மயிற்றிற்கும் உதவா தள்ளக்கை

திருக்குறள் பற்றி அறியாதோர் யாருமிலர். திருக்குறள் ஈரடி வெண்பா வகை சார்ந்த நூல். வெண்பாவின் இலக்கணப்படி ஈரடி கொண்டிருக்கும் பாக்கள் ஈரடி வெண்பா அல்லது குறள் பா என்றழைக்கப்படும்.
ஈரடி வெண்பா இலக்கணப்படி பல நூல்கள் பல கால கட்டத்தில் பலரால் இயற்றப்பட்டாலும் வள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் மட்டுமே காலத்தையும் வென்று நிற்கிறது. (ஔவை குறள், ஞானக்குறள்,, மேலும் பல ....குறள் வெண்பாக்களால் ஆனவையே )

திருக்குறளுக்கு நிகரான நூல் இதுவரை இயற்றப்பட்டதில்லை என அறுதியாக கூறலாம்.

ஒரு வட மொழி சொல் கூட கலக்காமல் முற்றிலும் தூய தமிழ் சொற்களை கொண்டே இயற்றபட்டதும் மேலும் தமிழின் முதல உயிர் எழுத்தான அகரத்தில் ஆரம்பித்து இறுதி மெய் எழுத்தான "ன்" னில் முடிவதும் இதன் சிறப்பு.சரி ..இப்பதான் நாம இப்பதிவின் தலைப்பிற்கு வரோம்...

கோபம்,எரிச்சல், பயம், கொலைவெறி இதெல்லாம் ஒரு சேர எப்ப வரும் தெரியுமா ... எப்பப்பெல்லாம் எவனாவது காங்கிரஸ் பத்தி உயர்வா பேசினான் அப்பப்பெல்லாம் இவை அனைத்தும் கலந்த பீலிங் தோன்றும் ..

இப்படிதான் பெட்ரோமாக்ஸ் மண்டையன் அறுபத்து மூன்று தொகுதிகளை சொன்னதும் ...திருவள்ளுவர் கிட்ட சாரி சொல்லிட்டு கோபாவேசமா ஈரடி வெண்பாக்களா எழுதினேன் சார்.. எதுகை மோனைகளோடு பெரும்பான்மையான இழிவார்த்தைகளுடன் படு பயங்கரமா இருந்தது .. (அவைகள் பதிவில் எழுத தகுதி இல்லாததால் பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்)...

ஏதோ கூடுமானவரை பிற மொழி சொற்களை தவிர்த்து தமிழில் நான் எழுதிய "அரசியல்வாதியியல்" அதிகாரத்தின் கீழ் பின் வரும் ஐந்து குறட்பாக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
அரசியல்வாதியியல்

1 .

கொத்துக்குலை நெற்கதிர்போல் தோன்றுமே தேர்தலின்கண்
வெத்துப்பத ராகுமே பின்பு


நன்கு விளைந்த நெற்கதிர்களை போன்று பயன் தருவோர் போன்று மக்களிடையே மாயையினை தேர்தலின் போது உருவாக்கும் அரசியல்வாதிகள் பின்பு வெற்றுப்பதர் போல் பயனற்று இருப்பார்கள் என்பதே கருத்து.

2.

கைகூப்பி நாவசைப்பான் நைச்சியமா னவன்கூற்று
நீர்குமிழி எனக் கொள்


ஓட்டுக்காக கைகூப்புவான், நயமாக பேசுவான், வேண்டியவன் போல அநியாயத்திற்கு ஆக்டு கொடுப்பான் ஆனால் அவன் சொன்ன வாக்குறுதி அனைத்தும் நீரில் தோன்றும் நீர்குமிழி போன்றது என்று அறிந்து கொள்.


3.

குழைவான் குனிவான் அகலானென்பான் அனுகூலமாயின்
அகப்படான் பின்னைந்து வருடம்

குழைந்து பேசுவான், பணிவாக குனிவான், உன்னை விட்டு அகலாமல் இருப்பான் பின் அவனுடைய தேவை (ஓட்டு) பூர்த்தியான பின் ஐந்து வருடத்திற்கு அகப்படவே மாட்டான்


4.

பணங்காட்டுவான் பொருளாட்டுவான் ஓட்டிசைந் தனினும்
வேசித் தொழிலே நன்று

ஓட்டிற்காக பணத்தை காட்டுவான்,, இலவச பொருள்களை தருவான் அதைக் கொண்டு நீங்கள் ஓட்டு போடும் செயலானது வேசி தொழிலை விட கேவலமானது எனக்கொள்.
5.


சுயத்திற்கு போட்டாலும் சிற்றுதவியா குமெனவறிக
மயித்திற்கும் உதவா தள்ளக்கை


சுயேச்சைக்கு போடும் ஓட்டாவது சிறிதளவேனும் பயன் தரும் ஆனால் காங்கிரஸ்க்கு போடும் ஓட்டு மயித்திற்கும் உதவாது என அறிக.

(அள்ளைக்கை என்றால் காங்கிரஸ் என பொருள் கொள்க )குறிப்பு : அல்லக்கைகளின் எதிர்ப்பு தொடரும் ..

drbalas  – (15 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:31)  

குறள்கள் மிக அருமையாக இருந்தது அதிலும் கடைசி மிக்க நன்று

யூர்கன் க்ருகியர்  – (15 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 9:01)  

//drbalas – (15 மார்ச், 2011 8:31 pm)
குறள்கள் மிக அருமையாக இருந்தது அதிலும் கடைசி மிக்க நன்று

//

கருத்துரைக்கு நன்றி நண்பா ....

வானம்பாடிகள்  – (15 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 9:17)  

அந்த பெட்ரமாக்ஸ் மண்டையன் இதுக்கும் உரை எழுதி காசு பாக்கும். காங்கிரஸ் விளக்கம் சாலப் பொருத்தம். :))

யூர்கன் க்ருகியர்  – (15 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 9:22)  

//வானம்பாடிகள் – //

வருகைக்கும் "சரியான" கருத்திற்கும் மிக்க நன்றி சார்

Pm.Elanco  – (15 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 10:08)  

கலியுகத் திருவள்ளுவருக்கு வணக்கம்,தொடருங்க,

கக்கு - மாணிக்கம்  – (16 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 12:04)  

அடி ஆத்தீ ..................உன்னைய ஒழுங்கா TNPSC பரீட்சைக்கு படிக்க சொன்னா மாப்ள நீ இப்டி தமிழ்ல நாலு வூடு கட்ட அடிக்கணுமா?/
எனக்கு உன் "குறள்" படிச்சி மலபந்தமே வன்துடிசிடா பாவி. ! :))) ...ஆமா மல பந்தம்னா என்னான்னு பொருள் சொல்லனுமா?
அது வேற ஒன்னும் மில்ல கண்ணு CONSTIPATION போதுமா.! கவலையே படாத மாப்ஸ். இங்க காங்கிரசு அதிகமா வந்தா மூணு சீட்டுதான்.
நம்ம ஆளுங்க ரெடியாத்தான் இருக்காங்க அள்ளி போட்டு குத்த!

தமிழ் உதயம்  – (16 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 8:49)  

பெட்ரமாக்ஸ் மண்டையன். குறளை போல் இந்த அடைமொழியும் நன்றாக இருக்கு,

யூர்கன் க்ருகியர்  – (16 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 9:02)  

//Pm.Elanco – (15 மார்ச், 2011 10:08 pm)
கலியுகத் திருவள்ளுவருக்கு வணக்கம்,தொடருங்க,

//
வணக்கம். கருத்துரைக்கு நன்றி சார்.

யூர்கன் க்ருகியர்  – (16 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 9:06)  

//கக்கு - மாணிக்கம் – அடி ஆத்தீ ..................
//

மச்சி ......உங்கள் கருத்துரைக்கு நன்றி...

யூர்கன் க்ருகியர்  – (16 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 9:07)  

//தமிழ் உதயம் – (16 மார்ச், 2011 8:49 am)
பெட்ரமாக்ஸ் மண்டையன். குறளை போல் இந்த அடைமொழியும் நன்றாக இருக்கு,

//

மிக்க நன்றி சார் தங்கள் கருத்திற்கு.. :)

Free Traffic  – (17 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:49)  

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

பார்வையாளன்  – (3 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 9:29)  

தமிழ் மேல் இருக்கும் ஆளுமை ரசிக்கத்தக்கது..

யூர்கன் க்ருகியர்  – (5 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 7:40)  

//பார்வையாளன் – (3 ஏப்ரல், 2011 9:29 pm)
தமிழ் மேல் இருக்கும் ஆளுமை ரசிக்கத்தக்கது..

//

அப்படியா சார்.. இப்படியெல்லாம் யாராவது சொன்னா ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது சார்.

நன்றி

ஸ்ரீதர்  – (27 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 1:35)  

அருமை நண்பரே!சமயம் கிடைத்தால் என் தளத்துக்கு
வாருங்கள்.பிடித்திருந்த்தால் நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்

வழிப்போக்கன்  – (5 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:17)  

உங்கள் வலைப்பூவைப் பார்வையிட்டேன். புதுத் குறள் நன்றாக இருந்தது. 2011 க்குப் பின் ஏன் பதிவுகள் இல்லை?

வழிப்போக்கன்  – (5 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 9:18)  

உங்கள் வலைப்பூவைப் பார்வையிட்டேன். புதுத் குறள் நன்றாக இருந்தது. 2011 க்குப் பின் ஏன் பதிவுகள் இல்லை?

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP