வேலை ஒண்ணு காலியா இருக்கு !! ( சத்தியமா சீரியஸ் பதிவு)


பொறியியல் பட்டபடிப்பு படித்த (Electronics/Communication/Instrumentation) குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் உள்ள தமிழர் யாராவது பூனாவிற்கு வேலையில் சேர விரும்பினால் என்னுடைய மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்..
LabVIEW தெரிந்திருந்தால் மிகவும் நல்லது ..

குறிப்பு 1: வேலை கண்டிப்பாய் வேண்டும் என மிகவும் கஷ்டப்பட்டு தேடி கொண்டிருக்கும் யாராவது இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும்.. யாரோ ஒரு ஹிந்தி காரனை தேர்வு செய்வதை விட நம்மாளு ஒருத்தனை வேலைக்கு சேர்த்தா நல்லாருக்கும் இல்லையா ?

குறிப்பு 2: First Class இல் பாஸ் பண்ணி இருக்க வேண்டும் ..ஹரியரே இருக்க கூடாது என்ற கேவலமான பாலிசி எல்லாம் என்கிட்ட இல்ல .. ஒண்ணுமே தெரியல எங்கேயும் சரியான வேலை கிடைக்கல அப்படின்னு சொன்நீங்கன்னாலும் பரவா இல்ல .. எனக்கு தெரிந்த வரை நான் சொல்லி கொடுக்கிறேன்.. நாலு இடத்துக்கு போனாதானே நாலு விசயத்தை தெரிஞ்சிக்கலாம் ???? ! என்ன நான் சொல்றது ?

குறிப்பு 3: மத்தியானம் எங்க கம்பனில இலவசமா சோறு போடுவாங்க.. Don't worry ! :)

குறிப்பு 4: பேருக்கு இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஊருல லுங்கி கட்டிக்கிட்டு ஆலமரத்துக்கு கீழ குத்த வச்சு பீடி குடிச்சிக்கிட்டே ரம்மி ஆடுவதை விட்டுவிட்டு ஏதாவது உருப்படியா வேலை செய்யலாம் இல்லையா !

குறிப்பு 5: Min Salary 12000 inr.


நாட்கள் மிகவும் குறைவாய் உள்ளது..கூடுமான வரை உடனே தொடர்பு கொள்ளவும் .
நன்றி !


குட் லக் !!

Read more...

முட்டாள்கள் மூன்று விதம் ....

முட்டாள்


ஒண்ணு முடியும்னு சொல்லணும் இல்லனா முடியாதுன்னு சொல்லணும்... அத விட்டுட்டு முதல்ல ம்ஹும் ன்னுட்டு அப்புறும் "ம்ம்" ன்றதெல்லாம் சரிபட்டு வராது... தெரிஞ்சே பண்ணிட்டு இப்போ கதறி அழுதா ...எந்த ஊர் நியாயமாடா டேய் ...இப்ப பாரு தினத்தந்திலேயே வந்திரிச்சி... இன்னிக்கு பூரா டீ கடையில உன்ன பத்தித்தான் பேசுவாங்க..... முத்தத்திற்காக கதறி அழ போறியா இல்ல பேமஸ் ஆனதிற்காக சந்தோசப்பட போறியா ??
ஆனா ஒண்ணுங்க ..முத்தம் கொடுத்ததிற்காக ஒரு நடிகை கதறி அழுதாள் என்ற செய்தியை என்னால் கற்பனை கூட பண்ண முடியல... Dinathanthi is great!


படு முட்டாள்


நிதேஷ் குமார் நிவாரண நிதி அஞ்சு கோடி ரூபாயை வேண்டாம் என்று சொல்லிட்டாராம்.
ஏய்யா யோவ் ...தெரியாமதான் கேட்கிறேன் குஜராத் கவர்மெண்டு உனக்கு என்ன பர்சனல் லோனா தந்தான் ? சாதரணமா வேண்டாம்னு சொல்ல... மக்களுக்காக மக்கள் கொடுத்த பணம் .... ஐந்து கோடி ரூபாயில் எத்தனையோ மக்கள் பயன் அடைந்து இருப்பார்கள் .. உங்க கட்சிகளுக்குள் பிரச்சினை இருந்தால் மக்கள் என்னையா பண்ணுவாங்க... பீகார்ல என்ன பாலும் தேனுமா ஓடுது... நிவாரணம் வேண்டாம் என்று சொல்ல ? மூன்று வேலை கஞ்சிக்கு வழியில்லாத மக்கள் அதிகம் இருக்கும் பின் தங்கிய மாநிலத்திற்கு கொடுக்கப்பட்ட பணத்தை வேணாம்னு சொல்லிட்டான் படுபாவி ..

இங்கு ஒரு விடயம் தெள்ள தெளிவாக புரிகிறது ... மக்களை மாநில வாரியாக பிரிச்சி பிரிச்சே மக்களை பட்டினி போட்டுட்டு அரசியல்வாதிகள் ஜாலியா இருக்கானுக..


அடி முட்டாள்

















Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP