ஏய்யா இப்படி ?

ஏழர மணிக்கு எதேச்சையா தான் எந்திரன் ட்ரைலர் பார்த்தேன். சொம்பு தூக்குவது எப்படி என்று ப்ரீயாக சொல்லி தராங்க ...

அவனவன் படம் பார்த்துட்டுதான் ஆஹா ஓஹோ ன்னு சொல்வாங்க . படமே பார்க்காம படம் பட்டய கெளப்பும்னு சொல்றவங்கள என்னன்னு சொல்றது..

நடிச்ச நடிகரை விட இசை அமைத்த அமைப்பாளரை விட உருவாக்கிய டயரக்டர்ரை விட தயாரித்த தயாரிப்பாளரை இப்படி புகழ்கிறீர்களே ஏய்யா இப்படி ? ( டைட்டில் வந்திடிச்சி பார்த்தீங்களா )

அரைமணி நேரத்திற்கு மேல தாங்க முடியாமல் என்னுடையா பேவரைட் TV Channel ஜீ ஸ்டுடியோ மறுபடியும் சென்றேன் ... சன் டிவி நிகழ்ச்சியை எகத்தாளமாக பார்த்த மனநிலை மாறி படத்துடன் இசைந்து ரசித்தேன். அது ஒன்னும் பிரம்மாண்டமான படம் இல்லை ... wwf எனப்படும் நவீன குஸ்தி சண்டை வீரரின் வாழ்கையை விவரிக்கும் பயணம் அது .

பெற்ற மகளும் இவரை விரும்பாத நிலையில் ஆதரவாய் இருந்த நண்பியும் கை விட்ட சூழ்நிலையில் மனம் வெறுத்து மீண்டும் WWF என்ற குஸ்தி சண்டைக்கே சென்று தன்னை விரும்பும் ரசிகர்களுக்காய் இதய பிரச்சினையில் அபாயமான கட்டத்தில் சண்டையிடும் கிளைமாக்ஸ்..


இதயத்தை பிசையும் இசையுடன் மனம் கனத்து நம் மன சலனத்துடன் படம் முடியும்...

(எப்போதாவது The Wrestler என்ற படத்தை பார்க்க நேர்ந்தால் Please Don't change the channel! )

இப்படத்தை பார்த்ததும் ஏனோ எந்திரனின் என் எதிர்பார்ப்பு சட்டென குறைந்தது ... ஏனெனில் பிரமாண்டம் என்ற வஸ்து எதார்த்தம் என்ற நிலைக்கு மாறானது.ஈர்ப்பதில் அதிக வலு கொண்டது.


என்னது.. அதற்கு பிறகு எந்திரன் ட்ரைலர் நிகழ்ச்சியை பார்க்கவில்லையா என்று கேட்கிறீகளா ... ம்ம்ஹும் மூடு இல்லையென்று டிவியை ஆப் பண்ணிட்டு இந்த பதிவை எழுதி கொண்டிருக்கிறேன் ...

இறுதியாக அணைத்து சொம்பு தூக்கிகளுக்கும் ஒரு கேள்வியை கேட்டு இப்பதிவை முடிக்கிறேன் ..

தமிழர்கள் பெருமை படுவதற்கு ரஜினி படம்தானா கிடைத்தது ?

ஏய்யா இப்படி ?

தமிழ் உதயம்  – (13 செப்டம்பர், 2010 அன்று PM 2:50)  

தமிழர்கள் பெருமை படுவதற்கு ரஜினி படம்தானா கிடைத்தது ?///


அழகான உண்மை.

யூர்கன் க்ருகியர்  – (13 செப்டம்பர், 2010 அன்று PM 3:51)  

//தமிழ் உதயம் கூறியது... //


வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி சார் ..

முனைவ்வ்வர் பட்டாபட்டி....  – (14 செப்டம்பர், 2010 அன்று AM 6:20)  

இன்னும் ரீலீஸ் ஆகாத படத்துக்கு இந்த பில்டப் கொடுத்து...


சீக்கிரமே படம் பார்க்காதவங்க ரேஷன் கார்ட பறிமுதல் செய்யலாமுனு சட்டம்
வந்தாலும் வரும்.. பாருங்களேன்..

வேலன்.  – (14 செப்டம்பர், 2010 அன்று AM 7:53)  

தமிழர்கள் பெருமை படுவதற்கு ரஜினி படம்தானா கிடைத்தது //

இல்லை...தமிழர்கள் பெருமை படுவதற்கு இன்னும் ஒருவரும் உள்ளார். அவர் மாற்றான் மாநிலத்திற்கு சென்று நமது மாநிலத்திற்கு குரல் கொடுப்பவர்...அவர்யார் என்று உங்களுக்கே தெரிந் திருக்கும்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

யூர்கன் க்ருகியர்  – (14 செப்டம்பர், 2010 அன்று PM 2:39)  

//பட்டாபட்டி.. சொன்னது…
சீக்கிரமே படம் பார்க்காதவங்க ரேஷன் கார்ட பறிமுதல் செய்யலாமுனு சட்டம்
வந்தாலும் வரும்.. பாருங்களேன்..//

தலைவரே ,, நீங்க அரசியல்ல பெரிய தீர்க்கதரிசி .. நடந்தாலும் நடக்கும் ..

யூர்கன் க்ருகியர்  – (14 செப்டம்பர், 2010 அன்று PM 2:41)  

//வேலன். கூறியது...
தமிழர்கள் பெருமை படுவதற்கு ரஜினி படம்தானா கிடைத்தது //

இல்லை...தமிழர்கள் பெருமை படுவதற்கு இன்னும் ஒருவரும் உள்ளார். அவர் மாற்றான் மாநிலத்திற்கு சென்று நமது மாநிலத்திற்கு குரல் கொடுப்பவர்...அவர்யார் என்று உங்களுக்கே தெரிந் திருக்கும்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
//


நீங்க எப்ப சார் வெளி மாநிலத்துக்கு போனீங்க ?

Ahamed irshad  – (15 செப்டம்பர், 2010 அன்று PM 5:01)  

அவரு பத்தி பதிவ போட்டு அநியாயமா நேரத்தை வேஸ்ட் பண்ணீட்டிங்களே சகா..எதிர்க்கிறேன் எதிர்க்கிறேன்னு சொல்லியே அவரப்பத்தியே பதிவு போடுவது

''ஏய்யா இப்படி''

யூர்கன் க்ருகியர்  – (16 செப்டம்பர், 2010 அன்று AM 9:36)  

//அஹமது இர்ஷாத் கூறியது... //


HA HA HA !!

நான் எங்கங்க "அவர " எதிர்த்தேன் ?

சொம்பு தூக்கிகளை பற்றிதானே கடுப்பா எழுதி இருக்கேன் ..
எந்திரன் பற்றி பதிவு போட்டாலே அவர எதிர்கிறேன்னு அர்த்தமா ?
ஏய்யா இப்படி ?

சரி விடு நண்பா அடுத்த பதிவுல எந்திரன் லைட்பாய்யில் இருந்து தயாரிப்பாளர் வரை சூப்பரோ சூப்பர் ன்னு போட்டுடலாம் !

thiyaa  – (21 செப்டம்பர், 2010 அன்று AM 10:19)  

அருமையான தரமான பகிர்வு

பெயரில்லா –   – (27 செப்டம்பர், 2010 அன்று PM 12:38)  

தமிழர்கள் பெருமை படுவதற்கு ரஜினி படம்தானா கிடைத்தது ?//
அதை விட்டா கருணாநிதி பாராட்டு விழா தான் பரவாயில்லையா

Unknown  – (14 அக்டோபர், 2010 அன்று AM 1:50)  

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

vimalanperali  – (11 நவம்பர், 2010 அன்று PM 11:02)  

சின்ன வதில் முத்து காமிக்கிஸ் என்கிறபுத்தகத்தை படித்துள்ளேன்.அதே எபெக்ட் எந்திரன் படத்தில்.

பித்தனின் வாக்கு  – (1 டிசம்பர், 2010 அன்று PM 10:50)  

தமிழர்கள் பெருமை படுவதற்கு ரஜினி படம்தானா கிடைத்தது ?///


எங்க தலைவரை பத்தி இன்னா நைனா கூவரே. எதுக்கு மருவாதியா ஒரு மறுப்பு பதிவு போட்டுரு இல்லைன்னா அப்புறம் ராங்கா போய்டும்.

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP