ஓ போடு ! .ஒட்டு போடு ..49-ஓ வை பார்த்து போடு ...!!





எலெக்சன் வருது ...அரசியல்வாதிகள் எல்லாம் பெட்டியை மாத்துவதிலும் தொகுதியை ஒதுக்குவதிலும் ...சின்ன பசங்க மிட்டாய்-பலப்பம் மாதிரி பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு .....ஜனநாயகத்தின் மூச்சை நிறுத்துவதிலேயே இருக்காங்க .... :(



போன எலெக்சன்ல இந்த பக்கம் இருக்கிறான் இந்த எலெக்சன்ல அந்த பக்கம் இருக்கான்...அப்போ போன எலெக்சன்ல கொடுத்த வாக்குறுதி எல்லாம் நிறைவேத்தரானுந்களோ இல்லையோ அதுக்கு அப்படியே ஆப்போசிட்டா புதுசா வாகுறுதியை அள்ளி வீசரானுங்க



இந்த மாதிரியான அரசியல் வாதிகள் உங்க தொகுதியில நிற்க போகிறாரா.??..வேற எந்த வேட்பாளரையுமே உங்களுக்கு பிடிக்க வில்லையா ???....அதனால வோட்டை போட போறதில்லையா....!!!



தயவு செய்து கொஞ்சம் நிற்க ..............

அங்கதான் நம்ம 49-O வந்து நிக்கிறான் !! :)
The Conduct of Elections Rules, 1961, 49-ஓ வின் பிரிவு இப்படி சொல்கிறது



"ஒரு தகுதியுள்ள இந்திய குடிமகன் தான் தன் வோட்டை போட விருப்பமில்லை என்கிற விடயத்தை அரசாங்கத்திற்கு தெரிவிக்கலாம்"



।வோட்டு போட்டு உங்க கடைமையை நிறைவேத்திய மாதிரியும் ஆச்சு உங்க வோட்டை மற்றவர்கள் போடுவதை தவிர்த்த மாதிரியும் ஆச்சு! முக்கியமா ...திருட்டு அயோக்கியவாதியை சாரி ... அரசியல்வாதியை வீட்டுக்கு அனுப்பிய மாதிரியும் ஆச்சு !



அது சரி ॥இதை எப்படி போடுவது ?


நீங்க வோட்டு போடும் வேளை உங்கள் பெயரை பதிவு செய்யும்பொழுது " நான் 49-ஓ வை உபயோகிக்க விரும்புகிறேன் " என்று போலிங் ஆபிசரிடம் கூறவும்


அவர் உங்களை மேலும் கீழும் பார்க்க நேரிடலாம் ..அதை தவிர்த்து மறுபடியும் " நான் 49-ஓ வை உபயோகிக்க விரும்புகிறேன் " ,,"அதற்கான பாரம் ஐ தரவும்" என்று கேட்கவும் (49-0 Form)


அந்த பாரத்தில் உங்கள் கையொப்பம் இட்டு நீங்கள் உங்கள் வோட்டுரிமையை நிலை நாட்டி உங்களின் மன ஓட்டத்தை அரசாங்கத்திற்கு தெரிவிக்கலாம்



சிம்பிள் அவ்வளவுதான்



***************************************

Steps for doing this:
1. While registering the name by the time of voting, convey the booth officials that “I want to go for 49′O”.
2. Register your signature in the 49′O form available there.
3। Done.

************************************


முக்கியமான செய்தி :
49-ஓ வோட்டுகள் லீடிங் வேட்பாளரை விட அதிகமாக இருப்பின் ரி போலிங் நடத்தப்படும் ....இதுல காமெடி என்னவென்றால் அந்த தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் மறுபடியும் ரி-போலிங்-இல் வர முடியாது ॥


மோசமான வேட்பாளரை வீட்டுக்கு அனுப்ப இதைவிட சிறந்த ஜனநாயகமான வேறு வழி புலப்படவில்லை :)



பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கவலையே வேண்டாம் நாமெல்லாம் சேர்ந்தே மணி ( முடிஞ்சா பாடையே॥ ) கட்டுவோம்।



ஒரு பூனைக்கு மட்டுமல்ல அந்த தொகுதியில் போட்டியிட்ட அனைத்து திருட்டு பூனைகளுக்கும்தான்!



உங்க வோட்டு ரகசியத்தை இதில் மெய்ண்டைன் பண்ண முடியாதது இதில் உள்ள முக்கிய குறை ।இதற்கு எலேக்ட்ரானிக் வோட்டு இயந்தரத்தில் "49-0 Option" இல்லாததே காரணம்





அடுத்த தேர்தலிலாவது வோட்டு இயந்தரத்தில் 49-0 வரவேண்டுமென்று போராடுவோம் !


வாழ்க தமிழ் மக்கள்!! வாழ்க ஜனநாயகம் !!





49-ஓ - ஜெய் ஹோ!........

பெயரில்லா –   – (12 ஏப்ரல், 2009 அன்று 11:17 PM)  

Please refer to this link.
http://49-o.org/
49-O will not effect a re polling or candidate elimination.

Regards
Senthil.

தலைவர்  – (13 ஏப்ரல், 2009 அன்று 2:04 AM)  

தல, நீ இப்படி சொன்ன நாங்க எப்படி பொழப்பு நடத்தறது, எங்க குடும்பமும், வாரிசும் வாழ வேண்டாம, வளர வேண்டாம.
மக்களே இவர் சொல்வதை யோசிக்கவும்.

யூர்கன் க்ருகியர்  – (13 ஏப்ரல், 2009 அன்று 8:52 AM)  

//Please refer to this link.
http://49-o.org/
49-O will not effect a re polling or candidate elimination.

Regards
Senthil.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்.
தவறாயிருப்பின் மன்னிக்கவும் ..இதைப்பற்றி மேலும் அறிய முயற்சிக்கிறேன்

யூர்கன் க்ருகியர்  – (13 ஏப்ரல், 2009 அன்று 9:13 AM)  

//மக்களே இவர் சொல்வதை யோசிக்கவும்.//

தலைவரே,,தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP