விண்ணை தாண்டி வருவாயா.. என்னை போண்டியாக்கி போவாயா?
ஏதோ பாட்டெல்லாம் நல்லாருக்கே,, "விண்ணை தாண்டி வருவாயா.. " படத்துக்கு போலாமேன்னு ஆராய்ச்சி பண்ணி பார்த்தா..... ந்கோன்னியா டிக்கெட் 180 ரூபாயாம்.
ஒன்னாம் தேதி ரெண்டாம் தேதி ஒட்டி படம் ரிலீஸ் ஆனா பரவாயில்ல.. கையில கொஞ்சம் காசு இருக்கும் படம் பார்க்கும் ஆசையும் வரும்... இருபது ஆறு, இருபத்தேழு மாச கடைசில ரிலீஸ் ஏன் பண்றாங்கன்னுதான் தெரியல..
மாச கடைசி வேற,,, பாக்கெட்ல கைய விட்டா ஐநூறு ரூபா தாள் வரும் நாட்கள் போய்,,நூறு ரூபாயா குறைந்து இப்போ அஞ்சு ரூபாய் காயின் வர அளவிற்கு பொருளாதாரம் நிலை குலைந்து போயிருக்கும் சூழ்நிலையில் (அக்கௌன்ட்ல முன்னூறு ரூபா வச்சிக்கிட்டு பெரு மூச்சு விட்டுகொண்டிருக்கிறேன்)
வடிவேல் பாணியில் முகத்திற்கு நேராய் விரலை நீட்டி "உனக்கு இதெல்லாம் தேவையா?" என்று எனக்கு நானே கேட்டு கொண்டதன் விளைவு ப்ரோக்ராம் கான்செல்.
மூணு மாசம் கழித்து சொந்த ஊருக்கு போனா பத்து ரூபாயில் பார்க்க வேண்டிய படம்.இதுக்கு எதுக்கு இவ்வளவு பணம் தரணும்?
முக்கியமான காரணம் "விரல் சொத்தை சொம்பு" படத்துக்கு எல்லாம் இவ்வளவு செலவு பண்றதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் !
குறிப்பு : பதிவர்கள் எழுதும் விமர்சனத்தை படித்தாலே போதும்.. தேவையில்லாம வாலண்டியரா போய் ஏன் வெடிகுண்டு மேல உட்காரனும் ?
என்ன நான் சொல்றது ???
.
பத்து ரூபா செலவு பண்ணி , படம் பார்க்குற அளவுக்கு வந்தாச்சா...
பொறுப்பிள்ளாம இருக்கீங்க சார்.....
சீக்கிரம் நெட்-ல வரும் சார்.. எதுக்கு காசை கரியாக்கிறீங்க..ஹி..ஹி
//பத்து ரூபா செலவு பண்ணி , படம் பார்க்குற அளவுக்கு வந்தாச்சா...//
தலைவரே,, என் போன்ற கடை நிலை தொண்டன் மேல இவ்வளவு கரிசனமா?
என்னே உங்க அன்பு ..
கருத்துக்கு ரொம்ப நன்றி தலைவரே
மாச கடேசில ரீலீசான படம் போண்டின்னு பாவம் விநியோகஸ்தர்களுக்கு தெரியல...
//மாச கடேசில ரீலீசான படம் போண்டின்னு பாவம் விநியோகஸ்தர்களுக்கு தெரியல...//
ஹ ஹா.. ஆமாங்க சார் ! :)
//கடை நிலை தொண்டன் மேல இவ்வளவு கரிசனமா?//
டமாசு பண்ணாதீங்க.. அப்புறம் பீர் குடிக்க போயிடுவேன்..
இப்புடி வேற நடக்குதா:))
மாப்ஸ், நான் சென்னை வந்தால் கூட படத்திற்கு போகும் வழக்கம் இல்லை. கடைசியாக நான் சென்னையில், தியேட்டரில் சென்று பார்த்த படம்.............................................முதலவன்!
அதன்பிறகு இப்போதுதான் சமீபத்தில் தமிழ் படம் பார்த்தேன். அதுவும் இங்கு நண்பர்களின் விமர்சனங்களை படித்த பின்னரே. என்னைபொருத்தவரை சினிமாவிற்கு காசை அழிப்பது மகா கிரிமினல் தனம். Try to learn how to neglect cinemas.
உங்க கருத்தை ஆமோதிக்கிறேன்.
திரைப்படங்கள்,தொலைக்காட்சி தொடர்நாடகங்கள்,கிரிக்கெட் பார்ப்பது இவற்றினால் நாம் பணத்தையும் நேரத்தையும் இழக்கிறோம்.ஆனால் சிலர் கோடிகளில் புரளுகிறார்கள்.மக்களிடம் விழிப்புணர்வு தேவை.
அட நீங்க ஊருக்கு சென்று படம் எல்லாம்கூட பார்ப்பீங்களா...நான் கடைசியாக தியேட்டரில் சென்று பார்த்த படம் அலைபாயுதே..வருடம் 2000 அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி...கடைசியாக பார்த்த தொடர்சிரீயல் சித்தி...// THANGA MANI கூறியது...
திரைப்படங்கள்,தொலைக்காட்சி தொடர்நாடகங்கள்,கிரிக்கெட் பார்ப்பது இவற்றினால் நாம் பணத்தையும் நேரத்தையும் இழக்கிறோம்.ஆனால் சிலர் கோடிகளில் புரளுகிறார்கள்.மக்களிடம் விழிப்புணர்வு தேவை.//
எங்கள் இருவருக்கும் விழிப்புணர்வு வந்துவிட்டது...அப்ப உங்களுக்கு...?வாழ்க வளமுடன், வேலன்.
//டமாசு பண்ணாதீங்க.. அப்புறம் பீர் குடிக்க போயிடுவேன்..//
:)
//வானம்பாடிகள் கூறியது...
இப்புடி வேற நடக்குதா:))
//
ஆமாங்க சார் .. இப்படி கூட நடக்குது சார் :)
//சினிமாவிற்கு காசை அழிப்பது மகா கிரிமினல் தனம். Try to learn how to neglect cinemas.
//
மச்சி,,, உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி !!
//தமிழ் உதயம் கூறியது...
உங்க கருத்தை ஆமோதிக்கிறேன்.
//
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார் !
//THANGA MANI கூறியது...
திரைப்படங்கள்,தொலைக்காட்சி தொடர்நாடகங்கள்,கிரிக்கெட் பார்ப்பது இவற்றினால் நாம் பணத்தையும் நேரத்தையும் இழக்கிறோம்.ஆனால் சிலர் கோடிகளில் புரளுகிறார்கள்.மக்களிடம் விழிப்புணர்வு தேவை.
//
நீங்க குறிப்பிட்டுள்ள செய்தி யோசிக்க வைக்கிறது .
நன்றி நண்பரே
//எங்கள் இருவருக்கும் விழிப்புணர்வு வந்துவிட்டது...அப்ப உங்களுக்கு...?வாழ்க வளமுடன், வேலன்.
//
வேலன் சார் ... விழிப்புணர்வு கூடிய விரைவில் வந்துவிடும் என நினைக்கிறேன் :)
கருத்துக்கு நன்றி சார் !!!
நீ சொன்னாலே நம்பிடுவோம் தல அதுக்காக BANK STATEMENT எல்லாம் காட்டணுமா, படிக்கறதுக்கு ரொம்ப சூப்பர இருந்தது. உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
// சசிகுமார் கூறியது...
நீ சொன்னாலே நம்பிடுவோம் தல அதுக்காக BANK STATEMENT எல்லாம் காட்டணுமா, படிக்கறதுக்கு ரொம்ப சூப்பர இருந்தது. உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//
நன்றி சசி குமார்..
நெக்ஸ்ட் டைம் நீங்க சொன்ன மாதிரி "Statement" நீக்கிடலாம்
நல்ல வேளை நண்பரே. தப்பித்தீர்கள். பணத்தையும் மிச்சம் செய்தீர்கள். பார்வையாளர்கள் மீது, கவுதம் மேனனுக்கு இருக்கும் அலட்சியம், நன்கு தெரிந்தது. ரகுமான் இல்லவிட்டாலோ, அல்லது, போட்டிக்கு வேறு படங்கள் இருந்திருந்தாலோ, இது கவுதம் மேனனின் "பாபா" வாக இது மாறியிருக்கும்.
//சவுக்கு கூறியது... //
உங்கள் வருகையிலும் கருத்திலும் எனக்கு அளவிலா மகிழ்ச்சி சார்
நன்றி !
// நம்மூரு நாய் கூட அத மோந்து பார்த்துட்டு ஓடி போய்டும்.. //
தெரிந்துதான் உங்க பிரண்ட் உங்களுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.
பரவாயில்லை, பாக்கெட் காலி என்பதால் நீங்க சிம்புவின் கொடுர சேட்டைகளில் இருந்து தப்பி விட்டீர்கள்.
நன்றி
அடடா... இது தெரியா தலைக்கு (யோவ் அந்த தல-க்கு இல்லை) 10 சிங்கை வெள்ளிகள் குடுத்து.... குடும்பத்தோட போயி பார்த்தேனே...!!!
அண்ணே, இந்த சிம்பு இந்த படத்துல அவன் விரல் வித்தையெல்லாம் காட்டல... இது இயக்குனரின் படமாகவே இருந்தது... :-)