வரப்போகுது மழைக்காலம் - பார்ட் ரெண்டு!
ரும்பாலான இடங்களில் ஏற்கனவே மழைக்காலம் ஆரம்பித்தாயிற்று.
ஒரு சில இடங்களில் இன்னும் சில நாட்களில் வந்து விடும்.
இப்ப நம்ப என்ன பண்ணனும்னு பதிவு போதையில் யோசிச்சபோது தோன்றிய முன் யோசனைகளை (?) உங்களுடன் பகிந்துக்குறேன்.
1. ரெயின் கோட் இல்லாதவங்க முதல்ல கடையில போய் வாங்கிடுங்க.
"வானம் பொத்துக்கிட்டு" ஊத்தும்போது இருக்கும் அநியாய விலையை விட "வானம் பொத்திக்கினு" இருக்கும்போது விலை கொஞ்சம் சுமாரா இருக்கும்
குடை கூட அப்படிதான் !
2. மழைக்காலங்களில் பொதுவாக நீர் சம்மந்தமான சுகாதார சீர் கேடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால இப்பவே நல்ல ஒரு "வாட்டர் பியுரிபியர்" வாங்கிடுங்க!
3. எமர்ஜென்சி லாம்ப் வாங்கி வைச்சுக்கங்க. அடிக்கடி பவர் கட் ஆகும்.
(இதெல்லாம் பழகினதுதானே!..புதுசா என்ன ?)
4. வாட்டர் ஹீட்டர் இல்லைன்னா வாங்கிக்குங்க ... இருந்தா.. நல்லா இருக்கான்னு இப்பவே செக் பண்ணி வச்சுக்குங்க !
5. செருப்பு ஓவரா தேஞ்சி போயருசின்னா ஒண்ணு (ஒண்ணுன்னா ஒரு ஜோடி)வாங்கிக்குங்க ..... வழுக்கி விழாம தப்பிச்சுக்குங்க! (Applicable for shoe also!)
7. வாட்டர் ப்ரூப் மொபைல் கவர் வாங்கி மொபைலை பாதுக்காத்துக்கொள்ளுங்கள்.
8. மூட்டை பூச்சி தொந்தரவு இருந்தா இப்பவே என்னன்னு பாருங்க .
9. தடிமனான பெட் சீட் மற்றும் கம்பளி போன்றவைகளை இப்பவே துவைத்து விடுங்கள்.
10. உலர்ந்த வேப்பிலைகளை சேகரித்துக்கொள்ளுங்கள். அடிக்கடி இதில் வீட்டில் புகை போட்டால் கொசு போன்றவை அண்டாது
11. நீங்களே உங்க வீட்டிலுள்ள அணைத்து தண்ணி பைப் லைன்களை சரி பார்க்கவும்.
மழை பெய்யும் பொழுது தண்ணி எங்க லீக் ஆகுதுன்னு கண்டு பிடிப்பது கடினம்
12. வீட்டில் எலெக்ட்ரிகல் எர்த்திங் ரொம்ப முக்கியம். முறையான முறையில் சரியான வயரிங் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
13. இடி இடிக்கும்போது கேபிள் வயர் - ஐ பிடிங்கி விடுவாங்க. சில சமயம் அந்த வயர் இரும்பு போன்ற மின் கடத்திகளுடன் தொடும்பொழுது அபாயகரமான விளைவுகள் ஏற்படலாம். கவனம் தேவை. பிளாஸ்டிக் இல் மூடி போன்ற சாதனத்தை வாங்கி வைக்கவும்
14. டிரைனேஜ் வழிகளை இப்பவே தூர் வாரிடுங்க ..அடைமழையின்போது அடைத்துக்கொண்டால் கஷ்டம்
15. மழையில் நடந்து போகும்பொழுது ஒரு பெரிய கைதடியை எடுத்துக்கொண்டு முன்னாள் தட்டிக்கொண்டே செல்லுங்கள். நம்மூரு ரோடுல ஒரு அடி குழியும் இருக்கும் .. ஒரு ஆள் ஆழ குழியும் இருக்கும்
16. மிகவும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் ஒரு பெரிய வாளியை வாங்கி வச்சுக்குங்க...என்ன தண்ணி வீட்டுக்குள்ள வந்திருச்சுன்னா மொண்டு மொண்டு வெளியில் ஊத்த ரொம்ப வசதியா இருக்கும் !
17. இதுக்கு மேலயும் எதாவது உபயோகமான யோசனைகள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும் ...படிக்கறவங்களுக்கு உபயோகமாக இருக்கும்
18. இன்று எனக்கு வந்த ஒரு எஸ் எம் எஸ் :-
Next time when rain comes, try to count the drops…
How much you count, that much you like me ….
How much you miss, that much I like U………..
எப்பூடி ?
குறிப்பு : இவ்வளவு முன்னேச்சரிக்கைகளையும் பண்ணி வச்சுக்கிட்டு கவருமெண்டு குடுத்த இலவச டிவில அல்லக்கைகள் போடற குத்தாட்டத்தையும் அழுகியவாதிகளின் அநியாய பொய் அறிக்கைகளையும் பார்த்து கொண்டே வட போண்டாவையும் கோக்கையும் குடிச்சி மழை காலத்தை என்ஜாய் பண்ணுங்க இனிய தமிழ் மக்களே !
ஸ்ரீலங்கா தமிழனுங்க எப்படி போனா நமக்கென்ன ? வெயில்ல காஞ்சா என்ன .. மழையில குளிச்சா என்ன ?
தங்கள் பதிவு நன்றாக உள்ளது.
மேலும் தங்கள் வலைப்பூவில் உள்ள 'திருக்குறள்'பகுதியின் பின்னினைப்பு இல்லாமல் 'அகரம் திருக்குறள்'என்ற படம் மட்டும் உள்ளது.கவனிக்கவும்.நன்றி.
நண்பரே...
உங்கள் முன்னேச்சரிக்கையை பார்த்து மழை வராமல் போய்விட போகின்றது...
வாழ்க வளமுடன்,
வேலன்.
//'திருக்குறள்'பகுதியின் பின்னினைப்பு இல்லாமல் 'அகரம் திருக்குறள்'என்ற படம் மட்டும் உள்ளது.கவனிக்கவும்.//
குறிப்பிட்டதற்கு ரொம்ப நன்றி திரு THANGA MANI அவர்களே
லிங்க் ஐ சரியான முறையில் இணைத்து விட்டேன். நன்றி
//உங்கள் முன்னேச்சரிக்கையை பார்த்து மழை வராமல் போய்விட போகின்றது...
//
சார்,உங்கள மாதிரி நல்லவங்க இருக்கும்பொழுது அதெப்படி மழை வராம போய் விடும் :)
வருகைக்கு நன்றி சார் .