சிங்கு ஊதிய சங்கு .......
மூவாயிரம் மைல்-க்கு அந்தப்பக்கம் முப்பது பேர் காயம் பட்டதுக்கே பஸ் கண்ணாடி எல்லாம் உடைத்து மதிய அரசின் கவனத்தை ஈர்த்தனர் சீக்கியர்கள் - நேற்றிரவு செய்தி பஞ்சாபில் !
மேலும்
ஆறு பஸ்களை அடித்து நொறுக்கப்பட்டது!
ஒரு பெரிய டிரக் மற்றும் எ டி எம் சென்டர் தீக்கிரையாக்கப்பட்டது!
நேசனல் ஹை வே -1 மறிக்கப்பட்டது!
ஜலந்தர் கண்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷன் தாக்கப்பட்டது!
இரண்டு எக்ஸ்பிரஸ் டிரைன்கள் நிறுத்தப்பட்டது!
பஞ்சாப் முதலமைச்சர் "அமைதி" "அமைதி" என்று அலறிக்கொண்டிருக்கிறார்.
மொத்தத்தில் ஜலந்தர் நகரமே இப்போது அண்டர் கர்ப்யு!!
முப்பது மைல்-க்கு இந்தப்பக்கம் இதுவரை ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்தும் கவலையே இல்லாமல் நேற்றிரவு ஐ பி எல் - ல் ஐக்கியமாயினர் பெரும்பாலான தமிழ்நாடு மக்கள்.
என்ன ஆச்சரியம் ...... ஒரே நாட்டுல இருக்கிற ரெண்டு மாநிலங்களுக்கு இவ்வளவு வித்தியாசமா?
அங்கன்னா மட்டும் கர்ப்யு ...இங்கன்னா காப்பா? என்னவோ போங்க !
பஞ்சாப் விசயத்தில் இப்ப நம்ம நாட்டு வெளிக்கி.. சாரி வெளிஉறவுத்துறை அமைச்சர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்! (?!)
அவங்களுக்கு ஆஸ்திரியான்னாலும் அன்டார்டிகான்னாலும் ஒரே சிங்குதான். எவன தொட்டாலும் சங்குதான். நம்மள மாதிரி கர்நாடகத் தமிழன், ஆந்திரத் தமிழன், ஈழத் தமிழன்னா இருக்கானுவ.
கருத்துக்கு மிக்க நன்றி திரு பாலா அவர்களே !
தமிழன் சுயநலவாதியாகி பல ஆண்டுகள் ஆகி விட்டது
இவங்க எப்பவுமே இப்படித்தான். இன்னைக்கு நேத்தா?