டாக்குடர்ரு ,, நீங்க அதுக்கெல்லாம் ஒத்து வரமாட்டீங்க !

அதான் எழுத வரலியே,, பின்ன ஏன் நாமளும் சிரமபட்டுகிட்டு படிப்பவர்களையும் சிரமப்படுத்தனும்னு..நாமுண்டு நம்ம வேடிக்கையுண்டுன்னு இருந்தா இருக்க விடமாட்டாக போலிருக்கே...

காவலன் படம் ஜனவரி பதினாலு ரிலீசாம் ! காத்துவாக்குல சேதி வந்தது. (பயந்தது நடந்துவிட்டது)

கேட்டதும் பதிவு போட்டாகணும்னு உள்ளம் துடித்தாலும் அதுக்கு முன்ன யூரின் போகணும்னு தோணிச்சு (விஜய் படம் வருதுன்னா ஒபாமாவே ஒண்ணுக்கு போய்டுவான் நாம எம்மூத்திரம் சர்ரி எம்மாத்திரம் ??




"ஜனவரி பதினாலு படம் ரிலீஸ்." கேட்டவுடன் ரெண்டு விஷயம் நியாபகத்திற்கு வந்தது
ஒன்னு ரஜினி டயலாக் இன்னொன்னு பக்கத்துக்கு தெரு பாட்டி.

நினைவிற்கு வந்த டயலாக் :-
சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும் ..

பக்கத்துக்கு தெரு பாட்டி :-
ஒவ்வொரு முறை ஊருக்கு போகும்போதும் பக்கத்துக்கு தெருவில் இருக்கும் வயதான பாட்டியிடம் "எப்படி இருக்க பாட்டி ?" என விசாரிப்பது வழக்கம். அதற்கு அந்த பாட்டி "அந்த எமன் என்னை தூக்கிட்டு போக மாட்டேன்கிறான் " என வேடிக்கையாய் என்னிடம் சொல்வது உண்டு..


இந்த முறை ஊருக்கு போனால் அந்த பாட்டியிடம் சொல்ல வேண்டும் ஜனவரி பதினாலு நம்மூரு சினிமா கொட்டகைக்கு எமன் வரான் .. தைரியம் இருந்தா போய் பாரேன என ..



#############################################################

கரகாட்டக்காரன் படத்தில் "என்ன பார்த்து ஏன்டா அந்த கேள்விய கேட்ட?"என கவுண்டமணி செந்திலை அடிக்கும் காமெடி உங்களுக்கு தெரிந்திருக்கும்
.அந்த மாதிரி விஜயை பார்த்து ஏண்டா அப்படி சொன்னே ?" கேட்டு கன்னத்திலே பொளேரென்று அடிக்க வேண்டுமென்று ஒருத்தனை தேடி கொண்டிருக்கிறேன் ..
அவன் அப்படி என்ன விஜயை பார்த்து சொல்லிட்டான் என்று கேட்கிறீர்களா ? கேட்டா நீங்களே அவனை துவம்சம் பண்ணிருவீங்க ..

விஜயை பார்த்து "தமிழ் சூப்பர் ஸ்டார்" அப்படின்னு சொல்லிட்டான்.





(விஜய்தான் லூசு பயன்னு பார்த்தா .. இருக்குறவன் அதுக்கு மேல இருக்கிறான்..ச்சே .. )
#############################################################

ஒரு பஞ்ச டயலாக் சொல்றேன் கேட்டுக்குங்க

கள்ள சாராயத்தை அதிகமா குடிப்பவனும்
காவலன் படத்தை அடிக்கடி பார்ப்பவனும்
உருப்பட்டதாக சரித்திரமே இல்லை ...


#############################################################


வானிலை அறிக்கை வாசிக்கும் திரு ரமணன் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

புயல், மழை, வெயில், பனி, கடல்சீற்றம், எது வந்தாலும் இப்பல்லாம் முன்னமே சொல்லி மக்களை எச்ச்சரிப்பீங்கலே, அதற்கும் மேல மக்களை தாக்கும் காவலன் படம் வரப்போகுது.. இந்த எச்சரிக்கையையும் சேர்த்து சொல்லிட்டீங்கன்னா ஏதோ புத்தி இருக்கிறவன் பொழச்சுபோகட்டும் ... உங்களுக்கு கங்கைக்கு போகாமலே புண்ணியம் கிட்டும் வாய்ப்புண்டு. ..

#############################################################


இன்னைக்கு கூட ஏதோ ஒரு பதிவில் படித்தேன் காவலன் பாடல்கள் நல்லாருக்குன்னு ஒருத்தரு சொல்லிருக்காரு. பாடல் விமர்சனமாம் .. !!

பாட்டு நல்லாருக்கேன்னு படத்த பார்க்க போனீங்கன்னா படுத்த படுக்கையாயிடுவீங்க பரவாயில்லையா?
என பின்னூட்டம் போட நினைத்தேன் முடியவில்லை ...



#############################################################


எனக்கு தெரிந்த ஒருத்தருக்கு விக்கல் இரண்டு நாளாய் நின்றபாடில்லை . கடைசியில் மருத்துவமனைக்கு சென்ற பிறகே நின்றதாம் பிறகு இது எனக்கு தெரிய வர விசித்திரமாய் தோன்றியது. காவலன் படம் வருகிறது என்றாலே உயிரே நின்று வரும்போது விக்கல் நிற்காதா என்ன .. ஹும் மருத்துவமனைக்கு தண்ட செலவு..(இந்த வகையில் டாக்டர் பட்டம் கொடுத்தது சரியென்றே படுகிறது )

#############################################################

நீண்ட நாள் கழித்து என்னை பதிவு எழுத தூண்டிய தமிழ்நாட்டு சிரிப்பு டாக்டர் விஜய் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்வதுடன் இந்த பதிவையும் அவருக்கு சமர்பிக்கிறேன்

(பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் கிளிக்கவம்..)





படத்தை பார்த்து நீங்கள் மூர்ச்சை"ஆய்" விழுந்தால் அதற்கு படத்தில் இருப்பவரே முழு பொறுப்பு என அறிவித்துக்கொள்கிறேன்

#############################################################


மற்ற பதிவர்கள் போல் உங்க பின்னூட்டமும் ஒட்டும்தான் என்னை உற்சாகபடுத்தி பதிவை எழுத வைக்கிறது என சொல்லமாட்டேன் மாறாக நம் பூலோக எம தர்மன் விஜய் அவர்களே எனக்கு பதிவை எழுத உற்சாகமும் ஊக்கமும் தருகிறார் என்பதை உளமார உறுதி கூறுகிறேன் .

கடைசியாக

சனியனே,, இந்த படத்துலயாவது நடிச்சிருக்கியா ?

என்ற கேள்வியை அவர் காலடியில் சமர்ப்பித்து இத்துடன் என் பதிவை முடித்து கொள்கிறேன் நன்றி வணக்கம் ..




குறிப்பு : இந்த பதிவு மொக்கைதான் ஆனால் காவலன் படம் அளவு மொக்கையாய் இராது என்பதை சொல்ல கடமை பட்டிருக்கிறேன்

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP