வேலை ஒண்ணு காலியா இருக்கு !! ( சத்தியமா சீரியஸ் பதிவு)

பொறியியல் பட்டபடிப்பு படித்த (Electronics/Communication/Instrumentation) குறைந்த பட்சம் ஓராண்டு அனுபவம் உள்ள தமிழர் யாராவது பூனாவிற்கு வேலையில் சேர விரும்பினால் என்னுடைய மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்..
LabVIEW தெரிந்திருந்தால் மிகவும் நல்லது ..

குறிப்பு 1: வேலை கண்டிப்பாய் வேண்டும் என மிகவும் கஷ்டப்பட்டு தேடி கொண்டிருக்கும் யாராவது இருந்தால் உடனே தொடர்பு கொள்ளவும்.. யாரோ ஒரு ஹிந்தி காரனை தேர்வு செய்வதை விட நம்மாளு ஒருத்தனை வேலைக்கு சேர்த்தா நல்லாருக்கும் இல்லையா ?

குறிப்பு 2: First Class இல் பாஸ் பண்ணி இருக்க வேண்டும் ..ஹரியரே இருக்க கூடாது என்ற கேவலமான பாலிசி எல்லாம் என்கிட்ட இல்ல .. ஒண்ணுமே தெரியல எங்கேயும் சரியான வேலை கிடைக்கல அப்படின்னு சொன்நீங்கன்னாலும் பரவா இல்ல .. எனக்கு தெரிந்த வரை நான் சொல்லி கொடுக்கிறேன்.. நாலு இடத்துக்கு போனாதானே நாலு விசயத்தை தெரிஞ்சிக்கலாம் ???? ! என்ன நான் சொல்றது ?

குறிப்பு 3: மத்தியானம் எங்க கம்பனில இலவசமா சோறு போடுவாங்க.. Don't worry ! :)

குறிப்பு 4: பேருக்கு இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஊருல லுங்கி கட்டிக்கிட்டு ஆலமரத்துக்கு கீழ குத்த வச்சு பீடி குடிச்சிக்கிட்டே ரம்மி ஆடுவதை விட்டுவிட்டு ஏதாவது உருப்படியா வேலை செய்யலாம் இல்லையா !

குறிப்பு 5: Min Salary 12000 inr.

நாட்கள் மிகவும் குறைவாய் உள்ளது..கூடுமான வரை உடனே தொடர்பு கொள்ளவும் .
நன்றி !

குட் லக் !!

கக்கு - மாணிக்கம்  – (24 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 12:45)  

மிகவும் நல்ல கொள்கைதான் மாப்ள.
சிலபேருக்கே இதுபோல செயலில் காட்ட 'கட்ஸ் " இருக்கும்.
மற்றதெல்லாம் வெறும் வாய் சாவடால்கலாகவே இருக்கும்.
Keep it up.
ஆனா ஒருபயலும் உனக்கு நன்றி உணர்வுடன் இருக்க மாட்டான்.
ஆனா பிறருக்கு காவடி தூக்குவான்.
அதுதான் தமிழனின் தனி குணம்.

கக்கு - மாணிக்கம்  – (24 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 12:45)  
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Chitra  – (24 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 1:00)  

குறிப்பு 4: பேருக்கு இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஊருல லுங்கி கட்டிக்கிட்டு ஆலமரத்துக்கு கீழ குத்த வச்சு பீடி குடிச்சிக்கிட்டே ரம்மி ஆடுவதை விட்டுவிட்டு ஏதாவது உருப்படியா வேலை செய்யலாம் இல்லையா !

..... ha,ha,ha,ha,ha,...

யூர்கன் க்ருகியர்  – (24 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 2:17)  

//அதுதான் தமிழனின் தனி குணம்.//

அப்படியா.. வருத்தமாய் இருக்கிறது.
கருணாநிதியை மனசுல வச்சுக்கிட்டு பேசுறீங்களா என்ன ? :)

யூர்கன் க்ருகியர்  – (24 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 2:17)  

// Chitra கூறியது...
குறிப்பு 4: பேருக்கு இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஊருல லுங்கி கட்டிக்கிட்டு ஆலமரத்துக்கு கீழ குத்த வச்சு பீடி குடிச்சிக்கிட்டே ரம்மி ஆடுவதை விட்டுவிட்டு ஏதாவது உருப்படியா வேலை செய்யலாம் இல்லையா !

..... ha,ha,ha,ha,ha,...
//

சிரிச்சதுக்கு தேங்க்ஸ்கா !!

நாடோடி  – (24 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 2:29)  

ந‌ல்ல‌ விச‌ய‌ம்.... அனுப‌வ‌ம் எந்த‌ துறையில் என்று சொன்னால் ந‌ல்லா இருக்கும்..

யூர்கன் க்ருகியர்  – (24 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 3:52)  

//நாடோடி சொன்னது…
ந‌ல்ல‌ விச‌ய‌ம்.... அனுப‌வ‌ம் எந்த‌ துறையில் என்று சொன்னால் ந‌ல்லா இருக்கும்..

//

Electronics Manufacturing !

கக்கு - மாணிக்கம்  – (24 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 4:18)  

அட மாப்ஸ் கூட உஜாலாவுக்கு மாறியாச்சா!
டெம்ப் லேட் நல்ல இருக்கு மாப்ள .இனிமே கும்மி தான்

கக்கு - மாணிக்கம்  – (24 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 4:18)  

அட மாப்ஸ் கூட உஜாலாவுக்கு மாறியாச்சா!
டெம்ப் லேட் நல்ல இருக்கு மாப்ள .இனிமே கும்மி தான்

கக்கு - மாணிக்கம்  – (24 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 4:21)  

அட இது என்னா கருமம் எல்லாம் டபுள் ஆக்டிங் மாதிரி ரெண்டு ரெண்டா வருது?
சத்தியமா நா ஒரு தடவ த்தா அமுக்றேன்.
மாப்ள என் டயம் உனக்கு நல்லாவே தெரியும்
வீணா சந்தேகப்படாதே !

பட்டாபட்டி..  – (25 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 6:14)  

நல்ல மனம் & கொள்கை..
ந‌ல்ல‌ விச‌ய‌ம்..ஆமா யூர்கன்..
குறிப்பு 4 ... .என்னைப்பற்றி இல்லையே..

ஹி..ஹி

பட்டாபட்டி..  – (25 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 6:16)  

கக்கு - மாணிக்கம் கூறியது...

அட இது என்னா கருமம் எல்லாம் டபுள் ஆக்டிங் மாதிரி ரெண்டு ரெண்டா வருது?
சத்தியமா நா ஒரு தடவ த்தா அமுக்றேன்.
மாப்ள என் டயம் உனக்கு நல்லாவே தெரியும்
வீணா சந்தேகப்படாதே !
//

நீங்க அமுக்குற அமுக்குல..உங்க கமென்ஸ், ”மூணு தடவை” பப்ளிஸ் ஆகுது பாஸ்..

என்னானு பாருங்க...
எதுக்கும் ஒரு யாகம் நடத்திடலாமா?

யூர்கன் க்ருகியர்  – (30 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 12:46)  

வருகைக்கு நன்றி நண்பர்களே ...

கக்கு - மாணிக்கம்

பட்டாபட்டி..

அன்புடன் அருணா

மங்குனி அமைச்சர்  – (1 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:33)  

இன்னமும் வாயிப்பு இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் பிளீஸ்
(என் நண்பருக்காக )

9444280812
chennai

ஜெய்லானி  – (1 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 11:48)  

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

kandasamy  – (2 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 11:03)  

எவனோ ஒருத்தன ஏத்தி விடுறதுக்கு பதில்.தமிழன ஏத்தி விடுங்க.
என்னதான் பண்றாங்கன்னு பாப்போம்.
ஆனா புனே ன்னா ஒருத்தனும் வர மாட்டான்.

முத்து  – (13 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 5:53)  

மங்குனி அமைச்சர் சொன்னது…

இன்னமும் வாயிப்பு இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் பிளீஸ்
(என் நண்பருக்காக )

9444280812
chennai /////

50 வயது தாண்டியவர்களுக்கு கிடையாது

THANGA MANI  – (18 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 3:10)  

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.

வாழ்க வளமுடன்.

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP