உனக்கு எவ்வளவு அழுத்தம் இருந்தா ?
>> வெள்ளி, 10 ஜூலை, 2009 –
Blood Pressure,
Heart Beat
என்னடா
இவன் பதிவின் பேர "டெரரா" வச்சிருக்கானேன்னு படிக்க வந்திருக்கீங்களா ?
சும்மா பதிவின் தலைப்பு மட்டும்தான் அப்படி!
மேட்டரு என்னான்னா... சமீபத்துல நான் தெரிஞ்சிக்கிட்ட ஒரு விசயத்த நான் உங்களுடன் பகிந்து கொள்கிறேன்.அவ்வளவுதான் ..அதுவும் அழுத்தம் சம்மந்தப்பட்டது !
****************************************
நாம நமக்கு உடம்பு சரியில்லாத பொழுதெல்லாம் டாக்டருக்கிட்ட போயிருப்போம்.
நமக்கு சின்ன பிரச்சினை இருந்தாலும் பெரிய பிரச்சினை இருந்தாலும்
டாக்டர் பண்ற முதல வேலை நம்ம நாடி துடிப்பை தான் செக் பண்ணுவாரு.
ஏனென்றால் நம்ம நாடி துடிப்பை வைத்தே நம்முடைய பாடி கண்டிஷன் ஐ ஓரளவு தெரிஞ்சுக்கலாம்.
அந்த காலத்துல நாடியை பார்த்தே நோய்களை கண்டு பிடித்து விடுவார்களாம்.
எந்த விதமான நோயினையும் சரியான முறையில் எதிர் நோக்க பொதுவாகவே இதய துடிப்பின் ரிதம் மற்றும் அழுத்தம் ஆகியவை அறியப்படவேண்டிய முக்கிய காரணிகள் ஆகும்.
****************************************
****************************************
தொடர்ந்த மன அழுத்தத்தின் காரணமாக நான் எனக்கு தெரிந்த மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றேன்.
இதயம் தாறு மாறா துடிப்பதாகவும் இரத்த அழுத்தம் சிறிது அதிகமாக இருப்பதாகவும் சொல்லி தற்போதைக்கு மருந்து தருவதாகவும் மேலும் மன இறுக்கத்தை தவிர்ப்பதற்காக யோகா மற்றும் பல பொழுதுபோக்கு (?) அம்சங்களில் மனதினை செலுத்துமாறு அறிவுரை கூறினார்.
சில சமயங்களில் மனது பட படப்பு ஏற்படும் பொழுது இதயம் சீராக துடிக்கிறதா இரத்த அழுத்தம் சரியான அளவில்தான் உள்ளதா என்ற சந்தேகம் அடிக்கடி வரும்.
அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு நாமே நம் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு எண்ணிக்கை ஆகியவை தெரிந்து கொண்டால் நல்லாருக்குமேன்னு தேடிய போது கிடைத்ததுதான் கீழே படத்தில் நீங்க பார்ப்பது.
தேடி பிடித்து அதை வாங்கி உபயோகித்து பார்த்தேன் .ரொம்ப சிம்புள் அண்ட் சூப்பர்.படங்களை பார்த்து நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி எழுதினால் பல தொடர்களாக வந்து விடும் என்ற பயத்தினால் அதை வீடியோ வாக எடுத்து யுடியுப்- இல் ஏற்றி உள்ளேன்.பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
****************************************
1. இதன் மூலமாக இதய துடிப்பு எண்ணிக்கை - நிமிடத்திற்கு
2. இரத்த அழுத்தம் ( Systolic & Diostolic )
3. இதயம் ரிதம் மாறி மாறி துடித்தால் அதற்கான எச்சரிக்கை
போன்றவற்றை எளிதில் அறியலாம்.
குறிப்பு : இதய சம்மந்தமான நோய் மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் தயவு செய்து மருத்துவரை நாடியே உங்கள் நாடியை தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர இது மாதிரியான "நமக்கு நாமே திட்டத்தை" உபயோகிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
****************************************
இக்கருவியை யாரெல்லாம் உபயோகிக்கலாம் ?
1. விஜய் காந்த் முதல்.. விஜய் படம் வரை... பின் விளைவுகள் அறியாமல் தவறாது பார்த்து விடுபவர்கள் இந்த மாதிரியான கருவிகளை கையோடு கொண்டு போனால் படத்தின் இடை இடையே தத்தம் நாடியை சரி பார்த்துக்கொள்ளலாம்.
2. என்னை மாதிரியான ஆர்வ முதிர்ச்சியால் எழுதப்படும் இந்த மாதிரியான் மொக்கை பதிவுகளை படிக்கும் போது எவ்வளவு கடுப்பு ஆகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தலாம்
3. இந்த மாதிரி எல்லாம் கருவிகள் வந்துருக்கா.. என்று என்னை மாதிரி எக்ஸ்பெரிமென்ட் பண்றவங்களும் ட்ரை பண்ணி பாக்கலாம்
நன்றி வணக்கம் !
அண்ணா, நீங எழுதர மேட்டர் நல்ல விஷயன்கண்ணா. அதனால பின்னூட்டம் வந்தாலும்ணா, 7 நாளும் எழுதுங்கண்ணா.
கிருகர்!!
அரிய பதிவு!!
அண்ணா, நீங எழுதர மேட்டர் நல்ல விஷயன்கண்ணா. அதனால பின்னூட்டம் வந்தாலும்ணா, 7 நாளும் எழுதுங்கண்ணா.//
ரிப்பீட்டே
அண்ணா,
நீங எழுதர மேட்டர்
நல்ல விஷயன்கண்ணா
அதனால பின்னூட்டம்
வந்தாலும்ணா,
7 நாளும்
எழுதுங்கண்ணா
தங்கச்சி சந்திரா விற்கும் அண்ணன் டாக்டர் தேவன் மாயம் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
உங்க பின்னூட்டங்களில் இருந்து நீங்கள் விஜய் யின் ரசிகர்கள் என்று புரியுது.
Thanks.
//தங்கச்சி சந்திரா// ஆபரேஷன் ஏதும் பண்ணாமலேயே எனக்கு மாற்று பாலினம் தந்து விட்டீரே நண்பரே
////தங்கச்சி சந்திரா// ஆபரேஷன் ஏதும் பண்ணாமலேயே எனக்கு மாற்று பாலினம் தந்து விட்டீரே நண்பரே//
தவறுக்கு வருந்துகிறேன் சகோதரரே ....
சுட்டியமைக்கு நன்றி !
சந்திரா said...
//தங்கச்சி சந்திரா// ஆபரேஷன் ஏதும் பண்ணாமலேயே எனக்கு மாற்று பாலினம் தந்து விட்டீரே நண்பரே//
அவனா நீ...வடிவேலு பாஷையில் படிக்கவும்...(நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவும்)
வாழ்க வளமுடன்,
வேலன்
நல்ல தகவல்.
Youtube வீடியோ வேற போட்டுருக்கீங்க? கலக்குறீங்க!
//நல்ல தகவல்.
Youtube வீடியோ வேற போட்டுருக்கீங்க? கலக்குறீங்க!//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே