லஞ்சம் வாங்குரவனை எப்படி "போட்டு" கொடுப்பது?

சீக்ரெட் வீடியோ கேமரா.


சமீபத்தில் ஒரு பேனா வாங்கினேன். அது பேனா இல்ல! ...பேனா மாதிரி (!)
ஏனென்றால் பாக்கறதுக்கு பேனா மாதிரியே இருக்கும் அதற்குள் சீக்ரெட்டா ஒரு காமெராவும் மைக்ரோ போனும் இணைக்கப்பட்டிருக்கும்.
பேனா மூடிய தொறந்தா USB பெண் டிரைவே மாதிரி இருக்கு.இதன் வீடியோ கொள்ளளவு இரண்டு GB.
இதனுடன் சார்ஜெரும் வருகிறது.
கம்ப்யூட்டர் ( USB PORT) மூலமாகவோ அல்லது பவர் சப்ளை ( மொபைல் போன் மாதிரி) மூலமாகவும் சார்ஜ் செய்யாலாம்.
ஒரு பட்டன அழுத்துனா ரெகார்ட் ஸ்டார்ட் ஆகும் அதே பட்டன மறுபடியும் தட்டுனா ரெகார்ட் ஆகுறது நின்னுரும்.
ஜோபில சொருகிக்கிட்டு போனோமென்றால் அது வீடியோ காமெரா அப்படின்னு ஒருத்தனாலும் கண்டு பிடிக்க முடியாது.
விலை தோராயமாக சுமார் ஐந்தாயிரம் ரூபாய்.
உங்களுக்காக சில படங்களை இணைத்துள்ளேன்.





பயன்கள்: எவனாவது லஞ்சம் கிஞ்சம்னு கேட்டான்னா அப்படியே இந்த ரகசிய காமேராவுல அவன் லஞ்சம் வாங்கறத புடிச்சி அவன் வேலைக்கே வேட்டு வைக்கலாம்
நல்ல வெளிச்சத்தில் வீடியோ நன்கு தெளிவாக இருக்கிறது. மிச்ரோபோனே அருமையாக வேலை செய்கிறது.
இந்த மாதிரி லஞ்சம் வாங்கரவங்களை வழக்கம் போல கண்டுக்காம விடாமல் ஏதோ நம்மாலான உதவி அப்படின்னு ஆதாரத்தோடு போட்டு கொடுத்தா லஞ்சம் குறையுமா குறையாதா?

பின் குறிப்பு: வெளி நாட்டுல எல்லாம் டாக்டர்-கிட்ட போகும்போது நாம பேசறதும் டாக்டர் கொடுக்கிற பிரஸ்க்ரிப்சன் எல்லாம் வீடியோவில் பதிவாகுமாமே. பின்னால எதாவது பிரச்சினை அப்படின்னு வந்தா ரெகார்ட் ஆன வீடியோ-வை வைத்து கேஸ் போட்டு பணம் பார்க்கிறாங்களாம்.

எட்வின்  – (8 பிப்ரவரி, 2009 அன்று PM 10:14)  

தகவலுக்கு நன்றி நண்பரே.

யூர்கன் க்ருகியர்  – (9 பிப்ரவரி, 2009 அன்று AM 8:46)  

பின்னூட்டதிற்கு மிக்க நன்றி Arnold நண்பா!

senthil  – (9 பிப்ரவரி, 2009 அன்று AM 8:47)  

தகவலுக்கு நன்றி, எங்கே கிடைக்கிறது.

யூர்கன் க்ருகியர்  – (9 பிப்ரவரி, 2009 அன்று AM 10:32)  

வருகைக்கு நன்றி செந்தில் அவர்களே!
நண்பர் மூலம் ஜெர்மனி-யில் இருந்து தருவித்தேன்.
நம் நாட்டிலும் கிடைக்க பெறுவதாக அறிந்தேன். ரிட்சி ஸ்ட்ரீட்-இல் இருப்பதாக செய்தி.

யூர்கன் க்ருகியர்  – (9 பிப்ரவரி, 2009 அன்று AM 11:54)  

//நம்மூருக்கு 2GB போதுமா? :-)//

ஒரே வரியில் சிரிக்க ( சிந்திக்கவும்தான்) வைத்து விட்டீர்கள்.
நன்றி திரு வடுவூர் குமார் அவர்களே

பெயரில்லா –   – (9 பிப்ரவரி, 2009 அன்று PM 7:20)  

நல்ல பதிவு.
நன்றி ஜுர்கேன் க்ருகேர்

ALLINALL  – (24 மார்ச், 2009 அன்று PM 9:26)  

இதைத்தான் ரொம்ப நாளாக தேடுகிறேன்.தகவலுக்கு நன்றி.தமிழ் நாட்டில் கிடைக்குமிடம் தெரிந்தால் ஈ‍‍ மெயில் அனுப்பவும் ப்ளீஸ்!உங்களுக்கு என் டபுள் வோட்./‍இராதா கிருஷ்ணன்/‍

யூர்கன் க்ருகியர்  – (27 மார்ச், 2009 அன்று AM 11:51)  

ரிட்சி ஸ்ட்ரீட் - இல் தேடி பார்க்கவும்.
வருகைக்கு மிக்க நன்றி pottal

cp  – (10 ஏப்ரல், 2009 அன்று PM 3:59)  

அண்ணா!! அந்தபேனாவின் பெயர் என்ன?

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP