என் இந்தியாவிற்கு என் சகோதரர்களை காக்க ஒரு வேண்டுகோள்!
( இலங்கையில் என் இனத்தினர் படும் அல்லல்களை பார்த்து தினம் செய்வதறியாது திகைத்து அழும் இந்திய தமிழன் நான்.
என் இனத்தை காக்க என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் இருக்கும் நான் என் சகோதரர்களை காக்க இந்திய தாயின் கட்டளைக்காக காத்திருப்பவன்!
அதற்காக என் இந்தியாவுடன் என்னுடைய மன உரையாடல் )
என் இனத்தை காக்க தவறும் என்நாடே
எப்படி இருக்கும் என்னேசம் இனி உன்னோடு
என் உழைப்பின் ஒரு பங்கு உன் வளர்ச்சிக்கு அழகூட்ட மட்டுமே
அன்றில் உன் இனத்தை அழிவூட்ட அல்லவே
அஹிம்சையை மந்திரம்மாக கொண்ட என் மண்ணே
உனக்கு ஏன் ஹிம்சையை தந்திரமாக கொண்டவனுடன் உறவாடு !
தமிழினத்தையே உன்னில் கொண்ட நீ
அவ்வினத்தையே அழிக்க துணை போவதேனோ?
என் சகோதரனின் வலி உனக்கேன் புரியவில்லை ?
என் சகோதரனில் அழுகை உனக்கேன் தெரியவில்லை ?
என் தாயாய் இருக்கும் உனக்கு என் சகோதரனை ஏன் மறந்தாய்?
என் சிரிப்பை பார்த்து மகிழும் நீ அவன் அழுகையை ஏன் மறந்தாய்?
நீ என்ன அவனுக்கு மாற்றான் தாயா?
ஆக்கத்தினை அரவணைக்கும் என் தாயே,
அந்த சிங்கள அழிவு சக்தியினை அழிக்க ஆணையிடு.
அன்பை போதித்த என் தாயே என் சகிப்புத்தன்மையை கிழித்து விடு !
அழிவு செய்யும் அந்த சிங்களனை மிதித்து விடு
என்று ஒழியும் தமிழனின் ஓலம் ?
எனக்கு தெரியும் உன்னால் மட்டுமே இது முடியும்
என் கண் மூடுவதற்குள் இது எனக்கு தெரியும் !
இப்படிக்கு
உங்களது பின்னூட்டங்கள் பார்த்திருக்கிறேன்..
இந்திய அரசுகள் தமிழக அரசுகள் - இவற்றை விடுங்கள்.
ஆனால் உங்கள் நேசமும் உணர்வும் கண்டு ஆறுதலடைவார்கள் ஈழத்தமிழர்கள். நன்றி
// Anonymous said...
உங்களது பின்னூட்டங்கள் பார்த்திருக்கிறேன்..//
அப்படியா .....இதுவரை பின்னூட்டங்கள் மட்டுமே இட்டுக்கொண்டிருந்த நான் ஈழ மக்களுக்கு ஆதரவாக இடும் என் முதல் பதிவு.
வருகைக்கு நன்றி நண்பா.
//ஆனால் உங்கள் நேசமும் உணர்வும் கண்டு ஆறுதலடைவார்கள் ஈழத்தமிழர்கள். நன்றி//
ஈழ தமிழர்களுக்கு விடுதலை ஒன்றே ஆறுதல் தருமென்று நினைக்கின்றேன்!
(நேற்றைய சீமானின் எழுச்சி உரை இன்னும் என் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது )
வருகைக்கு நன்றி திரு.சயந்தன் அவர்களே!
ஈழத்தமிழர்களின் இன்னல்களை உணர்வதுகூட ஒருவகையில் உதவுவதற்கொப்பானதே. திடீரென்று தமிழகத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு வியப்பைத் தந்தாலும், நல்லதே நடக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.
உங்கள் கூற்று முற்றிலும் உண்மை.
வருகைக்கு நன்றி திரு.தமிழ்நதி
'பயங்கரமா சீன் போட்டான்பா', சீமானின் எழுச்சியுரையைக் கேட்டுவிட்டு என் நெருங்கிய நண்பரொருவர் அடித்த கமெண்ட் இது.
உங்களுடைய இந்த பதிவை படித்துவிட்டும் யாராவது இப்படிச் சொல்லக் கூடும்.
தமிழ்நாட்டில் இலங்கை பிரச்சனையின் தீவிரம் தெரிந்தவர்கள் மிகச் சொற்பமே என்பது என் கருத்து.
திரு.r.selvakkumar அவர்களுக்கு.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//உங்களுடைய இந்த பதிவை படித்துவிட்டும் யாராவது இப்படிச் சொல்லக் கூடும்.//
என்னைப்பார்த்து குறைக்கும் நாய்களுக்கு நான் என்றுமே அஞ்சுவதில்லை
//தமிழ்நாட்டில் இலங்கை பிரச்சனையின் தீவிரம் தெரிந்தவர்கள் மிகச் சொற்பமே என்பது என் கருத்து.//
இலங்கை பிரச்சினையில் பல்வேறு அரசியல்கள் இருக்கலாம்.ஆனால் எனக்கு தெரிந்து இனப்படுகொலை மட்டுமே மனதில் நிற்கிறது. அதன் வெளிப்பாடுதான் இப்பதிவு.
//'பயங்கரமா சீன் போட்டான்பா', சீமானின் எழுச்சியுரையைக் கேட்டுவிட்டு என் நெருங்கிய நண்பரொருவர் அடித்த கமெண்ட் இது.//
மரத்தில் பூக்கும் பூக்களெல்லாம் பழமாகிவிடாது, அவற்றில் சில வெம்பிவிடும், அதுபோலவே உங்கள் நண்பரும் வெம்பித்திரிகிறார். சீமான் என்ன சீன் போட்டு உங்களிடம் வந்து பணம் கேட்டாரா அல்லது வாக்கு சேகரிக்க வந்தாரா. அவரின் சமீபத்தைய சினிமாக்களே சான்று அவரது தமிழ்பற்றுக்கு. நான் சீமானின் ரசிகன் அல்ல, ஆனால் தமிழன், மேலும் தமிழர்கள் அனைவரும் தன்மானத்தோடு வாழவேண்டும் என நினைப்பவன். அதற்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் என் அபிமான தோழர்களே! ஜுர்கேன் க்ருகேர் உட்பட. யார் கபடவேடம் போடுகிறார்கள், யார் உண்மை பேசுகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரியும் காலம் எக்காலமோ அதுவே உலகத் தமிழர்களுக்கு மறுமலர்ச்சி ஏற்படும் காலம். கல்லாமை அகன்று கள்வர்கள் ஒழிந்தால் எது உண்மை யார் உன்மையான போராட்டவாதி என்பது மக்களுக்கு தெரிந்துவிடும். தமிழர்களாகிய நாம் இவ்வுலகில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த வேண்டும், அதற்கு தேவை நமக்கொரு தனிநாடு. மலேசியாவில் இப்பொழுது உள்ள தமிழர்களின் நிலைமையை பார்த்தால் எதிர்காலத்தில் இங்கும் ஒரு ஆயுதப்புரட்சி வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மலேசிய தமிழர்களின் உண்மை நிலையை கீழ்கண்ட இணையத்தின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.malaysiaindru.com/
வாழ்க தமிழ், ஓங்குக தமிழர் புகழ்.
மதிப்பிற்குரிய திரு. சிவகுமார் சுப்புராமன் அவர்களுக்கு,
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.