ர ..ரா .. ரூப்பியா
என்னமோ போங்கோ ..... இன்று படிக்கும்/கேட்கும்/பார்க்கும் இடமெல்லாம் ரூபாய்க்கு புது சிம்பல் வந்திருக்குன்னு ஒரே மேட்டரா இருக்கு... எப்பவுமே புதிய மாற்றங்களை நாம் வரவேற்கத்தான் வேண்டும்..
பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து இந்த ரூபாய்க்கான இலச்சினையை தேர்ந்து எடுத்திருப்பார்கள் என நம்புகிறேன்.
அது எல்லாம் சரிதான் .. இந்த சிம்பலை பார்த்தால் ஏதோ ஹிந்தி எழுத்து மாதிரியே இருக்கேன்னு பார்த்தா..அது ஹிந்தி எழுத்தேதான். "ர" என்ற ஹிந்தி எழுத்தின் மேல் கோடு போட்டா இப்படிதான் இருக்கும்..
ஹிந்தி என்பது தேவநாகரி எழுத்து வடிவத்தை கொண்டது. இந்த தேவ நாகரி எழுத்து வடிவத்தைதான் இனிமே நாமெல்லாம் உபயோக படுத்த போறோம் ..
ஹிந்தி பொதுவா எனக்கு பிடிக்காது ஏன்னா ஹிந்தி ஒலிகள் பெரும்பான்மையானவை தொண்டையை அழுத்தி பிடித்து உச்சரிக்க வேண்டும். தொண்டையை அழுத்தி பிடித்து உச்சரிக்கணும் என்றால் கஷ்டம் நம்மாளுகளுக்கு. பொதுவாக நாம் தொண்டையை அழுத்தி பிடித்து செய்யும் ஒரே வேலை த்தூ" என்று துப்புவதுதான்.
(தூ என்றதும் புனைவு பதிவுகள் நியாபகம் வந்தால் அது உங்க தல விதி )
ஹிந்தி எதிர்ப்பு காரன்கலாம் என்னையா பண்றீங்க ... தண்டவாளத்தில தலைய வச்சு படுத்தாவது எதிர்ப்ப காட்ட வேணாமா ?
நான் சின்ன புள்ளையா இருந்தப்போ நம்மாளுக इंडियन ओवेर्सास வங்கியின் முன்புற பலகையில் ஹிந்தி எழுத்துக்களை அழிச்சிட்டு இருந்ததை பார்த்திருக்கேன். ஒவ்வொரு முறை அவ்வங்கியை கடக்கும் போது அந்நிகழ்ச்சி நினைவுக்கு வரும்.
அது என்னையா விஷயம் ? ஹிந்தி எழுத்துக்கள் பலகையில் இருந்தா அழிக்கிறீங்க..ஆனா ரூபாய் நோட்டுல இருக்குற ஹிந்தியை மட்டும் அழிக்கவே மாட்டேன்கிறீங்க??
ஹிந்தியை கண்டு தார் பூசி அழித்த உடன் பிறப்புகள் எதிர் காலத்தில் இந்திய ரூபாய் நோட்டில் உள்ள ஹிந்தி இலச்சினையை தார் பூசி அழிக்க தயாரா ?
கடைசியா மூன்று மேட்டரு சொல்லி இந்த மொக்கை பதிவை முடிக்கிறேன் ...
ஒண்ணு
ரூபாய் மதிப்பிற்கான அடையாளத்தை இப்படி இருந்தா நான் சந்தோஷ பட்டிருப்பேன்.
இரண்டு
தேவநாகரி எழுத்தை வைத்து ஒரு தமிழர் ரூபாய் இலச்சினையை டிசைன் செய்திருக்கார் என்றால் ... What a Contrast..dude!!
மூணு
ஏதோ டிசைன் பண்ணா IIT ல -வேலையெல்லாம் போட்டு தராங்களாம் .
நானுந்தான் ஒரு தமிழ் எழுத்த வச்சு வச்சு டிசைன் பண்ணிருக்கேன் ..குறைந்த பட்சம் Idiots Institute of Technology லாவது வேலை தராங்களா பாப்போம் ?
அப்புறம் டிஸ்கி என்னன்னா செவப்பு கலரு கேள்விகள் எல்லாம் கோவாலு புர்த்து கோமணதிற்கு ..அம்புட்டுதேன்.
நன்றி வணக்கம் ..அடுத்த பதிவில் சந்திப்போமா ?