எத்தனை நாளைக்குத்தான் இப்படி?

அலாரம் அடிச்சதும் தூக்கி வாரி போட்டு எழுந்திருக்கணும்.

ஹி ஹி .. கொஞ்ச நேரம் யோசிச்சி பாத்திட்டு அடுத்த ஒரு நிமிடத்திலேயே இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்னு முடிவு பண்ணி ஒரு அரை மணி நேரம் படுக்கையிலேயே புரள்வது.

வேலை பத்திய பயம் வந்ததும் வேற வழியே இல்லாம படுக்கைய விட்டு எழுந்து பல் விளக்கி காலை கடன்களை எல்லாம் முடிச்சிட்டு குளிச்சிட்டு டிரெஸ்ஸ அயன் பண்ணி ஒரு வழியா டிப் டாப்பா கெளம்பி அழுக்கு ப்டாது சாக்ஸை அப்படியே போட்டுக்கிட்டு இதுல ஷு வேற மாட்டிக்கிட்டு டைய கழுத்துல மாட்டி ஒரு வழியா வீட்ட விட்டு வரணும்.

மடிகணினியை தோளில் மாட்டிக்கிட்டு போற வழியில சாமிய பார்த்து ஒரு கும்புடு போட்டுட்டு,அநியாயத்துக்கு காச கொடுத்து கொடுமையான ஒரு டிபன் ஐ முடிச்சிட்டு இரு சக்கர வாகனத்தை ஒரே ஒதையில ஸ்டார்ட் பண்ணி கெளம்பனும்.

மூக்கு வாயெல்லாம் கார்பன்'ஐ சுவாசித்து அரை மணிநேரம் ஹெவி டிராபிக் -இல் மாட்டி ஆபீஸ் போய் சேர்ந்து கடமைக்கு மேலதிகாரிக்கு குட் மோர்னிங் போட்டு சீட்-ல உட்காந்தா அடுத்தது மத்திய நேரம் தான் சுய நினைவே வரும் ( தூக்கம் இல்லைங்க - அவ்வளவு வேலை

மத்திய உணவு முடிஞ்சதும் பாதி தூக்கத்தில வேல செஞ்சு நாலு மணிக்கு மேல ரிலாக்ஸ் ஆகி ஊர் உலக மேட்டரை எல்லாம் இன்டர்நெட் ல அலசி ஆராய்ந்து ஆறு மணிக்கு மறுபடியும் பைக் எடுத்து எட்டு மணி சுமாருக்கு வீடு போய் சேரனும்.

போனவுடன் டி வி ஆன் பண்ணி பத்து மணி வரை பார்த்து நைட் சப்பர் -முடிந்ததும் மறுபடியும் வடிவேல் ஜோக் பார்த்து சிரித்து விட்டு படுக்கைக்கு போனா ..... அலாரம் சத்தம் கேட்க ஆரம்பிச்சுரும்.


மீண்டும் முதலில் இருந்து படிக்கவும்..
************
***************
*************************:)
......
..........

இந்த மாதிரி எத்தனை நாளைக்குத்தான் மிசின் மாதிரியே இருக்கறது?


அதான் இந்த முறை TNPSC Group 1- க்கு அப்ப்ளிகேசன் போட்டுட்டேன்.

நீங்க எப்படி?

இப்படி புலம்புவதுஜுர்கன் க்ருகர்.

ராஜ நடராஜன்  – (11 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 10:02)  

ஊரெல்லாம் சுத்திகிட்டி வழி தவறி வந்தாலும் முதல் இடம் எனக்காகா காத்துகிட்டு இருக்குதே:)

புதிய நிலம் கண்டுபிடிச்ச கொலம்பஸ் மகிழ்ச்சிங்க எனக்கு :)

ஜுர்கேன் க்ருகேர்  – (16 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 8:06)  

திரு ராஜ நடராஜன்


தங்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி.
மிக்க நன்றி

தமிழ்நெஞ்சம்  – (29 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 8:17)  

உங்களுக்கு யோசிக்கிறதுக்கு டைமும், மேட்டரும் இருக்குங்க. நல்லா எழுதி இருக்கீங்க..

எங்களுக்குப் படிக்கவும் பின்னூட்டம் போடவுமே நேரம் சரியாயிருக்கு.

என்னைக்குமே உக்காந்து யோசிச்சதே இல்லைங்க. உண்மைங்க. நம்புங்க

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP