கையில மை ....வாயில பொய் பாலிசி!!

(ஒட்டு போட்ட பிறகு என் விரலை நானே எடுத்துக்கொண்ட போட்டோ )


எலெக்சன் வந்தாலும் வந்தது அவனவன் பணமும் கோட்டரும் வாங்கிகிட்டு அநியாயத்திற்கு விசுவாசமாக இருக்கிறார்கள். வோட்டு போட வேண்டிய இடத்தில் எந்த வித பிரச்சாரமும் கூடாது என்ற கட்டுப்பாடை மீறி ஏதோ திருட்டு டிக்கெட் விக்கிறவன் மாதிரி வோட்டு போட போற மக்களிடையே ஊ.சூரியனுக்கு போடு ....ரட்டை இலைக்கு போடு ....ன்னு கடுப்பெத்தரானுங்க ...

இதை எல்லாம் மீறி வோட்டு போட்டுட்டு வெளில வந்தா ஒரே ரகளை ...போலீஸ் தடியடி ...ஓட்டம் ....ஏதோ எதிர்ரெதிர் கட்சிகாரனுங்க சண்ட போடரானுங்கன்னு பார்த்தா ..அப்படி எல்லாம் இல்லையாம் ..ஒரே கட்சியை சார்ந்த இரு கோஸ்டிகள் சண்ட போடறானுங்க. என்னா மேட்டருன்னு பார்த்தா ஒரு கோஸ்டிக்கு தலைக்கு நூறு ரூபாயும் இன்னொரு கோஸ்டிக்கு தலைக்கு ஐம்பது ரூபாயும் கொடுத்தால் வந்த வினையாம்.ஐம்பதுக்கு நூறுக்கும் தங்களின் உரிமையை விற்கும் இவர்கள் இருக்கும் வரை நல்லவர்கள் அரசியலுக்குள் வர முடியாது.


**********************************************************************************************************************************

ரெண்டு நாளைக்கு முன்னாடி நடந்த ஒரு நிகழ்ச்சி :


ரெண்டு அல்லக்கைகள் கலைஞர் வாழ்கவென்றும் ...கட்சி மாறி ராமதாஸ் ஒழிகவேன்றும் வாங்கின பணத்துக்கும் ஊத்திகொண்ட கொட்டருக்கும் தொண்டை தண்ணி வற்ற கூவிகொண்டிருந்தார்கள்.


கலைஞர் வாழ்கவென்றும்,,ராமதாஸ் ஒழிகவேன்றும்,,மாறி மாறி கூவிகொண்டிருதபோழுது சட்டென்று ராமதாஸ் வாழ்கவென்றும் கலைஞர் ஒழிகவேன்றும் மாற்றி கூவி விட்டான் ஒரு அல்லக்கை ..

அப்புறம் என்ன..கூடி இருந்தவர்களெல்லாம் கொல்லென்று சிரிக்க இவர்கள் இருவரும் அவசரமாக எஸ்கேப் ஆன காட்சி இப்போ நினைத்தாலும் சிரிப்புதான்...

**********************************************************************************************************************************


ஒட்டு போட்டுட்டு நண்பனுடன் வெளியில் வந்து கொண்டிருந்த பொழுது இன்னொரு நபர் "யாருக்கு வோட்டு போட்டாய்?" என்று வினவியதும் ஊ.சூரியனுக்குத்தான் என்றான்.
இன்னொருதன்னிடம் மாம்பழம் என்றான் அதே மாதிரி இன்னொருதனிடம் முரசு என்றான் .


ஏண்டா மாறி மாறி பொய் சொல்கிறாய் என்று கேட்டதிற்கு என் நண்பன் சொன்னான்.. "அந்தந்த கட்சி காரர்களிடம் அந்த அந்த கட்சிக்குத்தான் வோட்டு போட்டேன்" என்று சொல்ல வேண்டும் ."யாரிடம் பகைச்சுக்க கூடாது" என்றான்
இதுக்கு பேருதான் "கையில மை வாயில பொய்" பாலிசி என்றான் .


என்கிட்ட எவனும் கேட்கல ஏன்னா "நான் யாருக்கு போட்டிருக்க மாட்டேன்" என்பது எல்லாருக்கும் நான் சொல்லாமலே தெரியும்


************************************************************************************************

ஒட்டு போட்டுட்டேன் ஆனா என் விரல்ல மை எங்கன்னு கண்டுபிடி பார்க்கலாம் என்றான் நண்பன் ஒருவன்.
நானும் பத்து விரலையும் பார்த்தும் மையை கண்டுபிடிக்க முடியவில்லை ...
கடைசில அவன் சொன்னான் ...ஒட்டு போட்டேன் ஆன பூத்து ல இருந்த ஆளு மை வைக்க மறந்துட்டான்" என்றான்
அட கொடுமையே என்று சொல்லி இன்றைய அரட்டையை முடித்தோம் ...

தேவன் மாயம்  – (14 மே, 2009 அன்று 6:39 AM)  

போதையில் மாத்திக்கூவிட்டான்களா!! எல்லாம் ஜோக்குதான்!

கலையரசன்  – (14 மே, 2009 அன்று 1:12 PM)  

பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!

யூர்கன் க்ருகியர்  – (14 மே, 2009 அன்று 6:00 PM)  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பாலா... அவர்களே

யூர்கன் க்ருகியர்  – (14 மே, 2009 அன்று 6:01 PM)  
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
யூர்கன் க்ருகியர்  – (14 மே, 2009 அன்று 6:02 PM)  

//அது சரி... ;)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எட்வின் அவர்களே ......

யூர்கன் க்ருகியர்  – (14 மே, 2009 அன்று 6:05 PM)  

//போதையில் மாத்திக்கூவிட்டான்களா!! எல்லாம் ஜோக்குதான்!//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி thevanmayam அவர்களே

யூர்கன் க்ருகியர்  – (14 மே, 2009 அன்று 6:11 PM)  

//பதிவு நன்று!//

ஊக்கத்திற்கு மிக்க நன்றி கலையரசன் அவர்களே

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP