அடிக்கடி வசிப்பிடத்தை மாற்றுபவர்கள் கவனத்திற்கு..
ஊரு
விட்டு ஊரு போய் வேலை செய்பவர்களும் அடிக்கடி வீட்டை ( குடி இருக்கிற வீட்டை சொன்னேன் !) மாற்றுபவர்களுக்கும் பொதுவாக இருக்கும் ஒரு தலையாய பிரச்சினை என்னவெனில் வசிப்பு சான்றிதழ் வாங்குவதுதான்.
வாடகை வீட்டில் இருந்தாலும் நிறைய பேர் "Rent Agreement" வாங்குவதில்லை.
காஸ் இணைப்பில் இருந்து இன்டர்நெட் இணைப்பு வரை எல்லாத்துக்கும் வசிப்பு சான்றிதழ் இருந்தாதான் கொடுப்பாங்க.
ஒரே இடத்தில இருப்பவர்கள் நிலைமை பரவாயில்லை ஆனா வருசத்துக்கு ஒரு வீட்டை மாத்தறவங்க பாடுதான் கஷ்டம்.
டிரைவிங் லைசென்சு, வோட்டர் ஐ டி இதெல்லாம் பெர்மனென்ட் ஆ குடி இருப்பவர்களுக்கு மட்டும்தான் செல்லுபடி ஆகும் மற்றபடி பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணுவதில் இருந்து இன்னபிற சில அத்தியாவசிய தேவைகளுக்கு தற்போது குடி இருக்கும் வீட்டு முகவரி உடைய வசிபபு சான்றிதழ் இருந்தே ஆக கட்டாயம் நம்மில் பல பேருக்கு ஏற்பட்டிருக்கும்.
ஒவ்வொரு முறையும் வீட்டை மாற்றும்போழுதும் வசிப்பிட சான்றிதழ் மாற்றவேண்டிய பெரும் கொடுமையில் இருந்து நம்மளை எல்லாம் விடுவிக்க இந்தியன் போஸ்டல் டிபார்ட்மென்ட் புதுசா ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார்கள்
அதுக்கு பேருதான் இந்தியன் போஸ்டல் ஐ டி ப்ரூப் (Indian Postal ID Proof).
இதன் மூலம் நாம் ஏராளமான பயன்களை அடையலாம்.
கிட்டத்தட்ட இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று வருட காலத்தில் செல்லுபடியாகும் உங்கள் முகவரி சான்று!
எதிர்காலத்தில் பல்வேறு நிறுவனங்களும் இதனை முறைபடுத்தப்பட்ட குறுகிய கால அடையாள அட்டையாக அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.(இந்தியா முழுதும் )
உங்கள் அருகாமையில் இருக்கும் தபால் நிலையத்திற்கு சென்று விசாரிப்பீர்களானால் மேலதிக தகவல்களை பெறலாம்.
எனக்கு தெரிந்த வரை இந்த தாபால் துறை அடையாள அட்டை ஆனது மூன்று வருடம் வரை செல்லுபடியாகும்.
அதற்குண்டான செலவு வெறும் இருநூற்று ஐம்பது ரூபாய்கள்.
மேலும் தெரிந்து கொள்ள
நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் பேசி அனைவருக்கும் இதைப்பற்றி அறிய தாருங்கள்
நன்றி வணக்கம்.