உதார் விடும் - ரீடிப் - ஷாப்பிங் ! ..உஷார் மேட்டர்!!

நண்பர்களே
சமீபத்தில் "ரீடிப் - ஷாப்பிங்" இன் மூலமாக நான் பட்ட அவஸ்தையை உங்களுடன் பகிர்ந்தது கொள்கிறேன். ஏன்னா நீங்களும் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்தா உங்களுக்கு நல்லது... அதான்!

ரீடிப் - ஷாப்பிங்-ல் வித விதமான ஐட்டங்களை ( அது இல்லீங்க !) ஜிகு ஜிகுன்னு விளம்பர படுத்தி ப்ரீயா டெலிவரி பண்றோம்னு ரெடிப் காரனுங்க ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சிக்கிட்டு திரியிறானுங்க.

சரி ரொம்பதான் இணையத்தில் கூவராங்களேன்னு பொய் பார்த்தா .... ரொம்ப நல்லாத்தான் விளம்பரப்படுத்தி இருக்காங்க.

வடிவேல் பாணியில் "டெஸ்ட் வையுடா அவனுக்கு" அப்படின்னு உள்குரல் எழும்ப நாமளும் ரீடிப் - ஷாப்பிங்-ல் நமக்கு தேவையானது இருக்கான்னு புத்தக பிரிவில் தேடி பார்த்தேன்.

http://books.rediff.com/


எனக்கு தேவையான புக் ஒண்ணு என் கண்ணில் மாட்ட உடனே இணையத்தின் மூலம் ஆர்டர் புக் பண்ணியாயிற்று.
"கஷ்டம்"மர் கேர் க்கு போன் பண்ணி பணத்த எப்படி கட்டுவதுன்னு கேட்க ..அவங்களும் போன் லைனை வேற எங்கிட்டோ கனக்ட் பண்ண ஆடோமடிக் வாய்ஸ் மூலம் கேட்கும் கடன் அட்டை கேள்விகளுக்கு பதில் குடுத்தால் ..பினிஷ் !!
தேவையான பண பரிமாற்றம் எளிதில் அமைந்து விடும்.


(இந்த முறை பண பரிமாற்றத்திற்கு பெயர் என்னவோ சொன்னாங்க சரியா நினைவில்லை.. )


இன்னும் 45 நாளில் உங்களுக்கு புத்தகம் வந்து விடும் அப்படின்னு ஒரு மெயில் வந்தது.
விளம்பரம் பண்றது முப்பது நாள் ஆர்டர் பண்ண பிறகு 45 நாளா ? சிவனேன்னு காத்து கிடக்க வேண்டியது தான் என்று இருந்தேன்.


அப்பாடா ..ஒரு வழியா ரெடிப் காரனுக்கு டெஸ்ட் வச்சாச்சு இப்ப ரிசல்ட்டுக்குத்தான் வெயிட்டிங் அப்படின்னு ஹாய்யா இருந்தா புத்தகமும் வரல ஒன்னும் வரல ...

ஒரு மனுஷன் எத்தனை நாட்களுக்குத்தான் காத்துக்கிட்டு இருப்பதுன்னு ஆன்-லைன் ட்ரக்கிங் இல் பார்த்தா உங்க ஆர்டர் கான்செல் ஆகி ரொம்ப நாள் ஆயிடுச்சுன்னு பல்ல இளிக்குது.


வந்ததே ஒரு கோபம் .. காசையும் குடுத்துட்டு ஒரு மாசம் காலமும் ஆகி உங்க ஆர்டர் கான்செல் ன்னு தெரிஞ்சா எவ்வளவு கடுப்பு வரும்?எனக்கும் அப்படி ஒரு கடுப்பு வந்து "கஷ்டம்"மர் கேர் க்கு போன் பண்ணி என்னடா இது உங்க கொடுமையான சிஸ்டம் ?

கேன்சல் பண்றதும் பண்றீங்க காசவாவது திருப்பி கொடுக்கலாம் இல்லையா என்று டெரரா கேட்டேன் ?


ரொம்ப கூலா "கஷ்டம்"மர் கேர் தம்பி சொன்னாரு ... அப்படியே நீங்க வெப்சைட் ல பார்த்தீங்கன்னு அதுக்குன்னே ஒரு போரம் இருக்கு ..அதை பில் அப் பண்ணி சுப்மிட் பண்ணிங்கன்னா .... அப்படின்னு சொல்லிட்டே போனாரு .


என்னடா உலகம் இது ??


காசு வாங்கரதுக்குன்னா பேயா அலையறானுங்க ...திருப்பி கொடுப்பதென்றால் நாயா ஓடறானுங்க !

காசும் வேணாம் கருமாந்திரமும் வேண்டாம்னு சொல்லி உங்க அராவடியை உலகத்துக்கே சொல்ல போறேன்னு சொன்னேன். (அதான் ப்லோக் இருக்கில்ல ?? )


"தவறுக்கு வருந்துகிறோம்னு சொல்லி நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்னு" கிளி அடிச்சா சாரி கிலி அடிச்சா மாதிரி சொன்னாரு.

போடாங்கன்னு.. போன வச்சுட்டேன் .

உடனே எனக்கு ஒரு மெயில் வந்தது... இன்னும் ரெண்டு நாளில் உங்கள் ரிக்வெஸ்ட் பிரசஸ் செய்யப்படும் அப்படின்னு.

அதையும் கீழே பாருங்க

இது ஒரு சாதரண ஆர்டர் மட்டுமே. இதுக்கே இப்படின்னா மிக முக்கியமான விலை அதிகமுள்ள பொருட்களை வாங்குபவர்கள் மிக கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது எனக்கு நேர்ந்த அனுபவம் மட்டுமே.. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

குறிப்பு : என்னை மாதிரி அப்பாவியாய் வேலை செய்யும் அந்த "கஷ்டம்"மர் கேர் தம்பியிடம் கடுமையாக பேசியதற்கு வருந்துகிறேன் ..அவர் என்ன செய்வார் ...அம்பை நொந்து என்ன பயன் ?

டைம் இருந்தா இதையும் படிச்சி பாருங்க :-

HDFC ல் லோன் வாங்க லோல் பட்டும் கிடைக்காம போனது எப்படி ?


32 GB Pen drive ஊத்திக்கிட்ட மேட்டர்

தியாகராஜன்  – (11 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 4:57)  

தமது அனுபவம் பலருக்கும் உதவிடும்.
அடியேனும் ஐசிஐசிஐ லொம்பார்டு இன்ஸூரன்ஸில் மாட்டிக்கிட்டு பிறகு சேதாரமில்லாமல் வெளியே வந்தேன்.

தேவன் மாயம்  – (11 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:39)  

அப்படியா?
ஈ பே ஓகேன்னு நினைக்கிறேன்!!

ALAARAVALLI  – (11 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 7:17)  

நிறைய படித்த தாங்களையே அவர்கள் ஏமாற்றும்போது படிக்காத பாமரர்களை எவ்வாறு அவர்கள் ஏமாற்றுவார்கள்.எல்லாம் அந்த சிவனுக்கே வெளிச்சம்....

அலாரவல்லி

THANGAMANI  – (11 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 7:35)  

"கஷ்டம்"மர் கேர்"

கஷ்டம் தான்

யூர்கன் க்ருகியர்.....  – (11 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 8:28)  

தியாகராஜன் said...

//அடியேனும் ஐசிஐசிஐ லொம்பார்டு இன்ஸூரன்ஸில் மாட்டிக்கிட்டு பிறகு சேதாரமில்லாமல் வெளியே வந்தேன்.//

நல்லவேளை நண்பரே ...


*****************************
தேவன் மாயம் said...
அப்படியா?
ஈ பே ஓகேன்னு நினைக்கிறேன்!!

ஈ பே யில் பதிந்துள்ளேன் ஆயினும் இதுவரை டெஸ்ட் பண்ணினது இல்லை :)

*****************************
தமிழ்நெஞ்சம் said...
OOPS!

ஆமாம்.. தலைவா

*****************************

ALAARAVALLI said...
படிக்காத பாமரர்களை எவ்வாறு அவர்கள் ஏமாற்றுவார்கள்.

விழிப்புணர்ச்சி வேண்டும் !

அலார வள்ளி - பெயர் அருமை

*****************************

THANGAMANI said...
"கஷ்டம்"மர் கேர்"

சரிதானே ?

*****************************

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல

திரு.தியாகராஜன்
திரு.தேவன் மாயம்
திரு.தமிழ்நெஞ்சம்
திரு.அலார வள்ளி
திரு.தங்க மணி

அவர்களுக்கு

sgramesh  – (11 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 11:43)  

இது எனக்கும் நடந்தது. நான் விளம்பரம்ல பார்த்தது 4GB MP4 Player. பணம் அனுப்பினவுடன் கிடைத்தது 2GB MP4 Player. அத ரிடர்ன் பண்ணி 4GB MP4 பிளேயர் வாங்குறதுக்குள்ள போதும் போதும் நு ஆயிடுச்சு. கடைசியில ஆர்டர் cancel பண்ணிட்டேன்.

Raja  – (12 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 2:41)  

I am living in usa. I wanted to gift a microwave oven to my friend. So I ordered it in rediff using my american credit card. They accepted it.

But after some time they sent a mail asking for scanned copy of front and back of my credit card. The reason they said is it is not an indian credit card and its an international card. I strictly told them that I cant do that and told them to cancel my order and bought the item from sify. I felt sify was better and it was delivered in 20 days.

பெயரில்லா –   – (12 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 3:47)  

indiatimes cheated me. they basically blocked my registered email. so i was not able to communicate with them. becareful with them.
once rediff delivered the wrong product.
now i stopped using indian online shopping sites.

Siva –   – (12 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 5:03)  

I had the same experience with bloody rediff and I lost Rs.450 and I did not get the money, only junk emails. Stupid Rediff.

வேலன்.  – (12 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 7:57)  

இப்போதுதான் தெரிகின்றது எவ்வளவுபேர் ஏமாந்து உள்ளது....இனியாவது முழித்துக்கொண்டால் சரி...

சமூகத்தில் விழிப்புணர்வு கட்டுரை வெளியிட்டு வருகின்றீர்கள். தொடரட்டும் உங்கள் பணி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர்.....  – (12 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 9:34)  

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர்களே

திரு sgramesh
திரு Raja
திரு Siva
திரு வேலன் sir.

பெயரில்லா –   – (12 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 10:18)  

முற்றிலும் உண்மை. ரீடிப் சரியான மோசடி பேர்வழி தான். என் நண்பன் தன் காதலிக்கு அவள் பிறந்த நாளில் பரிசளிப்பதற்காக ரீடிப் மூலமாக ஒரு பொருளை தேர்வு செய்தான். ஆனால் தேர்வு செய்தது ஒன்று வந்தது இன்னொன்று அதுவும் பிறந்தநாளுக்கு ரெண்டு நாளுக்கு அப்புறம்.

கலையரசன்  – (12 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 10:52)  

கண்டிப்பா நல்ல பதிவு போட்டுயிருக்கீங்க பாஸ்!!
இல்லனா, நாங்களும் ஏமாந்திருபோம்..

யூர்கன் க்ருகியர்.....  – (12 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 11:32)  

// கலையரசன் said...
கண்டிப்பா நல்ல பதிவு போட்டுயிருக்கீங்க பாஸ்!!
இல்லனா, நாங்களும் ஏமாந்திருபோம்..

//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கலையரசன் அவர்களே

sgramesh  – (12 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 6:53)  

rediff shopping, HDFC னு நிறைய அசிங்கப்பட்டிருபீங்க போலிருக்கு. இனிமே நீங்கதான் வருத்தமில்லா வாலிபர் சங்க தலைவரா இருக்கணும்

யூர்கன் க்ருகியர்.....  – (12 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 7:10)  

//rediff shopping, HDFC னு நிறைய அசிங்கப்பட்டிருபீங்க போலிருக்கு. இனிமே நீங்கதான் வருத்தமில்லா வாலிபர் சங்க தலைவரா இருக்கணும்//


பிறரை ஏமாற்றுவதுதான் அசிங்கம். ஏமாறுவது அல்லவே .
மீள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா .

யூர்கன் க்ருகியர்.....  – (13 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 10:55)  

// Manchari said...
thanks for the post. U did good for all of us.
//

Thank you very much for the comments friend!

Sameer  – (13 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 4:47)  

Thanks for your valuable post. This will help all the others not to get cheated by this fraudsters.

யூர்கன் க்ருகியர்.....  – (13 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:54)  

// Sameer said...
Thanks for your valuable post. This will help all the others not to get cheated by this fraudsters.

//

Thanks for the comment Sameer.

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP