Need Blood Group A+

Anybody in and around Pune, having A+ Blood Group, kindly contact 9762145040.

Hospital : Deenanath Mangeshkar Hospital

Read more...

ஏய்யா இப்படி ?

ஏழர மணிக்கு எதேச்சையா தான் எந்திரன் ட்ரைலர் பார்த்தேன். சொம்பு தூக்குவது எப்படி என்று ப்ரீயாக சொல்லி தராங்க ...

அவனவன் படம் பார்த்துட்டுதான் ஆஹா ஓஹோ ன்னு சொல்வாங்க . படமே பார்க்காம படம் பட்டய கெளப்பும்னு சொல்றவங்கள என்னன்னு சொல்றது..

நடிச்ச நடிகரை விட இசை அமைத்த அமைப்பாளரை விட உருவாக்கிய டயரக்டர்ரை விட தயாரித்த தயாரிப்பாளரை இப்படி புகழ்கிறீர்களே ஏய்யா இப்படி ? ( டைட்டில் வந்திடிச்சி பார்த்தீங்களா )

அரைமணி நேரத்திற்கு மேல தாங்க முடியாமல் என்னுடையா பேவரைட் TV Channel ஜீ ஸ்டுடியோ மறுபடியும் சென்றேன் ... சன் டிவி நிகழ்ச்சியை எகத்தாளமாக பார்த்த மனநிலை மாறி படத்துடன் இசைந்து ரசித்தேன். அது ஒன்னும் பிரம்மாண்டமான படம் இல்லை ... wwf எனப்படும் நவீன குஸ்தி சண்டை வீரரின் வாழ்கையை விவரிக்கும் பயணம் அது .

பெற்ற மகளும் இவரை விரும்பாத நிலையில் ஆதரவாய் இருந்த நண்பியும் கை விட்ட சூழ்நிலையில் மனம் வெறுத்து மீண்டும் WWF என்ற குஸ்தி சண்டைக்கே சென்று தன்னை விரும்பும் ரசிகர்களுக்காய் இதய பிரச்சினையில் அபாயமான கட்டத்தில் சண்டையிடும் கிளைமாக்ஸ்..


இதயத்தை பிசையும் இசையுடன் மனம் கனத்து நம் மன சலனத்துடன் படம் முடியும்...

(எப்போதாவது The Wrestler என்ற படத்தை பார்க்க நேர்ந்தால் Please Don't change the channel! )

இப்படத்தை பார்த்ததும் ஏனோ எந்திரனின் என் எதிர்பார்ப்பு சட்டென குறைந்தது ... ஏனெனில் பிரமாண்டம் என்ற வஸ்து எதார்த்தம் என்ற நிலைக்கு மாறானது.ஈர்ப்பதில் அதிக வலு கொண்டது.


என்னது.. அதற்கு பிறகு எந்திரன் ட்ரைலர் நிகழ்ச்சியை பார்க்கவில்லையா என்று கேட்கிறீகளா ... ம்ம்ஹும் மூடு இல்லையென்று டிவியை ஆப் பண்ணிட்டு இந்த பதிவை எழுதி கொண்டிருக்கிறேன் ...

இறுதியாக அணைத்து சொம்பு தூக்கிகளுக்கும் ஒரு கேள்வியை கேட்டு இப்பதிவை முடிக்கிறேன் ..

தமிழர்கள் பெருமை படுவதற்கு ரஜினி படம்தானா கிடைத்தது ?

ஏய்யா இப்படி ?

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP