அடிக்கடி வசிப்பிடத்தை மாற்றுபவர்கள் கவனத்திற்கு..ஊருவிட்டு ஊரு போய் வேலை செய்பவர்களும் அடிக்கடி வீட்டை ( குடி இருக்கிற வீட்டை சொன்னேன் !) மாற்றுபவர்களுக்கும் பொதுவாக இருக்கும் ஒரு தலையாய பிரச்சினை என்னவெனில் வசிப்பு சான்றிதழ் வாங்குவதுதான்.

வாடகை வீட்டில் இருந்தாலும் நிறைய பேர் "Rent Agreement" வாங்குவதில்லை.

காஸ் இணைப்பில் இருந்து இன்டர்நெட் இணைப்பு வரை எல்லாத்துக்கும் வசிப்பு சான்றிதழ் இருந்தாதான் கொடுப்பாங்க.

ஒரே இடத்தில இருப்பவர்கள் நிலைமை பரவாயில்லை ஆனா வருசத்துக்கு ஒரு வீட்டை மாத்தறவங்க பாடுதான் கஷ்டம்.

டிரைவிங் லைசென்சு, வோட்டர் ஐ டி இதெல்லாம் பெர்மனென்ட் ஆ குடி இருப்பவர்களுக்கு மட்டும்தான் செல்லுபடி ஆகும் மற்றபடி பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணுவதில் இருந்து இன்னபிற சில அத்தியாவசிய தேவைகளுக்கு தற்போது குடி இருக்கும் வீட்டு முகவரி உடைய வசிபபு சான்றிதழ் இருந்தே ஆக கட்டாயம் நம்மில் பல பேருக்கு ஏற்பட்டிருக்கும்.

ஒவ்வொரு முறையும் வீட்டை மாற்றும்போழுதும் வசிப்பிட சான்றிதழ் மாற்றவேண்டிய பெரும் கொடுமையில் இருந்து நம்மளை எல்லாம் விடுவிக்க இந்தியன் போஸ்டல் டிபார்ட்மென்ட் புதுசா ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார்கள்

அதுக்கு பேருதான் இந்தியன் போஸ்டல் ஐ டி ப்ரூப் (Indian Postal ID Proof).

இதன் மூலம் நாம் ஏராளமான பயன்களை அடையலாம்.

கிட்டத்தட்ட இது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று வருட காலத்தில் செல்லுபடியாகும் உங்கள் முகவரி சான்று!
எதிர்காலத்தில் பல்வேறு நிறுவனங்களும் இதனை முறைபடுத்தப்பட்ட குறுகிய கால அடையாள அட்டையாக அங்கீகரிக்க வாய்ப்புள்ளது.(இந்தியா முழுதும் )

உங்கள் அருகாமையில் இருக்கும் தபால் நிலையத்திற்கு சென்று விசாரிப்பீர்களானால் மேலதிக தகவல்களை பெறலாம்.
எனக்கு தெரிந்த வரை இந்த தாபால் துறை அடையாள அட்டை ஆனது மூன்று வருடம் வரை செல்லுபடியாகும்.
அதற்குண்டான செலவு வெறும் இருநூற்று ஐம்பது ரூபாய்கள்.


மேலும் தெரிந்து கொள்ள

இங்கே க்ளிக்கவும்.


நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் பேசி அனைவருக்கும் இதைப்பற்றி அறிய தாருங்கள்


நன்றி வணக்கம்.

பாலா...  – (23 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 8:20)  

முக்கியமான பயனுள்ள தகவல். நன்றி யூர்கன். அப்படியே நம்ம பதிவில வந்து உங்க விருதை வாங்கிக்கங்க ப்ளீஸ்.

ALAARAVALLI  – (23 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 9:57)  

சார் விருந்து பாலா வசம் இருந்து வாங்கி விட்டீர்கள்....ட்ரீட் எப்போ?
தங்கள் பதிவு அருமை...ஆனால்.....?
இதை பற்றி நீங்கள் இவ்வளவு சீக்கிரம் பதிவிட்டுவிட்டீர்கள்...!

வேலன்.  – (23 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 10:09)  

சார் வாழ்த்துக்கள். எனக்கு விருது நேற்று கிடைத்தது. இன்று உங்களுக்கு...நாளை...? டவுசருக்கா?
வாழ்த்துக்கள்.பதிவு பயனுள்ள தகவல்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர்  – (24 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 9:18)  

// பாலா... said...
முக்கியமான பயனுள்ள தகவல். நன்றி யூர்கன். அப்படியே நம்ம பதிவில வந்து உங்க விருதை வாங்கிக்கங்க ப்ளீஸ்
//

ரொம்ப ரொம்ப நன்றி சார்.
சில சமயங்களில் நானே என்னை கிள்ளி பார்த்துக்கொள்வது உண்டு.

யூர்கன் க்ருகியர்  – (24 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 9:19)  

// கார்த்திக் said...
நல்ல தகவல்..

//

வருகைக்கு நன்றி நண்பரே .உங்கள் பதிவுகளை படித்து பார்த்தேன் ரொம்ப நன்றாயிருக்கு.

யூர்கன் க்ருகியர்  – (24 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 9:22)  

// ALAARAVALLI said...
சார் விருந்து பாலா வசம் இருந்து வாங்கி விட்டீர்கள்....ட்ரீட் எப்போ?

//

கருத்திற்கு ரொம்ப நன்றி நண்பரே !
நீங்க மட்டும் பூனாவில் இருந்தா இன்னைக்கு சாயுங்காலமே ட்ட்ரீட்டுதான்.
சரியா ?

யூர்கன் க்ருகியர்  – (24 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 9:25)  

//இதை பற்றி நீங்கள் இவ்வளவு சீக்கிரம் பதிவிட்டுவிட்டீர்கள்...!
//

பழைய செய்திகள் என் போன்ற சிலருக்கு புதியதாய் தெரிய வாய்ப்புண்டு.
இல்லையா ?

யூர்கன் க்ருகியர்  – (24 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 9:27)  

//சார் வாழ்த்துக்கள். எனக்கு விருது நேற்று கிடைத்தது. இன்று உங்களுக்கு...நாளை...? டவுசருக்கா?
வாழ்த்துக்கள்.பதிவு பயனுள்ள தகவல்.
வாழ்க வளமுடன்,
வேலன்//

வேலன் சார்,, வாழ்த்துகளுக்கு நன்றி சார்.

டவுசர் பாண்டி  – (25 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 12:48)  

//வருசத்துக்கு ஒரு வீட்டை மாத்தறவங்க பாடுதான் கஷ்டம்.//

ஆனா, எனுக்கு மட்டும் எத்தினி ஊடு மாத்தினாலும் கஷ்டமே இல்ல தலீவா !! ஊட்டுக்கு ஒரு குஜிலிய செட் பண்ணிட்டா போச்சி !!! ( தே , அடிக்காதே மே.. சொம்மா !! தானே சொன்னேன் )

யூர்கன் க்ருகியர்  – (25 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 5:07)  

//ஆனா, எனுக்கு மட்டும் எத்தினி ஊடு மாத்தினாலும் கஷ்டமே இல்ல தலீவா !! ஊட்டுக்கு ஒரு குஜிலிய செட் பண்ணிட்டா போச்சி !!! ( தே , அடிக்காதே மே.. சொம்மா !! தானே சொன்னேன் )
//


Enjoy Sir!

THANGA MANI  – (28 ஜூலை, 2009 ’அன்று’ பிற்பகல் 3:17)  
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சித்தூர்.எஸ்.முருகேசன்  – (9 ஆகஸ்ட், 2009 ’அன்று’ பிற்பகல் 8:57)  

அன்புடையீர்,
எண்டமூரியின் கதைகளை சுசீலா கனகதுர்கா மொழிபெயர்ப்பில் நிறைய படித்துள்ளதாய் கூறியுள்ளீர்கள். அவற்றில் நிறைய நாவல்கள் எண்டமூரி எழுதியவை அல்ல. யுத்தன்ன பூடி சுலோச்சனா ராணி என்பவரின் கதைகள் அவை. இந்த சங்கதியை முதலில் எண்டமூரி பார்வைக்கு கொண்டு சென்றவன் நான் தான். ஆனால் அவருக்கு இந்தியாவை புனரமைக்க நான் தீட்டிய திட்டத்தை அனுப்பியபோது (மெயிலில்) போலீஸ் ர்ப்போர்ட் தருவேன் என்று பதில் மெயில் கொடுத்தார். இதெல்லாம் என்ன சைக்காலஜியோ தெரியவில்லை.

கீழ் காணும் லிங்கை க்ளிக் செய்து என் திட்டத்தை படித்து பார்த்து தங்கள் கருத்தை தெரிவித்தால் அக மிக மகிழ்வேன்

Engineering  – (29 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:19)  

முக்கியமான தகவலை தந்து இருக்கீர்கள் நண்பரே நன்றி...!
என்னை போன்று அடிக்கடி வேலை மாற்றுபவர்களுக்கு இது பயனுள்ளதாக உள்ளது....
நன்றி...!
நன்றி...!
நன்றி...!
இது போன்று நிறைய தகவலை தர விரும்புகிறேன்.......

கருத்துரையிடுக

  © Blogger template Shush by Ourblogtemplates.com 2009

Back to TOP