மேகம் கருக்குது மழை வர மாட்டேங்குது!

மக்களும்
எத்தன நாட்களுக்குத்தான் பொறுமையா இருப்பாங்க .... எனக்கு தெரிச்சவங்க எல்லோருமே எதாவது ஒரு வகையிலாவது அவரவர் உணர்வுகளை வெளிப்படுத்தீட்டாங்க ..இந்த பாழா போன மழை இன்னும் வரலயேன்னு!





கல்யாணத்துக்கு தேதி குறிச்ச ( ஜூன் ஏழு ) மாதிரி போன மாசமே மழை வருமென்று எதிர்பார்த்தும் இன்னும் வராம இருப்பதனால் மக்கள் எல்லாம் கடுப்பில் இருக்கிறார்கள்.

நான் இருக்கும் ஊருல இன்னும் பதினைந்து நாட்களுக்குத்தான் தண்ணீர் இருக்குமாம். அதுக்கப்புறம் எல்லாத்துக்கும் சங்குதான் ....

எங்க கம்பெனிக்கு பக்கத்துல இருக்கிற ஒரு கம்பெனில பத்து நாளைக்கு லீவு விட்டுட்டாங்க (அது ஒரு மருந்து கம்பெனி)..
அவனவன் "ரிசசன்" காரணமா ஊத்தி மூடிக்கிட்டு இருக்கும் போது இந்த கம்பெனி என்னடான்னா தண்ணீர் காரணமா லீவு விட்டிருக்காங்க !)


கடந்த இரு வாரமாக மேகங்களெல்லாம திரண்டு வரும் ...வானம் இருண்டு போகும் ..குளிர்ந்த காற்று அடிக்கும் சிறு தூறல் போடும் ..மக்களெல்லாம் மகிழ்ச்சியில் அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருக்குபோதே எங்கதான் போகுமோ தெரியிலேங்க ... எல்லாமே காணாம போய் சூரியன் நம்மள பார்த்து ஈயின்னு இளிப்பான் !





"நாம்தான் மத்தவங்களுக்கு தண்ணி காட்டுவோம் இப்போ மழையே
நமக்கு தண்ணி காட்டுது" என்ன கொடுமை இது கடவுளே ?

உண்ணாவிரதம் இருந்தா மழை விட்டு தூவானம் மட்டும் இருக்குமாம்.
இப்ப தூவானம் மட்டும்தான் இருக்கு மழைய காணோம் இதுக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சி சொல்லுங்க மக்களே .....

குறிப்பு : ஒவ்வொரு பகுதியிலும் மழை வரும் காலம் மாறுபடும். இந்த பதிவு மும்பை மற்றும் பூனே பகுதியை சார்ந்து எழுதப்பட்டது.

vasu balaji  – (2 ஜூலை, 2009 அன்று PM 9:57)  

ஹி ஹி. நாமெல்லாம் இந்த பருவ மழையை நம்பி நாளாச்சு. புயல் வந்தாதான் மழைன்னு நல்லவங்க இருக்கிற சென்னை வாசி.

ஊர்சுற்றி  – (2 ஜூலை, 2009 அன்று PM 11:35)  

மும்பையில மழை வந்தா பல இடங்கள் நாறிடுமாமே?!!! உண்மையா?!!!

வேலன்.  – (3 ஜூலை, 2009 அன்று AM 6:44)  

நல்ல பதிவு...

நாமும் அரசியல்வாதிகளும் செய்கின்ற தவறுகளால்தான் இந்த நிலை...
தவறுகளை தனியே பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

தேவன் மாயம்  – (3 ஜூலை, 2009 அன்று AM 7:19)  

மழை வந்துவிடும் !! உங்கள் பதிவால்!!!

யூர்கன் க்ருகியர்  – (3 ஜூலை, 2009 அன்று AM 9:29)  

திரு ,பாலா அவர்களுக்கு ..

நண்பரே ... நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் எழுத்துக்களைப் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. நறுக்கென்று நாலு வார்த்த ரெண்டாவது ரவுண்டுக்காக காத்திருக்கிறேன் .
வருகைக்கு நன்றி

யூர்கன் க்ருகியர்  – (3 ஜூலை, 2009 அன்று AM 9:32)  

//மும்பையில மழை வந்தா பல இடங்கள் நாறிடுமாமே?!!! உண்மையா?!!!//


நண்பரே ,,,
மழை வராமலிருந்தாலும் நாறிடும் ..பரவாயில்லைங்களா !!

யூர்கன் க்ருகியர்  – (3 ஜூலை, 2009 அன்று AM 9:33)  

//நாமும் அரசியல்வாதிகளும் செய்கின்ற தவறுகளால்தான் இந்த நிலை...
//

நீங்க சொன்னா சர்தான் சார்

யூர்கன் க்ருகியர்  – (3 ஜூலை, 2009 அன்று AM 9:35)  

//மழை வந்துவிடும் !! உங்கள் பதிவால்!!!//


நண்பரே ..நீங்க சொன்ன மாதிரியே சாயுங்காலம் மழை வந்தது ..அப்புறம் வரல .

வரும்....ஆனா வராது ........ - டயலாக் தான் நினைவுக்கு வருகிறது

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP