போதுண்டா சாமீ ......வாழ விடுங்கடா ...



நம்பளால
ஒரு உயிரையும் காப்பாத்த முடியல என்ற வருத்தத்தில் நீயெல்லாம் மனுசனா இருந்து என்ன பிரயோஜனம் ..... இதுல ப்லோக் வேற ஒரு கேடா
ன்னு நானே என்னை கேட்டுக்கொண்டு ஒரு ஆறு மாதத்திற்கு எழுத வேண்டாமென முடிவு செய்து விட்டேன். மற்றபடி பிடித்த நண்பர்களின் வலைப்பூவில் மட்டும் பின்னூட்டங்கள் உண்டு.


தமிழன் ஒரு நாள் சிரிப்பான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் உங்களிடம் இருந்து தற்காலிக விடை பெறுவது - ஜெய்.

Read more...

புலம்ப விடும் பன்றி காய்ச்சல் !

பன்றி


காய்ச்சல் இந்தியாவில் வந்தாலும் வந்தது எல்லா தரப்பு மக்களையும் ஒரு ஆட்டு ஆட்டிக்கிட்டுதான் இருக்கு.

அதிலும் பூனாவில் ரொம்பதான் ஓவர். ரெண்டு வாரத்துக்கு முந்தி முகமூடி போட்டவனை எல்லாம் நமுட்டு சிரிப்போட பார்த்த மக்கள் இப்போ முகமூடி போடாதவனை அப்படி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க..


நைட்டு ஒம்போது மணிக்கு பிறகு ஊரே வெறிச்சோடி இருக்கு. அதிலும் MG ரோடுல பிகர்கூட சுத்தற பணக்கார பயலுக முதற்கொண்டு ஒரு பக்கியையும் காணோம்.

பெரிய பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இல இருந்து சாதாரண பாணி பூரி விக்கிறவன் வரை அனைவரின் பிசினஸ் ஐயும் பன்றி காய்ச்சல் பாதித்திருப்பது வயித்தெரிச்சலா
இருக்கு.


நேத்து மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட அறிவுரை மெயில்கள்...வெளிய போகாதே..ஹோட்டல்ல சாப்பிடாதே...நாலு அடி தள்ளி நின்னே பேசு ....முகமூடில நில்கிரி ஆயில் போடு... பப்ளிக் டாய்லெட் உபயோகிக்காதே ...பன்றி காய்ச்சல் முத்திரிச்சின்னா மருந்தே இல்ல.... தடுப்பு மருந்து இருக்கு ...ஆனா இல்ல ...நிறைய லெமன் சாப்பிடு ...எட்டு மணி நேரம் தூங்கு ....ஆயுர்வேதத்தில் புதுசா மருந்து கண்டு பிடிச்சிருக்காங்க ...சைனீஸ் மருந்து ஒண்ணு இருக்கு .....யார்ட்டயும் கை குலுக்காதே ...
இப்படி ஏகத்துக்கு போட்டு தாக்குறாங்க ...



பூனாவில இருந்து UP போன ஒரு நண்பரை ரயில் விட்டு இறங்கியதும் அப்படியே அலேக்கா தூக்கிகிட்டு மருத்துவமனையில் ரெண்டு நாள் செக் பண்ணிட்டுதான் விட்டாங்க.. (வாழ்க UP சுகாதார துறை )


பூனா நோக்கி வரும் பேருந்துகளில் நடத்துனர் ஓட்டுனர் தவிர ரெண்டொரு பேர்தான் இருக்கிறார்கள்.:(


எங்க அலுவலகத்தில் முகமூடி கட்டாயமாக்க பட்டுள்ளது. மாஸ்க் போட்டுட்டே இருப்பதினால் ஆக்ஸிஜன் பற்றா குறையினால் எல்லாத்துக்கும் மயக்கம் வர மாதிரியே இருக்கு.

இதனாலேயே என்னவோ உடம்பு டயர்ட் ஆகி விடுகிறது ...எதாவது ஒரு சின்ன கஷ்டம் உடம்புக்கு வந்தாலும் ஆகா..பண்ணி காய்ச்சல்தான் வந்துருச்சோன்னு மனசு பீதியை கிளப்புது.


நாமதான் இப்படி இருக்கிரோமான்னு பார்த்தா அதான் இல்ல... எல்லாரும் எனக்கு மேல கிலியடித்து இருக்கிறாங்க.. :) (எங்க அலுவலகத்திலேயே நான்தான் தைரியசாலி !! but -பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு வீக்கு )


இன்று என்கூட வேலை செய்யிறவன் சொன்னான் ..பன்றி காய்ச்சலுக்கு இன்னொரு மருந்து இருக்கு (Mfg: Cipla) அது இந்தியா முழுதும் கிடைக்கும். கிடைக்கக்கூடிய இடங்கள் கீழே இருக்கும் அட்டவணைய பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று.


நீங்களும்தான் பாருங்களேன்

ஹலோ ..மிஸ்டர் ??..ஒன் மினிட் பார்த்துட்டு மத்தவங்களோடையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..



இப்போதைக்கு விடை பெறுகிறேன் பன்றி காய்ச்சல் வரலன்னா நெக்ஸ்ட் இடுகையில் மீட் பண்றேன். பாய் !

Read more...

பன்றி காய்ச்சலால் காய்ச்சி எடுக்கும் பூனா-வாழ் மக்களுக்கு ஒரு அறிவிப்பு !

பூனா
நகரில் யாரை பார்த்தாலும் முகமூடி போட்டுக்கொண்டே திரிகிறார்கள்.. முகமூடிக்கு ஏகப்பட்ட டிமாண்டு.. கிடைக்காதவர்கள் கர்சீப் வைத்து முகத்தை மூடிக்கொண்டு திரிகிறார்கள்.

நாங்கல்லாம் "பன்றிய" விட மோசமானவங்க..எங்களுக்கே பண்ணி காய்ச்சலா ?? என்று அதகளம் பண்ணி திரிபவர்கள் கொஞ்சம் பூனா பக்கம் டூர் வந்திங்கன்னா மனதிற்குள் பன்றி காய்ச்சலா.. கொக்கா??... அப்படின்ற பயம் மனதில் கொஞ்சமாவது எட்டி உதைக்கும் ..


பூனாவில் மட்டும் கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து பேர் அதிகாரபூர்வமாக பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மூணு பேர் ஏற்கனவே பலி ஆகியுள்ளனர்.

ஐம்பது ரூபாய் மதிப்புள்ள ஒரு மூக்குஉறை (முகமூடிக்கு இப்படி ஏதாவது நாமளே பேர் வச்சாதான் உண்டு ) விலை இப்போதைக்கு குறைந்த பட்ச விலையாக இருநூற்று ஐம்பது ரூபாய் வரை விற்கிறார்கள்....

பத்து ரூபாய் மதிப்புள்ள கைக்குட்டை இப்போது இருபத்தைந்து ரூபாய்.
பூனாவில் இதுவரை இரண்டே மருத்துவமனைகளில் மட்டும் பன்றி காய்ச்சலுக்கான சோதனை நடத்தப்பட்டு வந்தது..
பன்றி காய்ச்சல் சோதனைக்காக வந்த மக்கள் வெள்ளத்தில் வேற அடி தடி ..முட்டி மோதி சினிமாவிற்கு டிக்கெட் வாங்குற மாதிரி போட்டா போட்டி ... அதான் எல்லாத்தையும் டிவில காண்பித்தார்களே ?

இப்போ மேட்டர் என்னன்னா..அரசாங்கத்தால் அங்ககரிக்கப்பட்ட மேலும் பதினேழு மருத்தவமனைகள் பூனாவில் பன்றி காய்ச்சலுக்கான சோதனையை நடத்தும் என்பதுதான் அது.
இந்த கெட்ட வேளையில் வந்த நல்ல செய்தி இது !

அதன் விபரங்கள் இங்கே.


Erandwane Hospital – Opposite to Padale Palace, Next to “Pingala – Aryabhata” Office, Karve Road
9764000939 Dr. Sarita Ganala

Jayabai Sutar Hospital, Kothrud 9823217047 Dr. Sham Satpute

Aanandibai Gadgil Hospital, Dattawadi 9422987953 Dr. Jotsna Khole

Balaji Gaikwad Hospital, Ganjpeth Not available Dr. Sadhya Bahule

Kalawatibai Mawle Hospital, Narayanpeth 9881385015 Dr. Neela Limaye

Mamasaheb Bhadade Hospital, Narayanpeth Dr. Swati Joshi

Babu Genu Hospital, Ravivarpeth 9421018878 Dr. Dinesh Bende

Siddharth Hospital, Vishrantwadi 9423004811 Dr. Bhagavant Gagare

Shivshankar Pote Hospital, Sahakarnagar 9422520930 Dr. Divya Rajawade

Junglerao Aamrale Hospital, Shivajinagar 9823214103 Dr. Aparna Gokhale

Genba Shevale Hospital, Chikhalwadi 9823224789 Dr. Madhuri Gare

Rohidas Kirad Hospital, Ganeshpeth Not available Dr. Chandrashekhar Gujar

Damodarraoji Galandepatil Hospital, Kalyani Nagar 9730571404 Dr. Ujwala Khristi

Bapusaheb Kawadepatil Hospital, Koregaon Park 9922504428 Dr. Jaya Bhondve

Dr. Kotnis Hospital, Mandai 9850992960 Dr. Asmita Bhoi

Naidu Hospital, Opp Le Meridian 26126242

Aundh Civil Hospital, Aundh 27280603/02

Helpline Contacts

020-64006095,
020-32538626,
020-20250050



நீங்க செய்யவேண்டியது எல்லாம் ஒண்னே ஒண்ணுதான் ... உங்களுக்கு தெரிந்தவர்கள்..உற்றார் உறவினர்கள்..நண்பர்கள்..யாரா இருந்தாலும் சரி அவங்க பூனாவில் இருந்தால் இந்த மேட்டரையும் அவங்க காதுல கொஞ்சம் போட்டு வையுங்க.


வாழ்க மக்கள்..ஒழிக பன்றி காய்ச்சல்.

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP