பென் டிரைவ் உஷார் மேட்டர்!

ஹலோ

"ஹலோ ..." ன்னு தூரத்திலிருந்து சத்தம் கேட்டவுடன் .."நம்மள எவண்டா கூப்பிடரவன்னு" திரும்பி பார்த்தா " எக்ஸ்கியுஸ் மீ சார் ..ஒன் மினிட் ப்ளீஸ்! அப்படின்னு டிப் டாப்பா ஒரு ஆள் என்னை நோக்கி வந்துகொண்டு இருந்தான்.

"சார் நான் ஒரு சேல்ஸ் மேன். என்கிட்ட பென் டிரைவ் நிறைய இருக்கு எல்லாமே 32 ஜி பி..
வெல ஒன்னும் அதிகமில்லை ஜஸ்ட் ஐந்நூறு ரூபா தான்" அப்படின்னான்!


என்னாது 32 ஜி பி யா ?
என்கிட்ட இருக்கிற லாப்டாப்பே நாப்பது ஜி.பிதான் தமாந்தூண்டு மெமரி ஸ்டிக்கு முப்பத்திரண்டு ஜி பி யா ? எத்தன படம் ,,எத்தன பிச்சரு எத்தன டேட்டா சேவ் பண்ணலாம்னு அப்படின்னு வாய திறந்துக்கிட்டு யோசித்துக்கொண்டிருக்கும் போதே என் பிரண்டு ஒருத்தன் "இருநூத்தி ஐம்பது ரூபான்னா வாங்கறோம்" அப்படின்னு பாதியாக குறைத்தான்.

அதிக பேரம் பேசாமல் டீலுக்கு ஒத்துக்கிட்டான்....

என்கூட இருந்த ஜுனியர் ஒருத்தன் "சார் இது வொர்க் ஆகுமா ஆகாதான்னு செக் பண்ணனும்னு" சொன்னதுதான் தாமதம் ...
"எட்றா லேப்டாப்பை சொருகுடா பென் டிரைவை" ன்னு செக் பண்ணா வெரி நைஸ்! வொர்க் ஆகுது.. :)

டேட்டாவை உள்ளேயும் வெளியவும் இழுத்து போட்டுபார்த்தா சும்மா கலக்கல்..
இன்னியோட இந்த ஒரு ஜி பி ரெண்டு ஜி பி பென் டிரைவை எல்லாம் சீண்டக்கூட மாட்டேன்னு, ஆசை ஆசையா இந்த 32 ஜி பி பென் டிரைவ் ஐ யூஸ் பண்ணேன்.

எங்க ஆபிசுல இருக்கறவங்க எல்லாம் என்கிட்ட கோபப்பட்டாங்க ஏன் எனக்கு ஒன்னு வாங்கலன்னு !

நான் சொன்னேன் "அவன் யாரோ எவனோ தெரியாது ..நாங்கல்லாம் .ஆபீஸ் முடிஞ்சி எங்க ஏரியாவில் இருக்கிற ஓர கடையில தம்மு பத்த வச்சிக்கிட்டு இருக்கும்போது ஒருத்தன் வந்து வித்துக்கிட்டு இருந்தான் அவன் அட்ரஸ் எல்லாம் கேட்கல .. வெரி சாரி" அப்படின்னுட்டேன்..

மறுபடியும் அவன பார்த்தா ..உங்க எல்லாத்துக்கும் வாங்கி வைக்கிறேன் ..மனச தேத்திக்குங்க மக்களேன்னு கர்வத்துடன் சொன்னேன்..


ஒவ்வொரு நாள் காலையிலும் எங்க ஆபிசுல இருப்பவர்கள் "அவன் கிடைச்சானா ..அவன் கிடைச்சானா " ன்னு ஒரே தொல்லை ...நானும் அந்த ஏரியா பூரா தேடி பார்த்துட்டேன் ஆளே அகப்படலன்னு! ஒரு பிட்ட போட்டுட்டு ஒவ்வொரு முறையும் எஸ்கேப் ஆகிடுவேன்


இதெல்லாம் எத்தன நாளைக்கின்றீங்க ...

வெறும் ஏழு நாள்தான் .

இப்பல்லாம் பென் டிரைவ் உள்ள இருந்த அத்தனை மேட்டரும் கரப்ட் ஆகுது .
எப்ப கரப்ட் ஆகும்ம்னு கணிக்க முடியல..... பார்மெட் பண்ணி உபயோகிக்கனும்....பிறகு மறுபடியும் கரப்ட் ஆகும் திரும்பவும் பார்மெட் ...SH** too hectic :(

இதனாலேயே மிக முக்கியமான டேட்டாக்களை உள்ளே வைப்பதில்லை
இதுக்கு முன்ன இருந்த அந்த ஒன் ஜி பி பென் டிரைவை தேடி கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும்ம்னு ஆயிடிச்சி .

இப்பவும் எங்க ஆபிசுல இருப்பவர்கள் கேட்கிறாங்க பென் டிரைவை விக்கிறவன்
கிடைச்சானான்னு..

ஆனா இந்த முறை உண்மையை சொன்னேன் "நானும் அந்த ஏரியா பூரா தேடி பார்த்துட்டேன் ஆளே அகப்படலன்னு!"....
Read more...

வரப்போகுது மழைக்காலம் - பார்ட் ரெண்டு!


பெ
ரும்பாலான இடங்களில் ஏற்கனவே மழைக்காலம் ஆரம்பித்தாயிற்று.
ஒரு சில இடங்களில் இன்னும் சில நாட்களில் வந்து விடும்.
இப்ப நம்ப என்ன பண்ணனும்னு பதிவு போதையில் யோசிச்சபோது தோன்றிய முன் யோசனைகளை (?) உங்களுடன் பகிந்துக்குறேன்.

1. ரெயின் கோட் இல்லாதவங்க முதல்ல கடையில போய் வாங்கிடுங்க.
"வானம் பொத்துக்கிட்டு" ஊத்தும்போது இருக்கும் அநியாய விலையை விட "வானம் பொத்திக்கினு" இருக்கும்போது விலை கொஞ்சம் சுமாரா இருக்கும்
குடை கூட அப்படிதான் !


2. மழைக்காலங்களில் பொதுவாக நீர் சம்மந்தமான சுகாதார சீர் கேடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால இப்பவே நல்ல ஒரு "வாட்டர் பியுரிபியர்" வாங்கிடுங்க!


3. எமர்ஜென்சி லாம்ப் வாங்கி வைச்சுக்கங்க. அடிக்கடி பவர் கட் ஆகும்.
(இதெல்லாம் பழகினதுதானே!..புதுசா என்ன ?)


4. வாட்டர் ஹீட்டர் இல்லைன்னா வாங்கிக்குங்க ... இருந்தா.. நல்லா இருக்கான்னு இப்பவே செக் பண்ணி வச்சுக்குங்க !


5. செருப்பு ஓவரா தேஞ்சி போயருசின்னா ஒண்ணு (ஒண்ணுன்னா ஒரு ஜோடி)வாங்கிக்குங்க ..... வழுக்கி விழாம தப்பிச்சுக்குங்க! (Applicable for shoe also!)


6. பிரேக் பிடித்தா பத்தடி தள்ளி நிக்கும் டூவீலர் வைத்திருப்பவர்கள் இப்பவே சர்வீசுக்கு விட்டுடுங்க.... ரொம்ப முக்கியம் டயர் கண்டிஷன் நல்லா இருக்கணும். டயர் தேய்ந்து டியுப் மாதிரி இருக்கா ...மாத்திடுங்க

7. வாட்டர் ப்ரூப் மொபைல் கவர் வாங்கி மொபைலை பாதுக்காத்துக்கொள்ளுங்கள்.

8. மூட்டை பூச்சி தொந்தரவு இருந்தா இப்பவே என்னன்னு பாருங்க .

9. தடிமனான பெட் சீட் மற்றும் கம்பளி போன்றவைகளை இப்பவே துவைத்து விடுங்கள்.

10. உலர்ந்த வேப்பிலைகளை சேகரித்துக்கொள்ளுங்கள். அடிக்கடி இதில் வீட்டில் புகை போட்டால் கொசு போன்றவை அண்டாது
11. நீங்களே உங்க வீட்டிலுள்ள அணைத்து தண்ணி பைப் லைன்களை சரி பார்க்கவும்.
மழை பெய்யும் பொழுது தண்ணி எங்க லீக் ஆகுதுன்னு கண்டு பிடிப்பது கடினம்

12. வீட்டில் எலெக்ட்ரிகல் எர்த்திங் ரொம்ப முக்கியம். முறையான முறையில் சரியான வயரிங் செய்யப்பட்டிருக்க வேண்டும்.


13. இடி இடிக்கும்போது கேபிள் வயர் - ஐ பிடிங்கி விடுவாங்க. சில சமயம் அந்த வயர் இரும்பு போன்ற மின் கடத்திகளுடன் தொடும்பொழுது அபாயகரமான விளைவுகள் ஏற்படலாம். கவனம் தேவை. பிளாஸ்டிக் இல் மூடி போன்ற சாதனத்தை வாங்கி வைக்கவும்


14. டிரைனேஜ் வழிகளை இப்பவே தூர் வாரிடுங்க ..அடைமழையின்போது அடைத்துக்கொண்டால் கஷ்டம்

15. மழையில் நடந்து போகும்பொழுது ஒரு பெரிய கைதடியை எடுத்துக்கொண்டு முன்னாள் தட்டிக்கொண்டே செல்லுங்கள். நம்மூரு ரோடுல ஒரு அடி குழியும் இருக்கும் .. ஒரு ஆள் ஆழ குழியும் இருக்கும்16. மிகவும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் ஒரு பெரிய வாளியை வாங்கி வச்சுக்குங்க...என்ன தண்ணி வீட்டுக்குள்ள வந்திருச்சுன்னா மொண்டு மொண்டு வெளியில் ஊத்த ரொம்ப வசதியா இருக்கும் !


17. இதுக்கு மேலயும் எதாவது உபயோகமான யோசனைகள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும் ...படிக்கறவங்களுக்கு உபயோகமாக இருக்கும்


18. இன்று எனக்கு வந்த ஒரு எஸ் எம் எஸ் :-

Next time when rain comes, try to count the drops…

How much you count, that much you like me ….
How much you miss, that much I like U………..


எப்பூடி ?

குறிப்பு : இவ்வளவு முன்னேச்சரிக்கைகளையும் பண்ணி வச்சுக்கிட்டு கவருமெண்டு குடுத்த இலவச டிவில அல்லக்கைகள் போடற குத்தாட்டத்தையும் அழுகியவாதிகளின் அநியாய பொய் அறிக்கைகளையும் பார்த்து கொண்டே வட போண்டாவையும் கோக்கையும் குடிச்சி மழை காலத்தை என்ஜாய் பண்ணுங்க இனிய தமிழ் மக்களே !


ஸ்ரீலங்கா தமிழனுங்க எப்படி போனா நமக்கென்ன ? வெயில்ல காஞ்சா என்ன .. மழையில குளிச்சா என்ன ?

Read more...

வரப்போகுது மழைக்காலம் .. ஜாக்கிரதை ! - பார்ட் ஒண்ணு!
வ்வொரு மழைக்காலமும் ஒவ்வொரு அனுபவத்தை நம்முள் விட்டு செல்கிறது.
பலருக்கு இது அருமையான கால மாற்றம் மட்டுமே, சிலருக்கு ஆழமான மன வாட்டத்தை விட்டு செல்கிறது :(

இந்த மொக்கைக்கு விளக்கமெல்லாம் கேட்கபடாது .....


கீழே உள்ள படங்கள பாருங்க உங்களுக்கே தெரியும் ....இந்த மாதிரி சூழ்நிலையில் நாம் இருந்தால் நமக்கு எப்படி இருக்கும் ...
ரொம்ப பீலிங்கா இருக்கு இல்ல ?
இதுக்கே கலங்கிட்டா எப்படி....

இயற்கை மழையில்தான் இவ்வளவு சோகம் என்றான் செயற்கை மழையில் இத விட பெரும் சோகம்!!
நீங்களே பாருங்க என்னமா கஷ்டபடுறாங்க.....

நன்றி : கூகிள் மற்றும் போஸ்டன் பிக் பிக்சர்ஸ்

குறிப்பு :
இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடுபவர்களுக்கு "மழை வருது ..மழை வருது..குடை கொண்டு வா" மற்றும் "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்" பாடல்கள் ரிங் டோன் தனி மடலில் அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மாதிரி சிறப்பு சலுகையை அறிவித்தும் ஈ காக்கா குருவி கூட நம்ம பக்கம் காணமே.... தப்பு தப்பா பதிவு போடறமோ ??????

Read more...

எதிரி வென்றான் ; துரோகி வீழ்ந்தான்;

கி

ரிக்கெட் எனக்கு ஊறுகாய் மாதிரி .. டிவி பார்த்துக்கொண்டு இருக்கும்போது அப்பப்ப மட்டும் ஸ்கோர் என்ன என்பதை தெரிந்து கொள்வதோடு சரி!

இன்றைக்கு நியூஸ் பார்த்தா ஐ சி சி ட்வென்டி ட்வென்டி ல பாகிஸ்தான் சீக்கு லங்காவை வின் பண்ணிடுச்சாம்!

இந்த நியூஸ் கேள்வி பட்டதுமே எனக்கு சட்டென நினைவுக்கு வந்த வார்த்தைகள்

ங்கொய்யால ..எதிரி வென்றான் ; துரோகி வீழ்ந்தான்;எதிரி வென்றான் !


துரோகி வீழ்ந்தான் !இந்தியன் கிரிக்கெட் டீம் இத பத்தி என்ன சொல்றாங்கன்னா ...


அம்பது ஓவர் மேட்ச் ஆக இருந்தாலும் சரி இருபது ஓவர் மேட்ச் ஆக இருந்தாலும் சரி உலக கோப்பைனாவே நாங்க ஒருமுறைதான் ஜெயிப்போம்
நாங்க ஒருமுறை ஜெயிச்சா நூறு முறை ஜெயிச்ச மாதிரி ..அப்படி நினச்சிக்கிட்டு மனச தேத்திக்குங்க மக்களே !

Read more...

வீக் எண்டு பார்ட்டி....

வெ
ள்ளிகிழமை ஆனாலே எங்க ஆபிசுல உள்ளவங்க எல்லாம் "ஹாப்பி வீக் எண்டு !ஹாப்பி வீக் எண்டு !" ஒரே வாழ்த்துக்கள்.


ஒவ்வொர்தரும் இந்த வீக் எண்டுல இத பண்ண போறேன் அத பண்ண போறேன்னு பேசிட்டு இருப்பாங்க


இது எல்லா அலுவலகங்களிலும் நடப்பதுதான் ...

கீழே உள்ள போட்டோக்களை பாருங்க .... இப்படியுமா வீக் எண்டை கொண்டாடுவாங்க என்று சிரிப்பீங்க...

படங்களை பெரிதாக்க கிளிக்கவும்.


இவனுங்கல்லாம் யாரு எவன்னு தெரியாது ஆனா படங்கள் சிரிப்பை தூண்டியதால் பதிந்துள்ளேன்

குறிப்பு : இப்படி அநியாயத்துக்கு எல்லாத்தையும் குடிச்சா Week End முடியறதுக்குள்ள Body End ஆகிடும்.

Read more...

ஹாப்பி ரிங்கிங் ......!!
கே

ட்டவுடன் மனதை வருடற மாதிரியும் இல்லன்ன வயிற்றை கலக்கற மாதிரியும் இந்த காலத்தில் அவனவன் விதவிதமா ரிங் டோன் வச்சிக்கிட்டு கலக்குறாங்க.


நண்பர்களில் யாராவது நல்ல ரிங் டோன் வச்சிருந்தாங்கன்னா கேட்டவுடன் பிடித்துபோய் விட்டால் எனக்கும் குடுங்க.. என்று எத்தனை நாட்களுக்குத்தான் கேட்கிறது?

சில சமயம் ரிங் டோன் வச்ச ஒரு வாரத்திலேயே வேற ஒரு ரிங் டோனை மாத்தினா என்ன.. என்கிற நினைப்பு வரும்.

நல்ல பாடல்கள் கேட்கும்பொழுது பாடலில் சில பகுதிகள் மட்டும் நமக்கு ரிங் டோனா இருந்தா நல்லாருக்குமேன்னு தோணும் ..

அந்த மாதிரியாகப்பட்ட சமயத்தில் பாட்டின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க ஒரு நல்ல மென்பொருள் இருந்தா நல்லாருக்குமேன்னு கூகிள்-ல தேடினேன் .

ஒரே சர்ச்-ல கிடைத்தது ஒரு மென்பொருள் .அதன் பெயர் எம் பி த்ரீ - கட்டர்.

பேருக்கு ஏத்த மாதிரி எம் பி த்ரீ - File ஐ எந்த பகுதியையும் வெட்டிக்கலாம்.வெட்டிய பகுதியை உங்கள் மொபைல் போன் -இல் ஏற்றுங்கள்.


அப்புறம் என்ன ... உங்க ரிங் டோனால் மத்தவுங்க முன்னாடி கலக்குங்க ...

தரவிறக்கம் செய்ய
லிங்க் இங்க கிளிக் பண்ணுங்க ......டவுன்லோட் பண்ணி வெட்டி என்ஜாய் பண்ணுங்க .


ஹாப்பி ரிங்கிங் ......!!

Read more...

இலங்கை கடற்படை அட்டூழியம் குறித்து பிரமுகர்களின் சாட்டையடி கருத்துக்கள்.மீ
னவர்கள்களின் மீன்பிடி வலைகள் அறுப்பு இலங்கை கடற்படை அட்டூழியம் -செய்தி .


இந்த விஷத்தை பத்தி சாரி ..விசயத்தை பத்தி சில பிரமுகர்கள் என்ன சொல்றாங்கன்னு பார்த்தா..அதென்ன பார்த்தா . கீழதான் போய் படிங்களேன் .....மண்ணு மாக்கான் சிங்கு :

அப்ப்பாடி .....நான்கூட பஞ்சாப் பக்கமா பாகிஸ்தான் பார்டர்ல தான் நடந்திருச்சோன்னு பயந்துட்டேன்.... ராமேஷ்வரந்தானா . ..

இதோ இப்பவே சூப்புற மேனனையும் நாரவாயனையும் அனுப்பிச்சி என்னன்னு கேட்டுடறேன் ....

மேட்டர் ப்பினிஷ்..... !


குலைன்ஜர்


யாரங்கே ...ஏன் நோட்டையும் பேனாவையும் யாராவது பார்த்தீங்களா ..
மக்களுக்கு கவிதையோ, கட்டுரையோ அல்லது கட்டுக்கதையா ஏதாவது எழுதனா போச்சி...
மக்கள் அனைவரும் அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்!செயின்லதா


யோவ்..அதான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன் இல்ல .....
டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு ....!


டாமில் மக்கள்

சிங்களனுங்க எப்பவுமே இப்படிதான் பாஸ்!
எப்பவுமே தமிழர்களின் வலைய அறுத்துக்கிட்டும் தமிழன்களை சுட்டுக்கிட்டுமே இருப்பாங்க.

இதெல்லாம் புதுசா ...
எப்பவும் நடக்கறதுதானே !!
இதெல்லாம் பார்த்தா டிவி, அரிசி ,சிலிண்டர் எல்லாம் சும்மாவே கிடைக்குமா .. ???


************************************************************************************************

மேற்சொன்னவை பிரமுகர்களின் சாட்டையடி கருத்துக்களா அல்லது நாமதான் பிரமுகர்களுக்கு சாட்டையடி தரணுமா அப்படின்னு யோசிச்சு சொல்லுங்க .....
இல்லன்ன வழக்கம்போல மானாட முயலாட பாக்க போங்க .
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு --- தூத்தேரிக்க ... !!
Read more...

ஐ சி சி ட்வென்டி ட்வென்டி - ஸ்ரீ லங்காவை உதாசீனப்படுத்துங்கள் !

சி சி ட்வென்டி ட்வென்டி போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று கொண்டிருப்பது உங்க எல்லாத்துக்கும் தெரியும்.

(அதான் தெரியுமேன்றவங்களுக்கு.. ... ஸ்டார்டிங் எல்லாம் தெரிஞ்ச மேட்டர வச்சுதான் ஆரம்பிக்கனும்னு நான் சொல்லிக்கொள்கிறேன் )


ஐ பி எல் லை பார்த்து பார்த்து மக்கள் களைப்படைந்து போனதால் ஐ சி சி ட்வென்டி ட்வென்டி ஆரம்பம் ஸ்லொவ்வா இருந்தாலும் போக போக பரபரப்பாகும்னு நினைக்கிறேன் .


ஐ சி சி ட்டி டொண்டில ரெண்டு விஷயம் ஆச்சர்யமா இருந்தது.

ஒண்ணு மேட்ச் எல்லாம் இங்கிலாந்தில் நடந்தாலும் கிரவுண்டு சென்டர் ல இருந்து எல்லா சைடுலயும் பெரும்பாலான விளம்பரங்கள் இந்தியாவிற்காகவே இருந்தது

ரெண்டு, சியர் கேள்ஸ் எல்லாரும் இழுத்து மூடிகிட்டு ஆட்டம் போட்டாங்க! :)

too bad!


இப்போ மேட்டரு என்னானா நம்ம எல்லாரும் ஸ்ரீ லங்கா ஆடற மேட்சு எதையும் பார்க்ககூடாதுன்றதுதான்.வக்காளி அவனுங்க பைனலே ஆடனாலும் சரி..!என்ன பொறுத்தவரை நம் முதல் எதிரி சிங்கள லங்கா அடுத்துதான் பாக்கிஸ்தான்.ஐ சி சி ட்வென்டி ட்வென்டி மேட்ச் அட்டவணையை பார்க்கணும்னா இங்க கிளிக் பண்ணி தெரிஞ்சிக்குங்கMatch 8: Australia v Sri Lanka at Trent Bridge, Nottingham
Jun 8 16:30 GMT.
Match 11: Sri Lanka v West Indies at Trent Bridge, Nottingham
Jun 10 12:30 GMT
மேற்கண்ட நாட்களில் நம்ம பரம எதிரி ஆயிட்ட சிங்களலங்காவின் போட்டிகள் உள்ளது..தயவு செய்து கூடுமானவரை சீட் லங்காவின் ஆட்டங்களை பார்ப்பதை தவிர்க்குமாறு வேண்டி கொள்கிறேன்.


என்ன மக்களே ..இது கூட முடியலன்னா ...எப்படி ?? போங்.கங்.கங்.க!!!குறிப்பு 1 : ஐ சி சி ல மட்டும் இல்ல மத்த எல்லா விசயங்களிலும் சீட் (Cheat) லங்காவை ஒரு பொருட்டாகவே மதிக்க கூடாது ... சிங்களவனை சொல்லி சொல்லி அடிக்கிற நாள் வராமலா போய்விடும் .....குறிப்பு 2 : ஐ சி சி ல மட்டுமில்ல சிங்களலங்கா ஐ சி யூ ல இருந்தாலும் கண்டுக்கப்படாது சொல்லிப்பிட்டேன் ஆமா.. !

Read more...

ஜெனரல் நாலேட்ஜ் கொஞ்சமாவது இருக்கா ? -படம் பார்த்து ஆள கண்டுபுடி!வாழ்க்கையில் ஏதாவதொரு சமயத்தில் "ஜெனரல் நாலேட்ஜ் கொஞ்சமாவது இருக்கா ? " அப்படின்ற கேள்வியை நாம் எல்லாரும் பேஸ் பண்ணியிருப்போம்.
அப்போல்லாம் கோபம் வருமே தவிர நம்மகிட்ட உண்மையிலேயே எந்தளவு ஜெனரல் நாலேட்ஜ்" இருக்குன்னு சோதித்து பார்ப்பதில்லை.

அப்படி சோதித்து பார்க்க ஒரு சான்ஸ்!


நீங்க எவ்வளவு பெரிய அறிவாளி என்பதை நிருபிக்க அல்லது தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு!

கீழே உள்ள படத்தை பெரிதாக்க கிளிக் பண்ணுங்க அதுக்கப்புறம் அந்த படத்தில் உள்ள பிரபலங்கள் யார் யாரெல்லாம் இருக்காங்கன்றதை கண்டுபிடிங்க.

எந்த அளவு அதிகமா (அதிக எண்ணிக்கை நபர்கள் ) கண்டு பிடிக்கிறீர்களோ அந்தளவு உங்கள் ஜெனெரல் நாலேசு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.


மொத்தம் நூறோ, நூத்தி பன்னிரெண்டோ பிரபலங்கள் இந்த பெயின்டிங்கில் இருக்காங்களாம் அதுல குறைந்தபட்சம் நாப்பது பேர கண்டுபிடிசீட்டீங்கன்னா நீங்க ஓரளவுக்காவது அறிவாளியாம்!

குறிப்பு 1: இந்த "படம் பார்த்து ஆள கண்டுபுடி" விளையாட்டை வைத்து மட்டும் ஒருத்தர் அறிவாளியா இல்லையான்னு எடை போடக்கூடாது.

ஏன்னா நான் மொத்தம் பத்து பேர மட்டுமே கண்டுபிடித்தேன்.....

குறிப்பு 2: விடை தெரிஞ்சிக்குனும்மின்னா இங்க போய் பார்த்துக்கங்க

குறிப்பு 3: இந்த படத்தை உங்க கம்ப்யூட்டர்-ல சேவ் பண்ணிட்டு பெரிது படுத்தி பார்க்கலாம்


குறிப்பு 4: நானெல்லாம் பிறவியிலேயே அறிவாளின்றவங்க எல்லோரும் என்னோட சேர்ந்து இந்த இடுகைக்கு ஒட்டு போடுங்க பாக்கலாம் !!
Read more...

ராஜ்பக்கே டாய்லெட்ஸ் பிரைவேட் லிமிடெட்ராஜ்பக்கே டாய்லெட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஸ்ரீ லங்காவை தலைமை இடமாக கொண்டு டாய்லெட்ஸ் தயாரிப்பில் ஈடுபடும் முன்னணி நிறுவனமாகும் .
டெல்லி யில் பிரதான கிளை ஒன்று இன்று திறக்கப்பட்டது. இங்கு இவர்கள் பதிதாக வடிவமைத்த டாய்லெட் ஒன்று அறிமுகபடுத்தப்பட்டது.


காலை கடுப்பில் இருப்பினும் காசுவல் ஆக சென்று வர ஒரு புதிய உத்தியை கையாண்டு இருக்கிறார்கள்.
டாய்லெட் வரலாற்றிலேயே முதன்முறையாக புதிய வகை உத்தியை கையாண்டு இருப்பதினால் ராஜ்பக்கே நிறுவனம் இதற்கான பேடன்ட் பதிவு செய்துள்ளது.
இதற்கு ஐ நா சபையும் பாராட்டு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. "ஆய்"யினும் சீனாக்காரர்கள் வழக்கம் போல டூப்ளிகேட் செய்து கள்ள மார்கெட் இல உலவ விட்டுருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இன்று செய்தியாளர் பேட்டியில் ராஜ்பக்கே நிறுவனம் வெளியிட்ட புகைப்படம் உங்கள் பார்வைக்கு ......
(கீழே ஸ்க்ரோல் பண்ணி பாருங்க......!!)


Read more...

"இந்தி'யனுக்கு விழுந்தாதான் அடி; தமிழனுக்கு விழுந்தா அது வெடி.


இந்தியர்களுக்கு எதிரான அடி உதை மற்றும் இன வெறி சம்மந்தமாக ஆஸ்ட்ரேலியா வில் இந்தியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் - இது செய்தி!

இது குறித்து பெரும்பாலான ஹிந்தி நாளேடுகள் தன முதற் பக்கத்திலேயே உணர்ச்சிபூர்வ கட்டுரைகளுடன் போட்டோ வுடன் செய்திகளை பிரசுரத்திக்கின்றன ஆங்கிலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட..

அடி உதைக்கே முதற்பக்கத்தில் பரபரப்பாக வெளியிடும் இவர்கள்..ஆயிரமாயிரம் பேர் கொல்லப்பட்டதை இன்னும் கொல்லப்படுவதை, அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தாது மிக மிக வருத்தமளிக்கிறது.

இதில் சில பத்திரிக்கைகள் ஸ்ரீ லங்காவின் மக்கள் அவலத்தை நியாயபடுத்துவது இன்னும் கேவலம். இதுல மகிந்தா ராஜபக்சே வின் நேர்காணல் செய்திகள் வேறு பிரமாண்டமாய் வெளியிட்டிருக்கிறார்கள்.காரி துப்பலாம் போலேருக்கு.


நேதாஜிக்கும் ஒசாமாவுக்கும் வித்தியாசம் தெரியாதவன் எல்லாம் டெரரிசம் பத்தி பேசறானுங்க.

தனக்கு விழுந்தாதான் அடி; தமிழனுக்கு விழுந்தா அது வெடி அப்படின்னு நினைக்கிற இந்த ஹிந்தி காரங்களோட மீடியாக்களை என்னவென்று திட்ட ?குறிப்பு 1: தமிழ்நாட்டில் ஹிந்து மற்றும் தினமலரின் தமிழ் எதிர்ப்பு செய்திகள் தமிழ்நாட்டிலேயே பிரசுரிப்பதை தடுக்க முடியாத நீ ஹிந்தி காரனுங்க பத்திரிக்கையை விமர்சனம் செய்வதற்கு கிஞ்சித்தும் தகுதி இல்லதவனாகிறாய் என்று என் மனமே என்னை கொட்டுகிறது.


குறிப்பு 2: ஸ்ரீ லங்காவின் மனித பேரவலத்தை தடுக்க முடியாத தமிழ் மக்களுக்கு எந்த நாட்டிலும் இந்தியர்களுக்கு ஆதரவாக பேச தகுதி இல்லை! தகுதி இல்லை !தகுதி இல்லை! இன்னும் கூட உரத்து சொல்லுவேன்.

ஏன்னா,,, தமிழன் சொன்னா எவனும் கேட்க மாட்டான்...முதல்வர் உட்பட.
காசு வாங்கி ஒட்டு போடத்தான் தெரியும் ஆனா கேள்வி கேட்க தெரியாது. புலம்பத்தான் தெரியும் அதுவும் மனசுக்குள்ளேயே...கேட்டா இரையான்மையாம்.. சாரி இறையான்மையாம்!

இறையான்மை எல்லாம் ஆண்மையற்றவனுக்கு மட்டுமே ..... இறையான்மை பத்தி சிங்கு கிட்ட சொல்லி பாரு .... ங்கொய்யால... பேண்ட கலட்டி பெண்ட நிமித்திடுவான்!


குறிப்பு 3: இந்த விடயம் ஆறு மாதத்திற்கு முன்னாடி நடந்திருந்தா என்னுடைய ரியாக்சனே வேற ....எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் ? :(

குறிப்பு 4: மனதில் பட்டதை அப்படியே "கொட்டி"இருக்கிறேன். தவறுன்னா மன்னிச்சுக்குங்க "இந்தி" யர்களே!

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP