HDFC- வசனத்த மாத்துங்கடா டோய் ...

நண்பர்களே ..
இந்த பதிவை படிக்கும் முன் கீழே உள்ள லோகோவை ஒரு முறை உத்து பார்த்துட்டு அப்புறமா படிக்க ஆரம்பிங்க !











எல்லாம் என் நேரம் .... போட்ட கணக்கெல்லாம் தப்பா போச்சு!
பணம் வரும் என்று எதிர்பார்த்த எல்லா வழிகளிலும் நயா பைசா பெயராததால் கையை பிசைந்து கொண்டிருந்தேன்.

இன்னும் பத்து நாட்களில் பணத்தை புரட்டியாகவேண்டிய நிலை
முதல முதலாய் முடியாதோ என்கிற பயம் மனதில் எட்டி பார்த்தது.

என்ன பண்றதுன்னே தெரியல ..இருந்தாலும் மனதில் ஒரு அசட்டு தைரியம் ...எப்பாடு பட்டாவது பணத்தை செட்டில் பண்ணி சொன்ன வாக்கை காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம்.

"இந்த பேங்க் காரனுங்கதான் ஒரு நாளைக்கு மூணு முறை "பர்சனல் லோன் தரேன் ..பர்சனல் லோன் தரேன் ன்னு கூப்பாடு போட்டு போனில் தொந்தரவு பண்ரானுங்களே ..அவனுகள கேட்டு பார்த்தா என்ன ?"

மனம் நினைத்ததும் நினைவுகள் இனித்தது..

எவ்வளவு வட்டி இருந்தாலும் சரி இப்போதைய தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது தான் முக்கியம் ..மத்த அப்புறம் பார்த்துக்கலாம் என எனக்கு நானே அறிவுரை (?)சொல்லிக்கொண்டு "HDFC Customer care " க்கு போன் பண்ணினேன்.


"இந்த மாதிரி... எனக்கு அர்ஜெண்டா பணம் தேவை படுது ... அதான் என்னமோ "Cash on Call " அப்படின்னு ஒண்ணு இருக்காமே.. அதன் மூலமா எனக்கு இவ்வளவு பணம் ஏற்பாடு பண்ண முடியுமா" என்று கேட்டேன்.

"சிம்புள் மேட்டரு நீங்க வைச்சிருக்குற கிரெடிட் கார்டுக்கு நீங்க கேட்டதுக்கு மேலேயே கிடைக்கும்" பதில் வந்தது.

"பணம் கிடைக்கும் என்றதுமே இதயம் நெகிழ்ந்தது! நெஞ்சம் இனித்தது! "


" வட்டி விகிதம் 22%.. நாங்க உங்க ரிக்வெஸ்ட்-ஐ ப்ராசெஸ் பண்றேன். நாலு நாள் கழித்து நாங்களே போன் பண்றோம்" அப்படின்னு ஒரு கடைசி பிட்ட போட்டா.. HDFC கஸ்டமர் கால் சென்டர் காரி !

நாலு நாள் வரை காலும் வரல கையும் வரல ... எனக்கு இங்க கையும் ஓடல காலும் ஓடல ...


சும்மா இருக்குபோதேல்லாம் சும்மா சும்மா போன் பண்ணி வேணுமா... வேணுமானு கேப்பானுங்க ..
இப்ப வேணும்ன்ற போது வக்காளி... ஒருத்தனும் போன் பண்ணலையேன்னு என்று மனம் மறுபடியும் கவலை பட்டது ..

"நாயின்னாவே நாக்குலதான் நக்கித்தான் தண்ணி குடிக்கணும் ...

பணம்னாலே மானத்தை விட்டுத்தான் கேட்கனும்னு"


ரெண்டாவது முறையா போன் பண்ணா .."Your request is still on Process" இன்னிக்கி சாயந்தரத்துக்குள்ள சொல்லிடறேன் அப்படின்ன்றாங்க!

சாயந்தரமும் போச்சு அதுக்க அடுத்த நாள் சாயந்தரமும் போச்சி ...தப்பான களத்துல விளையாடுரமொன்னு லைட்டா ஒரு டவுட் வந்துச்சி.


இப்படியே மறுபடி மறுபடி காலையிலும் மாலையிலும் "கஸ்டமர் கால் சென்டர்"க்கு போன் பண்ணி பண்ணி இத்தன நாள் சேர்த்தி வச்சிருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போனதுதான் மிச்சம்.

கடைசி வரைக்கும் request is still on Process..request is still on Process" ன்னு சொல்லியே ஒரு வாரத்தை கழிச்சுட்டாங்க...

இனிமே என் பேச்ச நானே கேட்க மாட்டேன் ..

( அவ்வளவு கேவலமா இருக்கும் )

நான் தனி ஆளு இல்ல ...எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு!
( என்னை பின் தொடரும் 24 தமிழ் பதிவர்கள் !)

அப்படின்னு மனசுக்குள்ளேயே பன்ச் டயலாக் விட்டுகிட்டு கடைசி முறையா போன் பண்ணி ...

"இல்ல,, தெரியாமத்தான் கேட்கிறேன்.. "Cash on Call " ன்றது அர்ஜெண்டா பணம் தேவைபடுறவன் கேட்கற விஷயம் ..
இதுக்கே ஒரு வாரம் இழுத்தடிசிங்கன்னா அந்த ஸ்கீமுக்கே மீனிங் இல்லையே ?

தரேன்னா தரேன்னு சொல்லணும் இல்லன்னா தரமாட்டேன்னு சொல்லணும் ...
அத விட்டுட்டு ..தருவோம்ம்..ஆனா தரமாடோம்ம்னு ராங்கா பேசினா என்ன நியாயம் ?

என்னா என்கிட்டேயே விளையாட்டு காட்ரீங்களா? ..


அப்படின்னு ஒரு பிடி பிடிச்சதும் அந்த பொண்ணு "ஒரு நிமிடம் லைன்ல இருங்க சார் " சொல்லிட்டு வேற யார்கிட்டயோ டிஸ்கஸ் பண்ணி " சார் உங்களுக்கு லோன் இன்னும் அப்ப்ரூவ் ஆகல ஸ்டில் ஆன் த ப்ராசஸ் " அப்படின்னா பாருங்க ....

எனக்கு வந்ததே கோபம் ...கண்ணு மண்ணு தெரியாத கோபத்துல ...எனக்கு பணமும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம்னு தமிழ்ல அந்த ஹிந்தி கார பொண்ணுக்கிட்ட கத்தி திட்டிட்டு சட்டென கையிலிருந்த கிரெடிட் கார்டை உடைச்சி போட்டுட்டு பட்டுன்னு போனை கட் பண்ணிட்டேன்.


அந்த கடுப்புல கார்டில் இருந்த "HDFC LOGO" கண்ணுல பட்டதும் எனக்கு தோணிய விசயத்தை நீங்களே கீழே பாருங்க.

குறிப்பு : கடைசி வரை என் பீலிங் ஐ புரிசுக்கவே மாட்டேனென்ற "HDFC Bank" கிற்கு அரை பதிவும் ...



என் கஷ்டத்தை எல்லாம் புரிஞ்சிக்கிட்டு கடைசி வரை போராடியும் பணமே தராம அட்வைஸ் மட்டுமே குடுத்துட்டு அலேக்கா எஸ்கேப் ஆன என் நண்பர் சரவணனுக்கு மீதியுள்ள அரை பதிவும் சமர்ப்பணம்.





யூர்கன் க்ருகியர்  – (3 ஜூலை, 2009 அன்று PM 5:43)  

டென்சன் ஆகாதே சரவணா ..
உன்கிட்ட இனி பணம் கேட்கவே மாட்டேன்.
உன் மொக்கைய மட்டுந்தான் கேப்பேன் ..... :)

வேலன்.  – (4 ஜூலை, 2009 அன்று AM 6:55)  

லோன் வாங்கும் முன்னரே இவ்வளவு டென்சன் ஆகிறிங்க...இன்னும் உங்களுக்கு லோன் கொடுத்திருந்தால்...?
இதில் உங்களுக்கு பின்தொடரும் 24 பேர் சப்போர்ட் வேற?...
அப்துல்கலாம் சொன்னதை அவர்கள் கடைபிடிக்கின்றார்கள்.கனவு காணுங்கள்.
அவர்கள் லோன் கொடுப்பதாக...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Cable சங்கர்  – (4 ஜூலை, 2009 அன்று AM 10:10)  

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...

குப்பன்.யாஹூ  – (4 ஜூலை, 2009 அன்று AM 10:27)  

but one way its good for u. 22% is too high, it would be difficult for u to rapy at22%+service charges etc..

I feel u r saved now.

ramalingam  – (4 ஜூலை, 2009 அன்று AM 11:56)  

அவர்கள் வைத்த டெஸ்ட்டில் நீங்கள் தோற்று விட்டீர்கள். பொறுமையின் சிகரங்களுக்குத்தான் அவர்கள் லோன் தருவார்களாம்.

யூர்கன் க்ருகியர்  – (4 ஜூலை, 2009 அன்று PM 8:56)  

//இதில் உங்களுக்கு பின்தொடரும் 24 பேர் சப்போர்ட் வேற?...
//


சப்போர்ட்டுக்கு எல்லாரும் வராங்களோ இல்லியோ நீங்க கட்டாயம் வருவீங்கன்னு தெரியும்.

வேலன் சார், வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி

யூர்கன் க்ருகியர்  – (4 ஜூலை, 2009 அன்று PM 8:59)  

//அவர்கள் வைத்த டெஸ்ட்டில் நீங்கள் தோற்று விட்டீர்கள். பொறுமையின் சிகரங்களுக்குத்தான் அவர்கள் லோன் தருவார்களாம்.//

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் போலிருக்கு.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி சார்

யூர்கன் க்ருகியர்  – (4 ஜூலை, 2009 அன்று PM 9:05)  

//இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...//

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி சார்

திரை விமர்சனத்தின் உலக நாயகன் ,தமிழ் வலைப்பதிவை உலகத்துக்கே வெளிச்சம் போட்டு காட்டிய ஜெயா டிவி புகழ், அன்புக்குரிய கேபிள் சங்கர் அவர்கள் பின்னூட்டம் போட்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் .

நன்றி வணக்கம் ...

யூர்கன் க்ருகியர்  – (4 ஜூலை, 2009 அன்று PM 9:06)  

//but one way its good for u. 22% is too high, it would be difficult for u to rapy at22%+service charges etc..
//

yes sir , you are correct.
Thanks for coming sir.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)  – (12 ஜூலை, 2009 அன்று AM 2:45)  

பேங்க் பக்கம் loan கேட்டு போயிடாதீங்க. மானமும் போயிடும். மயி... ம் போயிடும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)  – (12 ஜூலை, 2009 அன்று AM 2:49)  

பாஸ் Pen Drive(32GB) HDFC Loan ன்னு நிறைய அசிங்கப் பட்டிருப்பீங்க போலிருக்கு. இனிமே நீங்க வருத்த படாத வாலிபர் சங்க தலைவராக அறிவிக்கப் படுகிறீர்கள்.

யூர்கன் க்ருகியர்  – (12 ஜூலை, 2009 அன்று AM 9:19)  

// sgramesh said...
பேங்க் பக்கம் loan கேட்டு போயிடாதீங்க. மானமும் போயிடும். மயி... ம் போயிடும்.
//



வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

யூர்கன் க்ருகியர்  – (12 ஜூலை, 2009 அன்று AM 9:20)  

//sgramesh said...
பாஸ் Pen Drive(32GB) HDFC Loan ன்னு நிறைய அசிங்கப் பட்டிருப்பீங்க போலிருக்கு. இனிமே நீங்க வருத்த படாத வாலிபர் சங்க தலைவராக அறிவிக்கப் படுகிறீர்கள்.
//

ஓ.. அப்படி ஒரு சங்கம் இருக்கா ?
ரேகமேண்டேசனுக்கு நன்றி

பெயரில்லா –   – (27 ஜூலை, 2009 அன்று PM 1:44)  

வருத்தபடாத வாலிபர் சங்க தலைவரே வணக்கம் ...!

கைபுல்லைய விசாரித்தாக சொல்லவும்..............

சரண்....

பெயரில்லா –   – (27 ஜூலை, 2009 அன்று PM 1:45)  

அண்ணன் கைப்புள்ள வாழ்க வாழ்க ....!

சரண்

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP