லஞ்சம் வாங்குரவனை எப்படி "போட்டு" கொடுப்பது?

சீக்ரெட் வீடியோ கேமரா.


சமீபத்தில் ஒரு பேனா வாங்கினேன். அது பேனா இல்ல! ...பேனா மாதிரி (!)
ஏனென்றால் பாக்கறதுக்கு பேனா மாதிரியே இருக்கும் அதற்குள் சீக்ரெட்டா ஒரு காமெராவும் மைக்ரோ போனும் இணைக்கப்பட்டிருக்கும்.
பேனா மூடிய தொறந்தா USB பெண் டிரைவே மாதிரி இருக்கு.இதன் வீடியோ கொள்ளளவு இரண்டு GB.
இதனுடன் சார்ஜெரும் வருகிறது.
கம்ப்யூட்டர் ( USB PORT) மூலமாகவோ அல்லது பவர் சப்ளை ( மொபைல் போன் மாதிரி) மூலமாகவும் சார்ஜ் செய்யாலாம்.
ஒரு பட்டன அழுத்துனா ரெகார்ட் ஸ்டார்ட் ஆகும் அதே பட்டன மறுபடியும் தட்டுனா ரெகார்ட் ஆகுறது நின்னுரும்.
ஜோபில சொருகிக்கிட்டு போனோமென்றால் அது வீடியோ காமெரா அப்படின்னு ஒருத்தனாலும் கண்டு பிடிக்க முடியாது.
விலை தோராயமாக சுமார் ஐந்தாயிரம் ரூபாய்.
உங்களுக்காக சில படங்களை இணைத்துள்ளேன்.





பயன்கள்: எவனாவது லஞ்சம் கிஞ்சம்னு கேட்டான்னா அப்படியே இந்த ரகசிய காமேராவுல அவன் லஞ்சம் வாங்கறத புடிச்சி அவன் வேலைக்கே வேட்டு வைக்கலாம்
நல்ல வெளிச்சத்தில் வீடியோ நன்கு தெளிவாக இருக்கிறது. மிச்ரோபோனே அருமையாக வேலை செய்கிறது.
இந்த மாதிரி லஞ்சம் வாங்கரவங்களை வழக்கம் போல கண்டுக்காம விடாமல் ஏதோ நம்மாலான உதவி அப்படின்னு ஆதாரத்தோடு போட்டு கொடுத்தா லஞ்சம் குறையுமா குறையாதா?

பின் குறிப்பு: வெளி நாட்டுல எல்லாம் டாக்டர்-கிட்ட போகும்போது நாம பேசறதும் டாக்டர் கொடுக்கிற பிரஸ்க்ரிப்சன் எல்லாம் வீடியோவில் பதிவாகுமாமே. பின்னால எதாவது பிரச்சினை அப்படின்னு வந்தா ரெகார்ட் ஆன வீடியோ-வை வைத்து கேஸ் போட்டு பணம் பார்க்கிறாங்களாம்.

Read more...

வரி கட்டியதால் நான் பாவி ஆனேன்!

தமிழர் படும் அல்லல்களை பார்க்கும்பொழுதெல்லாம் கண்ணீர் வருகிறது.
சமீபத்தில் யு டியுப்-இல் பார்த்த காட்சி ரொம்பவே பாதித்து விட்டது.
இவங்க பாவமெல்லாம் நம்மை சும்மாவே விடாது! ஏன்னா நம்ம வரிப்பணத்துல தானே அப்பாவி மக்கள் செத்து விழறாங்க!





செத்த பிறகுதான் கோடித்துணி* வாங்குவாங்க ஆனா ஈழ தமிழர்கள் சாவறதுக்கு முன்னாடியே நாமே கோடித்துனியை இங்கியே வாங்கி அனுப்பிவிட்டோம். கலைஞ்சர் தலைமயிரில் சாரி தலைமையில் அனுப்பிய பொருட்களை சொல்கிறேன்!

*கோடித்துணி : செத்த பிறகு பிணத்தின் மேல் போடும் துணி!

Read more...

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP