எத்தனை நாளைக்குத்தான் இப்படி?

அலாரம் அடிச்சதும் தூக்கி வாரி போட்டு எழுந்திருக்கணும்.

ஹி ஹி .. கொஞ்ச நேரம் யோசிச்சி பாத்திட்டு அடுத்த ஒரு நிமிடத்திலேயே இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்னு முடிவு பண்ணி ஒரு அரை மணி நேரம் படுக்கையிலேயே புரள்வது.

வேலை பத்திய பயம் வந்ததும் வேற வழியே இல்லாம படுக்கைய விட்டு எழுந்து பல் விளக்கி காலை கடன்களை எல்லாம் முடிச்சிட்டு குளிச்சிட்டு டிரெஸ்ஸ அயன் பண்ணி ஒரு வழியா டிப் டாப்பா கெளம்பி அழுக்கு ப்டாது சாக்ஸை அப்படியே போட்டுக்கிட்டு இதுல ஷு வேற மாட்டிக்கிட்டு டைய கழுத்துல மாட்டி ஒரு வழியா வீட்ட விட்டு வரணும்.

மடிகணினியை தோளில் மாட்டிக்கிட்டு போற வழியில சாமிய பார்த்து ஒரு கும்புடு போட்டுட்டு,அநியாயத்துக்கு காச கொடுத்து கொடுமையான ஒரு டிபன் ஐ முடிச்சிட்டு இரு சக்கர வாகனத்தை ஒரே ஒதையில ஸ்டார்ட் பண்ணி கெளம்பனும்.

மூக்கு வாயெல்லாம் கார்பன்'ஐ சுவாசித்து அரை மணிநேரம் ஹெவி டிராபிக் -இல் மாட்டி ஆபீஸ் போய் சேர்ந்து கடமைக்கு மேலதிகாரிக்கு குட் மோர்னிங் போட்டு சீட்-ல உட்காந்தா அடுத்தது மத்திய நேரம் தான் சுய நினைவே வரும் ( தூக்கம் இல்லைங்க - அவ்வளவு வேலை

மத்திய உணவு முடிஞ்சதும் பாதி தூக்கத்தில வேல செஞ்சு நாலு மணிக்கு மேல ரிலாக்ஸ் ஆகி ஊர் உலக மேட்டரை எல்லாம் இன்டர்நெட் ல அலசி ஆராய்ந்து ஆறு மணிக்கு மறுபடியும் பைக் எடுத்து எட்டு மணி சுமாருக்கு வீடு போய் சேரனும்.

போனவுடன் டி வி ஆன் பண்ணி பத்து மணி வரை பார்த்து நைட் சப்பர் -முடிந்ததும் மறுபடியும் வடிவேல் ஜோக் பார்த்து சிரித்து விட்டு படுக்கைக்கு போனா ..... அலாரம் சத்தம் கேட்க ஆரம்பிச்சுரும்.


மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்..




************
***************
*************************:)
......
..........

இந்த மாதிரி எத்தனை நாளைக்குத்தான் மிசின் மாதிரியே இருக்கறது?


அதான் இந்த முறை TNPSC Group 1- க்கு அப்ப்ளிகேசன் போட்டுட்டேன்.

நீங்க எப்படி?

இப்படி புலம்புவது



ஜுர்கன் க்ருகர்.

Vote Status:Vote for “Ending the Sri Lankan Genocide” of Tamils

(ஜனவரி, பதிமூன்று, இரண்டாயிரத்து ஒன்பது)இன்று மதியம் 12:12 இந்திய நேரப்படி வோட்டுகளின் விவரம்.


பாகிஸ்தானில் இருந்து வந்த வோட்டுகளின் எண்ணிக்கை 211.

Refer Serial No:19



பாகிஸ்தானிலேயே 211 ன்னா தமிழ்நாட்டுல / இந்தியாவுல இந்நேரம் சும்மா வோட்டுக்களை குத்தி கெளப்பி(கெளம்பி) இருக்கணும்.


இந்தியாவில் இருந்து இது வரை வந்த வோட்டுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. லேட் ஆனாலும் லட்சக்கணக்குல வருமென்று எதிர்பார்கிறேன்!


வோட்டிற்கான லிங்க்-ஐயும் அதைப்பற்றிய விழிப்புணர்ச்சியையும் உங்கள் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் சொல்ல தயங்காதீர்கள்.


************************************************************************************



Vote for “Ending the Sri Lankan Genocide” of Tamils



http://www.tamilsforobama.com/sign/letter.html

************************************************************************************

இந்த வோட்டு நம் உரிமை அல்ல கடமை.




அன்புடன்
ஜுர்கன் க்ருகர்..



தமிழர்களை வாழ விடுங்கள்!

Vote for “Ending the Sri Lankan Genocide” of Tamils

Please
Please
Please
Please…………………..


Vote for “Ending the Sri Lankan Genocide” of Tamils

http://www.tamilsforobama.com/sign/letter.html

Your Vote can make SL Tamil innocent peoples live safe.

Spread this message as many people as you know ASAP.

Begging for your vote,

ஜுர்கன் க்ருகர்.

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP