புலம்ப விடும் பன்றி காய்ச்சல் !

பன்றி


காய்ச்சல் இந்தியாவில் வந்தாலும் வந்தது எல்லா தரப்பு மக்களையும் ஒரு ஆட்டு ஆட்டிக்கிட்டுதான் இருக்கு.

அதிலும் பூனாவில் ரொம்பதான் ஓவர். ரெண்டு வாரத்துக்கு முந்தி முகமூடி போட்டவனை எல்லாம் நமுட்டு சிரிப்போட பார்த்த மக்கள் இப்போ முகமூடி போடாதவனை அப்படி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க..


நைட்டு ஒம்போது மணிக்கு பிறகு ஊரே வெறிச்சோடி இருக்கு. அதிலும் MG ரோடுல பிகர்கூட சுத்தற பணக்கார பயலுக முதற்கொண்டு ஒரு பக்கியையும் காணோம்.

பெரிய பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இல இருந்து சாதாரண பாணி பூரி விக்கிறவன் வரை அனைவரின் பிசினஸ் ஐயும் பன்றி காய்ச்சல் பாதித்திருப்பது வயித்தெரிச்சலா
இருக்கு.


நேத்து மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட அறிவுரை மெயில்கள்...வெளிய போகாதே..ஹோட்டல்ல சாப்பிடாதே...நாலு அடி தள்ளி நின்னே பேசு ....முகமூடில நில்கிரி ஆயில் போடு... பப்ளிக் டாய்லெட் உபயோகிக்காதே ...பன்றி காய்ச்சல் முத்திரிச்சின்னா மருந்தே இல்ல.... தடுப்பு மருந்து இருக்கு ...ஆனா இல்ல ...நிறைய லெமன் சாப்பிடு ...எட்டு மணி நேரம் தூங்கு ....ஆயுர்வேதத்தில் புதுசா மருந்து கண்டு பிடிச்சிருக்காங்க ...சைனீஸ் மருந்து ஒண்ணு இருக்கு .....யார்ட்டயும் கை குலுக்காதே ...
இப்படி ஏகத்துக்கு போட்டு தாக்குறாங்க ...



பூனாவில இருந்து UP போன ஒரு நண்பரை ரயில் விட்டு இறங்கியதும் அப்படியே அலேக்கா தூக்கிகிட்டு மருத்துவமனையில் ரெண்டு நாள் செக் பண்ணிட்டுதான் விட்டாங்க.. (வாழ்க UP சுகாதார துறை )


பூனா நோக்கி வரும் பேருந்துகளில் நடத்துனர் ஓட்டுனர் தவிர ரெண்டொரு பேர்தான் இருக்கிறார்கள்.:(


எங்க அலுவலகத்தில் முகமூடி கட்டாயமாக்க பட்டுள்ளது. மாஸ்க் போட்டுட்டே இருப்பதினால் ஆக்ஸிஜன் பற்றா குறையினால் எல்லாத்துக்கும் மயக்கம் வர மாதிரியே இருக்கு.

இதனாலேயே என்னவோ உடம்பு டயர்ட் ஆகி விடுகிறது ...எதாவது ஒரு சின்ன கஷ்டம் உடம்புக்கு வந்தாலும் ஆகா..பண்ணி காய்ச்சல்தான் வந்துருச்சோன்னு மனசு பீதியை கிளப்புது.


நாமதான் இப்படி இருக்கிரோமான்னு பார்த்தா அதான் இல்ல... எல்லாரும் எனக்கு மேல கிலியடித்து இருக்கிறாங்க.. :) (எங்க அலுவலகத்திலேயே நான்தான் தைரியசாலி !! but -பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு வீக்கு )


இன்று என்கூட வேலை செய்யிறவன் சொன்னான் ..பன்றி காய்ச்சலுக்கு இன்னொரு மருந்து இருக்கு (Mfg: Cipla) அது இந்தியா முழுதும் கிடைக்கும். கிடைக்கக்கூடிய இடங்கள் கீழே இருக்கும் அட்டவணைய பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று.


நீங்களும்தான் பாருங்களேன்

ஹலோ ..மிஸ்டர் ??..ஒன் மினிட் பார்த்துட்டு மத்தவங்களோடையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..



இப்போதைக்கு விடை பெறுகிறேன் பன்றி காய்ச்சல் வரலன்னா நெக்ஸ்ட் இடுகையில் மீட் பண்றேன். பாய் !

vasu balaji  – (12 ஆகஸ்ட், 2009 அன்று PM 2:23)  

குசும்பும் கோபமும் இருக்கிறவங்களுக்கு பன்றிக் காய்ச்சல் வராதாம்ல. அதனால நீங்க தகிரியமா இருக்கலாம்.:))

யூர்கன் க்ருகியர்  – (12 ஆகஸ்ட், 2009 அன்று PM 8:56)  

//
வானம்பாடிகள்//


ஏதோ உங்க மாதிரி நண்பர்கள் கொடுக்கிற தெகிரியத்துலதான் இருக்கேன் :)

வேலன்.  – (13 ஆகஸ்ட், 2009 அன்று AM 9:05)  

மருத்துவத்திற்கு நல்ல தொண்டுஆற்றுகின்றீர்கள்....(எங்க நண்பர் ஒருவருக்கு சின்ன சந்தேகம்...வருவது வெள்ளைபன்றி காய்ச்சலா..? கருப்பு பன்றி காய்ச்சலா..? என கேள்வி கேட்கின்றார்...என்ன பதில் சொல்லட்டும்?)

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர்  – (13 ஆகஸ்ட், 2009 அன்று AM 9:27)  

//வருவது வெள்ளைபன்றி காய்ச்சலா..? கருப்பு பன்றி காய்ச்சலா..? என கேள்வி கேட்கின்றார்...என்ன பதில் சொல்லட்டும்?)/


சார்..
இது வெள்ளைக்காரன் நாட்டுல இருந்து வந்த காய்ச்சல்தானே ..அப்ப கண்டிப்பா இது வெள்ளை பன்றி காய்ச்சல்தான் ..:)

டவுசர் பாண்டி  – (14 ஆகஸ்ட், 2009 அன்று PM 3:56)  

//பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு வீக்கு //

இன்னாது , பேஸ் மேன்ட்டு வீக்கா ?, இப்பத்தாம்பா , நீ நம்ப ஆளு !! அக்காங் !!நா கூட அப்பிடித்தான் ( வெளிய சொல்லாதே ) ஆய்ய்... நம்ப கிட்ட்டவேயா ?? சும்மா கைமா பண்ணிடுவேன் !! நம்பல்லா பெரி சேக் மாலு ரவுடி, தேர்ந்ஜிக்கோ !!

டவுசர் பாண்டி  – (14 ஆகஸ்ட், 2009 அன்று PM 4:27)  

இந்த பன்னி காய்ச்சலுக்கு அல்லாம் பேப்பட மாட்டேன் பா !! என்னப் பாத்தா" ? " ஒன்னியும் பண்ணாது நைனா !! ஒனின்னா , எம்போட்டாவ உன் டேபுளு மேல வெச்சிட்டு
பாரு தல !! எந்த பன்னி யாது ( ? ) உன் கிட்ட வருதானு !! ஐயே !! மெய் தாம்பா !!

யூர்கன் க்ருகியர்  – (14 ஆகஸ்ட், 2009 அன்று PM 6:36)  

டவுசர் சார்,

பன்னி வேண்டுமானால் நம்மள பார்த்து தெரிச்சி ஓடலாம்.. ஆனா பன்னி வைரஸ்??...ம்ம் ஹும்..நாமதான் ஓடனும் :)

பொன் மாலை பொழுது  – (14 ஆகஸ்ட், 2009 அன்று PM 7:45)  

வந்துகினேன் பாத்துகினியா. பிலாகு எல்லாம் நல்லாத்தான் கீது. அத்தோட மேட்டரும் எல்லாமே நல்லாத்தான் கீது. உனக்கு இன்னா பா ... ராசா வூட்டு கன்னுகுட்டி
I really like your blog

பொன் மாலை பொழுது  – (14 ஆகஸ்ட், 2009 அன்று PM 7:50)  

அட இத்தோடா ...................நாம டவுசரு கூட இங்கன தா கீதா .... மூனும் ஒண்ணா சேந்துகினா பண்ணி காச்சலு இன்னா துணிய அள்ளிக்கினு ஓடிபூடும் நைனா.

யூர்கன் க்ருகியர்  – (15 ஆகஸ்ட், 2009 அன்று AM 9:41)  

// கக்கு - மாணிக்கம் said... //

வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி சார்

THANGA MANI  – (15 ஆகஸ்ட், 2009 அன்று PM 1:50)  

"தடுப்பு மருந்து இருக்கு ...ஆனா இல்ல"?

யூர்கன் க்ருகியர்  – (16 ஆகஸ்ட், 2009 அன்று AM 11:57)  

//THANGA MANI said...
"தடுப்பு மருந்து இருக்கு ...ஆனா இல்ல"?
//

அப்படிதான் கேள்வி பட்டேன் நண்பரே

இது நம்ம ஆளு  – (18 ஆகஸ்ட், 2009 அன்று PM 12:43)  

இப்போதைக்கு விடை பெறுகிறேன் பன்றி காய்ச்சல் வரலன்னா நெக்ஸ்ட் இடுகையில் மீட் பண்றேன். பாய் !

வாழ்த்துக்கள்

யூர்கன் க்ருகியர்  – (18 ஆகஸ்ட், 2009 அன்று PM 6:46)  

// இது நம்ம ஆளு//

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி நண்பரே !

vasu balaji  – (22 ஆகஸ்ட், 2009 அன்று PM 5:47)  

ஒரு சின்ன விருது நண்பரே. ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன். விவரங்கள் என் திண்ணையில் http://paamaranpakkangal.blogspot.com/2009/08/blog-post_22.html

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP