பூனா - ஜெர்மன் பேக்கரி கு.மு - கு.பி

பூனாவுல குண்டு வெடித்தது. பதினைந்து பேர் அதனால் இறந்து போயினர் என்று நாம் அனைவரும் டிவியிலோ, செய்தித்தாள்களிலோ, வானொலியிலோ அல்லது எதாவது ஒரு ஊடகம் வழியிலாகவோ நாம் அனைவரும் கேள்வி பட்டிருப்போம்..

குண்டு வெடித்ததற்கு பின் அந்த இடம் எப்படி இருக்குன்னு எல்லா டிவி-காரவுக சைடு வியு, பிரண்டு வியு, டாப் வியு அப்புறம் இருக்கும் அணைத்து வியுகளிலும் காண்பிசிருப்பாங்க.
(அப்படி பார்க்காதவங்க இந்த படங்கள பார்த்துகொள்ளுங்கள் )குண்டு வெடித்ததற்கு முன் எப்படி இருக்கும்னு நீங்கல்லாம் பார்பதற்காக இங்க சில புகைப்படங்களை இணைத்துள்ளேன்.( நண்பர் ஒருவர் மெயில் அனுப்பியது.. நீங்களும் பாருங்க )படங்களை கிளிக்கி பெரிதாய் பார்க்கவும் !!


என் கூட வேலை பார்க்கும் ஒருவருடன் அடிக்கடி இங்க வருவேன்
ஏதோ பிரவுன் கலர்ல பண்ணு ஒண்ணு வாங்கி தருவான் பாருங்க எப்பா ... சின்ன வயசுல குடிக்கும் கசாயம் மாதிரியே இருக்கும்.
நம்மூரு நாய் கூட அத மோந்து பார்த்துட்டு ஓடி போய்டும்..

ஒரு வாரத்துக்கு முன்னாடி அவரிடம் போனில் இதை பற்றி பேசினேன்.
அடிக்கடி நாம் போகும் அந்த இடத்துல எவனோ ஒரு பன்னாட குண்டு வச்சிட்டான் அப்படின்னேன்
அதுக்கு அவர் "அது உண்மையா இருக்க முடியாது " என்று நம்ப முடியாமல் சொன்னாரு .

" நீங்க பெரிய அதிஷ்டசாலி தான் கிரேட் எஸ்கேப் ஆகிடீங்க... என்று சொன்னேன்
வழக்கம் போல நான் தமாசா எத சொன்னாலும் சிரித்து வைக்கும் அவர் அன்று என்னவோ அமைதியாகவே போனை வைத்து விட்டார்..


நோட் : கு.மு ன்னா குண்டு வெடிப்புக்கு முன்
கு.பி ன்னா குண்டு வெடிப்புக்கு பின்

யூர்கன் க்ருகியர்  – (23 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:35)  

// வானம்பாடிகள் கூறியது...
:):(

//

வருகைக்கும் உணர்வுகளுக்கும் நன்றி சார் !

கக்கு - மாணிக்கம்  – (23 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:44)  

மாப்ஸ், நான் ஏதோ பக்கா பில்டிங் ல் தான் இருக்கும் என நினைத்தேன், பாவம் நம்ம ஊர் டீ கடை மாதிரிதான் இருக்கு.ஆஸ்ரமம் மாதிரி. எந்த நாய்களுக்கோ ஏதோ அறிபெடுக்க அநியாயமாக 15 உயிர்கள் பலி.சிதம்பரம் முகத்தில் கிலி!!

யூர்கன் க்ருகியர்  – (23 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:12)  

//15 உயிர்கள் பலி.சிதம்பரம் முகத்தில் கிலி!!
//

நம்ம மனசுல வலி !!

பட்டாபட்டி..  – (23 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:35)  

உடுங்க அப்பு..
அதுதான் சிங் தீவிரவாதத்தை ஒழிக்க காங்கிரஸ் பாடுபடுகிறது
என சொல்லிட்டாரே..
அப்புறம் என்ன கவலை நமக்கு..?

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP