சோனியாவுக்கு ஒரு நியாயம் சானியாவுக்கு ஒரு நியாயமா ?

டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கே பெருமை தேடி கொடுத்தவங்க நம்ம(?) சானியா மிர்சா.
இனிமே பாகிஸ்தானுக்கு பெருமைய தேடி தர போறாங்களாம்.



அதாங்க ... சானியா எவனோ ஒரு பாகிஸ்தான்காரன் கிட்ட மனதினை (?) பறி கொடுத்துட்டாங்களாம்..
கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு ஊரு உலகம் முழுதும் டமாரம் அடிச்சிட்டு இருக்கா..
அது சரி லவ்-ன்னு வந்தாலே கல்யாணம் பண்ணிக்கவேண்டியதுதான்.

அத தடுக்க நாம யாரு ?



நம்மகிட்ட யாரும் வந்து கருத்து கேட்கவில்லை என்றாலும் நாமளாவே வாலண்டியரா கருத்த(!) சொல்றதுதான் பிளாக்கர்க்கு மரியாதை. (சொல்லலைனா தமிழ் பிளாக்கர்ன்னு சொல்லிக்கிறதே வேஸ்ட்)


வேற ஒன்னும் இல்லீங்க.. இந்தபக்கம் அந்தபக்கம் ..ஆயிரம் பேரு ஆயிரம் கருத்து சொன்னாலும் பாகிஸ்தான் கவர்மெண்டுகாரன் சொன்னான் பாருங்க அதுதாங்க கருத்து சும்மா நச்சுன்னு...

கல்யாணம் ஆன பிறகு சானியா மாலிக் ( கல்யாணம் ஆன பிறகு பேரு மாறிடும் இல்ல !!) (அந்தோனியோ மைனோ சோனியா காந்தி ஆகும்போது சானியா மிர்சா சானியா மாலிக் ஆகாதா என்ன ?)
பாகிஸ்தான்காக தான் டென்னிஸ் ஆடுவாங்களாம்.... இந்தியாவுக்காக ஆட முடியாதாம்.

சானிய மிர்சாவின் கோச் (Coach) நெனச்சு பார்த்திருப்பானா இதுவரை பட்ட கஷ்டம் எல்லாம் இனிமே பாகிஸ்தானுக்காக என்று ...

சானிய மிர்சாவின் ரசிகர்கள் நெனச்சு பார்த்திருப்பார்களா இனிமே சானியாவின் வெற்றிகள் நம் நாட்டுக்கு இல்லையென்று ?? (வட போச்சே !!?)
சானிய மிர்சாவின் இந்திய ஸ்பான்சர்கள் நெனச்சு பார்த்திருப்பார்களா சானியாவை வைத்து இனிமே போனி பண்ண முடியாது என்று

இந்த கருமத்தை எல்லாம் பற்றி எங்க ஆபீஸ்ல ஒருத்தன்கிட்ட பேசிட்டு இருக்கும்போது "இதெல்லாம் அநியாயம் ...சானிய மிர்சா இந்தியாக்குதான் விளையாடனும் ..... பாகிஸ்தான்க்கு விளையாட கூடாதுன்னு அப்படின்னான் :"

"அது சரி ..போன எலெக்சன்ல யாருக்கு ஒட்டு போட்டே?" ன்னு கேட்டேன்!
"சானியா மிர்சாவுக்கும் ..ஒட்டு போட்டதுக்கும் என்ன சம்மந்தம்" என்றான்

இருக்கு சொல்லு ..

காங்கிரஸ்க்கு ...

அவ்வளவுதான் ... கடுப்பில் அவன காய்ச்சி எடுத்துட்டேன் ..

ஏன்டா டேய் ... இத்தாலியில் இருக்கும் அன்டோனியோ மைனோ ராஜீவ் காந்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு சோனியா காந்தி என்று பெயர் மாற்றம் செய்து இன்று இந்தியாவை ஆளும் காங்கிரஸ் பார்ட்டி லீடராக இருக்கலாம்
(அதையெல்லாம் ஒத்துக்குவீங்க )
இந்தியாவில் இருக்கும் சானியா மிர்சா சோயிப் மாலிக்கை கல்யாணம் பண்ணிக்கிட்டு சானியா மாலிக் என்று பெயர் மாற்றம் செய்து பாகிஸ்தானுக்காக டென்னிஸ் ஆட கூடாதா ?
(இத ஒதுக்க மாட்டீங்களா ?)
என்னங்கடா டேய் ...சோனியாவுக்கு ஒரு நியாயம் சானியாவுக்கு ஒரு நியாயமா ?



அதனால நான் என்ன சொல்றேன்னா :)

சோயிப் மாலிக் : தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே
சானியா மிர்சா : சலோ பாகிஸ்தான்கோ ... சலோ !
மத்தவங்களுக்கு : சபி பந்த் கரோ ... பக்வாஸ் !!

Robin  – (3 ஏப்ரல், 2010 அன்று PM 1:32)  

//.சோனியாவுக்கு ஒரு நியாயம் சானியாவுக்கு ஒரு நியாயமா ?// அதானே. நியாயமான கேள்விதான். சானியா விளையாடினாலும் மெடல் ஒன்னும் கிடைக்கப்போவதில்லை, அதனால் இந்தியாவுக்கு ஒன்னும் இழப்பில்லை.

Twilight Sense  – (3 ஏப்ரல், 2010 அன்று PM 1:40)  

மெடல் ஒன்னும் வாங்கமாட்டார், ஒரு வேலை பாகிஸ்தான் போய் வங்கி தொலைசிற்சினா தான் லைட்டா நமக்கு புகையும் ..

vikram  – (3 ஏப்ரல், 2010 அன்று PM 1:55)  

சானியா ஆடி ஒருவேள மெடலோ கப்போ வாங்குனா பாகிஸ்தானுக்கு லாபம்
உவம உறுபுல - நம்ம நாட்டுக்கு நஷ்டம் ******
அது முக்கியாமான மேட்டர் விட்டுடீங்கோ

தமிழ் உதயம்  – (3 ஏப்ரல், 2010 அன்று PM 2:39)  

லட்சத்துல ஒரு வாக்கியம். இப்படி பேசியாவது டென்னிஸ் பைத்தியங்கள் ஆறுதல் அடையட்டும்.

அப்பாவி –   – (3 ஏப்ரல், 2010 அன்று PM 3:04)  

supper.........wonderful argument...congrats...

பொன் மாலை பொழுது  – (3 ஏப்ரல், 2010 அன்று PM 3:26)  

//சானிய மிர்சாவின் ரசிகர்கள் நெனச்சு பார்த்திருப்பார்களா
இனிமே சானியாவின் வெற்றிகள் நம் நாட்டுக்கு இல்லையென்று ??
(வட போச்சே !!?) //

யூர்கன் எழுதியது.

மாப்ள ஒனக்கு 'கிருத்ருவம்' ஜாஸ்தியா போச்சி
இதுக்கு தான் சொல்றது கண்ட கண்ட வீடியோ பாக்காதேன்னு
சொன்ன கேட்டாதானே !

Ahamed irshad  – (3 ஏப்ரல், 2010 அன்று PM 4:43)  

நியாயமான பதிவு சகா...

vasu balaji  – (3 ஏப்ரல், 2010 அன்று PM 5:10)  

முக்கியமான மேட்டர உட்டுபோட்டிங்களே யூர்கன்:)). நமக்கெதுக்கு வம்பு. அப்புடி டென்னிஸ் ஆட முடியுமா?

மங்குனி அமைச்சர்  – (3 ஏப்ரல், 2010 அன்று PM 6:58)  

அடப்பாவிகளா , மார்ச் 12 தேதி லாஸ்ட் பதிவு பட்டவுக சானியா கல்யாணம் கேள்விப்பட்டவுடனே ஒரு பதிவுன்னா மனசுக்குள்ள என்னா பீலிங்க்ஸ் இருக்கோ தெரியலையே ? (சேம் பீலிங் மீ ஆல்சோ )

முனைவ்வ்வர் பட்டாபட்டி....  – (3 ஏப்ரல், 2010 அன்று PM 7:02)  

உடுங்க யூர்கன்..

சீக்கிரமா, பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும்,இத்தாலியையும் இந்தியாவோட
இணைச்சிறலாம்..

யூர்கன் க்ருகியர்  – (4 ஏப்ரல், 2010 அன்று AM 12:40)  

//
Robin கூறியது... //


//Rajamohan Manivannan கூறியது... //

//vikram கூறியது... //

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பர்களே

யூர்கன் க்ருகியர்  – (4 ஏப்ரல், 2010 அன்று AM 12:41)  

//தமிழ் உதயம் கூறியது... //

/அப்பாவி கூறியது... //

//கக்கு - மாணிக்கம் கூறியது... //

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பர்களே

யூர்கன் க்ருகியர்  – (4 ஏப்ரல், 2010 அன்று AM 12:46)  

//வானம்பாடிகள் கூறியது...
முக்கியமான மேட்டர உட்டுபோட்டிங்களே யூர்கன்:)). நமக்கெதுக்கு வம்பு. அப்புடி டென்னிஸ் ஆட முடியுமா?
//

ஆமாங்க சார் ..
பாகிஸ்தான்காரங்களுக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்.

யூர்கன் க்ருகியர்  – (4 ஏப்ரல், 2010 அன்று AM 12:47)  

//அஹமது இர்ஷாத் கூறியது... //

//மங்குனி அமைச்சர் கூறியது... //

//பட்டாபட்டி.. கூறியது...//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பர்களே

Prasanna  – (4 ஏப்ரல், 2010 அன்று PM 1:14)  

தொடர்ந்து இந்தியாவிற்கு தான் விளையாட போவதாக அவர் ஏதோ பேட்டியில் சொன்னதாக ஞயாபகம்..

Aba  – (4 ஏப்ரல், 2010 அன்று PM 2:34)  

அட்சான் பார் ஷாட்டு.... நல்ல பிரச்சன... நல்ல தீர்வு......... பிரமாதம்.......

யூர்கன் க்ருகியர்  – (4 ஏப்ரல், 2010 அன்று PM 4:06)  

//பிரசன்னா கூறியது...
தொடர்ந்து இந்தியாவிற்கு தான் விளையாட போவதாக அவர் ஏதோ பேட்டியில் சொன்னதாக ஞயாபகம்..
//

அப்படிங்களா... பார்க்கலாம் :)

யூர்கன் க்ருகியர்  – (4 ஏப்ரல், 2010 அன்று PM 4:07)  

//கரிகாலன் கூறியது...
அட்சான் பார் ஷாட்டு.... நல்ல பிரச்சன... நல்ல தீர்வு......... பிரமாதம்.......
//

ஹ ஹா ..தேங்க்ஸ் கரிகாலன் !

முனைவ்வ்வர் பட்டாபட்டி....  – (8 ஏப்ரல், 2010 அன்று AM 6:34)  

சானியா, கல்யாணம் முடியாம, அடுத்த பதிவப் போடறதா, ஐடியா இல்லையா யூர்கன்?..

மாணிக்கம் அண்ணே.. நீங்களாவது சொல்லுங்க..

ப.கந்தசாமி  – (10 ஏப்ரல், 2010 அன்று AM 6:57)  

//சானிய மிர்சாவின் ரசிகர்கள் நெனச்சு பார்த்திருப்பார்களா இனிமே சானியாவின் வெற்றிகள் நம் நாட்டுக்கு இல்லையென்று ?? (வட போச்சே !!?)//

இரண்டாவது ரவுண்டுக்கு மேல சானியா தாண்டுனத நான் பாக்கல, அப்பறம் என்னத்த வெற்றின்னு சொல்றீங்க?

சானியா –   – (11 ஏப்ரல், 2010 அன்று PM 3:52)  

இவன் ஒரு வேல வெட்டி இல்லாத பய...

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP