3,426,247 மட முட்டா ***********!!


ஒரு திட்டு

ஏண்டா ..உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா ??
மனித நேயம்ன்னா என்னான்னு தெரியுமாடா ?
எப்பிடிடா நீங்கள்லாம் தமிழ்நாட்டில இருக்கீங்க?
இவ்வளவு நடந்தும் இந்த மாதிரி பண்ண உங்களுக்கு எப்பிடிடா மனசு வந்தது .....
ச்சே ..என்னை பொறுத்தவரை நீங்கெல்லாம் மனித இனமே கிடையாது ..நான் ஏன் இப்படி மனசு பொறுக்காம திட்டிக்கிட்டு இருக்கேன்னு புரியாதவங்களுக்கு ஒரு சின்ன விசயத்தை சொல்லிடறேன் ..

தமிழ்நாட்டில் காங்கிரஸ் க்கு ஒட்டு போட்டவங்க மொத்த எண்ணிக்கை 3,426,247

இப்ப சொல்லுங்க ...! தலைப்பில் இருக்கும் “***********” இடத்தில என்ன கெட்ட வார்த்தையை போடலாம் ?
Thx wiki !! (for the above info)

ஒரு நன்றி

காங்கிரஸ் கட்சியை படு தோல்வி அடைய வைத்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் உளமாற நன்றி கூறி கொள்கிறேன் ...

முக்கியமாக டங்குவாலுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியினை தெரிவித்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்

சீமான் விரும்பியதை, வைகோ- செய்ய நினைத்ததை, காங்கிரஸ் கட்சியை வெறுக்கும் லட்சகணக்கானோறால் செய்ய முனைந்ததை சுலபமாக தன் “திரு விளையாடலால்” காங்கிரசின் சமாதிக்கு திறப்பு விழா நடாத்தி காட்டிய அசகாய சூரன் .. தமிழ்நாட்டின் ஒரிஜினல் கை’புள்ள... டங்குவிற்கு பல கோடி நன்றிகள் ...

ஆனா தல ..உங்க கிட்ட ரொம்ப நாளா ஒரு கேள்விய கேக்கனும்னு ஆச தல....

“நீ பண்றதெல்லாம் தெரிஞ்சி தான் பண்றயா ..இல்ல தெரியாம பண்ணி இப்படி ஆயிடுதா ?”
எது எப்படியோ நீ ..அப்படியே மெயின்டைன் பண்ணு தல...

குறிப்பு : டங்குவை தலை என்று அழைத்ததிற்கும் அவருடைய மண்டைக்கும் யாரும் முடிச்சு போட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்.ஒரு குவிஸ்

ஸ்கூல் பக்கத்தில ஸ்டேஸனரி கடை வைக்கலாம் ..
டாஸ்மாக் பக்கத்தில ஊறுகாய் கடை வைக்கலாம்
சத்தியமூர்த்தி பவன் பக்கத்தில் என்ன கடை வைக்கலாம் ??


.
.
.
.
.
..

ஹி ஹி ...
வேட்டி கடை வைக்கலாம் ...
(எப்படியும் ஒருத்தன் வேட்டிய இன்னொருத்தன் உருவுவான் ...)

ஒரு செய்தி :-

ரஜினிதான் மருத்துவமனையில் இருக்காருன்னு பார்த்தா செந்திலும் ஜாயின் பண்ணிட்டாரு (மூலமாம்!)... சீக்கிரம் நலமடைய வேண்டுகிறேன் ..

நல்லவேளை கவுண்டமணி –செந்தில் ஜோடி இப்போதெல்லாம் நடிப்பதில்லை...கவுண்டமணி பின்னாடியே ஒரு உதை உதைத்தாருன்னா செந்தில் கதி என்னாவறது ???
(இலவச அறுவை சிகிச்சை ??)


ஒரு மகிழ்ச்சி

ஜாதியை ஒட்டு வங்கியாக நினைத்தவர்களை பேதி கண்டு ஓட விட்ட தமிழ்நாட்டு மக்களை நினைத்து ஒரு மகிழ்ச்சி...ஒரு வாழ்த்து

வாழ்த்துக்கள்..
2009 ல வீல் சேரு மூடிகிட்டு இருந்ததால்தான் நாங்க தேடி வந்து உங்களுக்கு முடி சூடி விட்டிருக்கோம் ...ப்ளீஸ் கடுப்பேத்திறாதீங்க ..உங்களுக்கு கோடி புண்ணியம்...


ஒரு வேண்டுகோள்

சீமான் சார் ... சீக்கிரம் அரசியலுக்கு வந்துருங்க ..... உங்கள மட்டும்தான் நம்ப வேண்டி இருக்கு ..இல்லனா யாரு எப்ப வேண்டுமானாலும் காங்கிரஸ் கூட கூட்டு வச்சிருவாங்களோன்னு பயம் இருந்திட்டே இருக்குPlease do the needful asap.


Thanks & Best regards,ஆபீஸ்ல அதிகமா மெயில் அடிச்சா இப்படித்தான் பெஸ்ட் ரிகார்ட்ஸ் முடியுது ..ஒரு அன்பளிப்பு

ஆங் .... டங்கு செய்த அரிய சேவையை பாராட்டி அவருக்கு “கை கழுவும் சங்கத்தின் “ சார்பில் இத்தாலிக்கு ஒரு ப்ரீ டிக்கெட் பார்செலெய் ........................

ஹி ஹி ..for your kinf info “ஒன் வே டிக்கெட் ...”மட்டும் தரப்படும் ...
எப்போ போறீங்கன்னு சொன்னா நான் பிச்சை எடுத்தாவது அனுப்பி வச்சிடுறேன் ...
ta ta bye bye டங்கு !
Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP