நண்பர்களே ..முடித்தால் உதவுங்களேன்...

கல்லூரியில் படித்த என் நண்பனிடமிருது இன்று வந்த மின் மடலை அப்படியே இங்கு பகிந்து கொள்கிறேன். முடிந்தவர்கள் உதவலாம்.


Dear All,

I hope this mail finds you and yours in cheer and good spirit.

My friend who is running a charity trust shared the following message with me

In Chennai one of the young S/W engineer passed away due to Cancer .He worked only for 2 months after his graduation. His aged parents (age above 50) who spent their earnings and saving for his studies having lot of financial problem regarding loan and medical expanses. Currently he (father) is working in chenngalpat and he is traveling daily (he is living close to Chennai Central).

My humble request one behalf of the aged parents is, if any of you through your direct/indirect contacts can help him to get a job (writing accounts for small companies/shops or security or watchman etc…) in chennai (if possible close to Chennai Central) that will be a great help for them.

Please feel free to contact for more detail

Karthik Gopinath -9841170097 (Chennai)
Panneer Pandi – 09897523731 (Dehradun)




உங்கள் அலுவலகங்களிலோ அல்லது தெரிந்த இடங்களிலோ வேலை காலி இருப்பின் தயைகூர்ந்து தெரிவியுங்கள்.

குறிப்பு :

நீங்கள் வோட்டு போடுவதின் மூலம் இந்த செய்தி பல பேரை சென்றடையும் வாய்ப்பு உள்ளது. இதுவும் ஒரு உதவிதானே......

நன்றி.

Read more...

தமிழன் என்ற கர்வம் அழிந்தது

நடப்பதெல்லாம் சந்தோசத்தை தரவில்லை.

இன்னமும் சாகிறார்கள்

ஐ நா வில் இந்தியாவின் வோட்டு கடுப்படிக்கிறது. இத கேட்டு முக்கல் முனகல் கூட தமிழ்நாட்டிலிருந்து எவனும் எழுப்பல!

இத்தனை பேர் செத்தும் கொஞ்சம் கூட இரக்கமே காட்டாமே இன்னமும் ஸ்ரீ லங்காவிற்கு இந்தியா அதரவு அளிப்பது கொடுமையிலும் கொடுமை.

தமிழ்நாடு அரசியல்வாதி ஒருத்தனும் வாய தொறக்க மாட்டீன்கிறான் ...

சில பல பேர் தொறந்தாலும் மேட்டரு டெல்லி வரைக்கும் போக மாட்டேன்கிறது

தினமும் ஈழத்தை பற்றி ஒரு கெட்ட செய்தி வந்து கொண்டே இருக்கிறது

ஏதாவது அதிசயம் நடக்ககூடாதா என்ற ஏக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது

சுயநல தமிழர்கள் அதிகமாயிட்டானுங்க

துரோகிகள் அதிகம் உள்ள இனம் தமிழினம் ...அவனுங்க மட்டுமே நல்லா இருக்கானுங்க

வலையுலகத்தில் ஆளுக்கு ஒரு கருத்து சொல்றானுங்க ..ஒருத்தன் சரின்ன்றான் இன்னொருத்தன் தப்புன்றான்.. ரெண்டு பேருமே தன பக்கம் தான் நியாய்ம்ன்றான் ..மீறி போய் நல்லவனா கெட்டவனான்னு பட்டிமன்றம் ரேஞ்சுக்கு பேசறானுங்க....

இரும்பு வேலிகளுக்கு பின்னே ஆடு மாடுகளை மட்டுமே பார்த்த நான் மனுசங்களை பார்த்தும் தாங்க முடியில

செய்திகளை பார்க்கவே நடுக்கமா இருக்கு ....

என்று விடியும் என்றே தெரியவில்லை.

இனிமே என்னால் எதையும் மாற்ற முடியாது என்பது மனதை சுடுகிறது

தமிழன் என்ற கர்வம் அழிந்தது.....

கடைசியா ....
முடியலடா சாமி.... ஒருத்தன் மனசளவுல எத்தன முறைதான் சாகிறது !!!!!!



குறிப்பு : காங்கிரஸ்க்கு ஒட்டு போட்டவனெல்லாம் எப்படி சோறு தின்றானுங்கன்னே தெரியில !

Read more...

கொஞ்சாப் கலவரம் சம்மந்தமாக பிரபலங்களின் அறிக்கைகள் பார்ட்-4


கொஞ்சாப் கலவரம் நிறுத்துவது சம்மந்தமாக பிரபலங்களின் அறிக்கைகள் பின்வருமாறு:-

***********************************************************************************

வீ.கோந்து : -

கலவரத்த நிறுத்துவது சம்மந்தமாக என்கிட்ட ஒரு ஐடியா இருக்குது..ஆனா இப்ப அத சொல்லமாட்டேன். சொன்னா காப்பி அடிச்சிருவாங்க.. நீங்க என்ன ஜெயிக்க வச்சாதான் உங்களுக்கு சொல்லுவேன்.
தெய்வத்தோடு மட்டுமே கூட்டணி வச்சு கொஞ்சாப்புல நாங்களே ஹோல்சேலா நின்னு ஜெயிக்க போறோம்.

ம்க்கும் .....வர்ட்டா !!!

***********************************************************************************



குலைன்ஜர் :-

கட்சி வெற்றி பெற்றவுடன் இலவசமா டிவி கொடுத்திருந்தாங்கன்னா மக்கள் எல்லாரும் வீட்டுக்குள்ளேயே மானாட மயிராட போன்ற கருத்து செறிவு மிக்க ப்ரோக்ராம் ஐ எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்திருப்பாங்க .

இந்தளவு தெருவுல இறங்கி போராடி இருக்க மாட்டாங்க.
யாரும் கலங்கிட வேண்டாம்... நாங்க கொடுத்த இலவசங்களால் இந்த மாதிரி டாமில்நாடுல நடக்க வாய்ப்பே இல்லை என்பதை சூனியாவின் முன்னாள் தெரிவித்துக்கொள்கிறேன்.

டிவி வந்தது ; உணர்ச்சி நொந்தது;

***********************************************************************************



செயின்லதா : இறையாண்மைக்கு (!?) எதிராக போராடுபவர்கள் தீவிரவாதிகள் ...


வேர் இஸ் தி POTA?

***********************************************************************************



மாட்டு மருத்துவர் . திரு ஆமதாஸ் :-

அப்பா நீங்க கேளேன் !.....
அம்மா . நீ கேளேன் !.........
சார் ... நீ கேளேன் !.....
தோழரே .. நீ கேளேன் !.......
டேய் தம்பி நீயாவது கேளேன் !
ஐயோ ..எவனாவது ஒருத்தராவது கேளுங்கலேண்டா....

(திரு ஆமதாஸ் எவ்வளவு மன்றாடியும் யாரும் கேட்க விரும்பாததால் அவரின் கருத்து கடைசி வரைக்கும் என்னவென்றே தெரியாத காரணத்தால் இங்கு வெளியிடப்படவில்லை ).

மன்னிக்கவும்

***********************************************************************************



டாமில் பொது ஜனம் :-

பக்கத்துக்கு நாட்டுல லட்சம் பேரு செத்தாலும், பக்கத்துக்கு ஊருல பத்தாயிரம் பேரு செத்தாலும், உச் உச் ன்னு ஓசையிட்டு ,, பத்து இட்லிய உள்ள தள்ளி ,,,சட்டுன்னு டிவி ஆப் பண்ணிட்டு பட்டுன்னு படுக்க போயடுவோமில்ல....

நாங்கள்லாம் பீல் பண்ணிக்கிட்டே புல் மீல் - ஐ ஒரு கட்டு கட்டிட்டு எங்க பெர்சனல் வேலைய மட்டும் டீல் பண்றவங்க ...

ஒரு லட்சம் பேருக்கே ஒன்னும் செய்யாம இருக்கோம் .ஆனா ..ஒருத்தன் போனதுக்கே ஓவரா குதிக்கிறீங்களே ....

நீங்கள்லாம் உங்க முதல்வர் சொலறதயோ சூனியா சொலறதயோ கேட்டு ஒழுங்கா நடந்துக்குங்க..ஓகே ......

யே ,,தம்பி டிவி ஐ ஆன் பண்ணுப்பா மானாட மயிராட பாதி போச்சே !


தாமிழன் என்று சொல்லடா; காலை வாரி கொல்லுடா ....

***********************************************************************************



தொடர்புடைய இடுகைகள் படிக்க கீழுள்ள லிங்கை கிளிக்கவும்

Part 1

Part 2

Part 3



Read more...

கொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்ட் 3

இந்த இடுகையின் முந்தைய பாகங்கள் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 படித்து விட்டு தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்




வீ கோந்து -ம் வேலைக்காவல.. குலைஞ்சரும் மொக்க போட்டு கடுப்பேத்திட்டாறு.. யார்கிட்ட கேட்டா கலவரத்தை தடுக்க அருமையான ஐடியா கிடைக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொது செயின்லதாவின் ஞாபகம் வந்தவுடன் உடனே செயின்லதாவிற்கு போன் போட்டாரு கொஞ்சாப் முதல்வர்.









ட்ரிங் ...ட்ரிங் ...ட்ரிங் ...ட்ரிங் ...



கொஞ்சாப் முதல்வர் : மேடம்-ங்களா ?



செயின்லதா : ஸ்பீகிங்.. யார் மேன் நீ ?



கொஞ்சாப் முதல்வர் : நான் கொஞ்சாபுல இருந்து பேசறேன் .இங்க மக்கள் அட்டகாசம் தாங்க முடியல. எதாவது ஐடியா கொடுத்தீங்கன்னா ..சுதாரிச்சிக்குவேன்..



செயின்லதா : கேள்வி பட்டேன் ..இப்ப நிலைமை எப்படி இருக்கு ?



கொஞ்சாப் முதல்வர் : அத ஏன் கேக்குறீங்க ..டைம் ஆக ஆக டென்சன் ஏறுது ..பயபுள்ளீங்க ..இங்கதான் அட்டகாசம் பண்றாங்கன்னு பார்த்தா....டெல்லிக்கு போற டோல் கேட்டையே பத்த வைக்கிறான் ...ரெண்டு நாள் உட்டா இந்தியா கேட்டையே உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க போலிருக்கு ...உங்க கால்யாவது விழுறேன் தயவு செய்து ஐடியா கொடுங்க ..



செயின்லதா : உங்க அப்ப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு .அதனால உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.... ரொம்ப சிம்பிள் ..ஒரு பெரிய கண்டன அறிக்கை விடுங்க சரியா போய்டும்.
முக்கியமா உங்கள் டிவி இல தொடந்து அத ஒளிபரப்பிக்கிட்டே இருங்க.



கொஞ்சாப் முதல்வர் : நீங்க ஒன்னு.....!
அதிக அழிச்சாட்டியம் பன்றவங்களே என் கட்சி காரனுங்க தான்..
நான் எப்படி என் கட்சிக்கே கண்டனம் தெரிவிக்க முடியும் ?
கஷ்டம்... வேற ஐடியா ?



செயின்லதா : இருக்கே...யாரையாவது தூக்கி பொடா வில போடுங்க மேட்டர் சால்வ்ட்.

கொஞ்சாப் முதல்வர் :அதெல்லாம் தப்பு ...நல்லா யோசிச்சி இன்னொரு ஐடியா சொல்லுங்க


செயின்லதா : ம்ம்..ஓகே போராட்டம் பண்ற கவர்மென்ட் ஆசாமிகளை எல்லாம் புடிச்சு டிஸ்மிஸ் பண்ணிடுங்க


கொஞ்சாப் முதல்வர் : வெளங்கிடும் ...அப்ப ..நான் ஒருத்தன் தான் மிஞ்சி இருப்பேன் ...வேற வேற! ...



செயின்லதா : எல்லாத்தையும் வேணா வேணான்னு சொன்னீங்கன்னா எப்படி ? அரசியல்வாதின்னா ஒரு தில் வேணும் ...நான் சொன்ன ஐடியா வுல எதாவது ஒண்ணு செயல்படுத்துங்க ..




(இப்படி எல்லாம் இல்லனா நாங்கல்லாம் பீல்டுல நிக்க முடியுமா ....?? என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு கோவமாகி போன் லைன் ஐ கட் பண்ணி விடுகிறார் ..செயின்லதா.)


வழக்கம் போல புன்சாப் முதல்வர் ஐடியா ஐடியா என்று புலம்பிக்கொண்டே டெலிபோன் டைரக்டரியை புரட்டிக்கொண்டு யாரையோ தேடி கொண்டிருக்கிறார் ..

விரைவில் ....
புன்சாப் கலவரம் சம்மந்தமாக தமிழக பிரபலங்கள் மற்றும் டாமில் மக்களின் அறிக்கைகள் - பார்ட் -4 (நிறைவு பகுதி)

Read Part 1

Read Part 2

Read part 4

Read more...

கொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்ட் 2

கொஞ்சாப் கலவரத்தை கட்டுப்படுத்த தமிழக பிரபலங்களை தொடர்பு கொள்ளும் முதல்வர், வீ.கோந்து க்கு பிறகு குலைன்ஜர் -க்கு போன் போடுகிறார், ஐடியா கேட்க ..












((இந்த இடுகையின் பார்ட் 1 படிச்சிட்டு அப்புறம் மேலே சாரி கீழே படிங்க:-))




கொஞ்சாப் முதல்வர் குலைன்ஜர் -க்கு போன் போடுகிறார்.



கொஞ்சாப் முதல்வர்: ஹலோ குலைன்ஜர் , எப்படி இருக்கீங்க ?


குலைன்ஜர் : சீட்டு கிடைத்தது ; சூப்பரா இருக்கேன்





கொஞ்சாப் முதல்வர்: மக்கள் எப்படி இருக்காங்க ?


குலைன்ஜர் : வேற கேள்வி இருந்தா கேளுங்க.




கொஞ்சாப் முதல்வர்: சரி சரி ....இங்க ஒரே கலவரமா இருக்கு ..அடக்கியே ஆகணும் ஐடியா ஏதாவது சொல்லுங்க.


குலைன்ஜர் : கண்மணியே .... கவிதை எழுதினால் கலவரர்கள் காணாமல் போவார்கள்.



கொஞ்சாப் முதல்வர்: என்னது கண்மணியா ? யேய் இதுக்குமுன்ன யாருமே இப்படி கூபிட்டதில்லைப்பா..ஆனா எனக்கு கவிதை வராதே...




குலைன்ஜர் : தந்தி அடிக்க அழைப்பு விடுங்களேன் ... தந்தி அடிப்பின் தடுமாறி விடுவார்கள் கலவரர்கள்!


கொஞ்சாப் முதல்வர்: தந்தியா ....எந்த காலத்துல இருக்கீங்க .. ஒத்து வராது ... வேற ஐடியா ?





குலைன்ஜர் : ம்ம் ..ஆங் ...உண்ணாவிரதம் இருந்தா என்ன?


கொஞ்சாப் முதல்வர்: மக்கள்லாம் உன்னவிரதமேல்லாம் இருக்க மாட்டாங்க ...அவங்களுக்கு இப்ப தீ வைப்பதற்கே நேரம் சரியா இருக்கு .



குலைன்ஜர் : ஹலோ உங்கள இருக்க சொன்னேன் ...! சும்மா ஒரு ஐந்து மணி நேரம் அப்புறம் பாருங்க .....

கொஞ்சாப் முதல்வர்: ம்ம் ..NO NO NO சரியாவே வரலேயே,,,,மிஸ்டர் குலைன்ஜர்....நல்லா யோசிச்சி வேற ஐடியா கொடுங்க.



குலைன்ஜர் : சூப்பு சுங்குர மேனனையும் நாரவாயனையும் கலந்தாசித்தால் என்ன ?
கொஞ்சாப் முதல்வர்: அங்க சூப்பு வச்ச ஆப்பே இன்னும் காயம் ஆறல... இங்கெல்லாம் நடக்காது. நானே டீல் பண்ற மாதிரி யோசனை சொல்லுங்க.


குலைன்ஜர் : நம்ம வெளிக்கிதுறை அமைச்சர வச்சி ஒரு அறிக்கை விடுங்க எல்லாம் சரியா போயிரும்.

கொஞ்சாப் முதல்வர்: அப்ப நானே நேரடியா எதுவும் செய்ய முடியாதா ?


குலைன்ஜர் : அப்ப பத்து நாளுக்கு ஸ்கூல் காலேஜ் எல்லாம் லீவ் விட்டுட்டு ஜாலியா இருங்க .


கொஞ்சாப் முதல்வர்: என்னங்க நீங்க லீவ் எல்லாம் விட்டுகிட்டு ....அதுவும் ஜாலின்னெல்லாம் சொல்றீங்க ....




( பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய கும்பல் ஒன்று கிராஸ் செய்கிறது. அதிலிருந்து ஒருவன் ஒரு சின்ன பெட்ரோல் பாம் ஐ தூக்கி போட்டதில் டெலிபோன் பத்திக்கிட்டு எரிய....கடுப்பாகி போன கொஞ்சாப் முதல்வர்



"கவித எழுத மாட்டேன்",,


"தந்தி அடிக்க மாட்டேன்"..,


"உண்ணாவிரதம் இருக்க மாட்டேன்",

"சூப்பு சுங்குர மேனனையும் நாரவாயன்னிடமும் பேச மாட்டேன்",,

"வெளிக்கிதுறை அமைச்சர வச்சி அறிக்கை விட மாட்டேன்",,

"பத்து நாள் லீவும் விட மாட்டேன் "...

ஆனா அதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு" ன்னு புலம்பிக்கிட்டே தீயை அனைத்துக்கிட்டு இருந்தாரு.



விரைவில்
கொஞ்சாப் முதல்வருடன் செயின்லதா-வின் உரையாடல் - பார்ட்-3



Read Part 3

Read Part 1

Read more...

கொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்ட் 1

கொஞ்சாப் கலவரத்தை அடக்க வழி தெரியானால் விழி பிதுங்கி கிலி அடித்த முதல்வர் நேற்றிரவு அவசர அவசரமாக பாத் ரூம் போயிட்டு வந்து ஆற அமர தன் சகாக்களுடன் ஆலோசனை நடத்தினார்.









மீட்டிங் இன் முடிவில் தமிழ்நாட்டு பிரபலங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டு அதன்படி கலவரங்களை அடக்கலாம் என பலமனதாக முடிவெடுக்கப்பட்டது.

முதலாவதாக : வீ கோந்து.


கொஞ்சாப் முதல்வர் வீ கோந்து. க்கு போன் போடுங்கள் என கேட்டு கொண்டதற்கிணங்க ..........



ட்ரிங் ..ட்ரிங் ..ட்ரிங் ..ட்ரிங் ..



கொஞ்சாப் முதல்வர் : "ஹலோ மிஸ்டர் கோந்து வீடுங்களா.. ?"

மறுமுனை : ஆமாங்க. அய்யா கூட்டணி விசயமா ரொம்ப பிஸி ஆ இருக்காங்க.."

கொஞ்சாப் முதல்வர் : யோவ் ..அதான் எலெக்சன் எல்லாம் முடிஞ்சிருச்சே...இன்னும் என்னையா கூட்டணி ..கீட்டணின்னு ..?

மறுமுனை : அட .. இல்லேங்க ...அய்யா சாமிய கும்பிட்டுக்கிட்டு இருக்காரு அதத்தான் அப்படி சொன்னேன். அவர்தான் தெய்வத்தோட கூட்டணி வசிருக்கறவர் ஆச்சே?



(ஆஹா.. இப்பவே கண்ண கட்டுதே என்று கொஞ்சாப் முதல்வர் கடுப்பாகும் போதே வீ கோந்து லைன் இல் வந்துவிடுகிறார்.)



வீ கோந்து : ம்க்கும் .... வீ கோந்து ஸ்பீக்கிங்!

கொஞ்சாப் முதல்வர் : இங்க ஒரே கலவரம்:

வீ கோந்து : ஒண்ணுதானா ?

கொஞ்சாப் முதல்வர் : இல்லீங்க ஏகப்பட்ட கலவரம் ...

வீ கோந்து : அப்புறம் ...

கொஞ்சாப் முதல்வர் : வீச்சருவா...உருட்டுக்கட்டை ..சைக்கிள் செயினோட அலையிறாங்க ...

வீ கோந்து : அப்புறம் ...

கொஞ்சாப் முதல்வர் : என்ன ஏதுன்னு கேட்கறதுக்குள்ள போற வர வண்டி எல்லாதையும் பெட்ரோல் பாம் போட்டே கொளுத்துறாங்க !

வீ கோந்து : அடடே ..அப்புறம் ...

கொஞ்சாப் முதல்வர் : ரெண்டு மூணு டிரைனை அப்படியே ஹால்ட் பண்ணி அராவடி பண்றாங்கன்னா பார்த்துக்குங்களேன் ...

வீ கோந்து : இன்ட்ரஸ்டிங் ..அப்புறம் ...


கொஞ்சாப் முதல்வர் : ஆறிலிருந்து எம்பது வயசு வரைக்கும் கும்பல் கும்பலா கெளம்பி வராங்க ....

(இடைமறித்து ...)

வீ கோந்து : எனக்கு புரிஞ்சி போச்சு ..நீங்க எதுவும் சொல்ல வேணாம். ரெண்டு புருவங்களையும் தூக்கி .....

கொஞ்சாப் முதல்வர் : தூக்கி ?...

வீ கோந்து : கண்ணுக்கு லிப்ஸ்டிக் போட்டமாதிரி செவப்பாக்கி ,,கண் சிமிட்டாம பார்த்து ..

கொஞ்சாப் முதல்வர் : பார்த்து ..??

வீ கோந்து : காத்துலேயே ஒரு கால முட்டு கொடுத்து இன்னொரு கால தூக்கி சும்மா கத்தரிகோல் மாதிரியான போஸ்ல.....

கொஞ்சாப் முதல்வர் : போஸ்ல.......??

வீ கோந்து : சும்மா சொல்ட்டி சொல்ட்டி அடிச்சேன்னா ....எத்தன பேரு கெளம்பினாலும் வூடு கட்டி டோட்டல் கலவரத்தை அடக்கிடலாம் ...அப்பறம் இன்னொரு விஷயம் படத்துக்கு பேரு "கலவரத்துக்கு மரியாதை" ன்னு பேரு வச்சிடலாம்...


கொஞ்சாப் முதல்வர் : ங்கொய்யால .. நான் கொஞ்சாப் கலவரத்த பத்தி பேசிக்கிட்டு இருக்கேன் நீ ஏதோ தெலுங்கு பட டைரக்டர் கிட்ட பேசிக்கிட்டு இருக்கிற மாதிர் பேசற?


வீ கோந்து : அப்ப நீங்க டைரக்டர் இல்லையா ?...


( அவசர அவசரமாக போனை கட் பண்ணி கடுப்புடன் "வேலைக்காரன் ஏதோ டைரக்டர் கிட்ட இருந்து போன் வருதுன்னு கொடுத்தானே ...பொய் சொன்ன அவனை சும்மா விட மாட்டேன் என்று சொல்லி வேலைக்காரனை அடிக்க பாய ...அதே சமயத்தில் வீ கோந்து கிட்ட பேச சொல்லி ஐடியா கொடுத்த அல்லக்கையை துரத்துகிறார் முதல்வர்.... )




விரைவில் ....


கொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்ட் 2

( தமிழின குலைன்ஜர் உடன் கொஞ்சாப் முதல்வர் இன் ஸ்பெஷல் உரையாடல்)

Read Part 2

Read Part 3














Read more...

சிங்கு ஊதிய சங்கு .......

மூவாயிரம் மைல்-க்கு அந்தப்பக்கம் முப்பது பேர் காயம் பட்டதுக்கே பஸ் கண்ணாடி எல்லாம் உடைத்து மதிய அரசின் கவனத்தை ஈர்த்தனர் சீக்கியர்கள் - நேற்றிரவு செய்தி பஞ்சாபில் !

மேலும்

ஆறு பஸ்களை அடித்து நொறுக்கப்பட்டது!

ஒரு பெரிய டிரக் மற்றும் எ டி எம் சென்டர் தீக்கிரையாக்கப்பட்டது!

நேசனல் ஹை வே -1 மறிக்கப்பட்டது!

ஜலந்தர் கண்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷன் தாக்கப்பட்டது!

இரண்டு எக்ஸ்பிரஸ் டிரைன்கள் நிறுத்தப்பட்டது!

பஞ்சாப் முதலமைச்சர் "அமைதி" "அமைதி" என்று அலறிக்கொண்டிருக்கிறார்.
மொத்தத்தில் ஜலந்தர் நகரமே இப்போது அண்டர் கர்ப்யு!!











முப்பது மைல்-க்கு இந்தப்பக்கம் இதுவரை ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்தும் கவலையே இல்லாமல் நேற்றிரவு ஐ பி எல் - ல் ஐக்கியமாயினர் பெரும்பாலான தமிழ்நாடு மக்கள்.


என்ன ஆச்சரியம் ...... ஒரே நாட்டுல இருக்கிற ரெண்டு மாநிலங்களுக்கு இவ்வளவு வித்தியாசமா?

அங்கன்னா மட்டும் கர்ப்யு ...இங்கன்னா காப்பா? என்னவோ போங்க !



பஞ்சாப் விசயத்தில் இப்ப நம்ம நாட்டு வெளிக்கி.. சாரி வெளிஉறவுத்துறை அமைச்சர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்! (?!)

Read more...

தீ மு க விற்கு மந்திரி பதவிகள் கிடைத்ததின் மர்மம்....

மந்திரி பதவிகளின் பங்கீடு சம்மந்தமாக கடந்த இரு தினங்களாக நடைபெற்ற பேரத்தில் தீ மு க விற்கு கணிசமான மந்திரி பதவிகள் கிடைத்துள்ளன என்பது உங்க எல்லாருக்கும் தெரியும்.

இதனால் கடுப்பான மற்ற கூட்டணி தலைவர்கள் எல்லாம் சூனியாவிடம் சென்று அந்தாளுக்கு மட்டும் இவ்வளவு கரிசனம் மற்றும் இவ்வளவு பதவிகள் வாரி கொடுத்திருக்கீங்க என்று கேட்டார்களாம்.

அதற்கு சூனியா,
"நாங்க லங்காவில எத்தனை ஆயிரம் பேர கொன்னாலும், எதுவுமே எதுத்து பேசாமலேயே டாமில் மக்களை சமாளிக்கிறாரு .... ....அதனால இவரு ரொம்ப நல்லவர்ரூ ...ன்னு
சொல்லி சிரிச்சாங்களாம் (?!) .


அப்புறம் என்ன .... கேட்டவங்கலாம் கப் சிப்.


மக்களே இப்ப தெரியுதா மந்திரி பதவிகளின் மர்மம்? .....


Read more...

இந்தியாவிற்கு சர்க்கரை வியாதியா?

சர்க்கரை வியாதி உடைய ஒருவர் சரியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வில்லை எனில் அது அவருடைய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அபாயம் உண்டு.

தொடந்து மேலும் சிகிச்சை அளிக்க வில்லை எனில் வியாதியஸ்தருக்கு உடலின் சில பாகங்கள் முக்கியமாக கால்களில் உணர்வற்ற நிலை தொடரும்.

அவ்வாறான நிலையில் நோய் முற்றும் பொழுது கால் பேரு விரல் முதலான பாகங்களில் அடி பட்டாலும் மூளைக்கு வலி தெரியாது.

அதனால்தான் ஒரு சில நோயாளிகளுக்கு காலை எடுக்க வேண்டிய நிலையும் வருகிறது.

சரி இப்ப மேட்டருக்கு வருவோம் :-


இந்தியாவின் கால் பகுதியில் உள்ள தமிழர்களின் வலி டெல்லி என்னும் மூளைக்கு
உறைக்காமல் இருக்கும் காரணத்தினால் இந்தியாவிற்கும் சர்க்கரை வியாதி பீடித்து இருக்கிறதோ என என்ன தோன்றுகிறது.



குறிப்பு 1: நோயை முற்ற விட்டு காலை எடுக்க வேண்டிய நிலை வராமலிருக்க காலம் தாழ்த்தாமல் மருந்திடுவதே இப்போதைய அரசியல் வாதிகளின் கடமை.

குறிப்பு 2: உலகிலேய அதிக சர்க்கரை வியாதியஸ்தர்கள் வாழும் நாடு என்ற பெருமைக்குரிய நாடு நம் நாடு. அதே போல் உலக நாடுகளிலேயே முதன்முதலாக சர்க்கரை வியாதி வந்த நாடும் நம் நாடுதான் :(

குறிப்பு 3: காலுக்கு செருப்பு கூட போடாமல் தலைக்கு தொப்பி போட்ட ஒரே நாடு நம் நாடுதான்.












INDIA needs insulin











என்னாது ...........ஜெய் ஹிந்தா! :)


Read more...

5S ம் பைத்தியக்காரன்களும்

பொதுவாகவே எல்லா கம்பெனியிலும் 5S ஐ பத்தி சொல்லி இருப்பாங்க.
எங்க கம்பெனியிலும் சொன்னாங்க ..சொன்னதோட மட்டுமில்லாம யாரோ ஒருவரை கூட்டிக்கிட்டு வந்து 5S ஐ பத்தி பாடம் எடுத்தாங்க...

நமக்குத்தான் ட்ரைனிங்-னாலே அலர்ஜி ஆச்சே....
ஏதோ ட்ரைனிங் சமயத்தில கிடைக்கும் வட போண்டா டீ எல்லாம் வேஸ்ட் ஆகிற கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணத்துல நானும் போனேன்.

அப்படி ஒன்னும் பெருசா சொல்லி கிழிச்சுடல.....5S ன்னா என்ன? எப்படி வந்தது? நாம எப்படி 5S ஐ பின்பற்றனும் அப்படின்னு .....அட்வைஸ் பண்ணி நாள் பூரா வாட்டி வதச்சி கீச்சிட்டாறு...

இன்னும் ஒரு வாரத்துல மறுபடியும் உங்க கம்பெனிக்கு வருவேன் ....
வந்து எல்லாரும் அவங்கவங்க வேலை செய்யிற (?) இடத்தை எப்படி வச்சுருக்காங்கன்னு பார்ப்பேன்
அப்படின்னு சொல்லிட்டு முடிச்சாரு..


விஜய் மாதிரி நாமதான் நம்ம சொல்றதையே கேட்க மாட்டோமே....
அடுத்த வாரமும் வந்தது ......அந்தாளும் விசிட் பண்ணாரு ....
அவனவன் இடமெல்லாம் கலக்கலா இருந்தது ...

.என் இடமும் வந்தது .....அவ்வளவுதான் ....கடுப்பாகிட்டாரு .....என்னுடைய பாஸ் ஐ கூப்பிட்டு எனக்கு இந்த இடத்தை பார்த்தா பைத்தியமே புடிச்சிரும் போலேருக்கு ..."நீங்கள்ளாம் இவனை வச்சு எப்படி மேய்க்கிறீங்க" அப்படின்னு கேட்டாரு.

அதுக்கு எங்க பாஸ் " இவனை வச்சு வேல வாங்கறதால ஏற்கனவே நான் பைத்தியம் ஆகிட்டேன் ... நீங்க இப்பதான் ஆகி இருக்கீங்க" ஒன்னும் ஆச்சரியம் இல்லை அப்படின்னாரு ..


5S சொல்லி தரவனையே அதிர்ச்சியில் ஆழ்த்திய என் வொர்கிங் டேபிள் ஐ நீங்களும்தான் பாருங்களேன்.... ( ஸ்க்ரோல் பண்ணி கீழே போய் பாருங்க !)




^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^
^-^



WORKING TABLE
குறிப்பு : 5S ஐ பத்தி உண்மையிலேய தெரிஞ்சுக்கணும்ன்னா...http://en.wikipedia.org/wiki/5S_(methodology). போய் பாருங்க.

Read more...

நம்மினம் ஒருநாள் வெல்லும் ...சரித்திரம் அதையும் சொல்லும்!

இயங்கியும் இயலாதவனாய்,, மக்களன்றி மாக்களின் கூட்டத்தில் ஒருவனாய், கடைசி வரை போராடதவனாய், ஈழத்திற்கு கண்ணீர் மட்டுமே காணிக்கை செலுத்தியவனாய், சரித்திரம் தூற்றும் மக்களில் ஒருவனாய் இருந்த எனக்கு அந்த ஈழத்து நேதாஜிக்கு அஞ்சலி செலுத்த அருகதை இல்லையென்றே கருதுகிறேன்.

tiger


நம்மினம் ஒருநாள் வெல்லும் ...சரித்திரம் அதையும் சொல்லும்!

இப்படிக்கு ...
- தமிழ்நாட்டு மாக்களில் ஒருவன்

Read more...

தேர்தல் முடிவுகள் : பீல் பண்ணாதீங்க டீல் பண்ணுங்க!

தேர்தல் முடிவுகள் ஒன்னும் எனக்கு சரியா படல.

சுள்ளுன்னு அடிக்கிற வெயில விட தேர்தல் முடிவுகள்தான் உடலையும் உள்ளதையும் வாட்டுது.

ஆனாலும் இதுக்கெல்லாம் சோர்ந்து போகாம நமக்கு நாமே உற்சாகபடுதிக்கிட்டு இருக்க உங்களுக்கெல்லாம் ஒரு போட்டோ. கீழே போய் பாருங்க ... (இந்த இடுகையின் கீழே கடைசில போய் பாருங்கன்னு சொன்னேன்...)

இதனால் தேர்தல் முடிவுகளினால் சோர்ந்து போய் இருக்கும் அணைத்து நண்பர்களுக்கும் தெரிவிப்பது என்ன வென்றால் ...... "பீல் பண்றது விட்டுவிட்டு டீல் பண்றத பத்தி யோசிங்க!"

ஒரு கை பாத்துருவோம்!

! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !

! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !
! ! ! ! !

Election Results...!! Don't Feel ... Let's Deal !

Smile please!


Read more...

கையில மை ....வாயில பொய் பாலிசி!!

(ஒட்டு போட்ட பிறகு என் விரலை நானே எடுத்துக்கொண்ட போட்டோ )


எலெக்சன் வந்தாலும் வந்தது அவனவன் பணமும் கோட்டரும் வாங்கிகிட்டு அநியாயத்திற்கு விசுவாசமாக இருக்கிறார்கள். வோட்டு போட வேண்டிய இடத்தில் எந்த வித பிரச்சாரமும் கூடாது என்ற கட்டுப்பாடை மீறி ஏதோ திருட்டு டிக்கெட் விக்கிறவன் மாதிரி வோட்டு போட போற மக்களிடையே ஊ.சூரியனுக்கு போடு ....ரட்டை இலைக்கு போடு ....ன்னு கடுப்பெத்தரானுங்க ...

இதை எல்லாம் மீறி வோட்டு போட்டுட்டு வெளில வந்தா ஒரே ரகளை ...போலீஸ் தடியடி ...ஓட்டம் ....ஏதோ எதிர்ரெதிர் கட்சிகாரனுங்க சண்ட போடரானுங்கன்னு பார்த்தா ..அப்படி எல்லாம் இல்லையாம் ..ஒரே கட்சியை சார்ந்த இரு கோஸ்டிகள் சண்ட போடறானுங்க. என்னா மேட்டருன்னு பார்த்தா ஒரு கோஸ்டிக்கு தலைக்கு நூறு ரூபாயும் இன்னொரு கோஸ்டிக்கு தலைக்கு ஐம்பது ரூபாயும் கொடுத்தால் வந்த வினையாம்.ஐம்பதுக்கு நூறுக்கும் தங்களின் உரிமையை விற்கும் இவர்கள் இருக்கும் வரை நல்லவர்கள் அரசியலுக்குள் வர முடியாது.


**********************************************************************************************************************************

ரெண்டு நாளைக்கு முன்னாடி நடந்த ஒரு நிகழ்ச்சி :


ரெண்டு அல்லக்கைகள் கலைஞர் வாழ்கவென்றும் ...கட்சி மாறி ராமதாஸ் ஒழிகவேன்றும் வாங்கின பணத்துக்கும் ஊத்திகொண்ட கொட்டருக்கும் தொண்டை தண்ணி வற்ற கூவிகொண்டிருந்தார்கள்.


கலைஞர் வாழ்கவென்றும்,,ராமதாஸ் ஒழிகவேன்றும்,,மாறி மாறி கூவிகொண்டிருதபோழுது சட்டென்று ராமதாஸ் வாழ்கவென்றும் கலைஞர் ஒழிகவேன்றும் மாற்றி கூவி விட்டான் ஒரு அல்லக்கை ..

அப்புறம் என்ன..கூடி இருந்தவர்களெல்லாம் கொல்லென்று சிரிக்க இவர்கள் இருவரும் அவசரமாக எஸ்கேப் ஆன காட்சி இப்போ நினைத்தாலும் சிரிப்புதான்...

**********************************************************************************************************************************


ஒட்டு போட்டுட்டு நண்பனுடன் வெளியில் வந்து கொண்டிருந்த பொழுது இன்னொரு நபர் "யாருக்கு வோட்டு போட்டாய்?" என்று வினவியதும் ஊ.சூரியனுக்குத்தான் என்றான்.
இன்னொருதன்னிடம் மாம்பழம் என்றான் அதே மாதிரி இன்னொருதனிடம் முரசு என்றான் .


ஏண்டா மாறி மாறி பொய் சொல்கிறாய் என்று கேட்டதிற்கு என் நண்பன் சொன்னான்.. "அந்தந்த கட்சி காரர்களிடம் அந்த அந்த கட்சிக்குத்தான் வோட்டு போட்டேன்" என்று சொல்ல வேண்டும் ."யாரிடம் பகைச்சுக்க கூடாது" என்றான்
இதுக்கு பேருதான் "கையில மை வாயில பொய்" பாலிசி என்றான் .


என்கிட்ட எவனும் கேட்கல ஏன்னா "நான் யாருக்கு போட்டிருக்க மாட்டேன்" என்பது எல்லாருக்கும் நான் சொல்லாமலே தெரியும்


************************************************************************************************

ஒட்டு போட்டுட்டேன் ஆனா என் விரல்ல மை எங்கன்னு கண்டுபிடி பார்க்கலாம் என்றான் நண்பன் ஒருவன்.
நானும் பத்து விரலையும் பார்த்தும் மையை கண்டுபிடிக்க முடியவில்லை ...
கடைசில அவன் சொன்னான் ...ஒட்டு போட்டேன் ஆன பூத்து ல இருந்த ஆளு மை வைக்க மறந்துட்டான்" என்றான்
அட கொடுமையே என்று சொல்லி இன்றைய அரட்டையை முடித்தோம் ...

Read more...

இதோ.. இப்பவே கிளம்பிட்டேன் காங்கிரஸ் க்கு ஆப்பு வைக்க ....

1. காங்கிரஸ் உடன் கூட்டு சேர்ந்து மக்களுக்கு துரோகம் செய்த காரணத்தினால் தி.மு.க விற்கு சத்தியமா வோட்டு போட போறதில்லை.

2. தனி ஈழம் என்று முழங்கிய ஒரே காரணத்தினால் ரட்டை இலைக்கு வோட்டு போடலாம்னு பார்த்தா போட முடியாது ஏன்னா .எங்க தொகுதியில மாம்பழந்தான் இருக்குதான்.( பா மா கா).
ஜெயலலிதா கூட்டணி வைக்க போயும் போயும் இந்த பா மா கா வா கிடைத்தது ?
ராமதாஸ் ஏற்கனவே பலமுறை கட்சி தாவி குரங்கை விட திறமையாக பல்டி அடிக்கிறவரு...
அதனால மாம்பழம் சின்னத்தை எடுத்துட்டு குரங்கு சின்னம் வைச்சுட்டா பொருத்தமா இருக்கும்






3.ஈழ தமிழர்களை காப்போம்ன்னு சொன்ன காரணத்திற்காக பி ஜெ பி க்கு போடலாம்னு பார்த்தா அவனுங்க எங்க தொகுதியில நிக்கவே இல்லையாம் .என்ன கொடுமை !!
தேசிய அளவில் உள்ள ஒரு பெரிய கட்சி அதுவும் காங்கிரஸ் ஐ எதிர்க்கும் கட்சி எங்க தொகுதியில நிக்கல ...என்னே ஒரு அவ நம்பிக்கை ..


4.சுயேட்சைக்கு வோட்டு போடலாம்னு பார்த்தா சத்தியமா எந்த சுயேட்சையும் ஜெயிக்க மாட்டானுங்க ...சுயேட்சைக்கு வோட்டு போட்டு அவன் ஜெயிக்கலன்ன நாம வோட்டு போட்டும் இந்திய அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.அதனால சுயேட்சையும் அவுட்.

5. 49-0 விற்கு போடலாம்னு பார்த்தா அதனால ஒரு பிரயோசனுமும் இல்ல (Neutral)

6. ஆனா ஒன்னு எல்லோருமே திருடனுங்க ...எவன் ஜெயித்தாலும் மக்களுக்கு ஒன்னும் செஞ்சி புடுங்க போறதில்லை.ஆனா குறைந்த பட்சம் காங்கிரஸ் ஐ தூக்கி எறிகிற கட்சிக்கே என் வோட்டு .


நானெல்லாம் கனவுல கூட நினைச்சி பார்த்ததில்லை ** * * விற்கு வோட்டு போடுவேன் என்று!!!
எது எப்படி ஆனாலும் எப்படியாவது நம் மக்களை காப்பாத்துங்க சாமியாவ் ......



Read more...

ஏற்காடு - பயணக்கட்டுரை - பாகம்- 1

என்னடா ...மதிய வெயில் மண்டையை காய வைக்குதேன்னு திடீர் முடிவாய் ஏற்காடிற்கு இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டேன் கூடவே என் காமெராவுடன்
பல முறை சென்ற பழக்கமான இடமாதலால் மூன்று மணி நேரமே ஏற்காடில் இருந்தேன்.
பல இயற்கை காட்சிகளில் லயித்து அனுபவித்து என்னால் முடிந்த வரை அழகாய் (?) படம் பிடித்தேன்.
வீட்டிற்கு வந்து அணைத்து புகைப்படங்களையும் என் மடி கணினியில் பார்க்கும்பொழுது நான் எடுத்த மற்ற இயற்கை காட்சிகளை விட இரு குழந்தைகளை நான் பிடித்த படங்களே என்னை பொறுத்துவரை வெகுவாக கவர்ந்தன.
அந்த படங்கள் உங்களுக்காக இங்கே பதிவேற்றி இருக்கிறேன்.


ஒரு சிறுவன் சோகமாக உட்கார்ந்திருந்த போது .......

P5100139

ஒரு சிறுமி சந்தோசமாக ஊஞ்சல் ஆடிய பொழுது

P5100169

பிடித்திருந்தால் பின்னூட்டமிடுங்கள். பயணக்கட்டுரை - பாகம்- 2 மற்றும் 3னை பதிவேற்றலாம் (சுவராஸ்யமான படங்களுடன் ) என்றிருக்கிறேன்.

குறிப்பு : வோட்டு போட்டுட்டீங்களா ...இல்லனா சீக்கிரம் போய் போடுங்க. ஆனா காங்கிரஸ்க்கு மட்டும் போடாதீங்க

காங்கிரஸ்க்கு போடும் வோட்டேன்பது தமிழ்
மக்களை அழிக்கும் வேட்டு.

Read more...

1 BHK - ஒரு விளக்கப்படம்..

சமீபத்தில் நண்பனிடமிருந்து திடீர் போன் கால்.
என்ன மச்சி.. ஒரே ஊர்ல இருக்கோம் இதுவரையிலும் என் பிளாட்டுக்கு ஒரு முறை கூட வந்ததில்லை அப்படின்னான்.

சரி மச்சி ...இன்னைக்கு சாயந்திரம் உன் பிளாட்டுக்கு வரேன் பார்ட்டி ரெடி பண்ணி வையுடான்னு சொன்னேன்.

ஆச்சரியமா அவனும் சரி ன்னுட்டான்

என்னடா ..பார்ட்டியெல்லாம் வைக்கப்போற உன் ப்ளாட்டுல எல்லாம் வசதியா இருக்குமாடா அப்படின்னு கேட்டேன்.

அவன் சொன்னான் ...அத பத்தி கவலையே படாதே ..நான் Top Floor ல எவன் தொந்தரவும் இல்லாம 1 BHK ப்ளாட்டுல இருக்கன்டா ...ஒன்னும் பிரச்சினை இல்லடா அப்படின்னான்.

சரின்னு அவன் ரூமுக்கு போனா .....ஒரே ஒரு ரூம்தான் இருக்கு .

என்னடா 1 BHK Flat அப்படின்னு சொன்னே...இங்க வந்து பார்த்தா ஒரே ஒரு ரூம்தான் இருக்குன்னேன்...

அதுக்கு அவன் "இந்த ஒரே ரூம்தான் நமக்கு ஹால் கிச்சன் பெட்ரூம் எல்லாமே..
அதான் ஒன் BHK அப்படின்னு சொன்னேன் அப்படின்ன்றான் ...

மக்களே இந்த ஆல் இன் ஆல் ஒன் பெட் ரூம் ஹால் கிச்சன் எப்படி இருக்குன்னு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கங்க...






































Read more...

பன்றி காய்ச்சல் - சிறப்பு புகைப்படம்!






































swine flu














































swine fluu















குறிப்பு : இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் பன்றிகளிடமிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீர்கள்.


பொது நலன் கருதி வெளியிடுபவர் : ஜுர்கன் க்ருகர்

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP