ர ..ரா .. ரூப்பியா

என்னமோ போங்கோ ..... இன்று படிக்கும்/கேட்கும்/பார்க்கும் இடமெல்லாம் ரூபாய்க்கு புது சிம்பல் வந்திருக்குன்னு ஒரே மேட்டரா இருக்கு... எப்பவுமே புதிய மாற்றங்களை நாம் வரவேற்கத்தான் வேண்டும்..
பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து இந்த ரூபாய்க்கான இலச்சினையை தேர்ந்து எடுத்திருப்பார்கள் என நம்புகிறேன்.




அது எல்லாம் சரிதான் .. இந்த சிம்பலை பார்த்தால் ஏதோ ஹிந்தி எழுத்து மாதிரியே இருக்கேன்னு பார்த்தா..அது ஹிந்தி எழுத்தேதான். "ர" என்ற ஹிந்தி எழுத்தின் மேல் கோடு போட்டா இப்படிதான் இருக்கும்..
ஹிந்தி என்பது தேவநாகரி எழுத்து வடிவத்தை கொண்டது. இந்த தேவ நாகரி எழுத்து வடிவத்தைதான் இனிமே நாமெல்லாம் உபயோக படுத்த போறோம் ..

ஹிந்தி பொதுவா எனக்கு பிடிக்காது ஏன்னா ஹிந்தி ஒலிகள் பெரும்பான்மையானவை தொண்டையை அழுத்தி பிடித்து உச்சரிக்க வேண்டும். தொண்டையை அழுத்தி பிடித்து உச்சரிக்கணும் என்றால் கஷ்டம் நம்மாளுகளுக்கு. பொதுவாக நாம் தொண்டையை அழுத்தி பிடித்து செய்யும் ஒரே வேலை த்தூ" என்று துப்புவதுதான்.
(தூ என்றதும் புனைவு பதிவுகள் நியாபகம் வந்தால் அது உங்க தல விதி )

ஹிந்தி எதிர்ப்பு காரன்கலாம் என்னையா பண்றீங்க ... தண்டவாளத்தில தலைய வச்சு படுத்தாவது எதிர்ப்ப காட்ட வேணாமா ?

நான் சின்ன புள்ளையா இருந்தப்போ நம்மாளுக इंडियन ओवेर्सास வங்கியின் முன்புற பலகையில் ஹிந்தி எழுத்துக்களை அழிச்சிட்டு இருந்ததை பார்த்திருக்கேன். ஒவ்வொரு முறை அவ்வங்கியை கடக்கும் போது அந்நிகழ்ச்சி நினைவுக்கு வரும்.

அது என்னையா விஷயம் ? ஹிந்தி எழுத்துக்கள் பலகையில் இருந்தா அழிக்கிறீங்க..ஆனா ரூபாய் நோட்டுல இருக்குற ஹிந்தியை மட்டும் அழிக்கவே மாட்டேன்கிறீங்க??

ஹிந்தியை கண்டு தார் பூசி அழித்த உடன் பிறப்புகள் எதிர் காலத்தில் இந்திய ரூபாய் நோட்டில் உள்ள ஹிந்தி இலச்சினையை தார் பூசி அழிக்க தயாரா ?

கடைசியா மூன்று மேட்டரு சொல்லி இந்த மொக்கை பதிவை முடிக்கிறேன் ...

ஒண்ணு
ரூபாய் மதிப்பிற்கான அடையாளத்தை இப்படி இருந்தா நான் சந்தோஷ பட்டிருப்பேன்.




இரண்டு

தேவநாகரி எழுத்தை வைத்து ஒரு தமிழர் ரூபாய் இலச்சினையை டிசைன் செய்திருக்கார் என்றால் ... What a Contrast..dude!!

மூணு

ஏதோ டிசைன் பண்ணா IIT ல -வேலையெல்லாம் போட்டு தராங்களாம் .

நானுந்தான் ஒரு தமிழ் எழுத்த வச்சு வச்சு டிசைன் பண்ணிருக்கேன் ..குறைந்த பட்சம் Idiots Institute of Technology லாவது வேலை தராங்களா பாப்போம் ?


அப்புறம் டிஸ்கி என்னன்னா செவப்பு கலரு கேள்விகள் எல்லாம் கோவாலு புர்த்து கோமணதிற்கு ..அம்புட்டுதேன்.
நன்றி வணக்கம் ..அடுத்த பதிவில் சந்திப்போமா ?

பெயரில்லா –   – (16 ஜூலை, 2010 அன்று 9:44 PM)  

தம்பி ரொம்ப துள்ளாதே, தமிழின தலைவர் கருணாநிதிக்கு தன்னைவிட ஒரு தமிழன் பிரபல்யம் ஆனா பிடிக்காது. உன்னை தூக்கி உல்ல போட்டு விடுவார். அடக்கி வாசி.

மானமுள்ளவன் –   – (16 ஜூலை, 2010 அன்று 9:46 PM)  

தமிழனே தமிழனுக்கு எதிரி. இவன் தமிழனாக இருந்து ஒரு ஹிந்தி எழுத்தை சின்னமாக வைத்தான். இதனால் இனி எல்லோரும் கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும். இந்த துரோக செயலை வன்மையாக கண்டிக்கிறேன்

யூர்கன் க்ருகியர்  – (16 ஜூலை, 2010 அன்று 9:59 PM)  

//தம்பி ரொம்ப துள்ளாதே, //

அறிவுரைக்கு நன்றி சார்

பெயரில்லா –   – (16 ஜூலை, 2010 அன்று 10:15 PM)  

இந்தி திணிப்பை எதிர்த்து கழகங்கள் கலகம் பண்ணட்டும்.

பொன் மாலை பொழுது  – (16 ஜூலை, 2010 அன்று 10:39 PM)  

You too மாப்ள? அதில் ஆங்கில எழுத்தான ரூபாய்க்கு Rupee என்ற வார்த்தையின் முதல் எழுத்து R என்ற அடையாளமும் உள்ளதை அந்த பிள்ளை உதய குமார் விளக்கியுள்ளதை படிக்கவில்லையா?
தமிழ் எழுத்தை அடையாளமாக வைக்க டெல்லியில் இருபவர்கள் எல்லாம் கேணைகளா என்ன?
தமிழ் எழுத்துதான் அடையாளமாக் வேண்டும் என்றால் .........தமிழ் நாடு தனி நாடாக இருந்தால் தான் முடியும்.
................No........சான்சே இல்லை. .......பெரியவருக்கு K வேண்டும். அந்த அம்மா ...அதெல்லாம் முடியாது J தான் வைக்கவேண்டும் என்று ஆடும்,.

தேவையா இதெல்லாம்..??????.

அதுசரி. இப்போதான் கும்ப கர்ண தூக்கம் கலைந்ததா. இந்த மகா மொக்கைக்கு 7 மாதம் இடைவெளி வேறு.!.....

முனைவ்வ்வர் பட்டாபட்டி....  – (17 ஜூலை, 2010 அன்று 2:46 PM)  

ர--அப்படீனா.... ஒருவேளை ராஜீவ்..இல்ல..ராகுல்..

சே..சே... இருக்காது.. சோனியா அகர்வால..சே..சே... சோனியா அன்னை..அப்படி எல்லாம் பண்ணாது...


ஹி..ஹி

Jey  – (17 ஜூலை, 2010 அன்று 5:05 PM)  

ஹிந்தி ”ரா” டிஷைன் பன்ன பங்காளியும் சரி, தமிழ் ”ரா” டிஷைன் பன்னுன நீங்களும் சரி, நம்ம ரஞ்சி அம்மனியை மனசுல வச்சி, டிஷைன் பன்னிட்டு, வேரக்காரணம் சொல்ரீங்களோனு சின்ன டவுட்டு...
(சும்ம ஃபுளொவுல வந்திருச்சி, கோவப்பட்டுராத தல..)

யூர்கன் க்ருகியர்  – (20 ஜூலை, 2010 அன்று 7:46 PM)  

வருகைக்கு நன்றி

நெருப்பு கூறியது... (கழகங்கள் இல்லை கிரகங்கள் )

கக்கு - மாணிக்கம் (மொக்கை போடறதுதான் கை வந்த கலை )

பட்டாபட்டி.. கூறியது... (இருந்தாலும் இருக்கும் தலைவரே )

Jey கூறியது... (ஜெ ..ரஞ்சிதா பற்றி எதையும் விவாதிப்பது இல்லை என முடிவெடுத்து நெடு நாளாயிற்று ..அடுத்த வீடியோ வெளி வரும்வரை :) )

அஹமது இர்ஷாத் கூறியது... (தேங்க்ஸ் போர் தி கமெண்ட் )

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP