நைஜீரியா எண்ணெய் கிணறும், ஆப்ரிக்காவின் வைரசுரங்கமும் ! - இந்தியர்கள் ஏமாறும் கதை







ரெண்டு நாளா என்கூட வொர்க் பண்ணுற ஒருத்தன் என்னிடம் தனியா பேசணும்னு ட்ரை பண்ணிட்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் தலைய சொரிஞ்சிகிட்டே ரொம்ப சீரியஸ்ஸா "உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்" அப்படின்னான்.

அவன் வரும்போதெல்லாம் ஆபீஸ் வேலையில ரொம்ப ஆழ்ந்து இருப்பதினால் அப்புறம் அப்புறம்-ன்னு தள்ளி போட்டுட்டு இன்றுதான் கொஞ்சம் ப்ரீ டைம் கிடைத்தது.

உடனே கூப்பிட்டு "என்ன தம்பி விஷயம்?" அப்படின்னேன்.

ரொம்ப பவ்யமாய் "ரெண்டு நாளா நிறைய போன் கால்ஸ் வருது.. சுமார் எட்டு ஆயிரம் அமெரிக்க டாலர் கட்டினால் கோடி கணக்குல பணம் உங்க அக்கௌன்ட்ல ஆகிடும்....அப்படின்ன்றாங்க" என்றான்.


உடனே மண்டையில அலாரம் அடித்தது.. பையன் பேராசை படறான் ... இவனை திருத்தியே ஆகணும்னு முடிவு பண்ணேன் ..

உன் மொபைல் நம்பர் எப்படி அவனுக்கு தெரியும்னு கேட்டேன் ...
தெரியலன்னு சொன்னான்.

கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு எவனாவது "ஊரு, பேரு, போன் நம்பர் கேட்டு எதையாவது ஆசை காட்டி மெயில் வந்ததா" ??
லேசா மண்டைய ஆடினான்.

(நைஜீரியாவில எண்ணெய் கிணறு லாபம், ஆப்ரிக்காவில வைர கிணறு லாபம், பிரிட்டன்ல வாரிசே இல்லாத ஒருத்தன் ஏரோபிளான் விபத்துல செத்ததால அவன்கிட்ட ஆட்டைய போட்ட பணம்னு ஏகத்துக்கும் கதை விட்டு நிறைய ஸ்பாம் மெயில் வரும்.. அந்த மாதிரி எதுக்கோ இவன் சீரியஸ்ஸாய் பதில் போட்டிருக்கான்)

சார் இப்போ என்ன பண்றதுன்னு கேட்டான் ..

இருடா நான் பேசுறேன்னிட்டு அவங்க பண்ண நம்பர்லேயே ரி டயல் பண்ணா ஒருத்தன் எடுத்தான்..

க்காளி,, அவன் என்ன பாஷை பேசுரான்னே தெரியல ....முக்கி மொனகிகிட்டு ஏதோ சொன்னான்.
கொஞ்ச விவரமா சொல்லுங்க அப்படின்னு பேசுனா உடனே கட் பண்ணிடுறான்.
கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் போன் பண்றான். ஏதோ புரியாத மாதிரி பேசறது ....
இப்படியே நாலஞ்சு முறை சுமார் அரை மணி நேரம் கேப்ல பேசி
கொஞ்சமா இங்கிலீஷ்ல
புரியறமாதிரி "நீங்க ப்ரோசசிங் பீஸ் கட்டுங்க உங்களுக்கு நாங்க கோடி கணக்குல பணம் போடுறோம்" அப்படின்னு ஆசை காட்டுவதுதான்..

இவனுங்க ஏன் இப்படி ஆரம்பத்துல புரிந்தும் புரியாத மாதிரி பேசி கொல்றாங்கன்னு யோசிச்சா சிம்பிள் மேட்டர் ..

உண்மையிலேயே பேராசையால் ஏமாறுபவனாய் இருப்பவன் எத்தன முறை போன் பண்ணாலும் பேசுவான்.. விவரமானவன் உடனே கட் பண்ணிட்டு வேற வேலைய பாக்க போய்டுவான்..

ஆக மொத்தம் எத்தன முறை போன் பண்ணாலும் இளிச்சிக்கிட்டே தம்பி பேசுறதால "பட்சி சிக்கிகிச்சிடா டோய்" ன்னு பையன கட்டம் கட்டிட்டாங்க.

இதுல வெவ்வேற நம்பர் ல இருந்தும் கூப்பிடுறாங்க. பொண்ணு வேற பேசி பையன என்கரேஜ் பண்றா .. ஆக ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் கும்பலாக ஒரு கூட்டமே குழி பறிக்கிறாங்கன்னு தெரிந்துவிட்டது


இப்படி விசாரணை மூலம் மேட்டர் வாங்கிட்டு இருக்கும்போதே மறுபடியும் போன் கால்.
இந்த முறை தெளிவா பேசுனான்.. எட்டு ஆயிரம் அமெரிக்க டாலர் கட்டலன்னாலும் பரவால ...ஏதோ 32700 ரூபாய் எங்க அக்கௌன்ட்ல போடுட்டீங்கன்னா ஒரே நாள்ல 112700000 பதினோரு கோடியே இருபது ஏழு லட்ச ரூபாய் இன்னைக்கே உங்க அக்கௌன்ட்ல போட்டுவிடுகிறோம் அப்படின்னு தெள்ள தெளிவா இங்கிலீஷ்ல பேசுறான்..

அதுவும் எப்படி ?? 32700 ரூபாய் கட்டுனா தான் தருவானாம்.
இந்த விசயத்த யார்கிட்டயும் சொல்லகூடாதுன்னு சொல்றான்

இங்கிலீஷ்ல எனக்கு தெரிஞ்ச எல்லா கெட்ட வார்த்தையையும் யூஸ் பண்ணி வைடா போனை அப்படின்னுட்டேன்...


************************************************************************************* தலையிலேயே நாலு தட்டு தட்டி,, ரெண்டு வார்த்தை கேவலமா திட்டி இப்படி எல்லாம் பிராடு பசங்களை இனிமே நம்பாத அப்படின்னு..சொல்லிகிட்டே
"அஞ்சு காசா இருந்தாலும் அது நீ வேல செஞ்ச காசா இருக்கணும்னு" பொன்னெழுத்தால பொறிக்க பட வேண்டிய அறிய அறிவுரைய சொல்லி அனுப்பி வச்சேன்.
*************************************************************************************

இதிலிருந்து என்ன தெரியிதுன்னா ...

இந்த மாதிரி ஏமாத்துறவங்க இன்னும் இருக்காங்க ...
(அஞ்சு பத்து வருசத்துக்கு முன்னாடிதான் இப்படி ஏமாத்தறத கேட்டிருக்கேன்..இப்பவும் அதே மெத்தட் யூஸ் பன்றாங்கன்றத நினைச்சா இன்னும் ஆச்சரியமா இருக்கு. ஆக மொத்தம் சுத்தி சுத்தி ஏமாத்திக்கிட்டேதான் இருக்காங்க)


*************************************************************************************

இப்ப என்ன பண்ணலாம் ?
கம்முன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிடலாமா ??
இந்த மேட்டரை அப்படியே விட்டுடலாமா ?


*************************************************************************************
அதுவரைக்கும் இந்த மேட்டரையும் தெரிஞ்சிக்குங்க

அந்த அயோக்கிய ராஸ்கல் கீழ்க்கண்ட போன் நம்பர்களில் இருந்துதான் போன் பண்ணான்.

022 - 32206354

9619773854

9990674344


பணம் போட சொன்ன அக்கௌன்ட் பெயர் மற்றும் நம்பர்

ஸ்ரீ ஷ்யாம்
என்டர் பிரைசஸ்


065705500181

வங்கி பெயர் மற்றும் கிளை : ICICI - SIKAR

பான் நம்பர்: BOXPS0317E


பொன் மாலை பொழுது  – (17 பிப்ரவரி, 2010 அன்று PM 7:11)  

மாப்ஸ், உணரவேண்டிய அறிவுரை. நான் எத்தனை முறை எனக்கு வந்த இதே போன்ற "டுபாகூர் " மெயில் களை உனக்கு forward பண்ணி, அதற்க்கு நீ அவர்களை திட்டி மெயில் அனுப்பி.........ஹும் ..... இவ்வளவு ஏன், நம்ம ஊரில் இன்னமும் எத்தனை பேர்கள் வீட்டு மனைகள் , அதிக வட்டியில் சேமிப்பு , குலுக்கலில் ப்ளாட்ஸ், நகை சீட்டு, பாத்திர சீட்டு என்று கையில் இருப்பதை கொடுத்து விட்டு பின்னர் போலிஸ் ஸ்டேஷன் தர்ணா ,மறியல் என்று ஆடுகின்றனர்?
அந்த பையனுக்கு நேரத்தில் உணரவைத்தாய்.keep it up dude.

யூர்கன் க்ருகியர்  – (17 பிப்ரவரி, 2010 அன்று PM 7:51)  

// கக்கு - மாணிக்கம்//

உங்கள் கருத்து முற்றும் உண்மை.

அந்த திருட்டு கம்மனாட்டிகளை என்ன பண்ணலாம்னு சொல்லவே இல்லையே ?

vasu balaji  – (18 பிப்ரவரி, 2010 அன்று AM 12:37)  

கண்டிப்பா கம்ப்ளெயிண்ட் பண்ணலாம்.கம்ப்ளெயிண்ட் எடுப்பாங்கன்னா:)

டவுசர் பாண்டி  – (18 பிப்ரவரி, 2010 அன்று AM 11:14)  

//ஆபீஸ் வேலையில ரொம்ப ஆழ்ந்து இருப்பதினால் அப்புறம் அப்புறம்-ன்னு தள்ளி போட்டுட்டு இன்றுதான் கொஞ்சம் ப்ரீ டைம் கிடைத்தது.//

??????????????????????????????????


//கம்முன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிடலாமா //

ஹா ஹா ஹா ஹா ,......................................................................................................................ஹா ஹா ஹா ஹா.

யூர்கன் க்ருகியர்  – (18 பிப்ரவரி, 2010 அன்று PM 3:57)  

//வானம்பாடிகள் said...
கண்டிப்பா கம்ப்ளெயிண்ட் பண்ணலாம்.கம்ப்ளெயிண்ட் எடுப்பாங்கன்னா:)
//

வாங்க சார்
கம்ப்ளைன்ட் பண்ணும்பொழுது போலீஸ்காரன் கேஸ் எடுக்கலைனா உடனே ஒரு பதிவு போடவேண்டியதுதான்

யூர்கன் க்ருகியர்  – (18 பிப்ரவரி, 2010 அன்று PM 3:59)  

////ஆபீஸ் வேலையில ரொம்ப ஆழ்ந்து இருப்பதினால் அப்புறம் அப்புறம்-ன்னு தள்ளி போட்டுட்டு இன்றுதான் கொஞ்சம் ப்ரீ டைம் கிடைத்தது.//

??????????????????????????????????//

நான் பிஸியா இருக்கேன் சொன்னா நம்பனும்

யூர்கன் க்ருகியர்  – (18 பிப்ரவரி, 2010 அன்று PM 3:59)  

////கம்முன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிடலாமா //

ஹா ஹா ஹா ஹா ,......................................................................................................................ஹா ஹா ஹா ஹா.//

என் பொழப்பே சிரிப்பா போச்சு :)

பொன் மாலை பொழுது  – (22 பிப்ரவரி, 2010 அன்று PM 8:05)  

ஹாய் ...மாப்ஸ், எப்போ உன் ப்ளாக் template மாத்தன? சூப்பர் தூள்!!

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP