மிஸ்டர் Don't Know ....




எத கேட்டாலும் தெரியல தெரியலன்னு சொன்னா விட்ருவமா?
உனக்கு என்னதான் தெரியும்ன்னு எங்களுக்கு தெரிஞ்சிக்க ஆசை...
அதான் மண்ணு மொக்க சிங்கு சி வி பார்த்தா ....அடங்கொன்னியா நீ இவ்வளவு படிச்சிருக்கியா ன்னு ஒரே ஆச்சரியம் .


Stood first in BA (Hons), Economics, Punjab University, Chandigarh
Stood first in MA (Economics), Punjab University, Chandigarh
Wright's Prize for distinguished performance at St John's College, Cambridge
Wrenbury scholar, University of Cambridge,
DPhil (Oxford), DLitt (Honoris Causa); PhD thesis on India's export competitiveness



என்னத்த படிச்சியோ போ !!

தெரியல தெரியலன்னு சொல்றதுக்கத்தான் இவ்வளவு படிச்சியா??



இப்படிதான் மாணவர்களை பற்றி ஒரு பாடல் நன்னூலில் படித்தது நினைவுக்கு வருகிறது.



அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடை மா ணாக்கர்

மாணாக்கர்களில் மூவகை உண்டு என நன்னூல் குறிப்பிடுகிறது


தலை மாணாக்கர் :-

அன்னம் பாலையும் நீரையும் தனியே பிரித்து கொள்ளும் தன்மையுடையது.
அது போல் கல்விக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துகொண்டு மற்றவற்றை விட்டு தள்ளும் இயல்பு உடையவர் தலை மாணாக்கர் ஆவர்.

பசு மேயும் பொழுது விரைவாகவும் தேவயானவற்றையும் தன்னுள் எடுத்துக்கொண்டு, பின்பு அசை போடும்
அது போல தலை மாணாக்கர் ஆசிரியர் சொல்லியதை விரைவில் மனதில் கொண்டு பின்பு அதை பற்றி சிந்தித்து தெளிவு பெறுவார்கள்


தலை மாணாக்கர்கள் அன்னத்தையும் பசுவையும் போன்றவர்கள்


இடை மாணாக்கர் :-

மண் : நிலம் ... உழவனின் முயற்சிகேற்பவே பலன் தரும் இயல்புடையது அது போல் தன முயற்சி சிறிதும் இன்றி ஆசிரியரின் முயற்சியால் மட்டுமே கற்கும் மாணாக்கர் இடை மாணாக்கர் ஆவர்

கிளி : சொன்னதையே திருப்பி சொல்லும். அது போல் ஆசிரியர் சொன்னதை மாறுமே தன்னுள் கொண்டு கற்பவன் மாணாக்கர் ஆவர்


இடை மாணாக்கர் நிலத்தையும் கிளியையும் போன்றவர்கள்

கடை மாணாக்கர் :-

இல்லிக்குடம் : பொத்தற்குடம் ... தன்னுள் கொண்ட நீரை மிக விரைவில் பொத்தற்குடம் வெளியேற்றிவிடும்.. அது போல கற்றவை அனைத்தையும் மிக விரைவில் மறந்து விடுவான்

ஆடு : பொதுவாக நுனிப்புல் மேயும். இக்கரையில் மேயும் பொது அக்கரை பச்சை” என நினைத்து இக்கரையும் அக்கரையுமாய் அலையும். இறுதியில் எக்கரையிலும் நிம்மதி இன்றி இருக்கும்

ஒரு ஆசிரியரிடம் பயிலாமல் பல ஆசிரியர்களை மாற்றி கொண்டே ஒழுங்காக பயிலாமல் வீணாய் போபவன்.

எருமை :- எருமை குட்டை போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் குடிக்கும் போது தெளிந்த நீரை குடிக்காமல் குட்டையை கலக்கி விட்டு அசுத்தமான நீரை குடிக்கும்.
அது போல பயிலும் மாணவன் ஆசிரியரிடம் தேவையற்ற கேள்விகளாலும், முடிந்த வரை வெறுப்பேற்றியும் தானும படிக்காமல் ஆசிரியரையும் குழப்புபவன் கடை மாணாக்கன்

நெய்யரி : பன்னாடை : பன்னாடை என்பது பனை மரத்தில் மர கீற்றில் இருக்கும் மெல்லிய துணி போன்ற வலைப்பின்னல் ஆனதாகும். இதை வைத்து வடிகட்டலாம். இது போல் வடிகட்டும் போது கசடுகளை தன்னகத்தே வைத்து கொண்டு சத்தானவற்றை விட்டு விடும் தன்மை இதற்குண்டு.

படிக்கும்போது தேவையானவற்றை விட்டுவிட்டு தேவையற்றவைகளை தன்னுள் வைப்பவன் (பன்னாடை ) கடை மாணாக்கன் ஆவான் .

பொத்தற்குடம்,ஆடு,எருமை பன்னாடை இவையாவும் கடை மாணவர்களுக்கான உவமைகள் ஆகும்


இதில் இருந்து என்ன தெரிகிறதென்றால் மண்ணு மொக்க சிங்கு கண்டிப்பா கடை மாணாக்கன் வகையில்தான் சேருவார்..
அதனால்

மண்ணு மொக்க சிங்கை

ஓட்டை சட்டி என்றும், எருமை என்றும், ஆடு(கருப்பு) என்றும், பன்னாடை என்றும் திட்டலாம் .. தப்பே இல்லை !!


காங்கிரஸ் காரனுங்களை (அள்ளக்”கை” களை)எப்படி திட்டுவது?

தமிழில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் இவனுங்களை திட்டி ஆயிற்று.

இனி மேலும் இவனுங்களை திட்டினும்னா கூகிள் தான் உதவி பண்ணும்னு ,, All Bad words அப்படின்னு கூகிள்ல தேடினா வந்து வார்த்தைகள் கொட்டோ கொட்டுன்னு கொட்டிச்சி பாருங்க ...

அட அட ...

நீங்களும் கூகிள்ல தேடி பாருங்க.... காங்கிரஸ் காரனுங்களை ஆசை தீர திட்டுங்க...



காங்கிரஸ் காரன் ஓட்டு கேக்க வந்தால் :-

காங்கிரஸ்காரன் எவனாவது ஒட்டு கேக்க வந்தானா வேட்டிய தூக்குங்க..
(வேட்டிய தூக்குனா என்ன பண்ணுவான்னு கேக்கறீங்களா ? .. அட போங்க இது கூட சொல்லனுமா .. ??? )

Read more...

டாக்குடர்ரு ,, நீங்க அதுக்கெல்லாம் ஒத்து வரமாட்டீங்க !

அதான் எழுத வரலியே,, பின்ன ஏன் நாமளும் சிரமபட்டுகிட்டு படிப்பவர்களையும் சிரமப்படுத்தனும்னு..நாமுண்டு நம்ம வேடிக்கையுண்டுன்னு இருந்தா இருக்க விடமாட்டாக போலிருக்கே...

காவலன் படம் ஜனவரி பதினாலு ரிலீசாம் ! காத்துவாக்குல சேதி வந்தது. (பயந்தது நடந்துவிட்டது)

கேட்டதும் பதிவு போட்டாகணும்னு உள்ளம் துடித்தாலும் அதுக்கு முன்ன யூரின் போகணும்னு தோணிச்சு (விஜய் படம் வருதுன்னா ஒபாமாவே ஒண்ணுக்கு போய்டுவான் நாம எம்மூத்திரம் சர்ரி எம்மாத்திரம் ??




"ஜனவரி பதினாலு படம் ரிலீஸ்." கேட்டவுடன் ரெண்டு விஷயம் நியாபகத்திற்கு வந்தது
ஒன்னு ரஜினி டயலாக் இன்னொன்னு பக்கத்துக்கு தெரு பாட்டி.

நினைவிற்கு வந்த டயலாக் :-
சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும் ..

பக்கத்துக்கு தெரு பாட்டி :-
ஒவ்வொரு முறை ஊருக்கு போகும்போதும் பக்கத்துக்கு தெருவில் இருக்கும் வயதான பாட்டியிடம் "எப்படி இருக்க பாட்டி ?" என விசாரிப்பது வழக்கம். அதற்கு அந்த பாட்டி "அந்த எமன் என்னை தூக்கிட்டு போக மாட்டேன்கிறான் " என வேடிக்கையாய் என்னிடம் சொல்வது உண்டு..


இந்த முறை ஊருக்கு போனால் அந்த பாட்டியிடம் சொல்ல வேண்டும் ஜனவரி பதினாலு நம்மூரு சினிமா கொட்டகைக்கு எமன் வரான் .. தைரியம் இருந்தா போய் பாரேன என ..



#############################################################

கரகாட்டக்காரன் படத்தில் "என்ன பார்த்து ஏன்டா அந்த கேள்விய கேட்ட?"என கவுண்டமணி செந்திலை அடிக்கும் காமெடி உங்களுக்கு தெரிந்திருக்கும்
.அந்த மாதிரி விஜயை பார்த்து ஏண்டா அப்படி சொன்னே ?" கேட்டு கன்னத்திலே பொளேரென்று அடிக்க வேண்டுமென்று ஒருத்தனை தேடி கொண்டிருக்கிறேன் ..
அவன் அப்படி என்ன விஜயை பார்த்து சொல்லிட்டான் என்று கேட்கிறீர்களா ? கேட்டா நீங்களே அவனை துவம்சம் பண்ணிருவீங்க ..

விஜயை பார்த்து "தமிழ் சூப்பர் ஸ்டார்" அப்படின்னு சொல்லிட்டான்.





(விஜய்தான் லூசு பயன்னு பார்த்தா .. இருக்குறவன் அதுக்கு மேல இருக்கிறான்..ச்சே .. )
#############################################################

ஒரு பஞ்ச டயலாக் சொல்றேன் கேட்டுக்குங்க

கள்ள சாராயத்தை அதிகமா குடிப்பவனும்
காவலன் படத்தை அடிக்கடி பார்ப்பவனும்
உருப்பட்டதாக சரித்திரமே இல்லை ...


#############################################################


வானிலை அறிக்கை வாசிக்கும் திரு ரமணன் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

புயல், மழை, வெயில், பனி, கடல்சீற்றம், எது வந்தாலும் இப்பல்லாம் முன்னமே சொல்லி மக்களை எச்ச்சரிப்பீங்கலே, அதற்கும் மேல மக்களை தாக்கும் காவலன் படம் வரப்போகுது.. இந்த எச்சரிக்கையையும் சேர்த்து சொல்லிட்டீங்கன்னா ஏதோ புத்தி இருக்கிறவன் பொழச்சுபோகட்டும் ... உங்களுக்கு கங்கைக்கு போகாமலே புண்ணியம் கிட்டும் வாய்ப்புண்டு. ..

#############################################################


இன்னைக்கு கூட ஏதோ ஒரு பதிவில் படித்தேன் காவலன் பாடல்கள் நல்லாருக்குன்னு ஒருத்தரு சொல்லிருக்காரு. பாடல் விமர்சனமாம் .. !!

பாட்டு நல்லாருக்கேன்னு படத்த பார்க்க போனீங்கன்னா படுத்த படுக்கையாயிடுவீங்க பரவாயில்லையா?
என பின்னூட்டம் போட நினைத்தேன் முடியவில்லை ...



#############################################################


எனக்கு தெரிந்த ஒருத்தருக்கு விக்கல் இரண்டு நாளாய் நின்றபாடில்லை . கடைசியில் மருத்துவமனைக்கு சென்ற பிறகே நின்றதாம் பிறகு இது எனக்கு தெரிய வர விசித்திரமாய் தோன்றியது. காவலன் படம் வருகிறது என்றாலே உயிரே நின்று வரும்போது விக்கல் நிற்காதா என்ன .. ஹும் மருத்துவமனைக்கு தண்ட செலவு..(இந்த வகையில் டாக்டர் பட்டம் கொடுத்தது சரியென்றே படுகிறது )

#############################################################

நீண்ட நாள் கழித்து என்னை பதிவு எழுத தூண்டிய தமிழ்நாட்டு சிரிப்பு டாக்டர் விஜய் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்வதுடன் இந்த பதிவையும் அவருக்கு சமர்பிக்கிறேன்

(பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் கிளிக்கவம்..)





படத்தை பார்த்து நீங்கள் மூர்ச்சை"ஆய்" விழுந்தால் அதற்கு படத்தில் இருப்பவரே முழு பொறுப்பு என அறிவித்துக்கொள்கிறேன்

#############################################################


மற்ற பதிவர்கள் போல் உங்க பின்னூட்டமும் ஒட்டும்தான் என்னை உற்சாகபடுத்தி பதிவை எழுத வைக்கிறது என சொல்லமாட்டேன் மாறாக நம் பூலோக எம தர்மன் விஜய் அவர்களே எனக்கு பதிவை எழுத உற்சாகமும் ஊக்கமும் தருகிறார் என்பதை உளமார உறுதி கூறுகிறேன் .

கடைசியாக

சனியனே,, இந்த படத்துலயாவது நடிச்சிருக்கியா ?

என்ற கேள்வியை அவர் காலடியில் சமர்ப்பித்து இத்துடன் என் பதிவை முடித்து கொள்கிறேன் நன்றி வணக்கம் ..




குறிப்பு : இந்த பதிவு மொக்கைதான் ஆனால் காவலன் படம் அளவு மொக்கையாய் இராது என்பதை சொல்ல கடமை பட்டிருக்கிறேன்

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP