் மாலிக் : தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே
சானியா மிர்சா : சலோ பாகிஸ்தான்கோ ... சலோ !
மத்தவங்களுக்கு : சபி பந்த் கரோ ... பக்வாஸ் !!

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP