ரே சார்லஸ்-இன் இனப்பற்றும் தமிழக அரசியவாதிகளின் பணப்பற்றும்!

ரே..இதான் படத்தின் பேரு.

ஒரு அமெரிக்க கறுப்பினத்தவரான மியூசிஸியன்- ரே சார்லஸ் ஐ பற்றிய பதிவு.

இது பட விமர்சனம் அல்ல.ஏனெனில் ISO தர பட விமர்சகர்கள் இங்கு உலவும் பலர் மாதிரி என்னால் பட விமர்சனங்களை அவ்வளவு சுவைபட தரமுடியாது.

இது சாதாரண திரைப்படம் போலல்லாமல் ரே-வின் வாழ்க்கையையே பதிவாக எடுத்திருக்கிறார்கள் சுவராஸ்யமாய் மற்றும் உண்மையாகவும்!

இப்படத்தில் வரும் ஒரு காட்சியை மட்டும் உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்.
ரே சார்லஸ் என்கிற அந்த கருப்பு இசை மேதை அமெரிக்காவில் மிக மிக பிரபலமாகிக்கொண்டிருந்த நேரமது!
அவரின் ஒவ்வொரு இசை நிகழ்ச்சியும் அமெரிக்கா மட்டுமன்று உலகமெங்கும் விரும்ப பட்டு வந்த காலம்.

அச்சமயத்தில்தான் ஜியார்ஜியா-வில் அவரின் நிகழ்ச்சியை ஒரு வெள்ளைக்காரர் ஏற்பாடு செய்திருதார்.
அதன்படி ரே-வும் சொன்ன நேரத்திற்கு ஜியார்ஜியா சென்றார்.


அங்கு அவருக்கு எதிராக ஒரு கறுப்பின கூட்டமே அவரை எதிர்த்து கோஷமிட்டுக்கொண்டிருந்தது!
விஷயம் என்னவென்றால் ரே பாடப்போகும் அந்த நிகழ்ச்சியானது வெள்ளைக்காரர்களால் வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமே சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ரே ..கறுப்பினத்தவர்களின் எதிர்ப்புகளையும் மீறி உள்ளே செல்ல முயலும் போது,,ஒரு கறுப்பின இளைஞ்சன் சொன்ன வர்ர்த்தைகளுக்கு கட்டுப்பாட்டு நின்றார்.

ஒரு கருப்பினத்தை சேர்ந்த ஒருவன்,,,,,வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் பிரத்யோகமாய் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியை அரங்கேற்றினால் அது நம் இனத்தை நாமே தரம் தாழ்த்துவதற்கு சமமதானால் நீங்கள் இந்நிகழ்ச்சியை நடத்தகூடாதேன்றும் நம் இனத்தை சேர்ந்த நீங்களே நம்மினத்திற்கு துரோகம் செய்யலாமா என்றும் வினவிய போதுதான் தான் எப்பேர்பட்ட துரோகம் செய்யவிருப்பதை உணர்ந்தார்


இதனால் என்ன ஆனாலும் பரவாயில்லையென்று நினைத்து உடனே அந்நிகழ்ச்சியை ரத்து செய்து,கறுப்பினத்தவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். நிறவெறி கொண்ட வெள்ளைக்காரர்களை வெறுப்பில் ஆற்றினார்

பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காமல்,தம்மினமே தமக்கு சிறந்தது என்று நினைத்து இந்த முடிவினை அவர் எடுத்தால் அவருக்கு ஜியார்ஜியாவில் உள்நுழைய தடை விதித்து அந்த மாகாண கவர்னர் அறிவித்தார்

இந்த தடை முப்பது ஆண்டுகள் நீடித்தது.

நிறவெறி அடங்கும் காலகட்டத்தில் ஜியார்ஜியா மாகாண கவர்னர் அவரை பழைய சம்பவங்களை மறந்து மீண்டும் ஒரு இசை கச்சேரியினை நடத்த வேண்டினார்.

அதற்கிணங்க அவர் புகழ்பெற்ற "ஜியார்ஜியா" என்ற பாடலை பாடி கறுப்பினத்தவர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

சாகும் வரை அவர் அவரின் இனத்திற்கு பல கொடைகளையும் காலத்தினால் அழியாத இசைகளை இவ்வுலகத்திற்கும் அளித்தார் என்றால் அது மிகையாகாது.

முப்பது வருடத்திற்கு பின் அவர் அரங்கேற்றிய அந்த பாடலை நீங்கள் இங்கே கேட்டு மகிழலாம்.
இதுவரை படித்த நீங்கள் இந்த பதிவின் முதல் பாதியான "ரே வின் இனப்பற்றை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

இரண்டாவது பாதியான "நம்மினத்தை பற்றிய கவலையே இல்லாத தமிழக அரசியல்வாதிகளின் பணப்பற்றை" பற்றி நான் பதிவு போட்டுத்தான் நீங்க தெரிஞ்சிக்குனுமா என்ன? ஹி ஹி!


நவநீதன்  – (29 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:51)  

// பலர் மாதிரி என்னால் பட விமர்சனங்களை அவ்வளவு சுவைபட தரமுடியாது //
அனால் சுவாரசியமாக தந்திருக்கிறீர்கள் ...


// இரண்டாவது பாதியான "நம்மினத்தை பற்றிய கவலையே இல்லாத தமிழக அரசியல்வாதிகளின் பணப்பற்றை" பற்றி நான் பதிவு போட்டுத்தான் நீங்க தெரிஞ்சிக்குனுமா என்ன? ஹி ஹி!//
அனாலும் ஒங்களுக்கு ஓவர் குசும்பு...
:)

ஜுர்கேன் க்ருகேர்  – (29 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:37)  

நவநீதன், உங்கள் வருகை மற்றும் கருத்திற்கு ரொம்ப நன்றி

Cable Sankar  – (2 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 7:11)  

//// பலர் மாதிரி என்னால் பட விமர்சனங்களை அவ்வளவு சுவைபட தரமுடியாது // //

ஆனாலும் ரொம்பதான் தன்னடக்கம்.. உங்களுக்கு ஜூர்கேன்.

அது சரி எங்க போயிட்டீங்க.. உங்களை வலை வீசி தேடிகிட்டிருக்கேன். நீங்க எழுத ஆரம்பிச்சதை சொல்லவேயில்லையே..? ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டேன்.

ஜுர்கேன் க்ருகேர்  – (9 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 12:03)  

வருகைக்கு நன்றி என் அபிமான திரு.கேபிள் சங்கர் அவர்களே!
நீங்கள் பின்னூட்டம் இட்டது எனக்கு பெருமையான விசயமே!

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP