உதித் நாராயணனும் தமிழ் பாட்டும்

முன்னாடி எல்லாம் வீக் எண்டு ஹாலிடேய்ஸ் என்றாலே ஒரே கொண்டாட்டம் தான் ஆனா இப்போ நிலைமையே தலை கீழ்!

நமக்குதான் விடுமுறை என்றால் கட்டி போட்டாலும் வீட்டிலே இருக்க முடிவதில்லை அங்க இங்கன்னு வெளிய பொய் இந்த 40 Celcius வெயில்ல ஊர் மேய்வதை விட ஒழுங்கா ஆபீஸ்ல உட்கார்ந்து 18 Celcius குளிர்ல ப்லோக்குகளை மேயலாம்..


போன வார "Sun"day வெயிலுக்கு பயந்து வெளியே வீட்டிலேயே முடங்கி டிவி, தினசரி நாளிதழ்கள் மற்றும் இன்டர்நெட் சகிதம் ஐக்கியம் ஆனேன்.

அப்போது ஒரு மராட்டி டிவி சேனலில் உதித் நாராயன் என்ற பாடகர் தமிழில் பாடி கொண்டிருந்தார். மராட்டி சேனலில் தமிழா?? என்று ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்தேன். அது ஒரு பேட்டி மற்றும் பாடல் நிகழ்ச்சி . ஆடியன்ஸ் அனைவரும் மராட்டிகாரங்க.

மேட்டர் என்னான்னா.. உதித் நாராயன் அவருடைய பாடல் அனுபவங்களை மராட்டிகாரர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தமிழ்காரர்களை பற்றி மிகவும் சிலாகித்து பேசினார் .. அதாவது தமிழர்கள் நிரம்ப திறமைக்காரர்கள் என்று... !

இதை கேட்டதும் என்னுடன் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த மராட்டிகாரன் இவ்வளவு திறமைசாலிகளா உங்க ஆளுங்க ??.. என்று வினவினான்

அப்போது என் முகத்தை பார்க்கணுமே ??? சிரிப்பில் (பெருமையில் ) வாய் விரிந்து காது வரை வந்தது.

பெருமை படுவதிலும் நம்மாளுகளை அடிச்சிக்க முடியாது... அதே மாதிரி உள்ளுக்குள்ள அடிச்சிக்குவதிலும் நம்மாளுகதான் மொதோ.

சரி அத விடுங்க ..மறுபடியும் உதித் நாராயன் மேட்டர்க்கு வருவோம்

"இவ்வளவு கஷ்டமான பாசையில் எப்படி இவ்வளவு அருமையா பாடராருன்னுதான் ஆச்சரியமா இருக்கு !!" என்றான்

உண்மையிலேயே தமிழ் ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்லை மச்சி !!
ரெண்டே நிமிடத்தில் ஒருத்தனுக்கு ட்ரைனிங் கொடுத்தால் போதும்.. தாராளமாய் பாடலாம் என்றேன்.

சத்தியமாய் ரெண்டே நிமிடத்திற்கும் குறைவாகத்தான் ட்ரைனிங் கொடுத்தேன் இங்கேயும் ஒருத்தன் அர்த்தம் தெரியாமல் தமிழ் பாட்டு பாடறான் ...பாருங்க ...





இந்த பதிவ எழுதிட்டு நான் படிச்சி பார்க்கிறேன் ..... எனக்கே ஓவர் மொக்கையா இருக்கு ...
இருந்தாலும் சொல்லவேண்டியதை எழுதியே ஆக வேண்டும்என்ற தார்மீக கடமை ஒரு தமிழ் பிளாக்கர் (?) என்ற முறையில் இருப்பதால் இப்பதிவை வெளியிடுகிறேன்..


என் இனத்து அணைத்து தமிழ் நண்பர்களுக்கு இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஒன்றுபடுவோம்... வெற்றி நமதே...

வேலன்.  – (13 ஏப்ரல், 2010 அன்று PM 10:08)  

ஆஹா...என்ன உங்கள் தமிழ்பற்று...இன்னும் இரண்டு மூன்றுமுறை டிரைனிங் கொடுங்கள் அவர் பிரபல தமிழ் பட பின்ணணி பாடகரானாலும் ஆவார்...வாழ்க வளமுடன்,வேலன்.

Chitra  – (14 ஏப்ரல், 2010 அன்று AM 1:44)  

உதித் நாராயணனுக்கு போட்டியாக ஒரு பாடகரை, இரண்டு நிமிடங்களில் உருவாக்கி விட்டீர்களே?
பர்வா இலே! (உதித் ஸ்டைல் - பரவாயில்லை என்பதை தான் அப்படி பாடி இருக்கிறார்)

யூர்கன் க்ருகியர்  – (14 ஏப்ரல், 2010 அன்று AM 9:38)  

//வேலன். கூறியது...
ஆஹா...என்ன உங்கள் தமிழ்பற்று...இன்னும் இரண்டு மூன்றுமுறை டிரைனிங் கொடுங்கள் அவர் பிரபல தமிழ் பட பின்ணணி பாடகரானாலும் ஆவார்...வாழ்க வளமுடன்,வேலன்.
//

Ha Ha,,, Practice makes man perfect.

யூர்கன் க்ருகியர்  – (14 ஏப்ரல், 2010 அன்று AM 9:40)  

//Chitra கூறியது...
உதித் நாராயணனுக்கு போட்டியாக ஒரு பாடகரை, இரண்டு நிமிடங்களில் உருவாக்கி விட்டீர்களே?
பர்வா இலே! (உதித் ஸ்டைல் - பரவாயில்லை என்பதை தான் அப்படி பாடி இருக்கிறார்)
//
:-))
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க

www.bogy.in  – (14 ஏப்ரல், 2010 அன்று AM 9:41)  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

மங்குனி அமைச்சர்  – (14 ஏப்ரல், 2010 அன்று PM 2:18)  

///என் இனத்து அணைத்து தமிழ் நண்பர்களுக்கு இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஒன்றுபடுவோம்... வெற்றி நமதே... ////


thank you same to you

(ஹி.... ஹி.... ஹி.... )

ரவி  – (14 ஏப்ரல், 2010 அன்று PM 4:35)  

நிறைய எழுது மக்கா !!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி....  – (14 ஏப்ரல், 2010 அன்று PM 8:41)  

வீடியோ சூப்பர் அப்பு..
அப்படியே நம்ம விஜயகாண்டுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கலாமில்ல..

Engineering  – (15 ஏப்ரல், 2010 அன்று AM 9:17)  

//அப்போது என் முகத்தை பார்க்கணுமே ??? சிரிப்பில் (பெருமையில் ) வாய் விரிந்து காது வரை வந்தது.//
தமிழனுக்கு நிகர் தமிழன் தான்........ நிருபிசுடீங்க.........

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

யூர்கன் க்ருகியர்  – (15 ஏப்ரல், 2010 அன்று AM 11:23)  

//
www.bogy.in
14 ஏப்ரல், 2010 9:41 am

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்

யூர்கன் க்ருகியர்  – (15 ஏப்ரல், 2010 அன்று AM 11:24)  

//மங்குனி அமைச்சர் கூறியது...

thank you same to you

(ஹி.... ஹி.... ஹி.... )/
புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்

யூர்கன் க்ருகியர்  – (15 ஏப்ரல், 2010 அன்று AM 11:25)  

//செந்தழல் ரவி கூறியது...
நிறைய எழுது மக்கா !!!

14 ஏப்ரல், 2010 4:35 pm
//

சரி நண்பா

யூர்கன் க்ருகியர்  – (15 ஏப்ரல், 2010 அன்று AM 11:26)  

//பட்டாபட்டி.. கூறியது...
வீடியோ சூப்பர் அப்பு..
அப்படியே நம்ம விஜயகாண்டுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கலாமில்ல..
//

குடிகாரனுக்கு எப்படி சொல்லி கொடுத்தாலும் உளறுவான் சார்

யூர்கன் க்ருகியர்  – (15 ஏப்ரல், 2010 அன்று AM 11:28)  

//Engineering கூறியது...

தமிழனுக்கு நிகர் தமிழன் தான்........ நிருபிசுடீங்க.........

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........//


உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.........

SShathiesh-சதீஷ்.  – (16 ஏப்ரல், 2010 அன்று AM 12:53)  

இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நான் ஒரு அறிவிப்பாளன் கிளியே கிளியே கிளியக்கா பாடல் ஒளிபரப்பிய பின் அந்த பாடலை கிழி கிழி என கிலி வருமாறு எப்படி கிழித்தார் என நேரே வானொலியிலே சொல்லிவிடுவேன்... விடுங்க பருவாயில்லை....

யூர்கன் க்ருகியர்  – (16 ஏப்ரல், 2010 அன்று PM 4:10)  

//
SShathiesh-சதீஷ்.
நான் ஒரு அறிவிப்பாளன் கிளியே கிளியே கிளியக்கா பாடல் ஒளிபரப்பிய பின் அந்த பாடலை கிழி கிழி என கிலி வருமாறு எப்படி கிழித்தார் என நேரே வானொலியிலே சொல்லிவிடுவேன்... விடுங்க பருவாயில்லை.... //

ஹ ஹா...

வருகைக்கு மிக்க நன்றி நண்பா

ரோஸ்விக்  – (16 ஏப்ரல், 2010 அன்று PM 5:56)  

நண்பா, அவனுக்கு மறக்காம தோசையம்மா தோசை... அம்மா சுட்ட தோசை.. யும் சொல்லிக் கொடுத்துரு. :-)

Kiruthigan  – (19 ஏப்ரல், 2010 அன்று PM 6:02)  

உதித் நாராயணன் தமிழ்ழ பாடுறாரா..!!!
கடுப்ப கிளப்பாதீங்க சார்..

பொன் மாலை பொழுது  – (20 ஏப்ரல், 2010 அன்று PM 3:15)  

மாப்ள பதிவு இட்டது தெரியாமல் போய்விட்டது
சாரி மாப்ஸ்.

ஒரு மெயில் அனுப்பினாலும் போதுமே செல்லம்!

பெயரில்லா –   – (21 ஏப்ரல், 2010 அன்று AM 8:42)  

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யூர்கன்! உதித் நாராயணோட பாட்டு இம்ச பத்தி நெறைய கிண்டலடிச்சதுண்டு. ஆனா, யூர்கன் மாதிரி இப்படியெல்லாம் நாக்-அவுட் குடுக்க நமக்குத் தெரியாது....சும்மா கீசிட்டீங்க போங்க! நன்றி
http://padmahari.wordpress.com

MUTHU  – (22 ஏப்ரல், 2010 அன்று PM 4:55)  

இப்படி கூட தமிழ் கற்றுக்கொள்ளலாமா இது தெரியாமல் நான் எவ்வளவு வருடம் வீணாக்கி விட்டேனே

Ahamed irshad  – (25 ஏப்ரல், 2010 அன்று PM 6:05)  

பாட்டுல தமிழ கடிச்சி குதறுராறு,அவர் பாட்டையெல்லாம் நாம ஹிட் பண்ணிறோம்'ல அதான் தமிழையும்,தமிழர்களையும் பெருமையா சொல்றாரு..

வொக்காளி எதையும் தாங்கிற "இதயம்" நமக்கு...

யூர்கன் க்ருகியர்  – (25 ஏப்ரல், 2010 அன்று PM 8:39)  

//நண்பா, அவனுக்கு மறக்காம தோசையம்மா தோசை... அம்மா சுட்ட தோசை.. யும் சொல்லிக் கொடுத்துரு. :-)
//
சரி நண்பா ... சொல்லி கொடுத்துறலாம்

யூர்கன் க்ருகியர்  – (25 ஏப்ரல், 2010 அன்று PM 8:43)  

//கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ள பதிவு இட்டது தெரியாமல் போய்விட்டது
சாரி மாப்ஸ்.

ஒரு மெயில் அனுப்பினாலும் போதுமே செல்லம்!
//

அதான் அடிக்கடி வரீங்களே மச்சி

நாம் என்ன தல போற விசயத்த பதியா பதிவு போடறோம் ??

யூர்கன் க்ருகியர்  – (25 ஏப்ரல், 2010 அன்று PM 8:45)  

//padmahari கூறியது...


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யூர்கன்! உதித் நாராயணோட பாட்டு இம்ச பத்தி நெறைய கிண்டலடிச்சதுண்டு. ஆனா, யூர்கன் மாதிரி இப்படியெல்லாம் நாக்-அவுட் குடுக்க நமக்குத் தெரியாது....சும்மா கீசிட்டீங்க போங்க! நன்றி
http://padmahari.wordpress.கம//

நன்றி நண்பரே ..

யூர்கன் க்ருகியர்  – (25 ஏப்ரல், 2010 அன்று PM 8:46)  

//Muthu கூறியது...

இப்படி கூட தமிழ் கற்றுக்கொள்ளலாமா இது தெரியாமல் நான் எவ்வளவு வருடம் வீணாக்கி விட்டேனே//

வாங்க முத்து சார்.. வருகைக்கு நன்றி

யூர்கன் க்ருகியர்  – (25 ஏப்ரல், 2010 அன்று PM 8:50)  

//அஹமது இர்ஷாத் கூறியது...
பாட்டுல தமிழ கடிச்சி குதறுராறு,அவர் பாட்டையெல்லாம் நாம ஹிட் பண்ணிறோம்'ல அதான் தமிழையும்,தமிழர்களையும் பெருமையா சொல்றாரு..

வொக்காளி எதையும் தாங்கிற "இதயம்" நமக்கு...
/



சரியா சொன்னீங்க நண்பா ...
சில சமயம் நம்மாளுகளுக்கு இதயமே இருக்கான்னும் சந்தேகம் வருது

யூர்கன் க்ருகியர்  – (25 ஏப்ரல், 2010 அன்று PM 8:56)  

// Cool Boy கூறியது...
உதித் நாராயணன் தமிழ்ழ பாடுறாரா..!!!
கடுப்ப கிளப்பாதீங்க சார்..
//

இத நீங்க மியூசிக் டைரக்டர்ட சொல்ல வேண்டிய விஷயம் ..... :-)
தங்கள் வருகைக்கு நன்றி

THANGAMANI  – (11 மே, 2010 அன்று PM 8:46)  

வீடியோவில் இருப்பவர் பாடுவதும் நன்றாகத்தான் உள்ளது.குழந்தைகளைப் போல....

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP