கொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்ட் 1

கொஞ்சாப் கலவரத்தை அடக்க வழி தெரியானால் விழி பிதுங்கி கிலி அடித்த முதல்வர் நேற்றிரவு அவசர அவசரமாக பாத் ரூம் போயிட்டு வந்து ஆற அமர தன் சகாக்களுடன் ஆலோசனை நடத்தினார்.









மீட்டிங் இன் முடிவில் தமிழ்நாட்டு பிரபலங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டு அதன்படி கலவரங்களை அடக்கலாம் என பலமனதாக முடிவெடுக்கப்பட்டது.

முதலாவதாக : வீ கோந்து.


கொஞ்சாப் முதல்வர் வீ கோந்து. க்கு போன் போடுங்கள் என கேட்டு கொண்டதற்கிணங்க ..........



ட்ரிங் ..ட்ரிங் ..ட்ரிங் ..ட்ரிங் ..



கொஞ்சாப் முதல்வர் : "ஹலோ மிஸ்டர் கோந்து வீடுங்களா.. ?"

மறுமுனை : ஆமாங்க. அய்யா கூட்டணி விசயமா ரொம்ப பிஸி ஆ இருக்காங்க.."

கொஞ்சாப் முதல்வர் : யோவ் ..அதான் எலெக்சன் எல்லாம் முடிஞ்சிருச்சே...இன்னும் என்னையா கூட்டணி ..கீட்டணின்னு ..?

மறுமுனை : அட .. இல்லேங்க ...அய்யா சாமிய கும்பிட்டுக்கிட்டு இருக்காரு அதத்தான் அப்படி சொன்னேன். அவர்தான் தெய்வத்தோட கூட்டணி வசிருக்கறவர் ஆச்சே?



(ஆஹா.. இப்பவே கண்ண கட்டுதே என்று கொஞ்சாப் முதல்வர் கடுப்பாகும் போதே வீ கோந்து லைன் இல் வந்துவிடுகிறார்.)



வீ கோந்து : ம்க்கும் .... வீ கோந்து ஸ்பீக்கிங்!

கொஞ்சாப் முதல்வர் : இங்க ஒரே கலவரம்:

வீ கோந்து : ஒண்ணுதானா ?

கொஞ்சாப் முதல்வர் : இல்லீங்க ஏகப்பட்ட கலவரம் ...

வீ கோந்து : அப்புறம் ...

கொஞ்சாப் முதல்வர் : வீச்சருவா...உருட்டுக்கட்டை ..சைக்கிள் செயினோட அலையிறாங்க ...

வீ கோந்து : அப்புறம் ...

கொஞ்சாப் முதல்வர் : என்ன ஏதுன்னு கேட்கறதுக்குள்ள போற வர வண்டி எல்லாதையும் பெட்ரோல் பாம் போட்டே கொளுத்துறாங்க !

வீ கோந்து : அடடே ..அப்புறம் ...

கொஞ்சாப் முதல்வர் : ரெண்டு மூணு டிரைனை அப்படியே ஹால்ட் பண்ணி அராவடி பண்றாங்கன்னா பார்த்துக்குங்களேன் ...

வீ கோந்து : இன்ட்ரஸ்டிங் ..அப்புறம் ...


கொஞ்சாப் முதல்வர் : ஆறிலிருந்து எம்பது வயசு வரைக்கும் கும்பல் கும்பலா கெளம்பி வராங்க ....

(இடைமறித்து ...)

வீ கோந்து : எனக்கு புரிஞ்சி போச்சு ..நீங்க எதுவும் சொல்ல வேணாம். ரெண்டு புருவங்களையும் தூக்கி .....

கொஞ்சாப் முதல்வர் : தூக்கி ?...

வீ கோந்து : கண்ணுக்கு லிப்ஸ்டிக் போட்டமாதிரி செவப்பாக்கி ,,கண் சிமிட்டாம பார்த்து ..

கொஞ்சாப் முதல்வர் : பார்த்து ..??

வீ கோந்து : காத்துலேயே ஒரு கால முட்டு கொடுத்து இன்னொரு கால தூக்கி சும்மா கத்தரிகோல் மாதிரியான போஸ்ல.....

கொஞ்சாப் முதல்வர் : போஸ்ல.......??

வீ கோந்து : சும்மா சொல்ட்டி சொல்ட்டி அடிச்சேன்னா ....எத்தன பேரு கெளம்பினாலும் வூடு கட்டி டோட்டல் கலவரத்தை அடக்கிடலாம் ...அப்பறம் இன்னொரு விஷயம் படத்துக்கு பேரு "கலவரத்துக்கு மரியாதை" ன்னு பேரு வச்சிடலாம்...


கொஞ்சாப் முதல்வர் : ங்கொய்யால .. நான் கொஞ்சாப் கலவரத்த பத்தி பேசிக்கிட்டு இருக்கேன் நீ ஏதோ தெலுங்கு பட டைரக்டர் கிட்ட பேசிக்கிட்டு இருக்கிற மாதிர் பேசற?


வீ கோந்து : அப்ப நீங்க டைரக்டர் இல்லையா ?...


( அவசர அவசரமாக போனை கட் பண்ணி கடுப்புடன் "வேலைக்காரன் ஏதோ டைரக்டர் கிட்ட இருந்து போன் வருதுன்னு கொடுத்தானே ...பொய் சொன்ன அவனை சும்மா விட மாட்டேன் என்று சொல்லி வேலைக்காரனை அடிக்க பாய ...அதே சமயத்தில் வீ கோந்து கிட்ட பேச சொல்லி ஐடியா கொடுத்த அல்லக்கையை துரத்துகிறார் முதல்வர்.... )




விரைவில் ....


கொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்ட் 2

( தமிழின குலைன்ஜர் உடன் கொஞ்சாப் முதல்வர் இன் ஸ்பெஷல் உரையாடல்)

Read Part 2

Read Part 3














Tech Shankar  – (26 மே, 2009 அன்று 12:54 PM)  

s u p e r

//அவசர அவசரமாக பாத் ரூம் போயிட்டு வந்து ஆற அமர தன் சகாக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

யூர்கன் க்ருகியர்  – (26 மே, 2009 அன்று 12:59 PM)  

//s u p e r//

வருகைக்கு நன்றி நண்பரே

Tech Shankar  – (26 மே, 2009 அன்று 1:05 PM)  

நம்ம பதிவை Technologies in Dual Language னு பேர் வைச்சுருக்கேன்

என்ன நினைக்கிறீங்க.

ஒரு நல்ல பெயராச் சொல்லுங்க தல


http://techintamil.blogspot.com

பெயரில்லா –   – (26 மே, 2009 அன்று 1:33 PM)  
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
vasu balaji  – (26 மே, 2009 அன்று 6:28 PM)  

சிரிச்சி மாளல சாமி.:))

யூர்கன் க்ருகியர்  – (27 மே, 2009 அன்று 12:29 AM)  

//சிரிச்சி மாளல சாமி.:))//

வருகைக்கு நன்றி நண்பரே

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP