தமிழன் என்ற கர்வம் அழிந்தது

நடப்பதெல்லாம் சந்தோசத்தை தரவில்லை.

இன்னமும் சாகிறார்கள்

ஐ நா வில் இந்தியாவின் வோட்டு கடுப்படிக்கிறது. இத கேட்டு முக்கல் முனகல் கூட தமிழ்நாட்டிலிருந்து எவனும் எழுப்பல!

இத்தனை பேர் செத்தும் கொஞ்சம் கூட இரக்கமே காட்டாமே இன்னமும் ஸ்ரீ லங்காவிற்கு இந்தியா அதரவு அளிப்பது கொடுமையிலும் கொடுமை.

தமிழ்நாடு அரசியல்வாதி ஒருத்தனும் வாய தொறக்க மாட்டீன்கிறான் ...

சில பல பேர் தொறந்தாலும் மேட்டரு டெல்லி வரைக்கும் போக மாட்டேன்கிறது

தினமும் ஈழத்தை பற்றி ஒரு கெட்ட செய்தி வந்து கொண்டே இருக்கிறது

ஏதாவது அதிசயம் நடக்ககூடாதா என்ற ஏக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது

சுயநல தமிழர்கள் அதிகமாயிட்டானுங்க

துரோகிகள் அதிகம் உள்ள இனம் தமிழினம் ...அவனுங்க மட்டுமே நல்லா இருக்கானுங்க

வலையுலகத்தில் ஆளுக்கு ஒரு கருத்து சொல்றானுங்க ..ஒருத்தன் சரின்ன்றான் இன்னொருத்தன் தப்புன்றான்.. ரெண்டு பேருமே தன பக்கம் தான் நியாய்ம்ன்றான் ..மீறி போய் நல்லவனா கெட்டவனான்னு பட்டிமன்றம் ரேஞ்சுக்கு பேசறானுங்க....

இரும்பு வேலிகளுக்கு பின்னே ஆடு மாடுகளை மட்டுமே பார்த்த நான் மனுசங்களை பார்த்தும் தாங்க முடியில

செய்திகளை பார்க்கவே நடுக்கமா இருக்கு ....

என்று விடியும் என்றே தெரியவில்லை.

இனிமே என்னால் எதையும் மாற்ற முடியாது என்பது மனதை சுடுகிறது

தமிழன் என்ற கர்வம் அழிந்தது.....

கடைசியா ....
முடியலடா சாமி.... ஒருத்தன் மனசளவுல எத்தன முறைதான் சாகிறது !!!!!!குறிப்பு : காங்கிரஸ்க்கு ஒட்டு போட்டவனெல்லாம் எப்படி சோறு தின்றானுங்கன்னே தெரியில !

பாலா...  – (28 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 6:36)  

/முடியலடா சாமி.... ஒருத்தன் மனசளவுல எத்தன முறைதான் சாகிறது !!!!!!/

உசிரோட புதைஞ்சா மாதிரி மூச்சு முட்டுது.

/இனிமே என்னால் எதையும் மாற்ற முடியாது என்பது மனதை சுடுகிறது

தமிழன் என்ற கர்வம் அழிந்தது...../

saththiyam

த.ஜீவராஜ்  – (28 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 7:28)  

/// ஏதாவது அதிசயம் நடக்ககூடாதா என்ற ஏக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது ///உங்கள் உணர்வுகளை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது நண்பரே. இதே ஆதங்கம் பலருக்கு இருக்கிறது. இருந்தாலும் உலக வரலாறு ஒருபோதும் அதிசயங்களால் எழுதப்படவில்லை என்ற உண்மை உறைக்கிறது...

//என்னால் எதையும் மாற்ற முடியாது என்பது மனதை சுடுகிறது//

அஹோரி  – (29 மே, 2009 ’அன்று’ முற்பகல் 11:13)  
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அஹோரி  – (29 மே, 2009 ’அன்று’ முற்பகல் 11:19)  

வித்தியாசமா எழுதினா நம்ம தமிழனுக்கு பிடிக்கும். அதனால எல்லாம் ரூம் போட்டு புதுசு புதுசா 'திங்க்' பண்றானுங்க. போதுமடா சாமி ....

ஒரு தருதலைவன் 'போராட்டம் புளித்து போய் விட்டது' ன்னு சொன்னாலும் சொன்னான் , விசிலடிச்சான் குஞ்சுகள் புதுசு கண்ணா புதுசு ன்னு திங்க் பண்ண ஆரம்பிசிடானுங்க.காங்கிரஸ் காரனுங்கலுக்கு எந்த உறுத்தலும் இருக்காது. இவனுங்கள மொதல்ல பேர மத்த சொல்லி கேஸ் போடணும். காங்கிரஸ் ங்கிற பேர வசி பொழப்பு ஓட்டுராணுங்க.

இங்க ஒருத்தர் லெட்டர் பேடும் கையுமா திரியறார் , இவர கொஞ்சம் ஓய்ய்வு எடுக்க சொல்லுங்க. இவர் கடைசி தமிழன் உய்ரோடு இருக்கும் வரை லெட்டர் எழுதியே கொல்லுவார் போல.

பெயரில்லா –   – (29 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 1:46)  

நண்பா சமிபத்தில் என்னை மிகவும் பாதித்த பதிவு.உங்கள் குறிப்பு அருமை.வெட்கமாக இருக்கிறது நிலையை நினைத்தால்.காங்கிரஸ்,திமுக இரண்டு கட்சிகளும் சேர்ந்து தமிழனத்தை அழிக்காமல் விட மாட்டார்கள்.

SUBBU  – (29 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 2:29)  

காங்கிரஸ்க்கு ஒட்டு போட்டவனெல்லாம் எப்படி சோறு தின்றானுங்கன்னே தெரியில !

பெயரில்லா –   – (29 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 2:46)  

Do something for the needy people in tamilnadu... don't waste your time to criticise any X,Y or Z parties...

Finally do not support terrorists...

ஜுர்கேன் க்ருகேர்.....  – (29 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 5:58)  

//வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தோழர்களே //


திரு.பாலா
திரு.த.ஜீவராஜ்
திரு.அஹோரி
திரு.SUBBU

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP