என் இந்தியாவிற்கு என் சகோதரர்களை காக்க ஒரு வேண்டுகோள்!


( இலங்கையில் என் இனத்தினர் படும் அல்லல்களை பார்த்து தினம் செய்வதறியாது திகைத்து அழும் இந்திய தமிழன் நான்.
என் இனத்தை காக்க என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் இருக்கும் நான் என் சகோதரர்களை காக்க இந்திய தாயின் கட்டளைக்காக காத்திருப்பவன்!
அதற்காக என் இந்தியாவுடன் என்னுடைய மன உரையாடல் )


என் இனத்தை காக்க தவறும் என்நாடே
எப்படி இருக்கும் என்னேசம் இனி உன்னோடு

என் உழைப்பின் ஒரு பங்கு உன் வளர்ச்சிக்கு அழகூட்ட மட்டுமே
அன்றில் உன் இனத்தை அழிவூட்ட அல்லவே

அஹிம்சையை மந்திரம்மாக கொண்ட என் மண்ணே
உனக்கு ஏன் ஹிம்சையை தந்திரமாக கொண்டவனுடன் உறவாடு !

தமிழினத்தையே உன்னில் கொண்ட நீ
அவ்வினத்தையே அழிக்க துணை போவதேனோ?

என் சகோதரனின் வலி உனக்கேன் புரியவில்லை ?
என் சகோதரனில் அழுகை உனக்கேன் தெரியவில்லை ?
என் தாயாய் இருக்கும் உனக்கு என் சகோதரனை ஏன் மறந்தாய்?
என் சிரிப்பை பார்த்து மகிழும் நீ அவன் அழுகையை ஏன் மறந்தாய்?
நீ என்ன அவனுக்கு மாற்றான் தாயா?

ஆக்கத்தினை அரவணைக்கும் என் தாயே,
அந்த சிங்கள அழிவு சக்தியினை அழிக்க ஆணையிடு.
அன்பை போதித்த என் தாயே என் சகிப்புத்தன்மையை கிழித்து விடு !
அழிவு செய்யும் அந்த சிங்களனை மிதித்து விடு

என்று ஒழியும் தமிழனின் ஓலம் ?
எனக்கு தெரியும் உன்னால் மட்டுமே இது முடியும்
என் கண் மூடுவதற்குள் இது எனக்கு தெரியும் !

இப்படிக்கு


Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP