கொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்ட் 3

இந்த இடுகையின் முந்தைய பாகங்கள் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 படித்து விட்டு தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்
வீ கோந்து -ம் வேலைக்காவல.. குலைஞ்சரும் மொக்க போட்டு கடுப்பேத்திட்டாறு.. யார்கிட்ட கேட்டா கலவரத்தை தடுக்க அருமையான ஐடியா கிடைக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கும் பொது செயின்லதாவின் ஞாபகம் வந்தவுடன் உடனே செயின்லதாவிற்கு போன் போட்டாரு கொஞ்சாப் முதல்வர்.

ட்ரிங் ...ட்ரிங் ...ட்ரிங் ...ட்ரிங் ...கொஞ்சாப் முதல்வர் : மேடம்-ங்களா ?செயின்லதா : ஸ்பீகிங்.. யார் மேன் நீ ?கொஞ்சாப் முதல்வர் : நான் கொஞ்சாபுல இருந்து பேசறேன் .இங்க மக்கள் அட்டகாசம் தாங்க முடியல. எதாவது ஐடியா கொடுத்தீங்கன்னா ..சுதாரிச்சிக்குவேன்..செயின்லதா : கேள்வி பட்டேன் ..இப்ப நிலைமை எப்படி இருக்கு ?கொஞ்சாப் முதல்வர் : அத ஏன் கேக்குறீங்க ..டைம் ஆக ஆக டென்சன் ஏறுது ..பயபுள்ளீங்க ..இங்கதான் அட்டகாசம் பண்றாங்கன்னு பார்த்தா....டெல்லிக்கு போற டோல் கேட்டையே பத்த வைக்கிறான் ...ரெண்டு நாள் உட்டா இந்தியா கேட்டையே உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க போலிருக்கு ...உங்க கால்யாவது விழுறேன் தயவு செய்து ஐடியா கொடுங்க ..செயின்லதா : உங்க அப்ப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு .அதனால உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.... ரொம்ப சிம்பிள் ..ஒரு பெரிய கண்டன அறிக்கை விடுங்க சரியா போய்டும்.
முக்கியமா உங்கள் டிவி இல தொடந்து அத ஒளிபரப்பிக்கிட்டே இருங்க.கொஞ்சாப் முதல்வர் : நீங்க ஒன்னு.....!
அதிக அழிச்சாட்டியம் பன்றவங்களே என் கட்சி காரனுங்க தான்..
நான் எப்படி என் கட்சிக்கே கண்டனம் தெரிவிக்க முடியும் ?
கஷ்டம்... வேற ஐடியா ?செயின்லதா : இருக்கே...யாரையாவது தூக்கி பொடா வில போடுங்க மேட்டர் சால்வ்ட்.

கொஞ்சாப் முதல்வர் :அதெல்லாம் தப்பு ...நல்லா யோசிச்சி இன்னொரு ஐடியா சொல்லுங்க


செயின்லதா : ம்ம்..ஓகே போராட்டம் பண்ற கவர்மென்ட் ஆசாமிகளை எல்லாம் புடிச்சு டிஸ்மிஸ் பண்ணிடுங்க


கொஞ்சாப் முதல்வர் : வெளங்கிடும் ...அப்ப ..நான் ஒருத்தன் தான் மிஞ்சி இருப்பேன் ...வேற வேற! ...செயின்லதா : எல்லாத்தையும் வேணா வேணான்னு சொன்னீங்கன்னா எப்படி ? அரசியல்வாதின்னா ஒரு தில் வேணும் ...நான் சொன்ன ஐடியா வுல எதாவது ஒண்ணு செயல்படுத்துங்க ..
(இப்படி எல்லாம் இல்லனா நாங்கல்லாம் பீல்டுல நிக்க முடியுமா ....?? என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு கோவமாகி போன் லைன் ஐ கட் பண்ணி விடுகிறார் ..செயின்லதா.)


வழக்கம் போல புன்சாப் முதல்வர் ஐடியா ஐடியா என்று புலம்பிக்கொண்டே டெலிபோன் டைரக்டரியை புரட்டிக்கொண்டு யாரையோ தேடி கொண்டிருக்கிறார் ..

விரைவில் ....
புன்சாப் கலவரம் சம்மந்தமாக தமிழக பிரபலங்கள் மற்றும் டாமில் மக்களின் அறிக்கைகள் - பார்ட் -4 (நிறைவு பகுதி)

Read Part 1

Read Part 2

Read part 4

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP