டாக்குடர்ரு ,, நீங்க அதுக்கெல்லாம் ஒத்து வரமாட்டீங்க !

அதான் எழுத வரலியே,, பின்ன ஏன் நாமளும் சிரமபட்டுகிட்டு படிப்பவர்களையும் சிரமப்படுத்தனும்னு..நாமுண்டு நம்ம வேடிக்கையுண்டுன்னு இருந்தா இருக்க விடமாட்டாக போலிருக்கே...

காவலன் படம் ஜனவரி பதினாலு ரிலீசாம் ! காத்துவாக்குல சேதி வந்தது. (பயந்தது நடந்துவிட்டது)

கேட்டதும் பதிவு போட்டாகணும்னு உள்ளம் துடித்தாலும் அதுக்கு முன்ன யூரின் போகணும்னு தோணிச்சு (விஜய் படம் வருதுன்னா ஒபாமாவே ஒண்ணுக்கு போய்டுவான் நாம எம்மூத்திரம் சர்ரி எம்மாத்திரம் ??
"ஜனவரி பதினாலு படம் ரிலீஸ்." கேட்டவுடன் ரெண்டு விஷயம் நியாபகத்திற்கு வந்தது
ஒன்னு ரஜினி டயலாக் இன்னொன்னு பக்கத்துக்கு தெரு பாட்டி.

நினைவிற்கு வந்த டயலாக் :-
சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும் ..

பக்கத்துக்கு தெரு பாட்டி :-
ஒவ்வொரு முறை ஊருக்கு போகும்போதும் பக்கத்துக்கு தெருவில் இருக்கும் வயதான பாட்டியிடம் "எப்படி இருக்க பாட்டி ?" என விசாரிப்பது வழக்கம். அதற்கு அந்த பாட்டி "அந்த எமன் என்னை தூக்கிட்டு போக மாட்டேன்கிறான் " என வேடிக்கையாய் என்னிடம் சொல்வது உண்டு..


இந்த முறை ஊருக்கு போனால் அந்த பாட்டியிடம் சொல்ல வேண்டும் ஜனவரி பதினாலு நம்மூரு சினிமா கொட்டகைக்கு எமன் வரான் .. தைரியம் இருந்தா போய் பாரேன என ..#############################################################

கரகாட்டக்காரன் படத்தில் "என்ன பார்த்து ஏன்டா அந்த கேள்விய கேட்ட?"என கவுண்டமணி செந்திலை அடிக்கும் காமெடி உங்களுக்கு தெரிந்திருக்கும்
.அந்த மாதிரி விஜயை பார்த்து ஏண்டா அப்படி சொன்னே ?" கேட்டு கன்னத்திலே பொளேரென்று அடிக்க வேண்டுமென்று ஒருத்தனை தேடி கொண்டிருக்கிறேன் ..
அவன் அப்படி என்ன விஜயை பார்த்து சொல்லிட்டான் என்று கேட்கிறீர்களா ? கேட்டா நீங்களே அவனை துவம்சம் பண்ணிருவீங்க ..

விஜயை பார்த்து "தமிழ் சூப்பர் ஸ்டார்" அப்படின்னு சொல்லிட்டான்.

(விஜய்தான் லூசு பயன்னு பார்த்தா .. இருக்குறவன் அதுக்கு மேல இருக்கிறான்..ச்சே .. )
#############################################################

ஒரு பஞ்ச டயலாக் சொல்றேன் கேட்டுக்குங்க

கள்ள சாராயத்தை அதிகமா குடிப்பவனும்
காவலன் படத்தை அடிக்கடி பார்ப்பவனும்
உருப்பட்டதாக சரித்திரமே இல்லை ...


#############################################################


வானிலை அறிக்கை வாசிக்கும் திரு ரமணன் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

புயல், மழை, வெயில், பனி, கடல்சீற்றம், எது வந்தாலும் இப்பல்லாம் முன்னமே சொல்லி மக்களை எச்ச்சரிப்பீங்கலே, அதற்கும் மேல மக்களை தாக்கும் காவலன் படம் வரப்போகுது.. இந்த எச்சரிக்கையையும் சேர்த்து சொல்லிட்டீங்கன்னா ஏதோ புத்தி இருக்கிறவன் பொழச்சுபோகட்டும் ... உங்களுக்கு கங்கைக்கு போகாமலே புண்ணியம் கிட்டும் வாய்ப்புண்டு. ..

#############################################################


இன்னைக்கு கூட ஏதோ ஒரு பதிவில் படித்தேன் காவலன் பாடல்கள் நல்லாருக்குன்னு ஒருத்தரு சொல்லிருக்காரு. பாடல் விமர்சனமாம் .. !!

பாட்டு நல்லாருக்கேன்னு படத்த பார்க்க போனீங்கன்னா படுத்த படுக்கையாயிடுவீங்க பரவாயில்லையா?
என பின்னூட்டம் போட நினைத்தேன் முடியவில்லை ...#############################################################


எனக்கு தெரிந்த ஒருத்தருக்கு விக்கல் இரண்டு நாளாய் நின்றபாடில்லை . கடைசியில் மருத்துவமனைக்கு சென்ற பிறகே நின்றதாம் பிறகு இது எனக்கு தெரிய வர விசித்திரமாய் தோன்றியது. காவலன் படம் வருகிறது என்றாலே உயிரே நின்று வரும்போது விக்கல் நிற்காதா என்ன .. ஹும் மருத்துவமனைக்கு தண்ட செலவு..(இந்த வகையில் டாக்டர் பட்டம் கொடுத்தது சரியென்றே படுகிறது )

#############################################################

நீண்ட நாள் கழித்து என்னை பதிவு எழுத தூண்டிய தமிழ்நாட்டு சிரிப்பு டாக்டர் விஜய் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்வதுடன் இந்த பதிவையும் அவருக்கு சமர்பிக்கிறேன்

(பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் கிளிக்கவம்..)

படத்தை பார்த்து நீங்கள் மூர்ச்சை"ஆய்" விழுந்தால் அதற்கு படத்தில் இருப்பவரே முழு பொறுப்பு என அறிவித்துக்கொள்கிறேன்

#############################################################


மற்ற பதிவர்கள் போல் உங்க பின்னூட்டமும் ஒட்டும்தான் என்னை உற்சாகபடுத்தி பதிவை எழுத வைக்கிறது என சொல்லமாட்டேன் மாறாக நம் பூலோக எம தர்மன் விஜய் அவர்களே எனக்கு பதிவை எழுத உற்சாகமும் ஊக்கமும் தருகிறார் என்பதை உளமார உறுதி கூறுகிறேன் .

கடைசியாக

சனியனே,, இந்த படத்துலயாவது நடிச்சிருக்கியா ?

என்ற கேள்வியை அவர் காலடியில் சமர்ப்பித்து இத்துடன் என் பதிவை முடித்து கொள்கிறேன் நன்றி வணக்கம் ..
குறிப்பு : இந்த பதிவு மொக்கைதான் ஆனால் காவலன் படம் அளவு மொக்கையாய் இராது என்பதை சொல்ல கடமை பட்டிருக்கிறேன்

Read more...

Need Blood Group A+

Anybody in and around Pune, having A+ Blood Group, kindly contact 9762145040.

Hospital : Deenanath Mangeshkar Hospital

Read more...

ஏய்யா இப்படி ?

ஏழர மணிக்கு எதேச்சையா தான் எந்திரன் ட்ரைலர் பார்த்தேன். சொம்பு தூக்குவது எப்படி என்று ப்ரீயாக சொல்லி தராங்க ...

அவனவன் படம் பார்த்துட்டுதான் ஆஹா ஓஹோ ன்னு சொல்வாங்க . படமே பார்க்காம படம் பட்டய கெளப்பும்னு சொல்றவங்கள என்னன்னு சொல்றது..

நடிச்ச நடிகரை விட இசை அமைத்த அமைப்பாளரை விட உருவாக்கிய டயரக்டர்ரை விட தயாரித்த தயாரிப்பாளரை இப்படி புகழ்கிறீர்களே ஏய்யா இப்படி ? ( டைட்டில் வந்திடிச்சி பார்த்தீங்களா )

அரைமணி நேரத்திற்கு மேல தாங்க முடியாமல் என்னுடையா பேவரைட் TV Channel ஜீ ஸ்டுடியோ மறுபடியும் சென்றேன் ... சன் டிவி நிகழ்ச்சியை எகத்தாளமாக பார்த்த மனநிலை மாறி படத்துடன் இசைந்து ரசித்தேன். அது ஒன்னும் பிரம்மாண்டமான படம் இல்லை ... wwf எனப்படும் நவீன குஸ்தி சண்டை வீரரின் வாழ்கையை விவரிக்கும் பயணம் அது .

பெற்ற மகளும் இவரை விரும்பாத நிலையில் ஆதரவாய் இருந்த நண்பியும் கை விட்ட சூழ்நிலையில் மனம் வெறுத்து மீண்டும் WWF என்ற குஸ்தி சண்டைக்கே சென்று தன்னை விரும்பும் ரசிகர்களுக்காய் இதய பிரச்சினையில் அபாயமான கட்டத்தில் சண்டையிடும் கிளைமாக்ஸ்..


இதயத்தை பிசையும் இசையுடன் மனம் கனத்து நம் மன சலனத்துடன் படம் முடியும்...

(எப்போதாவது The Wrestler என்ற படத்தை பார்க்க நேர்ந்தால் Please Don't change the channel! )

இப்படத்தை பார்த்ததும் ஏனோ எந்திரனின் என் எதிர்பார்ப்பு சட்டென குறைந்தது ... ஏனெனில் பிரமாண்டம் என்ற வஸ்து எதார்த்தம் என்ற நிலைக்கு மாறானது.ஈர்ப்பதில் அதிக வலு கொண்டது.


என்னது.. அதற்கு பிறகு எந்திரன் ட்ரைலர் நிகழ்ச்சியை பார்க்கவில்லையா என்று கேட்கிறீகளா ... ம்ம்ஹும் மூடு இல்லையென்று டிவியை ஆப் பண்ணிட்டு இந்த பதிவை எழுதி கொண்டிருக்கிறேன் ...

இறுதியாக அணைத்து சொம்பு தூக்கிகளுக்கும் ஒரு கேள்வியை கேட்டு இப்பதிவை முடிக்கிறேன் ..

தமிழர்கள் பெருமை படுவதற்கு ரஜினி படம்தானா கிடைத்தது ?

ஏய்யா இப்படி ?

Read more...

எந்திரன் பாடல்கள் விமர்சனம்

இசையை பற்றி விலாவரியா விமர்சனம் பண்ணுவதற்கு நான் பிரபல பதிவரெல்லாம் இல்லை.
ஆனா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்குங்க

எந்திரன் படத்துக்கு
மொத்தம் எட்டு இடைவேளை

Read more...

ர ..ரா .. ரூப்பியா

என்னமோ போங்கோ ..... இன்று படிக்கும்/கேட்கும்/பார்க்கும் இடமெல்லாம் ரூபாய்க்கு புது சிம்பல் வந்திருக்குன்னு ஒரே மேட்டரா இருக்கு... எப்பவுமே புதிய மாற்றங்களை நாம் வரவேற்கத்தான் வேண்டும்..
பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து இந்த ரூபாய்க்கான இலச்சினையை தேர்ந்து எடுத்திருப்பார்கள் என நம்புகிறேன்.
அது எல்லாம் சரிதான் .. இந்த சிம்பலை பார்த்தால் ஏதோ ஹிந்தி எழுத்து மாதிரியே இருக்கேன்னு பார்த்தா..அது ஹிந்தி எழுத்தேதான். "ர" என்ற ஹிந்தி எழுத்தின் மேல் கோடு போட்டா இப்படிதான் இருக்கும்..
ஹிந்தி என்பது தேவநாகரி எழுத்து வடிவத்தை கொண்டது. இந்த தேவ நாகரி எழுத்து வடிவத்தைதான் இனிமே நாமெல்லாம் உபயோக படுத்த போறோம் ..

ஹிந்தி பொதுவா எனக்கு பிடிக்காது ஏன்னா ஹிந்தி ஒலிகள் பெரும்பான்மையானவை தொண்டையை அழுத்தி பிடித்து உச்சரிக்க வேண்டும். தொண்டையை அழுத்தி பிடித்து உச்சரிக்கணும் என்றால் கஷ்டம் நம்மாளுகளுக்கு. பொதுவாக நாம் தொண்டையை அழுத்தி பிடித்து செய்யும் ஒரே வேலை த்தூ" என்று துப்புவதுதான்.
(தூ என்றதும் புனைவு பதிவுகள் நியாபகம் வந்தால் அது உங்க தல விதி )

ஹிந்தி எதிர்ப்பு காரன்கலாம் என்னையா பண்றீங்க ... தண்டவாளத்தில தலைய வச்சு படுத்தாவது எதிர்ப்ப காட்ட வேணாமா ?

நான் சின்ன புள்ளையா இருந்தப்போ நம்மாளுக इंडियन ओवेर्सास வங்கியின் முன்புற பலகையில் ஹிந்தி எழுத்துக்களை அழிச்சிட்டு இருந்ததை பார்த்திருக்கேன். ஒவ்வொரு முறை அவ்வங்கியை கடக்கும் போது அந்நிகழ்ச்சி நினைவுக்கு வரும்.

அது என்னையா விஷயம் ? ஹிந்தி எழுத்துக்கள் பலகையில் இருந்தா அழிக்கிறீங்க..ஆனா ரூபாய் நோட்டுல இருக்குற ஹிந்தியை மட்டும் அழிக்கவே மாட்டேன்கிறீங்க??

ஹிந்தியை கண்டு தார் பூசி அழித்த உடன் பிறப்புகள் எதிர் காலத்தில் இந்திய ரூபாய் நோட்டில் உள்ள ஹிந்தி இலச்சினையை தார் பூசி அழிக்க தயாரா ?

கடைசியா மூன்று மேட்டரு சொல்லி இந்த மொக்கை பதிவை முடிக்கிறேன் ...

ஒண்ணு
ரூபாய் மதிப்பிற்கான அடையாளத்தை இப்படி இருந்தா நான் சந்தோஷ பட்டிருப்பேன்.
இரண்டு

தேவநாகரி எழுத்தை வைத்து ஒரு தமிழர் ரூபாய் இலச்சினையை டிசைன் செய்திருக்கார் என்றால் ... What a Contrast..dude!!

மூணு

ஏதோ டிசைன் பண்ணா IIT ல -வேலையெல்லாம் போட்டு தராங்களாம் .

நானுந்தான் ஒரு தமிழ் எழுத்த வச்சு வச்சு டிசைன் பண்ணிருக்கேன் ..குறைந்த பட்சம் Idiots Institute of Technology லாவது வேலை தராங்களா பாப்போம் ?


அப்புறம் டிஸ்கி என்னன்னா செவப்பு கலரு கேள்விகள் எல்லாம் கோவாலு புர்த்து கோமணதிற்கு ..அம்புட்டுதேன்.
நன்றி வணக்கம் ..அடுத்த பதிவில் சந்திப்போமா ?

Read more...

வேலை ஒண்ணு காலியா இருக்கு !! ( சத்தியமா சீரியஸ் பதிவு)


பொறியியல் பட்டபடிப்பு படித்த (Electronics/Communication/Instrumentation) குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் உள்ள தமிழர் யாராவது பூனாவிற்கு வேலையில் சேர விரும்பினால் என்னுடைய மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்..
LabVIEW தெரிந்திருந்தால் மிகவும் நல்லது ..

குறிப்பு 1: வேலை கண்டிப்பாய் வேண்டும் என மிகவும் கஷ்டப்பட்டு தேடி கொண்டிருக்கும் யாராவது இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும்.. யாரோ ஒரு ஹிந்தி காரனை தேர்வு செய்வதை விட நம்மாளு ஒருத்தனை வேலைக்கு சேர்த்தா நல்லாருக்கும் இல்லையா ?

குறிப்பு 2: First Class இல் பாஸ் பண்ணி இருக்க வேண்டும் ..ஹரியரே இருக்க கூடாது என்ற கேவலமான பாலிசி எல்லாம் என்கிட்ட இல்ல .. ஒண்ணுமே தெரியல எங்கேயும் சரியான வேலை கிடைக்கல அப்படின்னு சொன்நீங்கன்னாலும் பரவா இல்ல .. எனக்கு தெரிந்த வரை நான் சொல்லி கொடுக்கிறேன்.. நாலு இடத்துக்கு போனாதானே நாலு விசயத்தை தெரிஞ்சிக்கலாம் ???? ! என்ன நான் சொல்றது ?

குறிப்பு 3: மத்தியானம் எங்க கம்பனில இலவசமா சோறு போடுவாங்க.. Don't worry ! :)

குறிப்பு 4: பேருக்கு இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஊருல லுங்கி கட்டிக்கிட்டு ஆலமரத்துக்கு கீழ குத்த வச்சு பீடி குடிச்சிக்கிட்டே ரம்மி ஆடுவதை விட்டுவிட்டு ஏதாவது உருப்படியா வேலை செய்யலாம் இல்லையா !

குறிப்பு 5: Min Salary 12000 inr.


நாட்கள் மிகவும் குறைவாய் உள்ளது..கூடுமான வரை உடனே தொடர்பு கொள்ளவும் .
நன்றி !


குட் லக் !!

Read more...

முட்டாள்கள் மூன்று விதம் ....

முட்டாள்


ஒண்ணு முடியும்னு சொல்லணும் இல்லனா முடியாதுன்னு சொல்லணும்... அத விட்டுட்டு முதல்ல ம்ஹும் ன்னுட்டு அப்புறும் "ம்ம்" ன்றதெல்லாம் சரிபட்டு வராது... தெரிஞ்சே பண்ணிட்டு இப்போ கதறி அழுதா ...எந்த ஊர் நியாயமாடா டேய் ...இப்ப பாரு தினத்தந்திலேயே வந்திரிச்சி... இன்னிக்கு பூரா டீ கடையில உன்ன பத்தித்தான் பேசுவாங்க..... முத்தத்திற்காக கதறி அழ போறியா இல்ல பேமஸ் ஆனதிற்காக சந்தோசப்பட போறியா ??
ஆனா ஒண்ணுங்க ..முத்தம் கொடுத்ததிற்காக ஒரு நடிகை கதறி அழுதாள் என்ற செய்தியை என்னால் கற்பனை கூட பண்ண முடியல... Dinathanthi is great!


படு முட்டாள்


நிதேஷ் குமார் நிவாரண நிதி அஞ்சு கோடி ரூபாயை வேண்டாம் என்று சொல்லிட்டாராம்.
ஏய்யா யோவ் ...தெரியாமதான் கேட்கிறேன் குஜராத் கவர்மெண்டு உனக்கு என்ன பர்சனல் லோனா தந்தான் ? சாதரணமா வேண்டாம்னு சொல்ல... மக்களுக்காக மக்கள் கொடுத்த பணம் .... ஐந்து கோடி ரூபாயில் எத்தனையோ மக்கள் பயன் அடைந்து இருப்பார்கள் .. உங்க கட்சிகளுக்குள் பிரச்சினை இருந்தால் மக்கள் என்னையா பண்ணுவாங்க... பீகார்ல என்ன பாலும் தேனுமா ஓடுது... நிவாரணம் வேண்டாம் என்று சொல்ல ? மூன்று வேலை கஞ்சிக்கு வழியில்லாத மக்கள் அதிகம் இருக்கும் பின் தங்கிய மாநிலத்திற்கு கொடுக்கப்பட்ட பணத்தை வேணாம்னு சொல்லிட்டான் படுபாவி ..

இங்கு ஒரு விடயம் தெள்ள தெளிவாக புரிகிறது ... மக்களை மாநில வாரியாக பிரிச்சி பிரிச்சே மக்களை பட்டினி போட்டுட்டு அரசியல்வாதிகள் ஜாலியா இருக்கானுக..


அடி முட்டாள்

Read more...

பழிக்குப்பழி !!

அதாங்க .... தமிழ்நாட்டு அதி மேதாவி , இளிச்ச வாய் தளபதி , உண்ணா விரத மேடையில் பிரியாணி பொட்டலம் வீசிய கர்ணன் , சந்துல காங்கிரஸ் உடன் சிந்து பாட துடித்த கூட்டு களவாணி, அரசியலில் வருவதற்காகவே பஞ்சு டயலாக் பேசி நடிக்கும் தமிழ்நாட்டு சேம்ஸ் பாண்டு.. சமீபத்தில் நடித்து தொலைத்த "சுறா" படத்தை பற்றிய விமர்சனத்தை படித்ததும் காண்டாகி போய்டேன்.


விஜய் படத்துல நடிச்சு தமிழ் மக்களை பழி வாங்குன மாதிரி, நாமும் ஒரு படத்த எடுத்து விஜயை பழி வாங்கிற வேண்டியதுதான் என விஜயை வச்சே எடுத்த படம். (Plz turn on the speakers!)

Read more...

உதித் நாராயணனும் தமிழ் பாட்டும்

முன்னாடி எல்லாம் வீக் எண்டு ஹாலிடேய்ஸ் என்றாலே ஒரே கொண்டாட்டம் தான் ஆனா இப்போ நிலைமையே தலை கீழ்!

நமக்குதான் விடுமுறை என்றால் கட்டி போட்டாலும் வீட்டிலே இருக்க முடிவதில்லை அங்க இங்கன்னு வெளிய பொய் இந்த 40 Celcius வெயில்ல ஊர் மேய்வதை விட ஒழுங்கா ஆபீஸ்ல உட்கார்ந்து 18 Celcius குளிர்ல ப்லோக்குகளை மேயலாம்..


போன வார "Sun"day வெயிலுக்கு பயந்து வெளியே வீட்டிலேயே முடங்கி டிவி, தினசரி நாளிதழ்கள் மற்றும் இன்டர்நெட் சகிதம் ஐக்கியம் ஆனேன்.

அப்போது ஒரு மராட்டி டிவி சேனலில் உதித் நாராயன் என்ற பாடகர் தமிழில் பாடி கொண்டிருந்தார். மராட்டி சேனலில் தமிழா?? என்று ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்தேன். அது ஒரு பேட்டி மற்றும் பாடல் நிகழ்ச்சி . ஆடியன்ஸ் அனைவரும் மராட்டிகாரங்க.

மேட்டர் என்னான்னா.. உதித் நாராயன் அவருடைய பாடல் அனுபவங்களை மராட்டிகாரர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தமிழ்காரர்களை பற்றி மிகவும் சிலாகித்து பேசினார் .. அதாவது தமிழர்கள் நிரம்ப திறமைக்காரர்கள் என்று... !

இதை கேட்டதும் என்னுடன் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த மராட்டிகாரன் இவ்வளவு திறமைசாலிகளா உங்க ஆளுங்க ??.. என்று வினவினான்

அப்போது என் முகத்தை பார்க்கணுமே ??? சிரிப்பில் (பெருமையில் ) வாய் விரிந்து காது வரை வந்தது.

பெருமை படுவதிலும் நம்மாளுகளை அடிச்சிக்க முடியாது... அதே மாதிரி உள்ளுக்குள்ள அடிச்சிக்குவதிலும் நம்மாளுகதான் மொதோ.

சரி அத விடுங்க ..மறுபடியும் உதித் நாராயன் மேட்டர்க்கு வருவோம்

"இவ்வளவு கஷ்டமான பாசையில் எப்படி இவ்வளவு அருமையா பாடராருன்னுதான் ஆச்சரியமா இருக்கு !!" என்றான்

உண்மையிலேயே தமிழ் ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்லை மச்சி !!
ரெண்டே நிமிடத்தில் ஒருத்தனுக்கு ட்ரைனிங் கொடுத்தால் போதும்.. தாராளமாய் பாடலாம் என்றேன்.

சத்தியமாய் ரெண்டே நிமிடத்திற்கும் குறைவாகத்தான் ட்ரைனிங் கொடுத்தேன் இங்கேயும் ஒருத்தன் அர்த்தம் தெரியாமல் தமிழ் பாட்டு பாடறான் ...பாருங்க ...

இந்த பதிவ எழுதிட்டு நான் படிச்சி பார்க்கிறேன் ..... எனக்கே ஓவர் மொக்கையா இருக்கு ...
இருந்தாலும் சொல்லவேண்டியதை எழுதியே ஆக வேண்டும்என்ற தார்மீக கடமை ஒரு தமிழ் பிளாக்கர் (?) என்ற முறையில் இருப்பதால் இப்பதிவை வெளியிடுகிறேன்..


என் இனத்து அணைத்து தமிழ் நண்பர்களுக்கு இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஒன்றுபடுவோம்... வெற்றி நமதே...

Read more...

சோனியாவுக்கு ஒரு நியாயம் சானியாவுக்கு ஒரு நியாயமா ?

டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கே பெருமை தேடி கொடுத்தவங்க நம்ம(?) சானியா மிர்சா.
இனிமே பாகிஸ்தானுக்கு பெருமைய தேடி தர போறாங்களாம்.அதாங்க ... சானியா எவனோ ஒரு பாகிஸ்தான்காரன் கிட்ட மனதினை (?) பறி கொடுத்துட்டாங்களாம்..
கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு ஊரு உலகம் முழுதும் டமாரம் அடிச்சிட்டு இருக்கா..
அது சரி லவ்-ன்னு வந்தாலே கல்யாணம் பண்ணிக்கவேண்டியதுதான்.

அத தடுக்க நாம யாரு ?நம்மகிட்ட யாரும் வந்து கருத்து கேட்கவில்லை என்றாலும் நாமளாவே வாலண்டியரா கருத்த(!) சொல்றதுதான் பிளாக்கர்க்கு மரியாதை. (சொல்லலைனா தமிழ் பிளாக்கர்ன்னு சொல்லிக்கிறதே வேஸ்ட்)


வேற ஒன்னும் இல்லீங்க.. இந்தபக்கம் அந்தபக்கம் ..ஆயிரம் பேரு ஆயிரம் கருத்து சொன்னாலும் பாகிஸ்தான் கவர்மெண்டுகாரன் சொன்னான் பாருங்க அதுதாங்க கருத்து சும்மா நச்சுன்னு...

கல்யாணம் ஆன பிறகு சானியா மாலிக் ( கல்யாணம் ஆன பிறகு பேரு மாறிடும் இல்ல !!) (அந்தோனியோ மைனோ சோனியா காந்தி ஆகும்போது சானியா மிர்சா சானியா மாலிக் ஆகாதா என்ன ?)
பாகிஸ்தான்காக தான் டென்னிஸ் ஆடுவாங்களாம்.... இந்தியாவுக்காக ஆட முடியாதாம்.

சானிய மிர்சாவின் கோச் (Coach) நெனச்சு பார்த்திருப்பானா இதுவரை பட்ட கஷ்டம் எல்லாம் இனிமே பாகிஸ்தானுக்காக என்று ...

சானிய மிர்சாவின் ரசிகர்கள் நெனச்சு பார்த்திருப்பார்களா இனிமே சானியாவின் வெற்றிகள் நம் நாட்டுக்கு இல்லையென்று ?? (வட போச்சே !!?)
சானிய மிர்சாவின் இந்திய ஸ்பான்சர்கள் நெனச்சு பார்த்திருப்பார்களா சானியாவை வைத்து இனிமே போனி பண்ண முடியாது என்று

இந்த கருமத்தை எல்லாம் பற்றி எங்க ஆபீஸ்ல ஒருத்தன்கிட்ட பேசிட்டு இருக்கும்போது "இதெல்லாம் அநியாயம் ...சானிய மிர்சா இந்தியாக்குதான் விளையாடனும் ..... பாகிஸ்தான்க்கு விளையாட கூடாதுன்னு அப்படின்னான் :"

"அது சரி ..போன எலெக்சன்ல யாருக்கு ஒட்டு போட்டே?" ன்னு கேட்டேன்!
"சானியா மிர்சாவுக்கும் ..ஒட்டு போட்டதுக்கும் என்ன சம்மந்தம்" என்றான்

இருக்கு சொல்லு ..

காங்கிரஸ்க்கு ...

அவ்வளவுதான் ... கடுப்பில் அவன காய்ச்சி எடுத்துட்டேன் ..

ஏன்டா டேய் ... இத்தாலியில் இருக்கும் அன்டோனியோ மைனோ ராஜீவ் காந்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு சோனியா காந்தி என்று பெயர் மாற்றம் செய்து இன்று இந்தியாவை ஆளும் காங்கிரஸ் பார்ட்டி லீடராக இருக்கலாம்
(அதையெல்லாம் ஒத்துக்குவீங்க )
இந்தியாவில் இருக்கும் சானியா மிர்சா சோயிப் மாலிக்கை கல்யாணம் பண்ணிக்கிட்டு சானியா மாலிக் என்று பெயர் மாற்றம் செய்து பாகிஸ்தானுக்காக டென்னிஸ் ஆட கூடாதா ?
(இத ஒதுக்க மாட்டீங்களா ?)
என்னங்கடா டேய் ...சோனியாவுக்கு ஒரு நியாயம் சானியாவுக்கு ஒரு நியாயமா ?அதனால நான் என்ன சொல்றேன்னா :)

சோயிப் மாலிக் : தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே
சானியா மிர்சா : சலோ பாகிஸ்தான்கோ ... சலோ !
மத்தவங்களுக்கு : சபி பந்த் கரோ ... பக்வாஸ் !!

Read more...

இனிமே எவனாவது ???

ஆப்பிள் வாங்கி சாப்பிடலாம் என்று பழக்கடைக்கு போனானாம் ஒருத்தன்.
கடைக்காரன், வாழைப்பழத்தை ஆப்பிள் என்று ஏமாற்றி அவனிடம் விற்று விட்டான்.
பிறகு வாழைப்பழத்தை பற்றி அறியவந்ததும் கடைக்காரனிடம் சென்று சண்டையிட்டானாம்.
ஊரெல்லாம் இவன் ஒரு ஏமாற்றுக்காரன் என்று சொல்லிவைத்தான்.

இரண்டாவது முறை ஆப்பிள் சாப்பிட வேண்டி இன்னொரு கடைக்காரனிடம் சென்று கேட்டதும். அவன் பப்பாளி பழத்தை ஆப்பிள் என்று விற்று விட்டான். பப்பாளி பற்றி அறிய வந்ததும் முன்னொரு நாள் போட்ட அதே சண்டையை போட்டு இந்த கடைக்காரனையும் ஏமாற்றுக்காரன் என்று சொல்லி வைத்தான்.

இன்னமும் அவனுக்கு ஆப்பிள் பற்றிய கனவு நிறைவேறாத ஆசையாகவே இருந்தது. திரும்பவும் மூன்றாவது கடைக்காரனிடம் ஆப்பிள் வாங்க சென்றபோது இம்முறை கொய்யா காயை வாங்கி எமாந்தானாம்.

இங்கு ஏமாற்றிய கடைக்காரர்கள் முட்டாள்களா அல்ல, மூன்று முறை ஏமாந்தவன் முட்டாளா ..
சந்தேகத்திற்கு இடமில்லாமல் அதிக முறை ஏமாந்தவனே முட்டாள்..


இப்பொழுது நடந்த கூத்தை பார்த்தால் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் .
நான் வேறு யாரையும் சொல்லல "சாமி! சாமின்னு சொல்லிக்கிட்டு ஆசாமிகிட்ட ஏமாந்த ஜனத்தை சொல்றேன் ..

எத்தன முறைதான் அல்லது எத்தனை முறைகளில்தான் ஏமாறுவீர்கள் மாக்களே ?

இனிமே எவனாவது நித்திக்கு தண்டனை வாங்கி தரனும் ரஞ்சிக்கு கு&&&& வாங்கி தரனும் என்று குதித்தீர்களேயானால் உங்களுக்கு வயித்தெரிச்சல் என்று அர்த்தம்

பின்ன என்ன சார் ? 32 வயசுலேயே ரெண்டாயிரம் கோடி சம்பாதிக்கும் திறமை யாருக்கு இருக்கு?


இங்கு நித்தியை குற்றம் சொல்லும் அனைவருக்கும் அடுத்த மாசம் சம்பளம் இல்லனா எல்லாரும் பீசு பிடிங்கின ட்ரான்ஸ்பார்மர்கள். நித்திக்கு இருக்கும் சொத்துக்கு அவன் ஆயுள் முழுதும் ஜாமீன்லேயே இருக்கலாம்.

நித்தி என்ன கொலை செஞ்சானா ?
கொலை செஞ்சவனுக்கு ஆயுதம் கொடுத்தானா ?
தமிழ் மக்களுக்கு துரோகம் பண்ணானா ?
எனக்கு ஒட்டு போடு காசு தரேன்னு வாலண்டியரா வந்தானா ?

நீங்களா போயிட்டு ஏமாந்து வந்துட்டு ஏமாத்திட்டான் ..ஏமாத்திட்டான் ன்னு கூக்குரல் இடுவது இந்த இடுகையின் முதல் பத்தியில் ஏமாந்தவன் கதை போல தானே ??

இப்ப சொல்லுங்க தண்டனை யாருக்கு ??

இதையும் மீறி இந்து மதத்தை அவமதிச்சுட்டான்ன்னு குய்யோ முறையோன்னு ஆர்பாட்டம் பண்றவங்க
ந்கோய்யால ..... உங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு கேள்வி ..


அளவுக்கு அதிகமான இந்து மத மக்கள் சாகும்பொழுது எவ ம&&& புடிங்கிட்டு இருந்தீங்க ?


குறிப்பு : நித்திய வச்சு காமடியா எழுதலாம் ஆனா காரசாரமா எழுத கூடாது..


Have Fun; It's not a Sin !


- சுவாமி நித்தி


Read more...

மலேசிய தமிழ் மாணவர்களின் கவனத்திற்கு..

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.ரெண்டாயிரம் வருடத்திற்கு முன்னாடியே நம்ம தலைவர் திருவள்ளுவர் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி சொல்லி இருக்காரு.

உலகில் உள்ள எந்த இனத்தவருக்கும் இந்த மாதிரி அட்வைஸ் கிடைத்திருக்காது அதுவும் ரெண்டாயிரம் வருடத்திற்கு முன்னால் இருந்து .
எது எப்படியோ .... கீழே இருக்கும் மேட்டரை பார்த்து படிச்சிட்டு வழக்கம் போல மற்றவர்களுக்கும் சொல்லுங்க.

Read more...

மலேசிய தமிழர்களின் கவனத்திற்கு..

விவரங்கள் அறிய படத்தை பெரிதாக்கி பார்க்கவும்.

மற்றவர்களுக்கும் அறிய தாருங்கள் .
வறியவர்க்கு மிகவும் உதவியாய் இருக்கும்.


யாருக்கு தெரியும்.. உங்கள் மூலமாக கூட எதாவது ஒரு ஏழைக்கு உதவி கிடைக்கலாம்ஆயிரம் ரூபா வைத்திருப்பவருக்கு பத்து ரூபா சாதாரணமா இருக்கலாம் ,, காசே இல்லாதவனுக்கு பத்து ரூபா கூட அசாதாரணம் ( அனுபவத்தில் உணர்ந்தது). ஏதோ எனக்கு தெரிந்த கருத்து சொன்னேன்.


பகிர்வதும் இன்பம்தானே !!

Read more...

விண்ணை தாண்டி வருவாயா.. என்னை போண்டியாக்கி போவாயா?

ஏதோ பாட்டெல்லாம் நல்லாருக்கே,, "விண்ணை தாண்டி வருவாயா.. " படத்துக்கு போலாமேன்னு ஆராய்ச்சி பண்ணி பார்த்தா..... ந்கோன்னியா டிக்கெட் 180 ரூபாயாம்.ஒன்னாம் தேதி ரெண்டாம் தேதி ஒட்டி படம் ரிலீஸ் ஆனா பரவாயில்ல.. கையில கொஞ்சம் காசு இருக்கும் படம் பார்க்கும் ஆசையும் வரும்... இருபது ஆறு, இருபத்தேழு மாச கடைசில ரிலீஸ் ஏன் பண்றாங்கன்னுதான் தெரியல..
மாச கடைசி வேற,,, பாக்கெட்ல கைய விட்டா ஐநூறு ரூபா தாள் வரும் நாட்கள் போய்,,நூறு ரூபாயா குறைந்து இப்போ அஞ்சு ரூபாய் காயின் வர அளவிற்கு பொருளாதாரம் நிலை குலைந்து போயிருக்கும் சூழ்நிலையில் (அக்கௌன்ட்ல முன்னூறு ரூபா வச்சிக்கிட்டு பெரு மூச்சு விட்டுகொண்டிருக்கிறேன்)
வடிவேல் பாணியில் முகத்திற்கு நேராய் விரலை நீட்டி "உனக்கு இதெல்லாம் தேவையா?" என்று எனக்கு நானே கேட்டு கொண்டதன் விளைவு ப்ரோக்ராம் கான்செல்.

மூணு மாசம் கழித்து சொந்த ஊருக்கு போனா பத்து ரூபாயில் பார்க்க வேண்டிய படம்.இதுக்கு எதுக்கு இவ்வளவு பணம் தரணும்?

முக்கியமான காரணம் "விரல் சொத்தை சொம்பு" படத்துக்கு எல்லாம் இவ்வளவு செலவு பண்றதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் !


குறிப்பு : பதிவர்கள் எழுதும் விமர்சனத்தை படித்தாலே போதும்.. தேவையில்லாம வாலண்டியரா போய் ஏன் வெடிகுண்டு மேல உட்காரனும் ?

என்ன நான் சொல்றது ???
.

Read more...

பூனா - ஜெர்மன் பேக்கரி கு.மு - கு.பி

பூனாவுல குண்டு வெடித்தது. பதினைந்து பேர் அதனால் இறந்து போயினர் என்று நாம் அனைவரும் டிவியிலோ, செய்தித்தாள்களிலோ, வானொலியிலோ அல்லது எதாவது ஒரு ஊடகம் வழியிலாகவோ நாம் அனைவரும் கேள்வி பட்டிருப்போம்..

குண்டு வெடித்ததற்கு பின் அந்த இடம் எப்படி இருக்குன்னு எல்லா டிவி-காரவுக சைடு வியு, பிரண்டு வியு, டாப் வியு அப்புறம் இருக்கும் அணைத்து வியுகளிலும் காண்பிசிருப்பாங்க.
(அப்படி பார்க்காதவங்க இந்த படங்கள பார்த்துகொள்ளுங்கள் )குண்டு வெடித்ததற்கு முன் எப்படி இருக்கும்னு நீங்கல்லாம் பார்பதற்காக இங்க சில புகைப்படங்களை இணைத்துள்ளேன்.( நண்பர் ஒருவர் மெயில் அனுப்பியது.. நீங்களும் பாருங்க )படங்களை கிளிக்கி பெரிதாய் பார்க்கவும் !!


என் கூட வேலை பார்க்கும் ஒருவருடன் அடிக்கடி இங்க வருவேன்
ஏதோ பிரவுன் கலர்ல பண்ணு ஒண்ணு வாங்கி தருவான் பாருங்க எப்பா ... சின்ன வயசுல குடிக்கும் கசாயம் மாதிரியே இருக்கும்.
நம்மூரு நாய் கூட அத மோந்து பார்த்துட்டு ஓடி போய்டும்..

ஒரு வாரத்துக்கு முன்னாடி அவரிடம் போனில் இதை பற்றி பேசினேன்.
அடிக்கடி நாம் போகும் அந்த இடத்துல எவனோ ஒரு பன்னாட குண்டு வச்சிட்டான் அப்படின்னேன்
அதுக்கு அவர் "அது உண்மையா இருக்க முடியாது " என்று நம்ப முடியாமல் சொன்னாரு .

" நீங்க பெரிய அதிஷ்டசாலி தான் கிரேட் எஸ்கேப் ஆகிடீங்க... என்று சொன்னேன்
வழக்கம் போல நான் தமாசா எத சொன்னாலும் சிரித்து வைக்கும் அவர் அன்று என்னவோ அமைதியாகவே போனை வைத்து விட்டார்..


நோட் : கு.மு ன்னா குண்டு வெடிப்புக்கு முன்
கு.பி ன்னா குண்டு வெடிப்புக்கு பின்

Read more...

நைஜீரியா எண்ணெய் கிணறும், ஆப்ரிக்காவின் வைரசுரங்கமும் ! - இந்தியர்கள் ஏமாறும் கதைரெண்டு நாளா என்கூட வொர்க் பண்ணுற ஒருத்தன் என்னிடம் தனியா பேசணும்னு ட்ரை பண்ணிட்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் தலைய சொரிஞ்சிகிட்டே ரொம்ப சீரியஸ்ஸா "உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்" அப்படின்னான்.

அவன் வரும்போதெல்லாம் ஆபீஸ் வேலையில ரொம்ப ஆழ்ந்து இருப்பதினால் அப்புறம் அப்புறம்-ன்னு தள்ளி போட்டுட்டு இன்றுதான் கொஞ்சம் ப்ரீ டைம் கிடைத்தது.

உடனே கூப்பிட்டு "என்ன தம்பி விஷயம்?" அப்படின்னேன்.

ரொம்ப பவ்யமாய் "ரெண்டு நாளா நிறைய போன் கால்ஸ் வருது.. சுமார் எட்டு ஆயிரம் அமெரிக்க டாலர் கட்டினால் கோடி கணக்குல பணம் உங்க அக்கௌன்ட்ல ஆகிடும்....அப்படின்ன்றாங்க" என்றான்.


உடனே மண்டையில அலாரம் அடித்தது.. பையன் பேராசை படறான் ... இவனை திருத்தியே ஆகணும்னு முடிவு பண்ணேன் ..

உன் மொபைல் நம்பர் எப்படி அவனுக்கு தெரியும்னு கேட்டேன் ...
தெரியலன்னு சொன்னான்.

கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு எவனாவது "ஊரு, பேரு, போன் நம்பர் கேட்டு எதையாவது ஆசை காட்டி மெயில் வந்ததா" ??
லேசா மண்டைய ஆடினான்.

(நைஜீரியாவில எண்ணெய் கிணறு லாபம், ஆப்ரிக்காவில வைர கிணறு லாபம், பிரிட்டன்ல வாரிசே இல்லாத ஒருத்தன் ஏரோபிளான் விபத்துல செத்ததால அவன்கிட்ட ஆட்டைய போட்ட பணம்னு ஏகத்துக்கும் கதை விட்டு நிறைய ஸ்பாம் மெயில் வரும்.. அந்த மாதிரி எதுக்கோ இவன் சீரியஸ்ஸாய் பதில் போட்டிருக்கான்)

சார் இப்போ என்ன பண்றதுன்னு கேட்டான் ..

இருடா நான் பேசுறேன்னிட்டு அவங்க பண்ண நம்பர்லேயே ரி டயல் பண்ணா ஒருத்தன் எடுத்தான்..

க்காளி,, அவன் என்ன பாஷை பேசுரான்னே தெரியல ....முக்கி மொனகிகிட்டு ஏதோ சொன்னான்.
கொஞ்ச விவரமா சொல்லுங்க அப்படின்னு பேசுனா உடனே கட் பண்ணிடுறான்.
கொஞ்ச நேரம் கழிச்சி மறுபடியும் போன் பண்றான். ஏதோ புரியாத மாதிரி பேசறது ....
இப்படியே நாலஞ்சு முறை சுமார் அரை மணி நேரம் கேப்ல பேசி
கொஞ்சமா இங்கிலீஷ்ல
புரியறமாதிரி "நீங்க ப்ரோசசிங் பீஸ் கட்டுங்க உங்களுக்கு நாங்க கோடி கணக்குல பணம் போடுறோம்" அப்படின்னு ஆசை காட்டுவதுதான்..

இவனுங்க ஏன் இப்படி ஆரம்பத்துல புரிந்தும் புரியாத மாதிரி பேசி கொல்றாங்கன்னு யோசிச்சா சிம்பிள் மேட்டர் ..

உண்மையிலேயே பேராசையால் ஏமாறுபவனாய் இருப்பவன் எத்தன முறை போன் பண்ணாலும் பேசுவான்.. விவரமானவன் உடனே கட் பண்ணிட்டு வேற வேலைய பாக்க போய்டுவான்..

ஆக மொத்தம் எத்தன முறை போன் பண்ணாலும் இளிச்சிக்கிட்டே தம்பி பேசுறதால "பட்சி சிக்கிகிச்சிடா டோய்" ன்னு பையன கட்டம் கட்டிட்டாங்க.

இதுல வெவ்வேற நம்பர் ல இருந்தும் கூப்பிடுறாங்க. பொண்ணு வேற பேசி பையன என்கரேஜ் பண்றா .. ஆக ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் கும்பலாக ஒரு கூட்டமே குழி பறிக்கிறாங்கன்னு தெரிந்துவிட்டது


இப்படி விசாரணை மூலம் மேட்டர் வாங்கிட்டு இருக்கும்போதே மறுபடியும் போன் கால்.
இந்த முறை தெளிவா பேசுனான்.. எட்டு ஆயிரம் அமெரிக்க டாலர் கட்டலன்னாலும் பரவால ...ஏதோ 32700 ரூபாய் எங்க அக்கௌன்ட்ல போடுட்டீங்கன்னா ஒரே நாள்ல 112700000 பதினோரு கோடியே இருபது ஏழு லட்ச ரூபாய் இன்னைக்கே உங்க அக்கௌன்ட்ல போட்டுவிடுகிறோம் அப்படின்னு தெள்ள தெளிவா இங்கிலீஷ்ல பேசுறான்..

அதுவும் எப்படி ?? 32700 ரூபாய் கட்டுனா தான் தருவானாம்.
இந்த விசயத்த யார்கிட்டயும் சொல்லகூடாதுன்னு சொல்றான்

இங்கிலீஷ்ல எனக்கு தெரிஞ்ச எல்லா கெட்ட வார்த்தையையும் யூஸ் பண்ணி வைடா போனை அப்படின்னுட்டேன்...


************************************************************************************* தலையிலேயே நாலு தட்டு தட்டி,, ரெண்டு வார்த்தை கேவலமா திட்டி இப்படி எல்லாம் பிராடு பசங்களை இனிமே நம்பாத அப்படின்னு..சொல்லிகிட்டே
"அஞ்சு காசா இருந்தாலும் அது நீ வேல செஞ்ச காசா இருக்கணும்னு" பொன்னெழுத்தால பொறிக்க பட வேண்டிய அறிய அறிவுரைய சொல்லி அனுப்பி வச்சேன்.
*************************************************************************************

இதிலிருந்து என்ன தெரியிதுன்னா ...

இந்த மாதிரி ஏமாத்துறவங்க இன்னும் இருக்காங்க ...
(அஞ்சு பத்து வருசத்துக்கு முன்னாடிதான் இப்படி ஏமாத்தறத கேட்டிருக்கேன்..இப்பவும் அதே மெத்தட் யூஸ் பன்றாங்கன்றத நினைச்சா இன்னும் ஆச்சரியமா இருக்கு. ஆக மொத்தம் சுத்தி சுத்தி ஏமாத்திக்கிட்டேதான் இருக்காங்க)


*************************************************************************************

இப்ப என்ன பண்ணலாம் ?
கம்முன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணிடலாமா ??
இந்த மேட்டரை அப்படியே விட்டுடலாமா ?


*************************************************************************************
அதுவரைக்கும் இந்த மேட்டரையும் தெரிஞ்சிக்குங்க

அந்த அயோக்கிய ராஸ்கல் கீழ்க்கண்ட போன் நம்பர்களில் இருந்துதான் போன் பண்ணான்.

022 - 32206354

9619773854

9990674344


பணம் போட சொன்ன அக்கௌன்ட் பெயர் மற்றும் நம்பர்

ஸ்ரீ ஷ்யாம்
என்டர் பிரைசஸ்


065705500181

வங்கி பெயர் மற்றும் கிளை : ICICI - SIKAR

பான் நம்பர்: BOXPS0317E


Read more...

கிளிப்பேச்சு கேட்க வா .....


1.மக்கள் பீதி அடைய வேண்டாம்.நிலைமை கட்டுக்குள் உள்ளது.

2.ஏற்கனவே உளவு துறை இதைப்பற்றிய தகவல்களை மாநில அரசுக்கு தெரியபடுத்தியது.

3.நம் உளவுத்துறை வலுவான நிலையில் உள்ளது.

4.விசாரணை முழு வீச்சில் நடை பெற்று கொண்டிருக்கிறது

5.நாட்டின் எல்லா பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தி உள்ளோம்

6.பாகிஸ்தானுக்கு இதுவே கடைசி எச்சரிக்கை. இனி மேலும் இந்த மாதிரி தீவிரவாத செயல்களுக்கு துணை போகுமாயின் அமைதி பேச்சு வார்த்தை ரத்து செய்து தக்க பதிலடி கொடுப்போம்

7.இறந்தவர் களின் அடையாளம் காணும் பணி நடை பெற்று கொண்டிருக்கிறது

8.இறந்தவர் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும்9. நாளை பிரதமர் தலைமையில் அவசர குழு கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது10. இது சம்மந்தமாக பத்து பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகிறோம்

அப்பாவி மக்கள் சாகும் பொழுதெல்லாம் இதே வசனங்களை கிளிப்பிள்ளை மாதிரி சொல்றதுக்குதான் உங்களை எல்லாம் வோட்டு போட்டு தேர்ந்தேடுத்தாங்களா .... அல்லக்கைகளா ???

Read more...

இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம்...

ந்தியா இந்தியர்களுக்கே சொந்தம்!
உதிர்த்தவர் :
டகுல் காண்டி!

************************************************************************************

தேங்க்ஸ் காண்டி ..
ஆனா கண்டிப்பா இத்தாலிகாரர்களுக்கு சொந்தமில்லை

வழி மொழிந்தவர் :
-மீ தி செகண்டு ( ஏற்கனவே பாலு டக்கர் சொல்லிட்டாராம்ல !!.. )


************************************************************************************
பிஸ்கி : நாம் நம் தேச தந்தை காந்தியடிகள் சொற்படி நடக்க வேண்டும் - 3 ஆம் பாட வரலாறு புத்தகத்தில் இருந்து.

அதேதான் நானும் சொல்றேன் !! தேசப்பிதா காந்தி "வெள்ளையனே வெளியேறு " இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வெற்றி கண்டார். நாமும் அதே மாதிரி குறைந்த பட்சம் "வெள்ளைகாரியே வெளியேறு" இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்..


(ஐடியா செல்போன் சர்வீஸ் tune இல் பாடவும் ! )
ஓஓஹோ ஓஹோ ஹோ ஓ ஹோ

வாட் எ ஐடியா மோகன் தாஸ் ஜி ???

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP