காந்தியும் செகுவரோவும்!

இன்னைக்கு லஞ்ச் டைம்-ல ஒரு கேள்வி கேட்டேன்! எல்லாரும் சாப்பிடுவதை நிறுத்திட்டு என்னைய பார்த்து தெரியலன்னு பதில் சொன்னாங்க.

ஆனாலும் நான் விடுவதாயில்லை.உங்களுக்கெல்லாம் வழக்கம் போல மூணு சான்ஸ் தரேன்...இப்பவாச்சும் பதில் சொல்லுங்க பார்க்கலாம் என்றதும் ஆர்வமாயினர்.

என்ன சுத்தி மொத்தம் ஆறு பேர். ஆப்சன்-னா நம்மாளுங்களுக்கு அல்வா மாதிரி... சும்மா ரௌண்டு கட்டி அவனவன் அடிச்சு விட்டாங்க. ஆனா எல்லார் விடையுமே தவறாயிருந்தது.

இதுல என்ன ஆச்சரியமான விசயம்னா அதிகம் பேர் கெஸ் பண்ணது சுபாஷ் சந்திர போஸையும் நம்ம காந்தி தாத்தாவையும் தான்.
ஆனா என்ன பண்றது விடை தப்பாச்சே!
அப்படி என்னதான் கேள்வி கேட்டேன்னு கேக்கிறீங்களா?
அதை தெரிஞ்சிகிரதுக்கு அப்படியே என்னோட மூணு மாசம் பின்னோக்கி நகரணும்.


கண்ணு மண்ணு தெரியாம தமிழ் வலைபூக்களின் பால் ஆர்வம் வந்த ஆரம்ப சமயத்தில் ஏதோ ஒரு வலைப்பூவில் பார்த்த வரிகள் அப்படியே பசக்குன்னு மனசுல ஒட்டிக்கிச்சி.

"உன் முன் நடக்கும் அநியாயங்களை பார்த்து உன் ரத்தம் கொதித்தால் நீயும் என் தோழனே!"

அது என்னமோ தெரியல இந்த சொற்தொடர் ரொம்ப கம்பீரமா ...ரொம்ப பிடிச்சிருந்தது!

இப்ப அப்படியே நிகழ காலத்திற்கு வாங்க.

இந்த வசனத்தைதான் சொல்லி இத யார் சொல்லி இருப்பாங்கன்னு கேட்டதுக்குதான் எல்லாரும் முதல்ல மண்டைய ஆட்டி தெரியலன்னாங்க.

கெஸ் பண்ணுங்கன்னு சொன்னதும் அதிகப்படியானோர் போஸையும் ,காந்தியையும் சொன்னாங்க.

எல்லார் விடையும் தப்புன்னு சொன்னதும் அவனவன் ரொம்ப ஆவலாக "சரி சரி சீக்கிரம் சொல்லுங்க அத யார் சொல்லியிருப்பாங்கன்னு?" அப்படின்னு கொடைய ஆரம்பிச்சுட்டாங்க.மிக அமைதியாக "அந்த சொற்களுக்கு சொந்தக்காரர் சேகுவேரா" அப்படின்னு சொன்னதும் எல்லோரும் ஒரே குரலில் அப்படி ஒரு ஆளா? எங்களுக்கு இதுவரை தெரியாதே" அப்படின்னு கேட்டாங்க.

சேகுவேரா யாருன்னு தெரியாம விட மாட்டானுங்கன்னு தெரிந்து விட்டது.
ஆஹா..ஆட்டம் முடிஞ்சிருச்சின்னு பார்த்தா ...ஆரம்பமே இதான் போலருக்கேன்னு நினைச்சிகிட்டேன்.நானும் உங்கள மாதிரிதான். எனக்கும் இதுக்கு மேல தெரியாது. வேணும்னா போய் ஸ்கூல்-ல ஹிஸ்டரிய மறுபடியும் படிங்கன்னு சொன்னேன்.
டக்குனு ஒருத்தன் சொன்னான் " இதுவரைக்கும் நான் ஸ்கூல்-ல இவரை பற்றி படிச்சதே இல்லன்னு".


அட ஆமா ..நானும் ஸ்கூல்-ல படிச்சா மாதிரி நியாபகமே இல்லையேன்னு எனக்கும் அப்பதான் தோணிற்று.

ஒருவேளை தமிழனாய் இருப்பதினால் நமக்கு குறைந்த பட்சம் இவர் பெயராவது தெரிந்திருக்குமோ!

"சரி சரி ..என்ன இப்போ ஸ்கூல்-ல படிக்கலன்ன என்ன? எல்லாரும் கூகிள்-ல போய் தேடுங்கடா"ன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேன்

ஆனாலும் மக்களே ஸ்கூல் ஹிஸ்டரியில சேகுவேராவை பற்றி பாடங்கள் ஏன் இல்லை என்று யாருக்காவது தெரியுமா?குறிப்பு: சேகுவேராவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.அதற்கான சுட்டிகள் இருப்பின் சுட்டிகாட்டவும்.நன்றி!


பின் குறிப்பு: அன்றைய மாலை நேரத்தில் எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு.

"மச்சி ...நீ மத்தியானம் செகுவாராவை பற்றி சொன்னே இல்லை....அவரு பெரிய ஆள் போல இருக்குடா.....ஹி ஈஸ் ரியலி க்ரேட்டு தெரியுமா?...
ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையிலான எல்லா வரலாற்று புத்தகங்களிலும் காந்திய பத்தி படிக்கிறாங்க ..இதுவரை எனக்கு தெரிஞ்சி ஒருத்தன் கூட காந்தியா மாறல .. செகுவாராவை பத்தி ஒரு வரி கூட பாட புத்தகங்களில் இல்ல ஆனா எத்தனையோ பேர் செகுவராகளாக இருக்கிறார்களே எப்படிடா?"

என்று அவன் சொல்லிகொண்டிருக்கும்போதே சிக்னல் இல்லாமல் லைன் கட் ஆகி விட்டது.


என்குறிப்பு : எளியவர்களை கண்டால் காந்தியாகவும் கொடியவர்களை கண்டால் செகுவேராவாகவும் எழுச்சி அடைவதே இக்காலத்தில் சால சிறந்தது.
என்ன சொல்றீங்க தோழர்களே?

ஜுர்கேன் க்ருகேர்  – (24 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:10)  

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.ஆட்காட்டி அவர்களே.

சதுக்க பூதம்  – (25 டிசம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:52)  

School History talks about successfull institutional players only. Che was against institutions and he got complete victory only in cuba.(Even though he is the role model for oppressed people)

ஜுர்கன்  – (3 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 7:59)  

//Che was against institutions and he got complete victory only in cuba.(Even though he is the role model for oppressed people)//

சரிங்க சார்!

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP