டாக்குடர்ரு ,, நீங்க அதுக்கெல்லாம் ஒத்து வரமாட்டீங்க !

அதான் எழுத வரலியே,, பின்ன ஏன் நாமளும் சிரமபட்டுகிட்டு படிப்பவர்களையும் சிரமப்படுத்தனும்னு..நாமுண்டு நம்ம வேடிக்கையுண்டுன்னு இருந்தா இருக்க விடமாட்டாக போலிருக்கே...

காவலன் படம் ஜனவரி பதினாலு ரிலீசாம் ! காத்துவாக்குல சேதி வந்தது. (பயந்தது நடந்துவிட்டது)

கேட்டதும் பதிவு போட்டாகணும்னு உள்ளம் துடித்தாலும் அதுக்கு முன்ன யூரின் போகணும்னு தோணிச்சு (விஜய் படம் வருதுன்னா ஒபாமாவே ஒண்ணுக்கு போய்டுவான் நாம எம்மூத்திரம் சர்ரி எம்மாத்திரம் ??




"ஜனவரி பதினாலு படம் ரிலீஸ்." கேட்டவுடன் ரெண்டு விஷயம் நியாபகத்திற்கு வந்தது
ஒன்னு ரஜினி டயலாக் இன்னொன்னு பக்கத்துக்கு தெரு பாட்டி.

நினைவிற்கு வந்த டயலாக் :-
சாகற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும் ..

பக்கத்துக்கு தெரு பாட்டி :-
ஒவ்வொரு முறை ஊருக்கு போகும்போதும் பக்கத்துக்கு தெருவில் இருக்கும் வயதான பாட்டியிடம் "எப்படி இருக்க பாட்டி ?" என விசாரிப்பது வழக்கம். அதற்கு அந்த பாட்டி "அந்த எமன் என்னை தூக்கிட்டு போக மாட்டேன்கிறான் " என வேடிக்கையாய் என்னிடம் சொல்வது உண்டு..


இந்த முறை ஊருக்கு போனால் அந்த பாட்டியிடம் சொல்ல வேண்டும் ஜனவரி பதினாலு நம்மூரு சினிமா கொட்டகைக்கு எமன் வரான் .. தைரியம் இருந்தா போய் பாரேன என ..



#############################################################

கரகாட்டக்காரன் படத்தில் "என்ன பார்த்து ஏன்டா அந்த கேள்விய கேட்ட?"என கவுண்டமணி செந்திலை அடிக்கும் காமெடி உங்களுக்கு தெரிந்திருக்கும்
.அந்த மாதிரி விஜயை பார்த்து ஏண்டா அப்படி சொன்னே ?" கேட்டு கன்னத்திலே பொளேரென்று அடிக்க வேண்டுமென்று ஒருத்தனை தேடி கொண்டிருக்கிறேன் ..
அவன் அப்படி என்ன விஜயை பார்த்து சொல்லிட்டான் என்று கேட்கிறீர்களா ? கேட்டா நீங்களே அவனை துவம்சம் பண்ணிருவீங்க ..

விஜயை பார்த்து "தமிழ் சூப்பர் ஸ்டார்" அப்படின்னு சொல்லிட்டான்.





(விஜய்தான் லூசு பயன்னு பார்த்தா .. இருக்குறவன் அதுக்கு மேல இருக்கிறான்..ச்சே .. )
#############################################################

ஒரு பஞ்ச டயலாக் சொல்றேன் கேட்டுக்குங்க

கள்ள சாராயத்தை அதிகமா குடிப்பவனும்
காவலன் படத்தை அடிக்கடி பார்ப்பவனும்
உருப்பட்டதாக சரித்திரமே இல்லை ...


#############################################################


வானிலை அறிக்கை வாசிக்கும் திரு ரமணன் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

புயல், மழை, வெயில், பனி, கடல்சீற்றம், எது வந்தாலும் இப்பல்லாம் முன்னமே சொல்லி மக்களை எச்ச்சரிப்பீங்கலே, அதற்கும் மேல மக்களை தாக்கும் காவலன் படம் வரப்போகுது.. இந்த எச்சரிக்கையையும் சேர்த்து சொல்லிட்டீங்கன்னா ஏதோ புத்தி இருக்கிறவன் பொழச்சுபோகட்டும் ... உங்களுக்கு கங்கைக்கு போகாமலே புண்ணியம் கிட்டும் வாய்ப்புண்டு. ..

#############################################################


இன்னைக்கு கூட ஏதோ ஒரு பதிவில் படித்தேன் காவலன் பாடல்கள் நல்லாருக்குன்னு ஒருத்தரு சொல்லிருக்காரு. பாடல் விமர்சனமாம் .. !!

பாட்டு நல்லாருக்கேன்னு படத்த பார்க்க போனீங்கன்னா படுத்த படுக்கையாயிடுவீங்க பரவாயில்லையா?
என பின்னூட்டம் போட நினைத்தேன் முடியவில்லை ...



#############################################################


எனக்கு தெரிந்த ஒருத்தருக்கு விக்கல் இரண்டு நாளாய் நின்றபாடில்லை . கடைசியில் மருத்துவமனைக்கு சென்ற பிறகே நின்றதாம் பிறகு இது எனக்கு தெரிய வர விசித்திரமாய் தோன்றியது. காவலன் படம் வருகிறது என்றாலே உயிரே நின்று வரும்போது விக்கல் நிற்காதா என்ன .. ஹும் மருத்துவமனைக்கு தண்ட செலவு..(இந்த வகையில் டாக்டர் பட்டம் கொடுத்தது சரியென்றே படுகிறது )

#############################################################

நீண்ட நாள் கழித்து என்னை பதிவு எழுத தூண்டிய தமிழ்நாட்டு சிரிப்பு டாக்டர் விஜய் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்வதுடன் இந்த பதிவையும் அவருக்கு சமர்பிக்கிறேன்

(பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் கிளிக்கவம்..)





படத்தை பார்த்து நீங்கள் மூர்ச்சை"ஆய்" விழுந்தால் அதற்கு படத்தில் இருப்பவரே முழு பொறுப்பு என அறிவித்துக்கொள்கிறேன்

#############################################################


மற்ற பதிவர்கள் போல் உங்க பின்னூட்டமும் ஒட்டும்தான் என்னை உற்சாகபடுத்தி பதிவை எழுத வைக்கிறது என சொல்லமாட்டேன் மாறாக நம் பூலோக எம தர்மன் விஜய் அவர்களே எனக்கு பதிவை எழுத உற்சாகமும் ஊக்கமும் தருகிறார் என்பதை உளமார உறுதி கூறுகிறேன் .

கடைசியாக

சனியனே,, இந்த படத்துலயாவது நடிச்சிருக்கியா ?

என்ற கேள்வியை அவர் காலடியில் சமர்ப்பித்து இத்துடன் என் பதிவை முடித்து கொள்கிறேன் நன்றி வணக்கம் ..




குறிப்பு : இந்த பதிவு மொக்கைதான் ஆனால் காவலன் படம் அளவு மொக்கையாய் இராது என்பதை சொல்ல கடமை பட்டிருக்கிறேன்

adam  – (9 டிசம்பர், 2010 அன்று 4:51 AM)  

very nice but i don"t think people going to change

முனைவ்வ்வர் பட்டாபட்டி....  – (9 டிசம்பர், 2010 அன்று 6:00 AM)  

விஜய்-க்கு நன்னி..

எப்படியோ யூர்கனை , பதிவ எழுதவெச்சதுக்கு.. ஹே..ஹே...

"ராஜா"  – (9 டிசம்பர், 2010 அன்று 7:35 AM)  

//சனியனே,, இந்த படத்துலயாவது நடிச்சிருக்கியா ?

தளபதியை சனியன் என்று சொல்லி சனியனுக்கே சனி பிடிக்க வச்சிடீங்களே ...

//விஜயை பார்த்து "தமிழ் சூப்பர் ஸ்டார்" அப்படின்னு சொல்லிட்டான்.

அவன சும்மாவா விட்டுட்டு வந்தீங்க ...

//ஜனவரி பதினாலு நம்மூரு சினிமா கொட்டகைக்கு எமன் வரான் ..

இதுல இருந்து தப்பிக்க வழியே இல்லையா?

vasu balaji  – (9 டிசம்பர், 2010 அன்று 10:36 AM)  

கைப்புள்ள ரேஞ்சுக்கு ஆக்கி விட்டுடீங்களே:))

பொன் மாலை பொழுது  – (9 டிசம்பர், 2010 அன்று 10:43 AM)  

மிஸ்டர் யூர்கன்,
தலீவரு விசை இப்போ வெறும் விசை இல்லை டாகுடர்றூ விசை . ஆக்காங்.
இன்னிமெட்டு அல்லாரும் அவர டாககுடறு விசை அப்டீன்னுதா எளுதணும். எங்க தலீவர பத்தி ஆரும் தப்பா தப்பா எளுதிகினா, அப்பால நாங்க அல்லாரும் தற்கொல பண்ணிகினு சேத்து பூடுவோம். அப்பால வர்ற எலேஷேன்ல நோட்டு ...சீச்சீ ...ஒட்டு குத்திக ஆளுங்க இல்லாம பூடும். ஆக்காங்

பொன் மாலை பொழுது  – (9 டிசம்பர், 2010 அன்று 10:48 AM)  

மாப்ள, எனக்கும் டாக்குடர்று பட்டம் வாங்கி செருவிகினும்முன்னு ஆசயாகீது கண்ணு.
நம்ம கேப்புடன்னு கூட டாக்குட்று வாங்கிட்டாராம். ஏதாவது அரேஞ்சு பானு ராசா....அய்யய்யோ ....அந்த ராசா இல்ல. இத்து வேற ராசா.

அங்கன பூனாவுல டாக்குடார்று பட்டம் இன்னா வேல விக்கித்து? அரேஞ்சு பண்ணு கண்ணு. நம்ம பட்டா பட்டிக்கும் ஒன்னு குட்துட்லாம். இன்னா கரீட்டா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி....  – (9 டிசம்பர், 2010 அன்று 1:54 PM)  

அங்கன பூனாவுல டாக்குடார்று பட்டம் இன்னா வேல விக்கித்து? அரேஞ்சு பண்ணு கண்ணு. நம்ம பட்டா பட்டிக்கும் ஒன்னு குட்துட்லாம். இன்னா கரீட்டா?
//

அய்.. எனக்கா...

ஹி..ஹி.. ஒண்ணு போதுன்ணே....ஹி..ஹி

ராஜகோபால்  – (9 டிசம்பர், 2010 அன்று 1:59 PM)  

//நம் பூலோக எம தர்மன் விஜய் அவர்களே எனக்கு பதிவை எழுத உற்சாகமும் ஊக்கமும் தருகிறார் //

உண்மை எனக்கும்தான்.

யூர்கன் க்ருகியர்  – (9 டிசம்பர், 2010 அன்று 5:39 PM)  

//adam,
i don"t think people going to change//

சில பய புள்ளிக திருந்தவே மாட்டானுங்க போல..
அவனுங்க விதி அப்படி சார் ..

யூர்கன் க்ருகியர்  – (9 டிசம்பர், 2010 அன்று 5:41 PM)  

//
பட்டாபட்டி

விஜய்-க்கு நன்னி..

எப்படியோ யூர்கனை , பதிவ எழுதவெச்சதுக்கு.. ஹே..ஹே...//

தலைவரே .. விஜயை நெனச்சாலே வெளுக்கணும் போல இருக்கு தலைவரே ..
பதிவு கூட போடலனா எப்படி?

யூர்கன் க்ருகியர்  – (9 டிசம்பர், 2010 அன்று 5:43 PM)  

// "ராஜா

தளபதியை சனியன் என்று சொல்லி சனியனுக்கே சனி பிடிக்க வச்சிடீங்களே ...//

செம பன்ச் நண்பரே .. :)

யூர்கன் க்ருகியர்  – (9 டிசம்பர், 2010 அன்று 5:44 PM)  

//வானம்பாடிகள் கூறியது...
கைப்புள்ள ரேஞ்சுக்கு ஆக்கி விட்டுடீங்களே:))
//

தானா வந்து மாட்றாரு சார் .. :)

யூர்கன் க்ருகியர்  – (9 டிசம்பர், 2010 அன்று 5:49 PM)  

// கக்கு - மாணிக்கம் கூறியது...
மிஸ்டர் யூர்கன்,
தலீவரு விசை இப்போ வெறும் விசை இல்லை டாகுடர்றூ விசை . ஆக்காங்.
இன்னிமெட்டு அல்லாரும் அவர டாககுடறு விசை அப்டீன்னுதா எளுதணும். எங்க தலீவர பத்தி ஆரும் தப்பா தப்பா எளுதிகினா, அப்பால நாங்க அல்லாரும் தற்கொல பண்ணிகினு சேத்து பூடுவோம். அப்பால வர்ற எலேஷேன்ல நோட்டு ...சீச்சீ ...ஒட்டு குத்திக ஆளுங்க இல்லாம பூடும். ஆக்காங்

//

மச்சி.. ரைட்டு இனிமேல் டாகுடர்றூ விசை அப்படின்னே சொல்றோம்.

அவசரப்பட்டு தற்கொலை வரையெல்லாம் போகாதீங்க காவலனுக்கு வெயிட் பண்ணுங்க

யூர்கன் க்ருகியர்  – (9 டிசம்பர், 2010 அன்று 5:51 PM)  

//பட்டாபட்டி.... கூறியது...
அங்கன பூனாவுல டாக்குடார்று பட்டம் இன்னா வேல விக்கித்து? அரேஞ்சு பண்ணு கண்ணு. நம்ம பட்டா பட்டிக்கும் ஒன்னு குட்துட்லாம். இன்னா கரீட்டா?
//

அய்.. எனக்கா...

ஹி..ஹி.. ஒண்ணு போதுன்ணே....ஹி..ஹி
//

:))))

யூர்கன் க்ருகியர்  – (9 டிசம்பர், 2010 அன்று 5:52 PM)  

// ராஜகோபால் கூறியது...
//நம் பூலோக எம தர்மன் விஜய் அவர்களே எனக்கு பதிவை எழுத உற்சாகமும் ஊக்கமும் தருகிறார் //

உண்மை எனக்கும்தான்.
//

same blood sir. :)

ஹரிஸ் Harish  – (10 டிசம்பர், 2010 அன்று 12:04 AM)  

கலக்கலா இருக்குங்க தல...

ஹரிஸ் Harish  – (10 டிசம்பர், 2010 அன்று 12:06 AM)  

கடைசி குறிப்பும்..அதுக்கு மேல சிவப்பு கலர்ல இருக்க கேள்வியும்..செம..செம..

யூர்கன் க்ருகியர்  – (10 டிசம்பர், 2010 அன்று 4:53 PM)  

// ஹரிஸ் கூறியது...
கலக்கலா இருக்குங்க தல...

//



உண்மையாவா...

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஹரிஸ்

Ahamed irshad  – (12 டிசம்பர், 2010 அன்று 2:24 PM)  

அடிக்க‌டி ப‌திவு எழுதுய்யா..

வேலன்.  – (13 டிசம்பர், 2010 அன்று 6:45 AM)  

விஜய் ஆரம்பிக்க போகும் கட்சிக்கு உங்களை கொள்கைபரப்புசெயலாளராக போட்டுடலாமா?
வாழ்க வளமுடன்.
வேலன்.

யூர்கன் க்ருகியர்  – (13 டிசம்பர், 2010 அன்று 7:20 PM)  

அஹமது இர்ஷாத், 12 டிசம்பர், 2010 2:24 pm

அடிக்க‌டி ப‌திவு எழுதுய்யா..//

சரிங்க அய்யா

யூர்கன் க்ருகியர்  – (13 டிசம்பர், 2010 அன்று 7:22 PM)  

//வேலன். கூறியது...
விஜய் ஆரம்பிக்க போகும் கட்சிக்கு உங்களை கொள்கைபரப்புசெயலாளராக போட்டுடலாமா?
வாழ்க வளமுடன்.
வேலன்.
//

ஹல்லோ ...

தமாஸ் பண்ணாதீங்க ...

Unknown  – (14 டிசம்பர், 2010 அன்று 9:58 AM)  

என்னமோ போங்க கொஞ்ச நாள் உயிரோட இருப்போம்ங்கர நம்பிக்க இப்போ சுத்தமா போயிடுச்சி. இவன் படம் பாத்ததுக்கே வாந்தி பேதி வருது, இதுல அரசியலுக்கு வேற வந்து இவன் எத்தன ஈரக்குடல அறுக்க போறானோ தெரியல.....

சென்னை பித்தன்  – (14 டிசம்பர், 2010 அன்று 4:32 PM)  

புதுசு புதுசா நல்ல நல்ல பட்டமெல்லாம் கொடுத்திருக்கீங்க!விஜய்க்கு அதிர்ஷ்டம்தான்!

யூர்கன் க்ருகியர்  – (15 டிசம்பர், 2010 அன்று 3:32 PM)  

// //
விக்கி உலகம், 14 டிசம்பர், 2010 9:58 am

என்னமோ போங்க கொஞ்ச நாள் உயிரோட இருப்போம்ங்கர நம்பிக்க இப்போ சுத்தமா போயிடுச்சி. //

வேணும்னா பாருங்க ஒருநாள் இல்லனா இன்னொரு நாள், எவனாவது விஜய் வாய தைக்க போறான் ..

அதுவரைக்கும் நாமெல்லாம் பயந்துதான் இருக்கணும் :)
//

யூர்கன் க்ருகியர்  – (15 டிசம்பர், 2010 அன்று 3:33 PM)  

//சென்னை பித்தன் கூறியது...

புதுசு புதுசா நல்ல நல்ல பட்டமெல்லாம் கொடுத்திருக்கீங்க!விஜய்க்கு அதிர்ஷ்டம்தான்!

//

விஜய்க்கு அதிர்ஷ்டம் எனில் நமக்கெல்லாம் துரதிர்ஷ்டம் ஆச்சே ?

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP