விரலை நீட்டுங்கள்!
விரலை நீட்டுங்கள்!
கோயிலுக்கு போனா நாம எல்லாரும் " கடவுளே எல்லாரையும் காப்பாத்துப்பா" அப்படின்னு தான் கும்பிடுவோம்.
ஆனா தேர்தல் முடியிறவரை " கடவுளே எல்லாரையும் வோட்டு போட வைப்பா" அப்படின்னுதான் கும்பிடனும்,
வோட்டு போடறது எப்படின்னு உங்களுக்கு எல்லாம் தெரியும்.புதுசா நான் ஒன்னும் சொல்லி தர வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன். வோட்டு போட்டதுக்கு அடையாளமாய் கைக்கு மை வைப்பாங்க ...
அன்றைக்கு யார் பார்த்தாலும் வோட்டு போட்டாச்சா ॥ வோட்டு போட்டாச்சா ॥ ன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் விசாரிச்சுக்குவாங்க ॥
அப்பெல்லாம் விரலை நீட்டி அதிலிருக்குற மையை காண்பித்து ( வோட்டு போட்டதற்கு அடையாளமாய் )போட்டாச்சு என்று சொல்வோம்।
(நியாயமா பார்த்தா நெத்தில நாமம் வச்சு விட்டிருக்கணும் ஆன கைல மையை வைக்கிறாங்க....)
இப்ப மேட்டருக்கு வருவோம் ....
யாருக்கு வேண்டுமானாலும் வோட்டு போடலாம் ஆனா இந்த காங்கிரஸ் க்கு மட்டும் வோட்டு போட கூடாது।
ஏன்னா எல்லாரும் வோட்டு போட்டாதான் (காங்கிரசை தவிர்த்து) ......காங்கிரஸ் க்கு தமிழன்னா யாருன்னு ஒரு "காட்டு" காட்ட முடியும்।
அதை எப்படி காட்டறதுன்னு புரியாதவங்க கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ।
அதனால மக்களே ....காங்கிரசை எதிர்த்து தேர்தல்ல வோட்டு போடறதுக்கு ஆட்காட்டி விரலை நீட்டனும் ..மை வைக்க ...வோட்டு போட்டதுக்கு அப்புறம் காங்கிரஸ் க்கு நடு விரலை நீட்டனும்...ஆப்பு வைக்க ॥
இப்ப புரியுதா ...நான் ஏன் இந்த இடுகைக்கு "விரலை நீட்டுங்கள்" அப்படின்னு தலைப்பு வச்சேன்னு!
எனக்கு தெரியும் நீங்க கண்டிப்பா நீட்டுவீங்கன்னு!(!?) ....
காங்கிரசுக்கு வோட்டு போடறதுதான் தப்பு !
ஆனா இந்த இடுகைக்கு போடலாம் தப்பில்லை....:) Read more...