நண்பர்களே
சமீபத்தில் "ரீடிப் - ஷாப்பிங்" இன் மூலமாக நான் பட்ட அவஸ்தையை உங்களுடன் பகிர்ந்தது கொள்கிறேன். ஏன்னா நீங்களும் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்தா உங்களுக்கு நல்லது... அதான்!
ரீடிப் - ஷாப்பிங்-ல் வித விதமான ஐட்டங்களை ( அது இல்லீங்க !) ஜிகு ஜிகுன்னு விளம்பர படுத்தி ப்ரீயா டெலிவரி பண்றோம்னு ரெடிப் காரனுங்க ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சிக்கிட்டு திரியிறானுங்க.
சரி ரொம்பதான் இணையத்தில் கூவராங்களேன்னு பொய் பார்த்தா .... ரொம்ப நல்லாத்தான் விளம்பரப்படுத்தி இருக்காங்க.
வடிவேல் பாணியில் "டெஸ்ட் வையுடா அவனுக்கு" அப்படின்னு உள்குரல் எழும்ப நாமளும் ரீடிப் - ஷாப்பிங்-ல் நமக்கு தேவையானது இருக்கான்னு புத்தக பிரிவில் தேடி பார்த்தேன்.
http://books.rediff.com/
எனக்கு தேவையான புக் ஒண்ணு என் கண்ணில் மாட்ட உடனே இணையத்தின் மூலம் ஆர்டர் புக் பண்ணியாயிற்று.
"கஷ்டம்"மர் கேர் க்கு போன் பண்ணி பணத்த எப்படி கட்டுவதுன்னு கேட்க ..அவங்களும் போன் லைனை வேற எங்கிட்டோ கனக்ட் பண்ண ஆடோமடிக் வாய்ஸ் மூலம் கேட்கும் கடன் அட்டை கேள்விகளுக்கு பதில் குடுத்தால் ..பினிஷ் !!
தேவையான பண பரிமாற்றம் எளிதில் அமைந்து விடும்.
(இந்த முறை பண பரிமாற்றத்திற்கு பெயர் என்னவோ சொன்னாங்க சரியா நினைவில்லை.. )
இன்னும் 45 நாளில் உங்களுக்கு புத்தகம் வந்து விடும் அப்படின்னு ஒரு மெயில் வந்தது.
விளம்பரம் பண்றது முப்பது நாள் ஆர்டர் பண்ண பிறகு 45 நாளா ? சிவனேன்னு காத்து கிடக்க வேண்டியது தான் என்று இருந்தேன்.
அப்பாடா ..ஒரு வழியா ரெடிப் காரனுக்கு டெஸ்ட் வச்சாச்சு இப்ப ரிசல்ட்டுக்குத்தான் வெயிட்டிங் அப்படின்னு ஹாய்யா இருந்தா புத்தகமும் வரல ஒன்னும் வரல ...
ஒரு மனுஷன் எத்தனை நாட்களுக்குத்தான் காத்துக்கிட்டு இருப்பதுன்னு ஆன்-லைன் ட்ரக்கிங் இல் பார்த்தா உங்க ஆர்டர் கான்செல் ஆகி ரொம்ப நாள் ஆயிடுச்சுன்னு பல்ல இளிக்குது.
வந்ததே ஒரு கோபம் .. காசையும் குடுத்துட்டு ஒரு மாசம் காலமும் ஆகி உங்க ஆர்டர் கான்செல் ன்னு தெரிஞ்சா எவ்வளவு கடுப்பு வரும்?
எனக்கும் அப்படி ஒரு கடுப்பு வந்து "கஷ்டம்"மர் கேர் க்கு போன் பண்ணி என்னடா இது உங்க கொடுமையான சிஸ்டம் ?
கேன்சல் பண்றதும் பண்றீங்க காசவாவது திருப்பி கொடுக்கலாம் இல்லையா என்று டெரரா கேட்டேன் ?
ரொம்ப கூலா "கஷ்டம்"மர் கேர் தம்பி சொன்னாரு ... அப்படியே நீங்க வெப்சைட் ல பார்த்தீங்கன்னு அதுக்குன்னே ஒரு போரம் இருக்கு ..அதை பில் அப் பண்ணி சுப்மிட் பண்ணிங்கன்னா .... அப்படின்னு சொல்லிட்டே போனாரு .
என்னடா உலகம் இது ??
காசு வாங்கரதுக்குன்னா பேயா அலையறானுங்க ...திருப்பி கொடுப்பதென்றால் நாயா ஓடறானுங்க !
காசும் வேணாம் கருமாந்திரமும் வேண்டாம்னு சொல்லி உங்க அராவடியை உலகத்துக்கே சொல்ல போறேன்னு சொன்னேன். (அதான் ப்லோக் இருக்கில்ல ?? )
"தவறுக்கு வருந்துகிறோம்னு சொல்லி நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்னு" கிளி அடிச்சா சாரி கிலி அடிச்சா மாதிரி சொன்னாரு.
போடாங்கன்னு.. போன வச்சுட்டேன் .
உடனே எனக்கு ஒரு மெயில் வந்தது... இன்னும் ரெண்டு நாளில் உங்கள் ரிக்வெஸ்ட் பிரசஸ் செய்யப்படும் அப்படின்னு.
அதையும் கீழே பாருங்க
இது ஒரு சாதரண ஆர்டர் மட்டுமே. இதுக்கே இப்படின்னா மிக முக்கியமான விலை அதிகமுள்ள பொருட்களை வாங்குபவர்கள் மிக கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது எனக்கு நேர்ந்த அனுபவம் மட்டுமே.. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
குறிப்பு : என்னை மாதிரி அப்பாவியாய் வேலை செய்யும் அந்த "கஷ்டம்"மர் கேர் தம்பியிடம் கடுமையாக பேசியதற்கு வருந்துகிறேன் ..அவர் என்ன செய்வார் ...அம்பை நொந்து என்ன பயன் ?
டைம் இருந்தா இதையும் படிச்சி பாருங்க :-HDFC ல் லோன் வாங்க லோல் பட்டும் கிடைக்காம போனது எப்படி ?32 GB Pen drive ஊத்திக்கிட்ட மேட்டர்
Read more...