கொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்ட் 2

கொஞ்சாப் கலவரத்தை கட்டுப்படுத்த தமிழக பிரபலங்களை தொடர்பு கொள்ளும் முதல்வர், வீ.கோந்து க்கு பிறகு குலைன்ஜர் -க்கு போன் போடுகிறார், ஐடியா கேட்க ..
((இந்த இடுகையின் பார்ட் 1 படிச்சிட்டு அப்புறம் மேலே சாரி கீழே படிங்க:-))
கொஞ்சாப் முதல்வர் குலைன்ஜர் -க்கு போன் போடுகிறார்.கொஞ்சாப் முதல்வர்: ஹலோ குலைன்ஜர் , எப்படி இருக்கீங்க ?


குலைன்ஜர் : சீட்டு கிடைத்தது ; சூப்பரா இருக்கேன்

கொஞ்சாப் முதல்வர்: மக்கள் எப்படி இருக்காங்க ?


குலைன்ஜர் : வேற கேள்வி இருந்தா கேளுங்க.
கொஞ்சாப் முதல்வர்: சரி சரி ....இங்க ஒரே கலவரமா இருக்கு ..அடக்கியே ஆகணும் ஐடியா ஏதாவது சொல்லுங்க.


குலைன்ஜர் : கண்மணியே .... கவிதை எழுதினால் கலவரர்கள் காணாமல் போவார்கள்.கொஞ்சாப் முதல்வர்: என்னது கண்மணியா ? யேய் இதுக்குமுன்ன யாருமே இப்படி கூபிட்டதில்லைப்பா..ஆனா எனக்கு கவிதை வராதே...
குலைன்ஜர் : தந்தி அடிக்க அழைப்பு விடுங்களேன் ... தந்தி அடிப்பின் தடுமாறி விடுவார்கள் கலவரர்கள்!


கொஞ்சாப் முதல்வர்: தந்தியா ....எந்த காலத்துல இருக்கீங்க .. ஒத்து வராது ... வேற ஐடியா ?

குலைன்ஜர் : ம்ம் ..ஆங் ...உண்ணாவிரதம் இருந்தா என்ன?


கொஞ்சாப் முதல்வர்: மக்கள்லாம் உன்னவிரதமேல்லாம் இருக்க மாட்டாங்க ...அவங்களுக்கு இப்ப தீ வைப்பதற்கே நேரம் சரியா இருக்கு .குலைன்ஜர் : ஹலோ உங்கள இருக்க சொன்னேன் ...! சும்மா ஒரு ஐந்து மணி நேரம் அப்புறம் பாருங்க .....

கொஞ்சாப் முதல்வர்: ம்ம் ..NO NO NO சரியாவே வரலேயே,,,,மிஸ்டர் குலைன்ஜர்....நல்லா யோசிச்சி வேற ஐடியா கொடுங்க.குலைன்ஜர் : சூப்பு சுங்குர மேனனையும் நாரவாயனையும் கலந்தாசித்தால் என்ன ?
கொஞ்சாப் முதல்வர்: அங்க சூப்பு வச்ச ஆப்பே இன்னும் காயம் ஆறல... இங்கெல்லாம் நடக்காது. நானே டீல் பண்ற மாதிரி யோசனை சொல்லுங்க.


குலைன்ஜர் : நம்ம வெளிக்கிதுறை அமைச்சர வச்சி ஒரு அறிக்கை விடுங்க எல்லாம் சரியா போயிரும்.

கொஞ்சாப் முதல்வர்: அப்ப நானே நேரடியா எதுவும் செய்ய முடியாதா ?


குலைன்ஜர் : அப்ப பத்து நாளுக்கு ஸ்கூல் காலேஜ் எல்லாம் லீவ் விட்டுட்டு ஜாலியா இருங்க .


கொஞ்சாப் முதல்வர்: என்னங்க நீங்க லீவ் எல்லாம் விட்டுகிட்டு ....அதுவும் ஜாலின்னெல்லாம் சொல்றீங்க ....
( பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய கும்பல் ஒன்று கிராஸ் செய்கிறது. அதிலிருந்து ஒருவன் ஒரு சின்ன பெட்ரோல் பாம் ஐ தூக்கி போட்டதில் டெலிபோன் பத்திக்கிட்டு எரிய....கடுப்பாகி போன கொஞ்சாப் முதல்வர்"கவித எழுத மாட்டேன்",,


"தந்தி அடிக்க மாட்டேன்"..,


"உண்ணாவிரதம் இருக்க மாட்டேன்",

"சூப்பு சுங்குர மேனனையும் நாரவாயன்னிடமும் பேச மாட்டேன்",,

"வெளிக்கிதுறை அமைச்சர வச்சி அறிக்கை விட மாட்டேன்",,

"பத்து நாள் லீவும் விட மாட்டேன் "...

ஆனா அதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு" ன்னு புலம்பிக்கிட்டே தீயை அனைத்துக்கிட்டு இருந்தாரு.விரைவில்
கொஞ்சாப் முதல்வருடன் செயின்லதா-வின் உரையாடல் - பார்ட்-3Read Part 3

Read Part 1

தமிழ்நெஞ்சம்  – (26 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 3:36)  

ஒரே நாளில் பார்ட் பார்ட்டா பின்றீங்க. கலக்குங்க..

ரஜினி ரசிகன்  – (26 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 3:47)  

உண்மையை உரக்கச் சொல்லும் உங்களை போன்றவர்கல்லுகு, எனது இதய பூர்வமான நன்றி!

Suresh Kumar  – (26 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 4:04)  

ஒரே நாளில் பார்ட் பார்ட்டா பின்றீங்க. கலக்குங்க..//////////


ரிப்பீற்று

Engineering  – (26 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 5:29)  

அடுத்த பார்ட் எப்ப வரும்னு ஆவலுடன் எதிபார்த்து கொண்டிருக்கும் உங்கள் நண்பர்...... சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க........ வரட்டா.........

பாலா...  – (26 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 6:31)  

சிரிப்பு சீரியல் வித்யாசமா இருக்கு.

பெயரில்லா –   – (26 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 6:35)  

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

ஜுர்கேன் க்ருகேர்.....  – (27 மே, 2009 ’அன்று’ முற்பகல் 12:31)  

//அடுத்த பார்ட் எப்ப வரும்னு ஆவலுடன் எதிபார்த்து கொண்டிருக்கும் உங்கள் நண்பர்...... சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க........ வரட்டா.........//

சரவணா அடிக்கடி நம்ம பக்கம் வா .....

ஜுர்கேன் க்ருகேர்.....  – (27 மே, 2009 ’அன்று’ முற்பகல் 12:33)  

//ஒரே நாளில் பார்ட் பார்ட்டா பின்றீங்க. கலக்குங்க..//////////


ரிப்பீற்று//

ரிப்பீட்டுக்கு நன்றி நண்பரே

ஜுர்கேன் க்ருகேர்.....  – (27 மே, 2009 ’அன்று’ முற்பகல் 12:33)  

//சிரிப்பு சீரியல் வித்யாசமா இருக்கு.//

கருத்திற்கு நன்றி நண்பரே ...

ஜுர்கேன் க்ருகேர்.....  – (27 மே, 2009 ’அன்று’ முற்பகல் 12:34)  

//உண்மையை உரக்கச் சொல்லும் உங்களை போன்றவர்கல்லுகு, எனது இதய பூர்வமான நன்றி!//

கருத்திற்கு நன்றி நண்பரே

Suresh  – (27 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 5:42)  

சரி கரச்சலா இருக்கு :-)

பெயரில்லா –   – (28 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 12:42)  

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP