விண்ணை தாண்டி வருவாயா.. என்னை போண்டியாக்கி போவாயா?

ஏதோ பாட்டெல்லாம் நல்லாருக்கே,, "விண்ணை தாண்டி வருவாயா.. " படத்துக்கு போலாமேன்னு ஆராய்ச்சி பண்ணி பார்த்தா..... ந்கோன்னியா டிக்கெட் 180 ரூபாயாம்.ஒன்னாம் தேதி ரெண்டாம் தேதி ஒட்டி படம் ரிலீஸ் ஆனா பரவாயில்ல.. கையில கொஞ்சம் காசு இருக்கும் படம் பார்க்கும் ஆசையும் வரும்... இருபது ஆறு, இருபத்தேழு மாச கடைசில ரிலீஸ் ஏன் பண்றாங்கன்னுதான் தெரியல..
மாச கடைசி வேற,,, பாக்கெட்ல கைய விட்டா ஐநூறு ரூபா தாள் வரும் நாட்கள் போய்,,நூறு ரூபாயா குறைந்து இப்போ அஞ்சு ரூபாய் காயின் வர அளவிற்கு பொருளாதாரம் நிலை குலைந்து போயிருக்கும் சூழ்நிலையில் (அக்கௌன்ட்ல முன்னூறு ரூபா வச்சிக்கிட்டு பெரு மூச்சு விட்டுகொண்டிருக்கிறேன்)
வடிவேல் பாணியில் முகத்திற்கு நேராய் விரலை நீட்டி "உனக்கு இதெல்லாம் தேவையா?" என்று எனக்கு நானே கேட்டு கொண்டதன் விளைவு ப்ரோக்ராம் கான்செல்.

மூணு மாசம் கழித்து சொந்த ஊருக்கு போனா பத்து ரூபாயில் பார்க்க வேண்டிய படம்.இதுக்கு எதுக்கு இவ்வளவு பணம் தரணும்?

முக்கியமான காரணம் "விரல் சொத்தை சொம்பு" படத்துக்கு எல்லாம் இவ்வளவு செலவு பண்றதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் !


குறிப்பு : பதிவர்கள் எழுதும் விமர்சனத்தை படித்தாலே போதும்.. தேவையில்லாம வாலண்டியரா போய் ஏன் வெடிகுண்டு மேல உட்காரனும் ?

என்ன நான் சொல்றது ???
.

Read more...

பூனா - ஜெர்மன் பேக்கரி கு.மு - கு.பி

பூனாவுல குண்டு வெடித்தது. பதினைந்து பேர் அதனால் இறந்து போயினர் என்று நாம் அனைவரும் டிவியிலோ, செய்தித்தாள்களிலோ, வானொலியிலோ அல்லது எதாவது ஒரு ஊடகம் வழியிலாகவோ நாம் அனைவரும் கேள்வி பட்டிருப்போம்..

குண்டு வெடித்ததற்கு பின் அந்த இடம் எப்படி இருக்குன்னு எல்லா டிவி-காரவுக சைடு வியு, பிரண்டு வியு, டாப் வியு அப்புறம் இருக்கும் அணைத்து வியுகளிலும் காண்பிசிருப்பாங்க.
(அப்படி பார்க்காதவங்க இந்த படங்கள பார்த்துகொள்ளுங்கள் )குண்டு வெடித்ததற்கு முன் எப்படி இருக்கும்னு நீங்கல்லாம் பார்பதற்காக இங்க சில புகைப்படங்களை இணைத்துள்ளேன்.( நண்பர் ஒருவர் மெயில் அனுப்பியது.. நீங்களும் பாருங்க )படங்களை கிளிக்கி பெரிதாய் பார்க்கவும் !!


என் கூட வேலை பார்க்கும் ஒருவருடன் அடிக்கடி இங்க வருவேன்
ஏதோ பிரவுன் கலர்ல பண்ணு ஒண்ணு வாங்கி தருவான் பாருங்க எப்பா ... சின்ன வயசுல குடிக்கும் கசாயம் மாதிரியே இருக்கும்.
நம்மூரு நாய் கூட அத மோந்து பார்த்துட்டு ஓடி போய்டும்..

ஒரு வாரத்துக்கு முன்னாடி அவரிடம் போனில் இதை பற்றி பேசினேன்.
அடிக்கடி நாம் போகும் அந்த இடத்துல எவனோ ஒரு பன்னாட குண்டு வச்சிட்டான் அப்படின்னேன்
அதுக்கு அவர் "அது உண்மையா இருக்க முடியாது " என்று நம்ப முடியாமல் சொன்னாரு .

" நீங்க பெரிய அதிஷ்டசாலி தான் கிரேட் எஸ்கேப் ஆகிடீங்க... என்று சொன்னேன்
வழக்கம் போல நான் தமாசா எத சொன்னாலும் சிரித்து வைக்கும் அவர் அன்று என்னவோ அமைதியாகவே போனை வைத்து விட்டார்..


நோட் : கு.மு ன்னா குண்டு வெடிப்புக்கு முன்
கு.பி ன்னா குண்டு வெடிப்புக்கு பின்

Read more...

நைஜீரியா எண்ணெய் கிணறும், ஆப்ரிக்காவின் வைரசுரங்கமும் ! - இந்தியர்கள் ஏமாறும் கதைரெண்டு நாளா என்கூட வொர்க் பண்ணுற ஒருத்தன் என்னிடம் தனியா பேசணும்னு ட்ரை பண்ணிட்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் தலைய சொரிஞ்சிகிட்டே ரொம்ப சீரியஸ்ஸா "உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்" அப்படின்னான்.

அவன் வரும்போதெல்லாம் ஆபீஸ் வேலையில ரொம்ப ஆழ்ந்து இருப்பதினால் அப்புறம் அப்புறம்-ன்னு தள்ளி போட்டுட்டு இன்றுதான் கொஞ்சம் ப்ரீ டைம் கிடைத்தது.

உடனே கூப்பிட்டு "என்ன தம்பி விஷயம்?" அப்படின்னேன்.

ரொம்ப பவ்யமாய் "ரெண்டு நாளா நிறைய போன் கால்ஸ் வருது.. சுமார் எட்டு ஆயிரம் அமெரிக்க டாலர் கட்டினால் கோடி கணக்குல பணம் உங்க அக்கௌன்ட்ல ஆகிடும்....அப்படின்ன்றாங்க" என்றான்.


உடனே மண்டையில அலாரம் அடித்தது.. பையன் பேராசை படறான் ... இவனை திருத்தியே ஆகணும்னு முடிவு பண்ணேன் ..

உன் மொபைல் நம்பர் எப்படி அவனுக்கு தெரியும்னு கேட்டேன் ...
தெரியலன்னு சொன்னான்.

கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு எவனாவது "ஊரு, பேரு, போன் நம்பர் கேட்டு எதையாவது ஆசை காட்டி மெயில் வந்ததா" ??
லேசா மண்டைய ஆடினான்.

(நைஜீரியாவில எண்ணெய் கிணறு லாபம், ஆப்ரிக்காவில வைர கிணறு லாபம், பிரிட்டன்ல வாரிசே இல்லாத ஒருத்தன் ஏரோபிளான் விபத்துல செத்ததால அவன்கிட்ட ஆட்டைய போட்ட பணம்னு ஏகத்துக்கும் கதை விட்டு நிறைய ஸ்பாம் மெயில் வரும்.. அந்த மாதிரி எதுக்கோ இவன் சீரியஸ்ஸாய் பதில் போட்டிருக்கான்)

சார் இப்போ என்ன பண்றதுன்னு கேட்டான் ..

இருடா நான் பேசுறேன்னிட்டு அவங்க பண்ண நம்பர்லேயே ரி டயல் பண்ணா ஒருத்தன் எடுத்தான்..

க்காளி,, அவன் என்ன பாஷை பேசுரான்னே தெரியல ....முக்கி மொனகிகிட்டு ஏதோ சொன்னான்.
கொஞ்ச விவரமா சொல்லுங்க அப்படின்னு பேசுனா உடனே கட் பண்ணிடுறான்.
கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் போன் பண்றான். ஏதோ புரியாத மாதிரி பேசறது ....
இப்படியே நாலஞ்சு முறை சுமார் அரை மணி நேரம் கேப்ல பேசி
கொஞ்சமா இங்கிலீஷ்ல
புரியறமாதிரி "நீங்க ப்ரோசசிங் பீஸ் கட்டுங்க உங்களுக்கு நாங்க கோடி கணக்குல பணம் போடுறோம்" அப்படின்னு ஆசை காட்டுவதுதான்..

இவனுங்க ஏன் இப்படி ஆரம்பத்துல புரிந்தும் புரியாத மாதிரி பேசி கொல்றாங்கன்னு யோசிச்சா சிம்பிள் மேட்டர் ..

உண்மையிலேயே பேராசையால் ஏமாறுபவனாய் இருப்பவன் எத்தன முறை போன் பண்ணாலும் பேசுவான்.. விவரமானவன் உடனே கட் பண்ணிட்டு வேற வேலைய பாக்க போய்டுவான்..

ஆக மொத்தம் எத்தன முறை போன் பண்ணாலும் இளிச்சிக்கிட்டே தம்பி பேசுறதால "பட்சி சிக்கிகிச்சிடா டோய்" ன்னு பையன கட்டம் கட்டிட்டாங்க.

இதுல வெவ்வேற நம்பர் ல இருந்தும் கூப்பிடுறாங்க. பொண்ணு வேற பேசி பையன என்கரேஜ் பண்றா .. ஆக ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் கும்பலாக ஒரு கூட்டமே குழி பறிக்கிறாங்கன்னு தெரிந்துவிட்டது


இப்படி விசாரணை மூலம் மேட்டர் வாங்கிட்டு இருக்கும்போதே மறுபடியும் போன் கால்.
இந்த முறை தெளிவா பேசுனான்.. எட்டு ஆயிரம் அமெரிக்க டாலர் கட்டலன்னாலும் பரவால ...ஏதோ 32700 ரூபாய் எங்க அக்கௌன்ட்ல போடுட்டீங்கன்னா ஒரே நாள்ல 112700000 பதினோரு கோடியே இருபது ஏழு லட்ச ரூபாய் இன்னைக்கே உங்க அக்கௌன்ட்ல போட்டுவிடுகிறோம் அப்படின்னு தெள்ள தெளிவா இங்கிலீஷ்ல பேசுறான்..

அதுவும் எப்படி ?? 32700 ரூபாய் கட்டுனா தான் தருவானாம்.
இந்த விசயத்த யார்கிட்டயும் சொல்லகூடாதுன்னு சொல்றான்

இங்கிலீஷ்ல எனக்கு தெரிஞ்ச எல்லா கெட்ட வார்த்தையையும் யூஸ் பண்ணி வைடா போனை அப்படின்னுட்டேன்...


************************************************************************************* தலையிலேயே நாலு தட்டு தட்டி,, ரெண்டு வார்த்தை கேவலமா திட்டி இப்படி எல்லாம் பிராடு பசங்களை இனிமே நம்பாத அப்படின்னு..சொல்லிகிட்டே
"அஞ்சு காசா இருந்தாலும் அது நீ வேல செஞ்ச காசா இருக்கணும்னு" பொன்னெழுத்தால பொறிக்க பட வேண்டிய அறிய அறிவுரைய சொல்லி அனுப்பி வச்சேன்.
*************************************************************************************

இதிலிருந்து என்ன தெரியிதுன்னா ...

இந்த மாதிரி ஏமாத்துறவங்க இன்னும் இருக்காங்க ...
(அஞ்சு பத்து வருசத்துக்கு முன்னாடிதான் இப்படி ஏமாத்தறத கேட்டிருக்கேன்..இப்பவும் அதே மெத்தட் யூஸ் பன்றாங்கன்றத நினைச்சா இன்னும் ஆச்சரியமா இருக்கு. ஆக மொத்தம் சுத்தி சுத்தி ஏமாத்திக்கிட்டேதான் இருக்காங்க)


*************************************************************************************

இப்ப என்ன பண்ணலாம் ?
கம்முன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிடலாமா ??
இந்த மேட்டரை அப்படியே விட்டுடலாமா ?


*************************************************************************************
அதுவரைக்கும் இந்த மேட்டரையும் தெரிஞ்சிக்குங்க

அந்த அயோக்கிய ராஸ்கல் கீழ்க்கண்ட போன் நம்பர்களில் இருந்துதான் போன் பண்ணான்.

022 - 32206354

9619773854

9990674344


பணம் போட சொன்ன அக்கௌன்ட் பெயர் மற்றும் நம்பர்

ஸ்ரீ ஷ்யாம்
என்டர் பிரைசஸ்


065705500181

வங்கி பெயர் மற்றும் கிளை : ICICI - SIKAR

பான் நம்பர்: BOXPS0317E


Read more...

கிளிப்பேச்சு கேட்க வா .....


1.மக்கள் பீதி அடைய வேண்டாம்.நிலைமை கட்டுக்குள் உள்ளது.

2.ஏற்கனவே உளவு துறை இதைப்பற்றிய தகவல்களை மாநில அரசுக்கு தெரியபடுத்தியது.

3.நம் உளவுத்துறை வலுவான நிலையில் உள்ளது.

4.விசாரணை முழு வீச்சில் நடை பெற்று கொண்டிருக்கிறது

5.நாட்டின் எல்லா பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தி உள்ளோம்

6.பாகிஸ்தானுக்கு இதுவே கடைசி எச்சரிக்கை. இனி மேலும் இந்த மாதிரி தீவிரவாத செயல்களுக்கு துணை போகுமாயின் அமைதி பேச்சு வார்த்தை ரத்து செய்து தக்க பதிலடி கொடுப்போம்

7.இறந்தவர் களின் அடையாளம் காணும் பணி நடை பெற்று கொண்டிருக்கிறது

8.இறந்தவர் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும்9. நாளை பிரதமர் தலைமையில் அவசர குழு கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது10. இது சம்மந்தமாக பத்து பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகிறோம்

அப்பாவி மக்கள் சாகும் பொழுதெல்லாம் இதே வசனங்களை கிளிப்பிள்ளை மாதிரி சொல்றதுக்குதான் உங்களை எல்லாம் வோட்டு போட்டு தேர்ந்தேடுத்தாங்களா .... அல்லக்கைகளா ???

Read more...

இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம்...

ந்தியா இந்தியர்களுக்கே சொந்தம்!
உதிர்த்தவர் :
டகுல் காண்டி!

************************************************************************************

தேங்க்ஸ் காண்டி ..
ஆனா கண்டிப்பா இத்தாலிகாரர்களுக்கு சொந்தமில்லை

வழி மொழிந்தவர் :
-மீ தி செகண்டு ( ஏற்கனவே பாலு டக்கர் சொல்லிட்டாராம்ல !!.. )


************************************************************************************
பிஸ்கி : நாம் நம் தேச தந்தை காந்தியடிகள் சொற்படி நடக்க வேண்டும் - 3 ஆம் பாட வரலாறு புத்தகத்தில் இருந்து.

அதேதான் நானும் சொல்றேன் !! தேசப்பிதா காந்தி "வெள்ளையனே வெளியேறு " இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வெற்றி கண்டார். நாமும் அதே மாதிரி குறைந்த பட்சம் "வெள்ளைகாரியே வெளியேறு" இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்..


(ஐடியா செல்போன் சர்வீஸ் tune இல் பாடவும் ! )
ஓஓஹோ ஓஹோ ஹோ ஓ ஹோ

வாட் எ ஐடியா மோகன் தாஸ் ஜி ???

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP