கொஞ்சாப் கலவரம் சம்மந்தமாக பிரபலங்களின் அறிக்கைகள் பார்ட்-4


கொஞ்சாப் கலவரம் நிறுத்துவது சம்மந்தமாக பிரபலங்களின் அறிக்கைகள் பின்வருமாறு:-

***********************************************************************************

வீ.கோந்து : -

கலவரத்த நிறுத்துவது சம்மந்தமாக என்கிட்ட ஒரு ஐடியா இருக்குது..ஆனா இப்ப அத சொல்லமாட்டேன். சொன்னா காப்பி அடிச்சிருவாங்க.. நீங்க என்ன ஜெயிக்க வச்சாதான் உங்களுக்கு சொல்லுவேன்.
தெய்வத்தோடு மட்டுமே கூட்டணி வச்சு கொஞ்சாப்புல நாங்களே ஹோல்சேலா நின்னு ஜெயிக்க போறோம்.

ம்க்கும் .....வர்ட்டா !!!

***********************************************************************************குலைன்ஜர் :-

கட்சி வெற்றி பெற்றவுடன் இலவசமா டிவி கொடுத்திருந்தாங்கன்னா மக்கள் எல்லாரும் வீட்டுக்குள்ளேயே மானாட மயிராட போன்ற கருத்து செறிவு மிக்க ப்ரோக்ராம் ஐ எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்திருப்பாங்க .

இந்தளவு தெருவுல இறங்கி போராடி இருக்க மாட்டாங்க.
யாரும் கலங்கிட வேண்டாம்... நாங்க கொடுத்த இலவசங்களால் இந்த மாதிரி டாமில்நாடுல நடக்க வாய்ப்பே இல்லை என்பதை சூனியாவின் முன்னாள் தெரிவித்துக்கொள்கிறேன்.

டிவி வந்தது ; உணர்ச்சி நொந்தது;

***********************************************************************************செயின்லதா : இறையாண்மைக்கு (!?) எதிராக போராடுபவர்கள் தீவிரவாதிகள் ...


வேர் இஸ் தி POTA?

***********************************************************************************மாட்டு மருத்துவர் . திரு ஆமதாஸ் :-

அப்பா நீங்க கேளேன் !.....
அம்மா . நீ கேளேன் !.........
சார் ... நீ கேளேன் !.....
தோழரே .. நீ கேளேன் !.......
டேய் தம்பி நீயாவது கேளேன் !
ஐயோ ..எவனாவது ஒருத்தராவது கேளுங்கலேண்டா....

(திரு ஆமதாஸ் எவ்வளவு மன்றாடியும் யாரும் கேட்க விரும்பாததால் அவரின் கருத்து கடைசி வரைக்கும் என்னவென்றே தெரியாத காரணத்தால் இங்கு வெளியிடப்படவில்லை ).

மன்னிக்கவும்

***********************************************************************************டாமில் பொது ஜனம் :-

பக்கத்துக்கு நாட்டுல லட்சம் பேரு செத்தாலும், பக்கத்துக்கு ஊருல பத்தாயிரம் பேரு செத்தாலும், உச் உச் ன்னு ஓசையிட்டு ,, பத்து இட்லிய உள்ள தள்ளி ,,,சட்டுன்னு டிவி ஆப் பண்ணிட்டு பட்டுன்னு படுக்க போயடுவோமில்ல....

நாங்கள்லாம் பீல் பண்ணிக்கிட்டே புல் மீல் - ஐ ஒரு கட்டு கட்டிட்டு எங்க பெர்சனல் வேலைய மட்டும் டீல் பண்றவங்க ...

ஒரு லட்சம் பேருக்கே ஒன்னும் செய்யாம இருக்கோம் .ஆனா ..ஒருத்தன் போனதுக்கே ஓவரா குதிக்கிறீங்களே ....

நீங்கள்லாம் உங்க முதல்வர் சொலறதயோ சூனியா சொலறதயோ கேட்டு ஒழுங்கா நடந்துக்குங்க..ஓகே ......

யே ,,தம்பி டிவி ஐ ஆன் பண்ணுப்பா மானாட மயிராட பாதி போச்சே !


தாமிழன் என்று சொல்லடா; காலை வாரி கொல்லுடா ....

***********************************************************************************தொடர்புடைய இடுகைகள் படிக்க கீழுள்ள லிங்கை கிளிக்கவும்

Part 1

Part 2

Part 3பாலா...  – (27 மே, 2009 ’அன்று’ முற்பகல் 10:11)  

/ஒரு லட்சம் பேருக்கே ஒன்னும் செய்யாம இருக்கோம் .ஆனா ..ஒருத்தன் போனதுக்கே ஓவரா குதிக்கிறீங்களே ..../

நம்ம வழி தனீ வழில்ல!

பெயரில்லா –   – (27 மே, 2009 ’அன்று’ முற்பகல் 10:55)  

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

thevanmayam  – (27 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 7:23)  

டாமில் பொது ஜனம் :-

பக்கத்துக்கு நாட்டுல லட்சம் பேரு செத்தாலும், பக்கத்துக்கு ஊருல பத்தாயிரம் பேரு செத்தாலும், உச் உச் ன்னு ஓசையிட்டு ,, பத்து இட்லிய உள்ள தள்ளி ,,,சட்டுன்னு டிவி ஆப் பண்ணிட்டு பட்டுன்னு படுக்க போயடுவோமில்ல....

நாங்கள்லாம் பீல் பண்ணிக்கிட்டே புல் மீல் - ஐ ஒரு கட்டு கட்டிட்டு எங்க பெர்சனல் வேலைய மட்டும் டீல் பண்றவங்க ...
///
எவன் செத்தா என்ன! குவாட்டரை உள்ள தள்ளீட்டு சொகமா தூங்கிஎந்திரிப்போம்ல! நாங்க ”மர”த்தமிழனப்பா!

கருத்து கந்தசாமி  – (27 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 8:49)  

மிகவும் வருத்தமாயிருக்கிறது...., மனித உயிரின் மதிப்பு தெரியாத மிருகங்கள்

ஜுர்கேன் க்ருகேர்.....  – (28 மே, 2009 ’அன்று’ முற்பகல் 9:28)  

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே
திரு. பாலா,,திரு.thevanmayam,,திரு.கருத்து கந்தசாமி அவர்களுக்கு !

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP